TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – OCTOBER 2&3, 2018

Dear TNPSC aspirants,

Since our group 2 exam is nearer its time for us to learn the current events in a crispy and detailed manner to come over all the upcoming Examinations.Here is the TNPSC Current Affairs in tamil which will be updated daily to stay updated with the current events daily.


உச்ச நீதிமன்றத்தின் 46-வது தலைமை நீதிபதியாகப் பதவி ஏற்றார் ரஞ்சன் கோகோய்:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – OCTOBER 3, 2018

  • ரஞ்சன் கோகோய் உச்ச நீதிமன்றத்தின் 46-வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார். புதுடெல்லியில் நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கோகோய்க்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
  • வடகிழக்கு மாநிலங்களில் இருந்து வரும் முதல் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியான கோகோய், நவம்பர் 17, 2019 வரை பதவியில் இருப்பார்.
  • உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த தீபக் மிஸ்ராவின் பதவிக்காலம் அக்டோபர் 2-ம் தேதியுடன் முடிவடைந்தது.

இராக் அதிபராக பார்ஹம் சாலிஹ் தேர்வு:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – OCTOBER 3, 2018

  • இராக்கின் புதிய அதிபராக அந்நாட்டின் மூத்த அரசியல்வாதியான பார்ஹம் சாலிஹ் நாடாளுமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
  • மூத்த மிதவாத அரசியல்வாதியாக அறியப்பட்ட சாலிஹ் , அந்நாட்டின் இரண்டு முக்கிய குர்து கட்சிகளிடையே நடந்த வாக்கெடுப்புகளின் இறுதியில் அதிபர் வேட்பாளராக வெற்றி பெற்றிருக்கிறார்.

2018-ம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – OCTOBER 3, 2018

  • ஸ்வீடனில் உள்ள நோபல் பரிசுக்குழுவினர் 2018-ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசை அமெரிக்கா, பிரான்ஸ், கனடா விஞ்ஞானிகளுக்கு அறிவித்துள்ளனர்.
  • இந்நிலையில் இயற்பியலுக்கான நோபல் பரிசை ஸ்வீடன் நோபல்பரிசுக் குழுவினர் இன்று அறிவித்தனர்.
  • லேசர் பிசிக்ஸ் பிரிவில் பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளைச் செய்த அமெரிக்க இயற்பியலாளர் ஆர்தர் ஆஷ்கின், பிரான்ஸ் நாட்டு விஞ்ஞானி ஜெரார்டு மோரோ, கனாடா நாட்டின் பெண் விஞ்ஞானி டோனா ஸ்டிரிக்லான்ட் ஆகியோருக்குக் கூட்டாக விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

2018 ம் ஆண்டு வேதியலுக்கான நோபல் பரிசுக்கு ஸ்மித், பிரான்சஸ்,விண்ட்டர் ஆகியோர் தேர்வு:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – OCTOBER 3, 2018

  • சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் 2018ம் ஆண்டு வேதியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
  • 2018ம் ஆண்டில் வேதியலுக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்காவைச் சேர்ந்த ஜார்ஜ் ஸ்மித், பிரான்சஸ் அர்னால்டு, பிரிட்டனின் கிரிகோரி விண்ட்டர் ஆகியோர் தேர்வாகி உள்ளனர்.

ஐஎம்எப் தலைமை பொருளாதார ஆலோசகராக கீதா கோபிநாத் நியமனம்:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – OCTOBER 3, 2018

  • சர்வதேச செலாவணி நிதியத்தின் (IMF) தலைமைப் பொருளாதார ஆலோசகராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பொருளாதார வல்லுநர் கீதா கோபிநாத் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • ஐஎம்எப் அமைப்பின் தலைமை பொருளாதார ஆலோசகராக, ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜனுக்கு பின்னர் நியமிக்கப்படும் 2-வது இந்தியர் கீதா கோபிநாத் என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – OCTOBER 3, 2018

  • இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி..) தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது என, மத்திய தகவல் ஆணையம் அறிவித்துள்ளது.

ராணுவ தளவாடம் வாங்க ரஷ்யாவுடன் இந்தியா ஒப்பந்தம்:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – OCTOBER 3, 2018

  • இருநாடுகள் இடையேயான உறவை மேம்படுத்தும் வகையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், நாளை இந்தியா வருகிறார்.
  • அப்போது ரூ36,000 கோடியில் ராணுவ தளவாடங்கள் வாங்க ரஷ்யாவுடன் இந்தியா ஒப்பந்தம் செய்ய உள்ளதாக புதினின் வெளியுறவு கொள்கை ஆலோசகர் உசாகோவ் கூறினார்.

தேசப்பிதா மஹாத்மா காந்திக்கு அமெரிக்காவின் உயரிய விருது:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – OCTOBER 3, 2018

  • அமைதி மற்றும் அஹிம்சையை, தன் வாழ்நாள் முழுவதும் கடைபிடித்ததற்காக, மஹாத்மா காந்திக்கு, அமெரிக்க அரசின், மிக உயரிய விருது வழங்கப்பட உள்ளது.
  • சமீபத்தில், அமெரிக்க பார்லிமென்டில், அந்நாட்டின் மிக உயரிய விருதாக கருதப்படும், அமெரிக்க பார்லிமென்ட் தங்க பதக்கம்என்ற விருதை, மஹாத்மா காந்திக்கு வழங்குவது என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  • அமைதி, அஹிம்சையை கடைபிடித்ததற்காக, காந்திக்கு, இந்த விருது வழங்கப்பட உள்ளது.

3 வது பாரா ஆசிய விளையாட்டு: இந்திய கொடியை ஏந்தி செல்ல உள்ளார் தங்வேலு மாரியப்பன்

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – OCTOBER 3, 2018

  • 2016- ரியோ பாரா ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் வென்ற தங்வேலு மாரியப்பன் ஜகார்த்தாவில் நடைபெறவிருக்கும் 3 வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவில் இந்திய கொடியை ஏந்தி செல்ல உள்ளார்.

வயோஸ்ஸ்ரீத சம்மான் -2018 விருது : மதுரை

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – OCTOBER 3, 2018

  • மூத்த குடிமக்களுக்கு சேவை மற்றும் வசதிகளை வழங்கும் சிறந்த மாவட்ட பஞ்சாயத்துகான “வயோஸ்ஸ்ரீத சம்மான் -2018” விருது தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளது .

 TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – OCTOBER 1, 2018


Click on the link given below to watch the TNPSC Current Affairs – OCTOBER 1, 2018



Get 7000 Questions for TNPSC Group II Exam now : Click Here 



IBPS CLERK 2018 – PREFERENCE ORDER – TAMIL NADU

IBPS RRB PO MAINS EXAM 2018 REVIEW, ANALYSIS AND QUESTIONS ASKED IN EXAM – September 30, 2018


RELATED LINKS

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – OCTOBER 1 , 2018

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 29 , 2018

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL –SEPTEMBER 28, 2018