TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 1, 2018

சத்தீஸ்கர் முதல்வர், கங்கனா ரனவுட் ஸ்மார்ட்போன் விநியோக திட்டத்தை தொடங்கிவைத்தனர்

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 1, 2018

  • சத்தீஸ்கர் மாநில அரசு நலத் திட்ட விழாவில் மாநில முதல்வர் ரமன் சிங்குடன் தேசிய விருது பெற்ற நடிகை கங்கனா ரணாவத்தும் கலந்துகொண்டு சஞ்சார் க்ராந்தி யோஜ்னா திட்டத்தை தொடங்கிவைத்தார்.
  • சத்தீஸ்கர் மாநிலத்தில் சஞ்சார் க்ராந்தி யோஜ்னா திட்டத்தின்கீழ் மொபைல் திஹார்எனப்படும் புதிய நலத்திட்ட தொடக்க விழா நடைபெற்றது.
  • இந்த திட்டம் ஸ்மார்ட்ஃபோனை பெண்களுக்கும், மாணவர்களுக்கும் வழங்குவதோடு, 50 லட்சம் பயனாளிகளை உள்ளடக்கியது

கோபால கிருஷ்ண காந்திக்கு ராஜீவ் விருது:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 1, 2018

  • முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த நாளான ஆகஸ்ட் 20ம் தேதி. மத நல்லிணக்க நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.
  • இதை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும்,‘ராஜீவ் காந்தி சத்பாவனா விருது’ வழங்கப்பட்டு வருகிறது. விருது பெறுபவர்களுக்கு கேடயமும், ரூ.10 லட்சமும் வழங்கப்படுகிறது.
  • வரும் 20ம் தேதி நடைபெறும் விழாவில் கோபால கிருஷ்ண காந்திக்கு ‘ராஜீவ் காந்தி சத்பாவனா விருது’ வழங்கப்படுகிறது.

ரஷ்ய ஓபன் பாட்மிண்டனில் சவுரவ் வர்மா சாம்பியன் பட்டம் வென்றார்:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 1, 2018

  • ரஷ்யாவில் நடைபெற்று வந்த ரஷ்ய ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் சவுரவ் வர்மா சாம்பியன் பட்டம் வென்றார்.
  • ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் நகரில் ரஷ்யா ஓபன் டூர் சூப்பர் 100 பாட்மிண்டன் போட்டிகள் நடைபெற்று வந்தன.
  • இந்த நிலையில் நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் இறுதிச் சுற்றில் இந்தியாவின் சவுரவ் வர்மாவும், ஜப்பான் வீரர் கோகி வத்தனாபேவும் மோதினர்.
  • இதில் சிறப்பாக விளையாடிய சவுரவ் வர்மா 19-21 21-12 21-17 என்ற செட் கணக்கில் கோகி வத்தனாபேவை வீழ்த்தி பட்டத்தைக் கைப்பற்றினார்.

ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் உயர்வு:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 1, 2018

  • வங்கிகளுக்கான குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 6.25 சதவீதத்திலிருந்து 6.50 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
  • ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
  • இதனால், வீடு, வாகன கடனுக்கான வட்டி விகிதம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • 2018 – 19 ல் ஜிடிபி வளர்ச்சி 7.4 சதவீதமாக இருக்கும் என ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.

நீரேஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் தங்கம் வென்றார் :

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 1, 2018

  • சர்வதேச ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்றார் இந்தியாவின் இளம் வீரர் நீரேஜ் சோப்ரா
  • பின்லாந்தில் நடந்த சாவோ விளையாட்டில் இந்தியா சார்பில் முன்னாள் ஜூனியர் உலக சாம்பியன் ,காமென்வெல்த்தில் தங்கம் வென்ற நீரேஜ் சோப்ரா 20,பங்கேற்றார் .
  • ஆசிய விளையாட்டுக்கு தயார் ஆகி வரும் இவர் இம்முறை 85.69மீ தூரம் எறிந்து முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் கைப்பற்றினார்.
  • சீன தைபபே வீரர் சாவோ டிசங் செங் 82.52மீ தூரம் எறிந்து வெளிப்பதக்கமும் மற்றொரு சீன தைபபே வீரர் பெங் 78.74மீ தூரம் எறிந்து வெண்கலப்பதக்கமும் வென்றனர்.

