TNPSC Current Affairs – English & Tamil – March 1, 2021

TNPSC Aspirants,

The Current Affairs Section is one of the most important topics for the upcoming TNPSC Group I, Group II/IIA, Group IV, and TNUSRB Exams.

Check today’s TNPSC Daily Current Affairs(1st March, 2020) in this post.

Aspirants can expect questions from the Daily Current Affairs section in the upcoming TNPSC Exams and learning the Current Affairs section will also aid them in successfully preparing for the descriptive paper. So this process is a 2 in 1 initiative.

To make the learning more convenient, we will be providing the TNPSC Daily Current Affairs in both ENGLISH & TAMIL. This has been made in such a way that reflects the TNPSC pattern as TNPSC uses both the languages in the Question Paper and this will also make the preparations of the aspirants meaningful and will 100% fulfill the needs of the aspirants.


Download PDF – TNPSC Daily Current Affairs – English & Tamil – March 1, 2021


Download_TNPSC_Daily_CUrrent_Affairs_PDF_7th_January_2021


1. ISRO’s PSLV C-51 launched Amazonia – 1 and 18 other satellites into orbit.

  • On February 28, ISRO’s launch vehicle PSLV, successfully placed Amazonia-1, an optical earth observation satellite from Brazil, and 18 other satellites into Orbit.
  • It was the first mission of ISRO in 2021 and the very first mission of its commercial arm NSIL.

Points to remember:

  • Amazonia 1 is the first Earth Observation satellite, to be completely designed, integrated, tested and operated by Brazil. It is a Sun-synchronous (polar) orbiting satellite that will provide remote sensing data to users for monitoring deforestation in the Amazon region and analysis of diversified agriculture across Brazilian territory.
  • The PSLV-C51 rocket also carried 18 small satellites as five being Indian satellites and 13 from the US. Four of the co-passenger satellites, such as Satish Dhawan Sat (SDSAT) and UNITYSATs were launched by IN-SPACe, and the other 14 satellites were launched by NSIL.
  • Indian National Space Promotion and Authorisation Centre (IN-SPACe) assess the needs and demands of private players, including educational and research institutions and explore ways to accommodate these requirements in consultation with ISRO.
  • New Space India Limited (NSIL) is the commercial arm of the Indian Space Research Organisation (ISRO) with the primary responsibility of enabling Indian industries to take up high technology space-related activities.

  1. இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி சி-51 அமேசானியா-1 மற்றும் 18 பிற செயற்கைக்கோள்களை சுற்றுப்பாதையில் ஏவியது.
  • பிப்ரவரி 28 அன்று, இஸ்ரோவின் ஏவுகணை வாகனம் பி.எஸ்.எல்.வி பிரேசிலின் அமேசானியா -1 என்ற ஆப்டிகல் பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் மற்றும் 18 பிற செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
  • இது இஸ்ரோவின் 2021ஆம் ஆண்டின் முதல் திட்டம் மற்றும் அதன் வர்த்தகப் பிரிவான என்.எஸ்.ஐ.எல்.(NSIL)-ன் முதல் திட்டமும் ஆகும்.

நினைவில் கொள்ள வேண்டியவை:

  • அமேசோனியா-1 என்பது பிரேசிலால் முற்றிலும் வடிவமைக்கப்பட்டு, ஒருங்கிணைக்கப்பட்டு, சோதிக்கப்பட்ட முதல் புவி அவதானிப்பு மற்றும் சூரியன் ஒத்திசைவு (துருவ) சுற்றுப்பாதை செயற்கைக்கோள் ஆகும். மேலும் இந்த செயற்கைக்கோள் அமேசான் பிராந்தியத்தில் காடழிப்பு கண்காணிப்பு மற்றும் பிரேசிலிய பிராந்தியம் முழுவதும் பல்வேறு விவசாய பகுப்பாய்வு பயனர்களுக்கு தொலை உணர்வு தரவு வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • மேலும் பிஎஸ்எல்வி-சி 51 ராக்கெட், 18 சிறிய செயற்கைக்கோள்களையும் விண்ணில் ஏவியது. இதில் ஐந்து இந்திய செயற்கைக்கோள்கள் மற்றும் 13 அமெரிக்க செயற்கைக் கோள்களும் அடங்கும் .  சதீஷ் தவான் சாட் (SDSAT) மற்றும் UNITYSATS ஆகியவை இன்-ஸ்பேஸ் மையத்தாலும், மற்ற 14 செயற்கைக்கோள்கள் என்.எஸ்.ஐ.எல்(NSIL)-ஆலும் விண்ணில் ஏவப்பட்டன.
  • இந்திய தேசிய விண்வெளி மேம்பாடு மற்றும் அதிகாரமளித்தல் மையம் (IN-Space Centre) கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களின் தேவைகளையும் கோரிக்கைகளையும் இஸ்ரோவுடன் கலந்தாலோசித்து மதிப்பீடு செய்யும்.
  • நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் (NSIL) இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) வர்த்தக பிரிவானது, இந்திய தொழில்களுக்கு உயர் தொழில்நுட்பம், விண்வெளி தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவும் முதன்மைப் பொறுப்பு கொண்டது ஆகும்.

