TNPSC Current Affairs – English & Tamil – March 25, 2021

TNPSC Aspirants,

The Current Affairs Section is one of the most important topics for the upcoming TNPSC Group I, Group II/IIA, Group IV, and TNUSRB Exams.

Check today’s TNPSC Daily Current Affairs(25th March, 2021) in this post.

Aspirants can expect questions from the Daily Current Affairs section in the upcoming TNPSC Exams and learning the Current Affairs section will also aid them in successfully preparing for the descriptive paper. So this process is a 2 in 1 initiative.

To make the learning more convenient, we will be providing the TNPSC Daily Current Affairs in both ENGLISH & TAMIL. This has been made in such a way that reflects the TNPSC pattern as TNPSC uses both the languages in the Question Paper and this will also make the preparations of the aspirants meaningful and will 100% fulfill the needs of the aspirants.


Download PDF – TNPSC Daily Current Affairs – English & Tamil – March 25, 2021


 1. Indian Coast Guard Ship ‘Vajra’ was commissioned to the Indian Coast Guard by the Chief of Defence Staff General Bipin Rawat at Kattupalli in Chennai

  • Indian Coast Guard Ship ‘Vajra’ was commissioned by General Bipin Rawat, Chief of Defence Staff at Kattupalli in Chennai.
  • This is the sixth in the series of seven Offshore Patrol Vessel designed and constructed by L&T. The 98meter ship is fitted with state-of-the-art Navigation and Communication Equipment, Sensors and Machinery and is designed to carry one twin-engine helicopter and four high-speed boats. The vessel can be used in Search and Rescue, Law Enforcement and Maritime Patrol. It is also capable of carrying Pollution Response Equipment for oil spill response at Sea.
  • Vajra will be based at Tuticorin and will be deployed extensively for surveillance in exclusive economic zones in the Indian Coastal region.

Offshore Patrol Vessel (OPV)

  • OPVs are long-range surface ships, capable of operation in maritime zones of India, including island territories with helicopter operation capabilities. Their roles include coastal and offshore patrolling, policing maritime zones of India, control and surveillance, anti-smuggling and anti-piracy operations with limited wartime roles.
  • ICGS Vajra is the sixth vessel in the series of seven OPVs being built by L&T under a Ministry of Defence contract signed in the year 2015. The seventh OPV ICGS Vigraha was launched in Oct 2020 and is being readied for sea trials. Tamil translation.

1. இந்திய கடலோர காவல் படையில் ‘வஜ்ரா’ ரோந்து கப்பலை முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் சென்னையிலுள்ள காட்டுப்பள்ளியில் இணைத்து வைத்தார்

  • இந்தியகடலோர காவல் படையில்,‘வஜ்ரா’ என்ற ரோந்து கப்பலை, முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் சென்னையிலுள்ள காட்டுப்பள்ளியில் இணைத்து வைத்தார்.
  • இது எல்&டிநிறுவனம் தயாரித்து வழங்கும் 7 கப்பல்கள் வரிசையில் 6வது ரோந்து கப்பல்  என்பது குறிப்பிடத்தக்கது.
  • 98மீட்டர் நீளம் கொண்டவஜ்ரா ரோந்துக் கப்பலில் நவீன திசைக்காட்டி மற்றும் தகவல் தொடர்பு சாதனங்கள், உணரி கருவிகள் மற்றும் இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கப்பல் இரட்டை என்ஜின் ஹெலிகாப்டர், 4 விரைவு படகுகள் ஆகியவற்றைச் சுமந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இக்கப்பல் தேடுதல் மற்றும் மீட்புப் பணி, சட்ட அமலாக்கம் மற்றும் கடலோர ரோந்து பணியில் ஈடுபடும். கடலில் எண்ணெய் கசிவு போன்ற மாசுவை அகற்றும் நவீன சாதனங்களும் இந்தக்கப்பலில் பொருத்தப்பட்டுள்ளன.
  • வஜ்ரா ரோந்துகப்பல்  தூத்துக்குடியில் இருந்து செயல்பட்டு, கடலோர பகுதியின் பிரத்தியேக பொருளாதார மண்டலங்களைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபடும்.

