TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 3, 2018

இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் நீண்டகால கடன் பெற பாரத ஸ்டேட் வங்கியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட உள்ளது :

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 3, 2018

  • இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ரூ.25,000 கோடிக்கு பிணையம் இல்லாத கடன் பெற உள்ளது. மூன்றாண்டு காலத்திற்கு கடனை திருப்பி செலுத்த தேவையில்லாமல் 10 ஆண்டுகாலத்திற்கான கடனாகும் இது.இதன்படி இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம்( National Highways Authority of India (NHAI) ) பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைந்து ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்
    கையெழுத்திட உள்ளது.
  • இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மத்திய சாலைப்போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி முன்னிலையில் புதுதில்லியில் கையெழுத்தாகிறது.
  • மொத்தம் அனுமதிக்கப்பட்டுள்ள ரூ.25,000 கோடி 2019 மார்ச் 31-க்குள் வழங்கப்படும். இதற்கான வட்டி வீதம் ஒருமாத எம்.சி.எல்.ஆர் அடிப்படையில் இருக்கும்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருக்கு கணிதத்துக்கான சர்வதேச விருது:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 3, 2018

  • ரியோ டி ஜெனிரோ நகரில் கடந்த 1-ம் தேதி நடந்த விழாவில், பிர்காருக்கும் பீல்ட்ஸ் விருது வழங்கப்பட்டது. 14 காரட் தங்கப் பதக்கம் அவருக்கு வழங்கப்பட்டது.
  • நோபல் பரிசுக்கு நிகரானதாகக் கருதப்படும், கணிதத்துக்கான சர்வதேச விருதுக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் உட்பட 4 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
  • இந்நிலையில், 2018-ம் ஆண்டுக் கான பீல்ட்ஸ் விருதுக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அக் ஷய் வெங்கடேஷ், ஈரான் நாட்டின் குர்திஷ் வம்சாவளியைச் சேர்ந்த காசெர் பிர்கார், ஜெர்மனியின் பீட்டர் சோல்ஸ், இத்தாலியின் அலிசியோ பிகாலி ஆகிய 4 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.அதில் 4 பேருக்கும் பீல்ட்ஸ் விருதுக்கான பதக்கமும் பரிசுத் தொகையாக 15 ஆயிரம் கனடா டாலரும் வழங்கப்பட்டது.

புவிசார் குறியீடு பெற்ற பொருட்களுக்கான அடையாள சின்னத்தை வெளியிட்டது மத்திய அரசு:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 3, 2018

  • புவிசார் குறியீடு பெற்ற பொருட்களுக்கான அடையாள சின்னத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட இடத்தில் தனித்துவமாக தயாரிக்கப்படும் பொருட்களுக்கு புவிசார் குறியீடு தகுதி வழங்கப்படுகிறது.
  • இந்தியாவை பொறுத்தவரை 320 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இனி புவிசார் குறியீடு சான்று பெற்றவர்கள் மட்டுமே இதற்கான பிரத்யேக லோகோவை பயன்படுத்த முடியும்.

இடைமறித்து தாக்கி அழிக்கும் சூப்பர்சோனிக் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 3, 2018

  • எதிரிகளின் ஏவுகணைகளை இடைமறித்து தாக்கி அழிக்கும் ஆற்றல் கொண்ட சூப்பர்சோனிக் ஏவுகணையில் முக்கிய சில அம்சங்கள் சேர்க்கப்பட்டு நேற்று வெற்றிகரமாக சோதனை செய்து பார்க்கப்பட்டது.
  • உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட எதிரி நாடுகளின் ஏவுகணைகளை இடைமறித்து தாக்கும் மேம்படுத்தப்பட்ட சூப்பர்சோனிக் ஏவுகணைகள் ராணுவத்தில் சேர்க்கப்பட உள்ளன. இந்த ஏவுகணை 7.5 மீட்டர் நீளம் கொண்டது.இந்த சோதனை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுரேஷ் பிரபு புவியியல் அடையாளங்களுக்கான(GI) ஒரு லோகோவை தொடங்கிவைத்தார்:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 3, 2018

  • வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, intellectual property rights (IPR கள்) பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்க புவியியல் அடையாளங்களுக்கான(Geographical Indications (GI)) ஒரு லோகோ மற்றும் tagline ஒன்றை தொடங்கிவைத்தார்.
  • ‘Invaluable Treasures of Incredible India’ என்பதே இதற்கான slogan.