  1. The Bill for internal reservation of 10.5% to the Vanniyar community came into force.
  • The bill allocating 10.5% internal reservation to the Vanniyar community has been approved by Tamil Nadu Governor Banwarilal Purohit.

Points to remember:

  • The 20 per cent reservation for the most backward class is divided into three parts.
  • Under the most backward class, 10.5% internal quota has been given to the Vanniyar community, 7% internal quota has been given to the De-notified community and 2.5% internal quota has been given to the remaining communities.

  1. வன்னிய சமுதாயத்தினருக்கு 10.5% உள் ஒதுக்கீடு செய்யும் சட்ட மசோதா நடைமுறைக்கு வந்தது.
  • வன்னிய சமுதாயத்தினருக்கு 10.5% உள் ஒதுக்கீடு செய்யும் சட்ட மசோதாவிற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களால் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

நினைவில் கொள்ள வேண்டியவை:

  • மிகவும் பிற்படுத்தபட்ட வகுப்பினருக்கான 20 சதவீத இட ஒதுக்கீடு மூன்றாகப் பிரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது.
  • மிகவும் பிற்படுத்தபட்ட வகுப்பின் கீழ் வரும் வன்னியர் பிரிவினருக்கு 10.5 % உள் ஒதுக்கீடும், சீர்மரபினருக்கு 7 % உள் ஒதுக்கீடும், எஞ்சிய பிரிவினருக்கு 2.5 % உள் ஒதுக்கீடும் வழங்கப்பட்டுள்ளது.

  1. Prime Minister Narendra Modi inaugurates ‘Maritime India Summit 2021’
  • Prime Minister Narendra Modi inaugurated ‘Maritime India Summit 2021’ through video conferencing. The three-day Maritime India Summit is being organised by the Ministry of Ports, Shipping and Waterways jointly with EY (Ernst & Young) as the knowledge partner and FICCI as the Industrial Partner on a virtual platform www.maritimeindiasummit.in

Points to Remember:

  • Denmark is the partner country for the three-day summit. This 2nd Maritime India Summit will be held in a virtual mode on 2 March 2021.
  • This summit will provide a unique platform that will have the virtual and physical presence of prominent shipping and transport dignitaries/ministers from all over the world.
  • The summit will visualize a roadmap for India’s Maritime sector for the next decade and will work to propel India to the forefront of the Global Maritime Sector.

  1. கடல்சார் இந்திய உச்சி மாநாடு 2021′- பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார்.
  • பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் ‘கடல்சார் இந்திய மாநாடு 2021’ ஐ துவக்கி வைத்தார். மூன்று நாள் கடல்சார் இந்திய உச்சி மாநாட்டை துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகம், EY (எர்ன்ஸ்ட் & யங்) -ஐ அறிவு பங்காளராகவும், இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பை (FICCI) தொழில்துறை பங்காளராகவும் இணைத்து www.maritimeindiasummit.in என்ற மெய்நிகர் தளத்தில் ஏற்பாடு செய்துள்ளது.