கடலோர ரோந்து கப்பல் (OPV)

  • கடலோர ரோந்து கப்பல் (OPV) என்பது நீண்ட தூர மேற்பரப்பு கப்பல்கள் ஆகும், ஹெலிகாப்டர் செயல்பாட்டு திறன் கொண்ட இக்கப்பல் தீவுப்பிரதேசங்கள் உட்பட இந்தியாவின் கடல் மண்டலங்களில் செயல்படும் திறன் கொண்டது. அவற்றின் பங்களிப்பில் கடலோர மற்றும் கடல் ரோந்து, இந்தியாவின் கடல் மண்டலங்களை கண்காணித்தல், கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு, கடத்தல் மற்றும் கடற்கொள்ளை எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் ஆகியவை கட்டுப்படுத்தப்பட்ட போர்க்கால நடவடிக்கைகள் ஆகியவை அடங்கும்.
  • 2015ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு அமைச்சகத்தின் ஒப்பந்தத்தின் கீழ் எல்&டி நிறுவனத்தால் கட்டப்பட்ட ஏழு OPV களின் வரிசையில் ICGS வஜ்ரா ஆறாவது கப்பல் ஆகும். ஏழாவது கடலோர ரோந்து கப்பல் ICGS விக்ரஹா அக்டோபர் 2020இல் அரிமுகப்படுத்தப்பட்டது, அது கடல் சோதனைகளுக்காக தயார் செய்யப்பட்டு வருகிறது.

2. CJI recommended Justice N.V.Ramana as the next Chief Justice of India

  • Chief Justice of India SA Bobde has recommended the name of Justice NV Raman as his successor ahead of his retirement on 23 April.
  • CJI Bobde has sent a letter recommending Justice Ramana to be appointed as the 48th CJI to the Ministry of Law and Justice Minister Ravishankar Prasad.
  • Once cleared for the appointment, Justice Ramana is expected to take over as the next CJI on April 24 and will retire on 26 August 2022.

Appointment of Chief Justice of India

  • Law Minister would seek the recommendation of the outgoing Chief Justice of India for the appointment of the next CJI. After receipt of the recommendation of the CJI, the Law Minister puts it before the Prime Minister who advises the President on such appointments. President appoints the CJI. English translation.
  • If the senior judge nominated for the post of Chief Justice is not fit, a final decision will be taken by consulting other judges of the Supreme Court as to who can be appointed next.
  • Tamil translation. There has been a convention of CJI recommending the senior-most judge of the Supreme Court as his successor. Only twice, it was not followed – first when Justice AN Ray was appointed as the CJI on 25 April 1973 superseding three senior-most judges and the second time when Justice MH Beg was appointed the CJI on 29 January 1977 superseding Justice HR Khanna.

2. என்.வி.ரமணாவை அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பரிந்துரை செய்துள்ளார்

  • உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே வரும் ஏப்ரல் 23ல் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து, அடுத்த தலைமை நீதிபதியாக யாரை நியமிக்கலாம் என பரிந்துரை செய்யும்படி, பாப்டேவுக்கு மத்திய சட்டத்துறை அமைச்சகம் கடிதம் எழுதி உள்ளது.
  • இதற்கு பதிலளித்து மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு பாப்டே அனுப்பிய பதில் கடிதத்தில், உச்சநீதிமன்றத்தின் 48வதுதலைமை நீதிபதியாக என்.வி ரமணாவை நியமிக்கலாம் என பரிந்துரை செய்து உள்ளார்.
  • Tamil translation.இந்த நியமனத்துக்கு ஒப்புதல் கிடைத்தவுடன், அடுத்த தலைமை நீதிபதியாக ஏப்ரல் 24-ம் தேதி நீதிபதி ரமணா பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி

