TNPSC Current Affairs – English & Tamil – July 18 & 19, 2021

TNPSC Aspirants,

The Current Affairs Section is one of the most important topics for the upcoming TNPSC Group I, Group II/IIA, Group IV, and TNUSRB Exams.

Check today’s TNPSC Daily Current Affairs (July 18 & 19, 2021) in this post.

Aspirants can expect questions from the Daily Current Affairs section in the upcoming TNPSC Exams and learning the Current Affairs section will also aid them in successfully preparing for the descriptive paper. So this process is a 2 in 1 initiative.

To make the learning more convenient, we will be providing the TNPSC Daily Current Affairs in both ENGLISH & TAMIL. This has been made in such a way that reflects the TNPSC pattern as TNPSC uses both the languages in the Question Paper and this will also make the preparations of the aspirants meaningful and will 100% fulfill the needs of the aspirants.


Download PDF – TNPSC Daily Current Affairs – English & Tamil – July 18 & 19, 2021


SCIENCE AND TECHNOLOGY


1. AI tool ‘NBDriver’ developed by IIT Madras helps to study cancer-causing mutations

  • Researchers at IIT Madras have developed an AI tool called NBDriver (neighbourhood driver) for use in analysing cancer-causing mutations in cells. This tool helps to distinguish between driver and passenger
  • NBDriver had an overall accuracy of 89% and ranked second after FATHMM.

 

1. ஐஐடி மெட்ராஸ் உருவாக்கியுள்ள செயற்கை நுண்ணறிவு கருவியான என்.பி.டிரைவர்(NBDriver) புற்றுநோயை ஏற்படுத்தும் திடீர் மாற்றங்களை ஆய்வு செய்ய உதவுகிறது

  • ஐ.ஐ.டி மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்கள் செல்களில் புற்றுநோயை ஏற்படுத்தும் திடீர் மாற்றங்களை பகுப்பாய்வு செய்வதற்கு பயன்படுத்துவதற்காக என்.பி.டிரைவர் (அண்டை இயக்கி) (NBDriver) என்ற செயற்கை நுண்ணறிவு கருவியை உருவாக்கியுள்ளனர். இது இயக்கி (driver) மற்றும் பயணி (passenger) திடீர் மாற்றங்களை வேறுபடுத்திக் காட்ட உதவுகிறது.
  • என்.பி.டிரைவரின் ஒட்டுமொத்த செயல்பாட்டுத்திறன் 89% ஆகும் மற்றும் இது FATHMM பிறகு இரண்டாவது இடத்தில் உள்ளது.

2. Indian Navy receives MH-60R Multi-Role Helicopters from the US Navy

  • Indian Navy has received the first two of its MH-60R Multi-Role Helicopters (MRH) from the US Navy.
  • MH-60R helicopters were manufactured by Lockheed Martin Corporation, USA. It is an all-weather helicopter designed with state-of-the-art avionics/sensors. 24 of these helicopters are being procured for the Indian Navy.
  • The induction of these MRH would further enhance the Indian Navy’s three-dimensional capabilities.

 

2. இந்திய கடற்படை எம்ஹெச்-60ஆர் பல்பணி ஹெலிகாப்டர்களை அமெரிக்க கடற்படையிடமிருந்து பெற்றுள்ளது

  • இந்திய கடற்படை, எம்ஹெச்-60ஆர் பல்பணி ஹெலிகாப்டர்களில் முதல் இரண்டை அமெரிக்க கடற்படையிடமிருந்து பெற்றது.
  • எம்ஹெச்-60ஆர் ஹெலிகாப்டர்கள் அமெரிக்காவின் லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனத்தால் தயாரிக்கப்படுகின்றன. இது ஒரு அனைத்து வானிலை ஹெலிகாப்டர் ஆகும். இது நவீன ஏவியோனிக்ஸ்/சென்சார்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் 24 ஹெலிகாப்டர்கள் வாங்கப்படுகின்றன.
  • இந்த பல்பணி ஹெலிகாப்டர்களை சேவையில் சேர்ப்பது இந்திய கடற்படையின் முப்பரிமாண திறன்களை மேலும் மேம்படுத்தும்.

NATIONAL


3. India is set to get its first pod taxi service between Noida Airport and Film City

  • India will get its first pod taxi service between Noida Airport and Film City for 14 km.
  • Pod taxi is a mode of transport that resembles a cable car. It has no driver, runs on electricity and accommodates four to six

 

3. நொய்டா விமான நிலையம் மற்றும் பிலிம் சிட்டி இடையே இந்தியா தனது முதல் பாட் டாக்ஸி சேவையைப் பெறவுள்ளது

  • நொய்டா விமான நிலையம் மற்றும் பிலிம் சிட்டி இடையே 14 கி.மீ. தூரத்திற்கு இந்தியா தனது முதல் பாட் டாக்ஸி சேவையை தொடங்கவுள்ளது.
  • பாட் டாக்ஸி என்பது ஒரு கேபிள் காரை ஒத்த போக்குவரத்து முறையாகும். அதற்கு ஓட்டுனர் இல்லை, மின்சாரத்தில் ஓடும் மற்றும் அவற்றில் நான்கு முதல் ஆறு பேர் வரை பயணிக்கலாம்.

