TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 22, 2018
Want to Become a Bank, Central / State Govt Officer in 2020?
Join the Most awarded Coaching Institute & Get your Dream Job
Now Prepare for Bank, SSC Exams from Home. Join Online Coure @ lowest fee
Lifetime validity Bank Exam Coaching | Bank PO / Clerk Coaching | Bank SO Exam Coaching | All-in-One SSC Exam Coaching | RRB Railway Exam Coaching | TNPSC Exam Coaching | KPSC Exam Coaching
TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 22, 2018
ஃபோர்ப்ஸின் List Of Highest Paid Female Athletes 2018 பட்டியல் வெளியிடப்பட்டது:
- ஃபோர்ப்ஸ் வெளியிட்ட “List Of Highest Paid Female Athletes 2018” பட்டியலின் படி,செரீனா வில்லியம்ஸ் (வருமானம் $ 18.1 மில்லியன்) 2018 ஆம் ஆண்டில் மூன்றாவது முறையாக அதிக சம்பளம் பெறும் பெண் தடகள வீரர் ஆவார்.
- ஆஸ்திரேலிய ஓபன் 2018 இல் தனது முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றிய டேன் கரோலின் வோஸ்னாகி, மொத்த வருவாய் (13 மில்லியன் டாலர்) பட்டியலில் இரண்டாவது இருக்கிறார் .
- இந்திய பேட்மின்டன் வீரர் பி.வி.சிந்து 8.5 மில்லியன் டாலர் வருவாய் ஈட்டி ஏழாவது இடத்தில் இருந்தார்.
ஆசிய விளையாட்டு போட்டியில் செபக் டக்ரா, மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு வெண்கலம்:
- இந்தோனேஷியாவில் ஆசிய விளையாட்டுப் போட்டி நடைபெற்று வருகிறது.
- இதில் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய ஆண்கள் செபக் தக்ரா மற்றும் மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு வெண்கலம் கிடைத்தது.
ஆசிய விளையாட்டு போட்டியில் ஹாக்கி போட்டியில் இந்திய அணி வெற்றி:
- ஆசிய விளையாட்டு போட்டியில் ஹாங்காங் அணியுடனான ஹாக்கி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.
- 26-0 என்ற கோல் கணக்கில் ஹாங்காங் அணியை இந்திய அணி வீழ்த்தியது.
துப்பாக்கிச்சுடுதலில் தங்கப்பதக்கம் வென்றார் இந்திய வீராங்கனை ரஹி சர்னோபத்:
- ஆசிய விளையாட்டு போட்டியில் துப்பாக்கிச்சுடுதலில் இந்தியா மேலும் ஒரு தங்கப்பதக்கம் வென்றுள்ளது.
- மகளிர் 25 மீ பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை ரஹி சர்னோபத் தங்கப்பதக்கம் வென்றார். 4 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலம் வென்று பதக்கப்பட்டியலில் இந்தியா 6 வது இடத்தில் உள்ளது.
ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு 4-வது தங்கம்:
- 45 நாடுகள் பங்கேற்றுள்ள 18-வது ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேஷியாவின் ஜகர்தா மற்றும் பாலெம்பேங் நகரங்களில் நடந்து வருகிறது. போட்டியின் 3-வது நாளான நேற்று இந்தியா ஒரே நாளில் 5 பதக்கங்களை அள்ளியது.
- இந்த நிலையில், இந்தியாவின் பதக்க வேட்டை இன்றும் நீடிக்கிறது, மகளிர் 25 மீட்டர் ஏர்பிஸ்டல் பிரிவில், இந்தியாவின் ராஹி சர்ன்பட் தங்கம் பதக்கத்தை தட்டிச்சென்றார். ஆசிய விளையாட்டு தொடரில் இந்தியா வெல்லும் 5-வது தங்கம் இதுவாகும்.
- இந்தியா தற்போது வரை 4 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 11 பதக்கங்களுடன் 6-வது இடத்தில் உள்ளது. 32 தங்கம், 21 வெள்ளி, 12 வெண்கலம் என மொத்தம் 65 பதக்கங்களுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.
நயா ராய்பூர் ‘அடல் நகர்‘ என்று பெயர்மாற்றபடும் என சத்தீஸ்கர் அமைச்சரகம் அறிவிப்பு:
- முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சத்தீஸ்கர் அமைச்சரகம் நயா ராய்பூர் என்ற பெயரை ‘அடல் நகர்‘ என்று மறுபரிசீலனை செய்ய ஒப்புதல் அளித்தது.
- அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு முதல்வர் ராமன் சிங் இதை அறிவித்தார்.
TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – AUGUST 22,2018
TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 21, 2018
TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 13, 2018
TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 10, 2018