  • அடுத்த தலைமை நீதிபதியை நியமிக்க, சட்ட அமைச்சர், பதவி காலம் முடியவிருக்கும், தலைமை நீதிபதியின் பரிந்துரையை கோருவார். தலைமை நீதிபதியின் பரிந்துரை கிடைத்த பிறகு, சட்ட அமைச்சர், அத்தகைய நியமனங்கள் குறித்து பிரதமரிடம்அதை முன் வைப்பார். பிரதமர் இது குறித்து ஜனாதிபதிக்கு ஆலோசனை கூறுவார். தலைமை நீதிபதியை ஜனாதிபதி நியமிப்பார்.
  • தலைமை நீதிபதி பதவிக்குப் பரிந்துரை செய்யப்படும் மூத்த நீதிபதி தகுதியானவராக இல்லாத பட்சத்தில், அடுத்ததாக யாரை நியமிக்கலாம் என்பது பற்றி உச்ச நீதிமன்றத்தின் மற்ற நீதிபதிகளுடன் ஆலோசனை நடத்தி இறுதி முடிவு எடுக்கப்படும்.
  • உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதியை பதவியில் இருக்கும் அடுத்த நீதிபதியாக சிபாரிசு செய்யும் ஒரு மரபு உள்ளது. இது இரண்டு முறை மட்டுமே பின்பற்றப்படவில்லை- முதலில் 25 ஏப்ரல் 1973 இல் நீதிபதி ஏ. என். ரே தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டபோது மூன்று மூத்த நீதிபதிகளை தாண்டி அவருக்கு பதவி அளிக்கப்பட்டது, இரண்டாவது முறையாக நீதிபதி எம்.எச். பெக் ஜனவரி 29, 1977 அன்று ஹெச்.ஆர்.கண்ணாவைத் தாண்டி தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

3. Chinki Yadav won gold as India claim all three medals in the women’s 25m pistol event

  • Chinki Yadav won the gold medal in the women’s 25m Pistol event at the ISSF World Cup in New Delhi. Rahi Sarnobat finished with silver and Manu Bhaker secured the bronze medal.
  • India’s Aishwary Pratap Singh Tomar won the gold medal in the men’s 50m Rifle 3 Positions event. The 20-year-old became the youngest in history to win a shooting World Cup gold in the 3 Positions event.  Tamil translation.

3. உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் மகளிர் 25 மீ சிங்கி யாதவ் தங்கம் வென்றார்

  • புதுதில்லியில் நடைபெற்ற ISSF உலகக் கோப்பை போட்டியில் மகளிர் 25 மீ துப்பாக்கி சுடுதல் பிரிவில் சிங்கி யாதவ் தங்கப் பதக்கம் வென்றார். ராஹி சர்னோபாத் வெள்ளியுடனும் மனு பாக்கர் வெண்கலப் பதக்கத்துடனும் போட்டியை நிறைவு செய்தனர்.
  • ஆண்களுக்கான 50 மீ ரைபிள் 3 நிலை போட்டியில் இந்தியாவின் ஐஷ்வாரி பிரதாப் சிங் தோமர் தங்கப் பதக்கம் வென்றார். 20 வயதான இவர் துப்பாக்கி சுடுதல் உலகக் கோப்பை 3 நிலை போட்டியில் தங்கம் வென்ற இளம் வீரர் ஆனார்.

4. Andhra Pradesh launched India’s first govt-run ambulance network for animals

  • The Andhra state government has now decided to set up “India’s first government-run ambulance network” for animals to boost the animal husbandry and veterinary sector in Andhra Pradesh.
  • One of its main missions is to help reach out to distressed animals and provide them with proper animal healthcare.

4. ஆந்திர பிரதேசம் விலங்குகளுக்கான இந்தியாவின் முதல் அரசு அவசர ஊர்தி (ஆம்புலன்ஸ்) நெட்வொர்க்கை அறிமுகப்படுத்தியது

  • ஆந்திர மாநிலத்தில் கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை துறையை மேம்படுத்துவதற்காக, “இந்தியாவின் முதல் அரசு ஆம்புலன்ஸ் நெட்வொர்க்” ஒன்றை அமைக்க ஆந்திர மாநில அரசு முடிவு செய்துள்ளது.
  • அதன் முக்கிய பணிகளில் ஒன்று, பாதிக்கப்பட்ட விலங்குகளுக்குப் உதவுவதோடு, அவர்களுக்கு முறையான விலங்கு பராமரிப்பும் வழங்குகிறது.