உலகின் முதல் ஹிந்தி பேசும் ரோபோ ரஷ்மி‘:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 3, 2018

  • ராஞ்சி அடிப்படையிலான மென்பொருள் மேம்பாட்டாளர் ரஞ்சித் ஸ்ரீவாஸ்தா உலகின் முதல் ஹிந்தி பேசும் மனித ரோபோ ரோபோவை உருவாக்கி வருகிறார்.
  • ரஷ்மி என்ற பெயரில் பெயரிடப்பட்ட ரோபோ, போஜ்பூரி, மராத்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் பேசம், மேலும் முகபாவங்கள் மற்றும் அங்கீகார அமைப்புகளுடன் பொருத்தப்பட்டிருக்கும்.

கேள்விகள்

Q.1) இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் நீண்டகால கடன் பெற எந்த
வங்கியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட உள்ளது?

a) பாரத ஸ்டேட் வங்கி

b) யூகோ வங்கி

c) இந்தியன் வங்கி

d) எஸ் பேங்க்

e) HDFC பேங்க்

Click Here to View Answer
a) பாரத ஸ்டேட் வங்கி

 Q.2) அக் ஷய் வெங்கடேஷ்,காசெர் பிர்கார்,காசெர் பிர்கார் மற்றும் அலிசியோ பிகாலி ஆகிய 4 பேருக்கும் பீல்ட்ஸ் விருதுக்கான பதக்கமும் பரிசுத் தொகையாக 15 ஆயிரம் கனடா டாலரும் வழங்கப்பட்டது.இந்த விருது வழங்கும் விழா நடைபெற்ற இடம் ______.

a) ரோம்

b) கிரீஸ்

c) ரியோ டி ஜெனிரோ

d) பாரிஸ்

e) நைஸ்

Click Here to View Answer
c) ரியோ டி ஜெனிரோ

 Q.3) Intellectual property rights (IPR கள்) பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்க புவியியல் அடையாளங்களுக்கான(Geographical Indications (GI)) ஒரு லோகோ மற்றும் tagline ஒன்றை தொடங்கிவைத்தவர் யார்?

a) ஆனந்த் கீத்

b) பியூஸ் கோயல்

c) சுரேஷ் பிரபு

d) சுஷ்மா ஸ்வராஜ்

e) ராஜ்நாத் சிங்க்

Click Here to View Answer
c) சுரேஷ் பிரபு

Q.4) சுரேஷ் பிரபு வெளியிட்ட புவியியல் அடையாளங்களுக்கான(Geographical Indications (GI)) ஸ்லோகன் என்ன ?

a) ‘Invitable Treasures of Incredible India’

b) ‘Invinsible Treasures of Incredible India’

c) ‘Invertable Treasures of Incredible India’

d) ‘Inheritant Treasures of Incredible India’

e) ‘Invaluable Treasures of Incredible India’

Click Here to View Answer
e) ‘Invaluable Treasures of Incredible India’

Q.5) ரஞ்சித் ஸ்ரீவாஸ்தா உலகின் முதல் ஹிந்தி பேசும் மனித ரோபோ ரோபோவை உருவாக்கி வருகிறார்.இந்த ரோபோவின் பெயர் என்ன ?

a) சக்தி

b) ரஷ்மி

c) ரித்வி

d) ரிக்கெட்ஸ்

e) வினித்

Click Here to View Answer
b) ரஷ்மி


Other Important Links

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 2, 2018

 TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 1, 2018