TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – OCTOBER 4, 2018
Want to Become a Bank, Central / State Govt Officer in 2020?
Join the Most awarded Coaching Institute & Get your Dream Job
Now Prepare for Bank, SSC Exams from Home. Join Online Coure @ lowest fee
Lifetime validity Bank Exam Coaching | Bank PO / Clerk Coaching | Bank SO Exam Coaching | All-in-One SSC Exam Coaching | RRB Railway Exam Coaching | TNPSC Exam Coaching | KPSC Exam Coaching
TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – OCTOBER 4, 2018
Dear TNPSC aspirants,
Since our group 2 exam is nearer its time for us to learn the current events in a crispy and detailed manner to come over all the upcoming Examinations.Here is the TNPSC Current Affairs in tamil which will be updated daily to stay updated with the current events daily.
சாலை போக்குவரத்து மற்றும் சாலை போக்குவரத்து தொழில் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்:
- சாலை போக்குவரத்து மற்றும் சாலை போக்குவரத்து தொழில் துறைகளில் இந்தியா மற்றும் ரஷ்யா இடையேயான இருதரப்பு ஒத்துழைப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- ரஷ்யா அதிபர் இந்தியாவிற்கு வருகை தரும்போது இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும்.போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறைகளில் ஒத்துழைப்பு ஏற்படுத்தாவும் மேம்படுத்தவும் இரு நாடுகளும் கலந்துரையாடி முடிவு செய்து சாலை போக்குவரத்து மற்றும் சாலை போக்குவரத்து தொழில் துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளன.
ஐசிஐசிஐ வங்கி தலைமைச் செயல் அதிகாரி சந்தா கொச்சார் ராஜினாமா:
- ஐசிஐசிஐ வங்கி தலைமைச் செயல் அதிகாரி சந்தா கொச்சார் பதவி விலகினார்.
- தற்போது புதிய தலைமைச் செயல் அதிகாரியாக சந்தீப் பாக்ஷி பொறுப்பேற்றுக்கொண்டார்.
செகூர் மாவட்டத்தில் மனநல மறுவாழ்வுக்கான தேசிய நிறுவனம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்:
- பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை எடுக்கப்பட்ட முடிவில் சிறு மாற்றம் செய்து, மத்திய பிரதேசம் போபாலுக்கு பதிலாக, செகூர் (போபால் – செகூர் நெடுஞ்சாலை) மாவட்டத்தில் மனநல காப்பகத்திர்கான தேசிய நிறுவனத்தை அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது.
- நாட்டில் மனநல மறுவாழ்வு பிரிவில் தேசிய நிறுவனம் அமைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறையில் இந்தியா மற்றும் ரஷ்யா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்:
- இந்திய குடியரசின் மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் பொதுத் துறை நிறுவனமான தேசிய சிறு தொழில்கள் நிறுவனமும் ரஷ்யாவின் சிறு மற்றும் நடுத்தர தொழில் வர்த்தக நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
- இருநாடுகளுக்கும் இடையே சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துவதே இந்த ஒப்பந்தத்தின் குறிக்கோளாகும்.
ஈராக்கில் புதிய பிரதமர் தேர்வு:
- ஈராக் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்றது.இந்த தேர்தலில் பர்ஹாம் சலே பெரும்பான்மையுடன் ஈராக்கின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டார். பார்ஹம் சாலே ஈராக்கின் மதவாத அரசியல்வாதி ஆவார்.
- இந்நிலையில் புதிய அதிபர் பார்ஹம் சாலே, பிரதமர் பதவிக்கு ஷியா பிரிவைச் சேர்ந்த அதேல் அப்துல் மாஹ்தியை தேர்வு செய்தார்.
சர்வதேச சூரிய ஒளியின் முதல் பொது சபை தில்லியில் நடைபெறவுள்ளது:
- சர்வதேச சூரியஒளி கூட்டமைப்பின் (ISA) முதல் பொதுப்பேரவை கூட்டத்தினை புது தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்துள்ளார்.
- சர்வதேச சூரியஒளி கூட்டமைப்பு 2015 இல் அமைக்கப்பட்டது
- தலைமையகம்: குருகிராம், ஹரியானா
3 வது இளைஞர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி:மனு பேகர் தேசிய கொடியை ஏந்த உள்ளார்:
- அர்ஜென்டீனாவின் ப்யூனோஸ் ஏர்ஸ் நகரில் அக்டோபர் 6-18 முதல் நடைபெறவுள்ள 3 வது இளைஞர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான இந்திய வீரர்கள் அணிவகுப்பில் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பேகர் தேசிய கொடியை ஏந்த உள்ளார்.
TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – OCTOBER 4, 2018
Click on the link given below to watch the TNPSC Current Affairs – OCTOBER 3, 2018
Get 7000 Questions for TNPSC Group II Exam now : Click Here
IBPS CLERK 2018 – PREFERENCE ORDER – TAMIL NADU
IBPS RRB PO MAINS EXAM 2018 REVIEW, ANALYSIS AND QUESTIONS ASKED IN EXAM – September 30, 2018
RELATED LINKS
TNPSC CURRENT AFFAIRS IN TAMIL –OCTOBER 2 & 3, 2018
TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – OCTOBER 1 , 2018
TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 29 , 2018