5. A unique “double mutant” coronavirus variant with a combination of mutations not seen anywhere else in the world has been found in India

  • A unique “double mutant” coronavirus variant with a combination of mutations not seen anywhere else in the world has been found in India, the Union Health Ministry said.
  • However, it is still to be established if this has any role to play in increased infectivity or in making COVID19 more severe.
  • Indian SARSCoV2 Consortium on Genomics (INSACOG), revealed the presence of two mutations, E484Q and L452R together, samples from Maharashtra, Delhi, Punjab and Gujarat.
  • While the two mutations have been individually identified in other variants of SARSCoV2 globally and have been associated with a reduction in vaccine efficacy, their combined effect and biological implications have not yet been understood.
  • In the days ahead, the INSACOG will submit details of this variant to a global repository called GISAID and, if it merits, classify it as a “variant of concern” (VOC).

5. உலகில் வேறு எங்கும் காணப்படாத திடீர்மாற்றங்களின் கலவையுடன் கூடிய ஒரு தனித்துவமான “இரட்டை உருமாற்ற” கரோனா வைரஸ் தீநுண்மி மாதிரிகள் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

  • உலகில் வேறு எங்கும் காணப்படாத திடீர்மாற்றங்களின் கலவையுடன் கூடிய ஒரு தனித்துவமான “இரட்டை உருமாற்ற” கரோனா வைரஸ் மாறுபாடு இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
  • இருப்பினும், இதற்கு தொற்று அதிகரித்ததில் அல்லது COVID19ஐ மேலும் கடுமையானதாக்குவதில் ஏதேனும் பங்கு இருக்கிறதா என இன்னும் நிறுவப்படவில்லை.
  • மரபணுவியல் மீதான இந்திய SARSCoV2 கூட்டமைப்பு (INSACOG), E484Q மற்றும் L452R ஆகிய இரண்டு தீநுண்மிகள், ஒன்றாக, மகாராஷ்டிரா, தில்லி, பஞ்சாப் மற்றும் குஜராத்திலிருந்த மாதிரிகளில் இருப்பதாக தெரிவித்தது.
  • இந்த இரண்டு உருமாற்றங்களும் உலகளவில் SARSCoV2இன் பிற வகைகளிலும் தனித்தனியாக அடையாளம் காணப்பட்டாலும், தடுப்பூசியின் திறனைக் குறைப்பதில் அவற்றின் இணைந்ததாக்கங்கள் மற்றும் உயிரியல் தாக்கங்கள் ஆகியவை இன்னும் புரிந்து கொள்ளப்படவில்லை.
  • INSACOG இந்த மாறுபாடு பற்றிய விவரங்களை GISAID எனப்படும் உலகளாவிய களஞ்சியத்திற்கு சமர்ப்பிக்கும், மேலும் அது தகுதிபெற்றால், அதை ஒரு “கவலை மாறுபாடு” (VOC) என வகைப்படுத்தப்படும். ‘இரட்டை உருமாற்ற ‘ வைரஸ் மாறுபாடு கண்டுபிடிக்கப்பட்டது.

6. World’s 1st Catastrophe Bond for Volcanic Eruptions Aims to Improve Disaster Relief launched by Danish Red Cross

  • World’s 1st Catastrophe Bond (‘cat bond’) for volcanic eruptions aims to Improve disaster relief.
  • The Danish Red Cross is offering the world’s first catastrophe bond for volcanic eruptions, which is designed to improve the provision and efficiency of humanitarian relief after eruptions of 10 volcanoes across three continents.
  • The cat bond aims to raise $3 million from investors for aid in the aftermath of an eruption

First-ever catastrophe bond

  • World Bank (International Bank for Reconstruction and Development, IBRD) announced its first-ever catastrophe bond (‘cat bond’).