நினைவில் கொள்ள வேண்டியவை:

  • டென்மார்க் மூன்று நாள் உச்சிமாநாட்டிற்கு பங்காளராக உள்ளது. இந்த 2-வது கடல்சார் இந்திய உச்சி மாநாடு, மார்ச் 2, 2021-ல் நடைபெற உள்ளது.
  • இந்த உச்சி மாநாடு உலகெங்கிலும் உள்ள முக்கிய கப்பல் மற்றும் போக்குவரத்து பிரமுகர்கள் / அமைச்சர்களின் மெய்நிகர் மற்றும் நேரடி கலந்துரையாடலுக்கு ஒரு தனித்துவமான தளத்தை வழங்க உள்ளது.
  • மேலும் இந்த உச்சிமாநாடு அடுத்த பத்தாண்டுகளுக்கு இந்தியாவின் கடல் துறைக்கான ஒரு வரைபடத்தை காட்சிப்படுத்தவும் உலகளாவிய கடல்சார் துறையில் இந்தியாவை முன்னணியில் கொண்டு செல்லவும் உறுதுணையாக அமையும்.

  1. Union Minister Harsh Vardhan virtually addresses National Science Day function from Imphal
  • Union Minister of Science and Technology Harsh Vardhan addressed the National Science Day (NSD) function through video-conferencing from Imphal, Manipur.
  • He also highlighted how science technology and innovation (STI) would impact our future in education, skills and functioning in the post-pandemic world.

Points to Remember:

  • National Science Day is celebrated to commemorate the discovery of Raman Effect on February 28 every year.
  • Awards to science communicators and women scientists were also conferred on the occasion.
  • The theme of the National Science Day 2021 is ‘Future of STI: Impacts on Education, Skills, and Work’.

  1. மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் இம்பாலில் இருந்து தேசிய அறிவியல் தின விழாவில் காணொளி காட்சி மூலம் உரையாற்றுகிறார்
  • மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ஹர்ஷ் வர்தன், மணிப்பூரின் இம்பாலில் இருந்து காணொளி காட்சியின் மூலம் தேசிய அறிவியல் தின (NSD) விழாவில் உரையாற்றினார்.
  • தொற்றுநோய்க்கு பிந்தைய உலகில் கல்வி தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு (STI), திறன்கள் மற்றும் செயல்பாட்டில் நமது எதிர்காலத்தை எவ்வாறு பாதிக்கும் என்பதையும் அவர் எடுத்துரைத்தார்.

நினைவில் கொள்ள வேண்டியவை:

  • ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 28 அன்று ராமன் விளைவு கண்டுபிடிக்கப்பட்டதை நினைவுகூரும் வகையில் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்படுகிறது.
  • அறிவியல் தொடர்பாளர்கள் மற்றும் பெண் விஞ்ஞானிகளுக்கான விருதுகளும் இந்நிகழ்ச்சியில் வழங்கப்பட்டன.
  • 2021 ஆம் ஆண்டு தேசிய அறிவியல் தினத்தின் கருப்பொருள் ‘எஸ்.டி.ஐ(STI)யின் எதிர்காலம்: கல்வி, திறன்கள் மற்றும் வேலை மீதான தாக்கங்கள்’.

  1. US Food and Drug Administration (FDA) authorised Johnson & Johnson’s single-shot Covid-19 vaccine.
  • The United States Food and Drug Administration (FDA) authorised Johnson & Johnson’s single-shot Covid-19 vaccine for emergency use, which is the third effective vaccine in the country.

Points to remember:

  • The J&J vaccine (JNJ-78436735 or Ad26.COV2.S) has been developed by Janssen Pharmaceutica, in collaboration with Beth Israel Deaconess Medical Center, a teaching hospital of Harvard Medical School in Boston.
  • To enter human cells, the vaccine is based on the SARS-CoV-2 virus’s genetic instructions for building the spike protein.
  • Unlike other covid vaccines such as Pfizer, Moderna, Oxford-AstraZeneca and Bharat Biotech (Covaxin) vaccine, which are given as double doses, the J&J vaccine is administered as a single dose.

  1. அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் ஒழுங்காற்று அமைப்பு (FDA) ஜான்சன் & ஜான்சனின் ஒரு முறை செலுத்தப்படும் கோவிட் -19 தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளித்தது.
  • அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் ஒழுங்காற்று அமைப்பு (FDA) ஜான்சன் அண்ட் ஜான்சனின் ஒரு முறை மட்டுமே செலுத்தப்படும் கோவிட் -19 தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்காக அங்கீகரித்துள்ளது.
  • இது அந்நாட்டின் மூன்றாவது பயனுள்ள தடுப்பூசி ஆகும்.