இம்ரான் கான் பாகிஸ்தான் பிரதமராக பதவி ஏற்க உள்ளார்:

“DAILY CURRENT AFFAIRS: JULY 29 & 30, 2018” is locked DAILY CURRENT AFFAIRS: JULY 29 & 30, 2018

  • இம்ரான் கான் ஆகஸ்ட் மாதம் 14 ம் திகதிக்கு முன்னதாக பாக்கிஸ்தானின் புதிய பிரதமராக பதவியேற்கவுள்ளார்.
  • அதை அறிவித்த பாக்கிஸ்தான் தெஹ்ரிக்இன்சஃப் (PTI), அடுத்த அரசாங்கத்தை அமைக்க சிறிய கட்சிகளையும் சுயேட்சைகளையும் அடைய முயற்சிக்கிறது.

சர்வதேச இராணுவ விளையாட்டு 2018 மாஸ்கோவில் திறந்து வைக்கப்பட்டது:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 1, 2018

  • ரஷியன் பாதுகாப்பு அமைச்சர் Sergei Shoigu மூலம் Patriot Park மாஸ்கோ பிராந்தியத்தில் சர்வதேச இராணுவ விளையாட்டு 2018 திறக்கப்பட்டது.
  • ஏழு நாடுகளில் அஜர்பைஜான், ஆர்மீனியா, பெலாரஸ், ​​ஈரான், கஜகஸ்தான், சீனா மற்றும் ரஷ்யாவில் 24 பயிற்சி மைதானங்களில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 11 வரை நடைபெற உள்ளது.
  • முதல் தடவையாக ஆர்மீனியாவும் ஈரானும் இணைந்து இராணுவ விளையாட்டு நிகழ்ச்சியை செயல்படுத்துகிறது.

கேள்விகள்

Q.1) சத்தீஸ்கர் மாநிலத்தில் சஞ்சார் க்ராந்தி யோஜ்னா திட்டத்தின்கீழ் ______ எனப்படும் புதிய நலத்திட்ட தொடக்க விழா நடைபெற்றது.

a) “ஸ்மார்ட் திஹார்

b) “ஸ்மார்ட் இந்தியா

c) ”மொபைல் திஹார்

d) “இந்தியா திஹார்

e) “மொபைல் இந்தியா

Click Here to View Answer
c) ”மொபைல் திஹார்

 Q.2) முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த நாளான ஆகஸ்ட் 20ம் தேதி நடைபெறும் விழாவில் கோபால கிருஷ்ண காந்திக்கு ‘ராஜீவ் காந்தி சத்பாவனா விருது’ வழங்கப்படுகிறது. ஆகஸ்ட் 20 எந்த நாளாக கொண்டாடப்படுகிறது

a) மத நல்லிணக்க நாள்

b) உலக ஓசோன் தினம்

c) தேசிய விளையாட்டு நாள்

d) தேசிய இளைஞர் தினம்

e) உலக மக்கள் தினம்

Click Here to View Answer
a) மத நல்லிணக்க நாள்

 Q.3) ரஷ்ய ஓபன் பாட்மிண்டன் போட்டியில் சவுரவ் வர்மா சாம்பியன் பட்டம் வென்றார்.இவர் எந்த நாட்டை சார்ந்தவர் ?

a) சவுத் ஆப்பிரிக்கா

b) ஆஸ்திரேலியா

c) இந்தியா

d) நேபால்

e) இங்கிலாந்து

Click Here to View Answer
c) இந்தியா

 Q.4) சர்வதேச ஈட்டி எறிதல் போட்டியில் வெளிப்பதக்கம் வென்றவர் யார்?

a) ஜூலியஸ்

b) தாமஸ் ரோஹளீர்

c) பெங்

d) சாவோ டிசங் செங்

e) நீரேஜ் சோப்ரா

Click Here to View Answer
d) சாவோ டிசங் செங்

 Q.5) தெஹ்ரிக்இன்சஃப் பாக்கிஸ்தான் புதிய பிரதமராக யாரை அறிவித்தார் ?

a) ஜான் கார்நெய்

b) தண்ணீல் மல்லோய்

c) ஜெர்ரி ப்ரவுன்

d) பில் வாள்கெர்

e) இம்ரான் கான்

Click Here to View Answer
e) இம்ரான் கான்

 Q.6) சர்வதேச இராணுவ விளையாட்டு 2018 எங்கு தொடங்குகிறது ?

a) மாஸ்கோ

b) இஸ்லாமாபாத்

c) அம்மன்

d) கான்பெரா

e) ஜெருசலேம்

Click Here to View Answer
a) மாஸ்கோ


   Other Important Links

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – JULY 27, 2018

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – JULY 26, 2018