6. எரிமலை சீற்றங்களுக்கான உலகின் முதல் பேரழிவு பத்திரத்தை டேனிய செஞ்சிலுவை சங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது

  • உலகின் முதல் எரிமலை வெடிப்புகளுக்கான பேரழிவு பத்திரம் (‘கேட் பத்திரம்’) பேரழிவு நிவாரணத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது
  • டேனிய செஞ்சிலுவைச் சங்கம் எரிமலை வெடிப்புகளுக்கான உலகின் முதல் பேரழிவு பத்திரத்தை வழங்குகிறது, இது மூன்று கண்டங்களில் 10 எரிமலை வெடிப்புகளுக்குப் பிறகு நிவாரணத்தின் வழங்கல் மற்றும் செயல்திறனை மேம்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • கேட் பத்திரம் முதலீட்டாளர்களிடம் இருந்து $3 மில்லியன் வரை திரட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

முதல் பேரழிவு பத்திரம்

  • உலக வங்கி (மறுசீரமைப்பு மற்றும் அபிவிருத்திக்கான சர்வதேச வங்கி, IBRD) அதன் முதல் பேரழிவு பத்திரத்தை (‘கேட் பத்திரம்’ அறிவித்தது).

7. Project TORONTO launched to build the world’s first ship tunnel in Norway.

  • The world’s first ship tunnel will run underneath the mountains in Norway’s Stadhavet peninsula. It will measure 1,700 metres long, 37 metres high and 26.5 metres.
  • Vessels sometimes must wait days for harsh weather and rough tides to subside in the Stadhavet Sea before transiting the area at present.
  • The project is expected to be completed by 2026.

7. உலகின் முதல் கப்பல் சுரங்கப்பாதையை நார்வேயில் அமைக்கும் ரொரன்டோ திட்டம் தொடங்கப்பட்டது

  • உலகின் முதல் கப்பல் சுரங்கப்பாதை நார்வேயின் ஸ்டாதவேத் தீபகற்பத்தில் உள்ள மலைகளுக்கு அடியில் அமையும். 1,700 மீட்டர் நீளமும், 37 மீட்டர் உயரமும்,5 மீட்டர் நீளமும் இருக்கும்.
  • தற்போது கப்பல்கள் சில நேரங்களில் கடுமையான வானிலை மற்றும் கரடுமுரடான அலைகளின் காரணமாக, அந்தப் பகுதியைக் கடப்பதற்கு முன்னர் ஸ்டாதவெட் கடலில் சில நாட்கள் காத்திருக்க வேண்டும்.
  • 2026ஆம் ஆண்டுக்குள் இத்திட்டம் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

8. Largest Tulip Garden in Asia is now open for public

  • The Tulip Garden in Srinagar is a spectrum of colours featuring lakhs of tulips that have blossomed in the lap of Zabarwan Hills.
  • It is located along the banks of the world-famous Dal Lake in Srinagar city.Tamil translation.

8. ஆசியாவின் மிகப்பெரிய துலிப் தோட்டம் இப்போது பொதுமக்களின் பார்வைக்காக திறக்கப்பட்டுள்ளது

  • ஸ்ரீநகரில் உள்ள துலிப் தோட்டம் உள்ள ஜபர்வான் மலைகளின் மடியில் லட்சக்கணக்கான துலிப்கள் கொண்ட வண்ணங்களின் நிறமாலையாக காட்சியளிக்கிறது.
  • உலகப் புகழ்பெற்ற தால் ஏரியின் கரையில் தோட்டம் அமைந்துள்ளது.

9. Badamwari garden’s open to public on account of Spring

  • The aromatic garden, Badamwari is located in the foothills of historic Koh-e-Maraan in Srinagar city.
  • It is famous for full almond bloom in the garden and is also known as “Badam Waer”.
  • During the opening ceremony, several cultural activities including traditional folk songs and group dance known as “RAUFF” were performed by local artists of Valley.

RAUFF

  • RAUFF is a folk dance that originated in the Muslim community of Kashmir and is mainly performed by women.