நினைவில் கொள்ள வேண்டியவை:

  • ஜே & ஜே தடுப்பூசி (JNJ-78436735 அல்லது Ad26.COV2.S) போஸ்டனில் உள்ள ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியின் மருத்துவமனையான பெத் இஸ்ரேல் டீகோனஸுடன் இணைந்து ஜான்சன் பார்மாசூட்டிகாவால் உருவாக்கப்பட்டது.
  • மனித உயிரணுக்களுக்குள் நுழைய, தடுப்பூசி ஸ்பைக் புரதத்தை உருவாக்குவதற்கான SARS-CoV-2 வைரஸின் மரபணு வழிமுறைகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
  • மற்ற கோவிட் தடுப்பூசிகளான ஃபைசர், மாடர்னா, ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா மற்றும் பாரத் பயோடெக் (கோவாக்சின்) தடுப்பூசிகள் இரண்டு முறை வழங்கப்படுபது போல் அல்லாமல், ஜே & ஜே தடுப்பூசி ஒரு முறை நிர்வகிக்கப்படுவது ஆகும்.

  1. Russian supermodel ‘Supernova’ Natalia Vodianova is the new UN goodwill ambassador
  • Russian supermodel, entrepreneur, public speaker, and philanthropist Natalia Mikhailovna Vodianova, popularly known as ‘Supernova’, has become a United Nations goodwill ambassador, pledging to promote the sexual and reproductive rights of women and girls and tackle stigmas surrounding their bodies.
  • A goodwill ambassador is a person who advocates for a specific cause or global issue on the basis of their notability as a public figure.
  • The United Nations Development Programme, along with other UN agencies, has long enlisted the voluntary services and support of prominent figures as Goodwill Ambassadors and advocates to shine a spotlight on important issues affecting our planet and its people.
  1. 6. ரஷ்ய சூப்பர்மாடல்சூப்பர்நோவாநடாலியா வோடியனோவா .நாவின் புதிய நல்லெண்ண தூதராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • ரஷ்ய சூப்பர்மாடல், தொழில்முனைவோர், பொதுப் பேச்சாளர் மற்றும் ‘சூப்பர்நோவா’ என்று பிரபலமாக அறியப்படும் பரோபகாரர் நடாலியா மிகைலோவ்னா வோடியனோவா ஐக்கிய நாடுகள் சபையின் நல்லெண்ண தூதராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார், பெண்கள் மற்றும் சிறுமிகளின் பாலியல் மற்றும் இனப்பெருக்க உரிமைகளை மேம்படுத்துவதற்கும் அவர்களைச் சுற்றியுள்ள களங்கங்களைச் சமாளிப்பதற்கும் உறுதியளித்துள்ளார்.
  • ஒரு நல்லெண்ண தூதர் என்பவர் ஒரு பொது நபராக, ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக அல்லது உலகளாவிய பிரச்சினைக்கு குரல் கொடுப்பவர் ஆவார்.
  • ஐ.நா.வின் மேம்பாட்டுத் திட்டம், மற்ற ஐ.நா. நிறுவனங்களுடன் சேர்ந்து, நல்லெண்ண தூதர்களாக தன்னார்வ சேவைகள் மற்றும் முக்கிய நபர்களின் ஆதரவை பெற்றவர்களை, பூமியையும் அதன் மக்களையும் பாதிக்கும் முக்கியமான பிரச்சினைகள் குறித்து கவனத்தை ஈர்க்க நியமனம் செய்கிறது..

  1. Union Minister for Social justice and Empowerment Shri Thaawarchand Gehlot will virtually launch “Sugamya Bharat App”
  • Union Minister for Social justice and Empowerment Shri Thaawarchand Gehlot will virtually launch “Sugamya Bharat App” and a handbook entitled “Access – The Photo Digest” through video conference on 2 March 2021.

