TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 4, 2018
Want to Become a Bank, Central / State Govt Officer in 2020?
Join the Most awarded Coaching Institute & Get your Dream Job
Now Prepare for Bank, SSC Exams from Home. Join Online Coure @ lowest fee
Lifetime validity Bank Exam Coaching | Bank PO / Clerk Coaching | Bank SO Exam Coaching | All-in-One SSC Exam Coaching | RRB Railway Exam Coaching | TNPSC Exam Coaching | KPSC Exam Coaching
TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 4, 2018
7.5 சதவீத ஜிடிபி வளர்ச்சி சாத்தியம்– மார்கன் ஸ்டான்லி ஆய்வில் தகவல்:
- இந்தியாவின் ஜிடிபி 7.5 சதவீத வளர்ச்சியடைய சாத்தியமுள்ளதாக சர்வதேச நிதிச் சேவை நிறுவனமான மார்கன் ஸ்டான்லி ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
- நடப்பாண்டின் ஏப்ரல்– ஜூன் காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க சாதகமான அம்சங்கள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 7.5 சதவீதம் வரை எதிர்பார்க்கலாம் என்று குறிப்பிட்டுள்ளது.
- ஏற்றுமதி மற்றும் நுகர்வு துறையில் உருவாகியுள்ள ஏற்றங்களால் இந்திய பொருளாதார வளர்ச்சிக்கான சாதகங்கள் மீண்டும் தென்படுகின்றன. ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் இந்தியாவின் வளர்ச்சி கடந்த 7 காலாண்டுகளாக இல்லாத வகையில் 7.7 சதவீத வளர்ச்சி கண்டிருந்தது. உற்பத்தி துறை மற்றும் விவசாய உற்பத்தியின் காரணமாக இந்த வளர்ச்சி சாத்தியமானது.
சிறந்த பாராளுமன்ற உறுப்பினருக்கான விருது :
- 2013-2017 ஆண்டுக்கான சிறந்த பாராளுமன்ற விருதை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் புதுடெல்லியில் வழங்கினார்.
- 2013 ஆம் ஆண்டு முதல் 2017 வரை சிறந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சிறந்த பாராளுமன்ற விருது வழங்கப்பட்டது.
- டாக்டர் நஜ்மா ஹெப்டுல்லா (2013),ஹுகு தேவ் நாராயண் (2014),குலாம் நபி ஆசாத் (2015),தினேஷ் திரிவேதி (2016) , பாரத்ஹரி மஹாதாப் (2017).
பார்ச்சூன்(Fortune)500 உலகின் மிகப்பெரிய நிறுவனங்களின் பட்டியல் வெளியிட்டது:
- பார்ச்சூன் வெளியிட்ட 2018 ஆம் ஆண்டு உலகின் மிகப்பெரிய நிறுவனங்களின் பட்டியலில் 500 இந்திய நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
- இந்திய ஆயில் கார்ப்பரேஷன் ( Indian Oil Corporation (IOC)) இந்தியாவின் மிக உயர்ந்த தரவரிசை நிறுவனமாகும், அதன் பிறகு ரிலையன்ஸ் நிறுவனம் 55 இடங்கள் முன்னிலையில் உள்ளது.
அமெரிக்க அடிப்படையிலான retail நிறுவனமான வால்மார்ட், பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
ஜிம்பாப்வே தேர்தல் முடிவு அறிவிப்பு : எமர்சன் மனாங்க்வா மீண்டும் அதிபரானார்:
- ஜிம்பாப்வேயில் 37 ஆண்டு கால ராபர்ட் முகாபே ஆட்சிக்குப் பிறகு நடந்த தேர்தலில் எமர்சன் மனாங்க்வா வெற்றி பெற்று மீண்டும் அதிபரானார்.
- இதில், மனாங்க்வா 50.8 சதவீத வாக்குகள் பெற்று நூலிழையில் வெற்றி பெற்ற மனாங்க்வா மீண்டும் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டு விட்டதாக தேர்தல் ஆணைய தலைவர் சிகும்பா அறிவித்தார்.
பெல்ப்ஸ் சாதனையை முறியடித்த 10 வயது சிறுவன் கிளார்க்:
- அமெரிக்க நீச்சல் நட்சத்திரம் மைக்கேல் பெல்ப்சின் 23 ஆண்டு கால சாதனையை, 10 வயது சிறுவன் முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளான்.
- அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் நடைபெற்ற ஃபார் வெஸ்ட் சர்வதேச நீச்சல் சாம்பியன்ஷிப் தொடரின் 100 மீட்டர் பட்டர்பிளை பிரிவில், மான்ட்டெரி கவுன்டி நீச்சல் கிளப் அணிக்காக களமிறங்கிய கிளார்க் கென்ட் அப்புவடா என்ற 10 வயது சிறுவன், பந்தய தூரத்தை 1 நிமிடம், 09.36 விநாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தான்.
கேள்விகள்
Q.1) மார்கன் ஸ்டான்லி ஆய்வின் படி இந்தியாவின் ஜிடிபி ____ சதவீத வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது .
a) 7.6
b) 7.1
c) 7.5
d) 7.9
e) 7.8
Q.2) 2017 ஆம் ஆண்டிற்கான சிறந்த பாராளுமன்ற உறுப்பினருக்கான விருதை பெற்றவர் யார்?
a) தினேஷ் திரிவேதி
b) ஹுகு தேவ் நாராயண்
c) குலாம் நபி ஆசாத்
d) நஜ்மா ஹெப்டுல்லா
e) பாரத்ஹரி மஹாதாப்
Q.3) 2013-2017 ஆண்டுக்கான சிறந்த பாராளுமன்ற விருதை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் எங்கு வழங்கினார்?
a) கோவா
b) புதுடெல்லி
c) கேரளா
d) கர்நாடகா
e) பீகார்
Q.4) பார்ச்சூன்(Fortune) வெளியிட்ட 500 உலகின் மிகப்பெரிய நிறுவனங்களின் பட்டியளில் வால்மார்ட் நிறுவனம் எந்த இடத்தில் உள்ளது ?
a) 1
b) 4
c) 3
d) 5
e) 2
Q.5) எமர்சன் மனாங்க்வா புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டு விட்டதாக தேர்தல் ஆணைய தலைவர் சிகும்பா அறிவித்தார்?
a) அங்கோலா
b) ஜிம்பாப்வே
c) தன்சானியா
d) சாம்பியா
e) நமீபியா
Other Important Links
TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 3, 2018
TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 2, 2018
TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 1, 2018
2 comments
super