9. பாதாம்வாரி தோட்டம் வசந்த காலத்தையொட்டி பொதுமக்களின் பார்வைக்காக திறக்கப்பட்டுள்ளது

  • நறுமணப் பூங்காவான பாதாம்வாரி ஸ்ரீநகரின் வரலாற்று சிறப்புமிக்க கோ-இ-மாரன் அடிவாரத்தில் அமைந்துள்ளது. தோட்டம் முழுவதும் பூக்கும் பாதாம் பூவுக்கு இது மிகவும் பிரபலமானது, மேலும் இது “பாதாம் வாயர்” என்றும் அழைக்கப்படுகிறது.
  • துவக்க விழாவின் போது, பாரம்பரிய நாட்டுப்புற பாடல்கள் மற்றும் “ராஃப்” என அழைக்கப்படும் குழு நடனம் உட்பட பல கலாச்சார நடவடிக்கைகள் பள்ளத்தாக்கு உள்ளூர் கலைஞர்களால் நடத்தப்பட்டன.

ராஃப்

  • ராஃப் என்பது காஷ்மீர் முஸ்லீம் சமூகத்தில் உருவான ஒரு நாட்டுப்புற நடனம் ஆகும் மேலும் இது முக்கியமாக பெண்களால் ஆடப்படுகிறது.

10. International Day of Remembrance of The Victims of Slavery and The Transatlantic Slave Trade

  • Every year 25 March marks the International Day of Remembrance of the Victims of Slavery and the Transatlantic Slave Trade is set aside to honour and remember those who suffered and died at the hands of slavery.
  • The day also raises awareness about the dangers of racism and prejudice.
  • The theme of 2021: Ending Slavery of Racism: A global imperative for Justice
  • On 17 December 2007, the UN General Assembly designated March 25th as the International Day of Remembrance of the Victims of Slavery and the Transatlantic Slave Trade. This commemorates the day in 1807 when the House of Commons and the House of Lords passed the Abolition of the Slave Trade Act. 25 March 2015, the UN unveiled a permanent memorial called the Ark of Return. The memorial was erected at the UN Headquarters in New York City to remember those who suffered and died during the slave trade.

10. அடிமைத்தனத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அடிமை வணிகத்தால் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூரும் சர்வதேச தினம்  25 மார்ச் அனுசரிக்கப்படுகிறது

  • ஒவ்வொரு ஆண்டும் 25 மார்ச் அடிமைத்தனத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அடிமை வணிகத்தால் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூரும் சர்வதேச தினமாக அனுசரிக்கப்படுகிறது.
  • இனவெறி மற்றும் பாரபட்சத்தின் ஆபத்துகள் பற்றிய விழிப்புணர்வையும் இந்த நாள் ஏற்படுத்துகிறது.
  • 2021ன் கருப்பொருள்: இனவாத அடிமைத்தனத்தை முடிவுக்குகொண்டு வருதல்: நீதிக்கான உலகளாவிய தேவை
  • 17 டிசம்பர் 2007அன்று, ஐ.நா. பொதுச்சபை 25 மார்ச்சை அடிமை மற்றும் அடிமை வணிகத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நினைவு நாளாக அறிவித்தது. 1807ஆம் ஆண்டு மக்களவையும் பிரபுக்கள் அவையும் அடிமை வணிகச் சட்டத்தை ஒழித்ததை நினைவு கூரும் வகையில், 25 மார்ச் 2015 அன்று ஐ.நா. அடிமைத்தனத்தால் பாதிக்கப்பட்ட மற்றும் இறந்தவர்களை நினைவுகூரும் வகையில் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் வருகையின் வளைவு ஒன்றை நினைவுமண்டபமாக அமைத்தது.

Students can download the Daily TNPSC Current Affairs in English & Tamil as PDF from the links given below – TNPSC daily Current Affairs – English & Tamil – March 25, 2021. 


Download TNPSC Daily Current Affairs – PDF
25th March, 2021 Will be Available soon

Check TNPSC – Daily Current Affairs – March Month in TAMIL & English from bankersdaily from the links below. 


Read – TNPSC Daily Current Affairs – March 2021