Points to Remember:

  • The App and the handbook have been developed by the Department of Empowerment of Persons with Disabilities (DEPwD) under Ministry of Social Justice and Empowerment.
  • Sugamya Bharat App — a Crowdsourcing Mobile Application is a means for sensitising and enhancing accessibility in the 3 pillars of the Accessible India Campaign i.e., built environment, transportation sector, and ICT ecosystem in India.
  • The App provides for five main features, 4 of which are directly related to enhancing accessibility, while the fifth is a special feature meant only for Divyangjan for COVID-related issues.
  • DEPwD has also prepared a handbook entitled “Access – The Photo Digest” with a collection of photographs from across different States and UTs.
  1. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் ஸ்ரீ தாவர்சந்த் கெஹ்லோட்சுகம்யா பாரத்செயலியை அறிமுகப்படுத்த உள்ளார்.
  • மார்ச் 2, 2021 அன்று மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர்               ஸ்ரீ தாவர்சந்த் கெஹ்லோட் கானொலிக் காட்சியின் மூலம் “சுகம்ய பாரத்”  செயலி மற்றும் “ஆக்சஸ் – தி ஃபோட்டோ டைஜஸ்ட்” என்ற கையேட்டை வெளியிடுகிறார்.

நினைவில் கொள்ள வேண்டியவை:

  • சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள் அதிகாரமளித்தல் துறையால் (DEPwD) இந்த செயலியும் கையேடுகளும் உருவாக்கப்பட்டுள்ளன.
  • சுகம்யா பாரத் செயலி – ஒரு க்ரௌட்சோர்சிங் மொபைல் செயலி ஆகும். இது இந்திய அணுகல் பிரச்சாரத்தின் 3 தூண்களை உணர்த்துவதற்கும் மேம்படுத்துவதற்குமான வழிமுறையாகும். அவை சுற்றுச்சூழல், போக்குவரத்து துறை மற்றும் தகவல் மற்றும் தொழிநுட்ப சுற்றுச்சூழல் அமைப்பு  போன்றவை ஆகும்.
  • இந்த பயன்பாடு ஐந்து முக்கிய அம்சங்களை வழங்குகிறது, அவற்றில் 4 நேரடியாக அணுகலை மேம்படுத்துவதோடு தொடர்புடையவையாகும். ஐந்தாவது சிறப்பு அம்சம் கொரோனா தொடர்பான சிக்கல்களுக்கு திவ்யாங்ஜானுக்கான மட்டும் உதவக்கூடியது ஆகும்.
  • பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் புகைப்படங்களின் தொகுப்புடன் “ஆக்சஸ் – தி ஃபோட்டோ டைஜஸ்ட்” என்ற தலைப்பில் ஒரு கையேட்டையும் DEPwD தயாரித்துள்ளது

  1. Rashtriya Sanskriti Mahotsav-2021 at Murshidabad concludes with colourful programs
  • The third and final edition of the Rashtriya Sanskriti Mahotsav-2021 concluded with colourful cultural programmes.
  • The two day Mahotsav was organised by the Ministry of Culture, Government of India from 27th –  28th February 2021 at Murshidabad, West Bengal.

Points to Remember:

  • Rashtriya Sanskriti Mahotsav, the flagship festival of Culture Ministry, has been organised since 2015 with the active participation of Seven Zonal Culture Centres.
  • It has been instrumental in showcasing folk and tribal art, dance, music, cuisines & culture of one state in other states reinforcing the cherished goal of “Ek Bharat Shreshtha Bharat” and at the same time providing an effective platform to the artists and artisans to support their livelihood.
  • Ek Bharat Shreshtha Bharat programme aims to enhance interaction & promote mutual understanding between people of different states/UTs through the concept of state/UT pairing.

  1. முர்ஷிதாபாத்தில் ராஷ்ட்ரிய சமஸ்கிருத மஹோத்சவம்-2021 வண்ணமயமான நிகழ்ச்சிகளுடன் நிறைவு
  • ராஷ்டிரிய சமஸ்கிருத மஹோத்சவம்-2021-ன் மூன்றாவது மற்றும் இறுதி பதிப்பு வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவடைந்தது.
  • இரண்டு நாள் மஹோத்சவம், மத்திய அரசின் கலாச்சார அமைச்சகம், மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத்தில் 27 பிப்ரவரி 2021 முதல் 28 பிப்ரவரி 2021 வரை நடைபெற்றது.

நினைவில் கொள்ள வேண்டியவை:

  • கலாச்சார அமைச்சகத்தின் முதன்மைத் திருவிழாவான ராஷ்டிரிய சமஸ்கிருத மஹோத்சவம், ஏழு மண்டல கலாச்சார மையங்களின் செயலூக்கமான பங்கேற்புடன் 2015 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது.
  • இது ஒரு மாநிலத்தின் கலை, நடனம், இசை, உணவு & கலாச்சாரம் ஆகியவற்றை மற்ற மாநிலங்களில் “ஏக் பாரத் சிரேஷ்ட பாரத்” என்னும் நோக்கத்தை வலுப்படுத்தவும், அதே நேரத்தில் கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்களின் வாழ்வாதாரத்திற்கு ஒரு பயனுள்ள தளத்தையும் வழங்குகிறது.
  • ஏக் பாரத் சிரேஷ்ட பாரத் திட்டம் மாநில / யூனியன் பிரதேசங்களின் இணைதல் என்ற கருத்தாக்கத்தின் மூலம் பல்வேறு மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் மக்கள் இடையே பரஸ்பர புரிதலை மேம்படுத்தும் நோக்கத்தைக் கொண்டது.

  1. MapmyIndia has integrated with cowin.gov.in, the official vaccination registration website of India
  • From March 1, the second phase of the Covid-19 vaccine started and registrations are now open via the Aarogya Setu app and the official website.
  • In order to make it easy for registered citizens to find nearby vaccine centers across the country, MapmyIndia has integrated with India’s official vaccination registration website, cowin.gov.in.

  1. மேப்மிஇந்தியா, இந்தியாவின் அதிகாரப்பூர்வ தடுப்பூசி பதிவு வலைத்தளமான cowin.gov.in-உடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
  • மார்ச் 1 முதல், இரண்டாம் கட்ட கோவிட்-19 தடுப்பூசி முகாம் தொடங்கியுள்ள நிலையில், ஆரோக்யா சேது பயன்பாடு மற்றும் அதிகாரப்பூர்வ வலைத்தளம் வழியாக பதிவுகள் மேற்கொள்ளப்படுகிறது.
  • பதிவு செய்யப்பட்ட குடிமக்கள் நாடு முழுவதும் அருகிலுள்ள தடுப்பூசி மையங்களைக் கண்டறிவதை எளிதாக்குவதற்காக, மேப்மிஇந்தியா இந்தியாவின் அதிகாரப்பூர்வ தடுப்பூசி பதிவு வலைத்தளமான , cowin.gov.in உடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

  1. Vinesh Phogat Wins Gold at Ukraine Wrestling Event
  • Indian wrestler Vinesh Phogat has won the gold medal in the women’s 53-kg category at XXIV Outstanding Ukrainian Wrestlers and Coaches Memorial in Kyiv, Ukraine.
  • Vinesh Phogat defeated world number seven Vanesa Kaladzinskaya of Belarus in the finals to win the gold medal.
  • Vinesh has already booked a place in the Tokyo Olympics for the 53 kg category. Since the coronavirus halted all competitions last year, it was the first competition for Vinesh, who is the only Indian woman wrestler to have qualified for the Tokyo Games.

  1. உக்ரைன் மல்யுத்த போட்டியில் வினேஷ் போகாத் தங்கம் வென்றார்
  • உக்ரைனின் கெய்வ் நகரில் உள்ள XXIV சிறந்த உக்ரேனிய மல்யுத்த வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் நினைவிடத்தில், பெண்களுக்கான 53 கிலோ பிரிவில் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாத் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
  • இறுதிப் போட்டியில் உலக ஏழாவது இடத்தில் பெலாரஸின் வனேசா கலாட்ஜின்ஸ்கயாவை வீழ்த்தி வினேஷ் போகாத் தங்கம் வென்றுள்ளார்.
  • டோக்கியோ ஒலிம்பிக்ஸில் 53 கி.கி பிரிவில் வினேஷ் இடப்பெற்றுள்ள நிலையில், அப்போட்டிக்கு தகுதி பெற்ற ஒரே இந்திய பெண் மல்யுத்த வீராங்கனை இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Students can download the Daily TNPSC Current Affairs in English & Tamil as PDF from the links given below – TNPSC daily Current Affairs – English & Tamil – March 1, 2021. 


Download TNPSC Daily Current Affairs – PDF
1st March, 2021 Will be Available soon

Check TNPSC – Daily Current Affairs – January Month in TAMIL & English from bankersdaily from the links below. 


Read – TNPSC Daily Current Affairs – March 2021