4. An Environmental activist discovers a prehistoric cave painting in Faridabad

  • Prehistoric cave paintings belonging to 1 lakh years ago were discovered in Faridabad. It was first noticed by an environmental activist, Sunil Harsana, in the Mangarbani hill forest in the Faridabad district of Haryana.
  • The art includes symbols, markings, etc.

 

4. ஃபரிதாபாத்தில் வரலாற்றுக்கு முந்தைய குகை ஓவியத்தை சுற்றுச்சூழல் ஆர்வலர் கண்டுபிடித்துள்ளார்

  • 1 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வரையப்பட்ட வரலாற்றுக்கு முந்தைய குகை ஓவியங்கள் ஃபரிதாபாத்தில் கண்டுபிடிக்கப்பட்டன. ஹரியானாவின் ஃபரிதாபாத் மாவட்டத்தில் உள்ள மன்கர்பானி மலைகாட்டில் சுற்றுச்சூழல் ஆர்வலர் சுனில் ஹர்சனா இவற்றை முதலில் கவனித்தார்.
  • இந்த ஓவியத்தில் கலை சின்னங்கள், அடையாளங்கள் போன்றவை உள்ளன.

5. IIT-Madras team qualifies for the European Hyperloop Week contest

  • IIT-Madras’ team AVISHKAR Hyperloop from the Centre for Innovation at the IIT Madras has qualified for the European Hyperloop Week competition. They will participate virtually.
  • The team is working on a detailed study of the Hyperloop corridor between Bengaluru and Chenna It has estimated that the travel time between the cities could be reduced to 30 minutes using the Hyperloop pod.
  • The European Hyperloop Week is being organised by four European student teams in partnership with companies such as Virgin Hyperloop and AECOM.
  • IIT Madras’ team was the only Asian contestant to qualify for the finals of SpaceX Hyperloop Pod Competition 2019.

Hyperloop:

  • Hyperloop is the fifth mode of transportation. It is a high-speed train that travels in a near-vacuum tube with a reduced air resistance to reach speeds of more than 1,000 kmph.
  • Elon Musk of Tesla first proposed the idea of the Hyperloop in

 

5. ஐரோப்பிய அதிவேக வளையப் போக்குவரத்து (ஹைப்பர்லூப்) வார போட்டிக்கு ஐஐடி-மெட்ராஸை சேர்ந்த அணி தகுதிபெற்றுள்ளது

  • ஐ.ஐ.டி மெட்ராஸில் உள்ள கண்டுபிடிப்பு மையத்தைச் சேர்ந்த ஐஐடி-மெட்ராஸ் அணியான அவிஸ்கர் ஹைப்பர்லூப், ஐரோப்பிய அதிவேக வளையப் போக்குவரத்து வார போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. அவர்கள் காணொலிக் காட்சி மூலம் இப்போட்டியில் பங்கேற்பார்கள்.
  • பெங்களூரு மற்றும் சென்னை இடையே அதிவேக வளையப் போக்குவரத்து நடைபாதை குறித்த விரிவான ஆய்வில் இந்த அணி ஈடுபட்டுள்ளது. அதிவேக வளையப் போக்குவரத்து பாட்-ஐ பயன்படுத்தி இவ்விரு நகரங்களுக்கு இடையிலான பயண நேரத்தை 30 நிமிடமாக குறைக்க முடியும் என்று அந்த அணி மதிப்பிட்டுள்ளது.
  • ஐரோப்பிய அதிவேக வளையப் போக்குவரத்து வார போட்டிகள் நான்கு ஐரோப்பிய மாணவர் குழுக்களால் விர்ஜின் ஹைப்பர்லூப் மற்றும் ஏஇகாம் (AECOM) போன்ற நிறுவனங்களுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • ஸ்பேஸ்எக்ஸ் ஹைப்பர்லூப் பாட் போட்டி 2019இன் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற ஒரே ஆசிய அணி ஐஐடி மெட்ராஸ் அணி மட்டுமே.

அதிவேக வளையப் போக்குவரத்து (ஹைப்பர்லூப்):

  • அதிவேக வளையப் போக்குவரத்து ஐந்தாவது போக்குவரத்து முறையாகும். இது ஒரு அதிவேக ரயில் ஆகும். இது கிட்டத்தட்ட வெற்றிட குழாயில் பயணிக்கிறது. இது குறைந்த காற்று எதிர்ப்புடன் மணிக்கு 1,000 கி.மீ வேகத்திற்கு மேல் செல்லும்.
  • டெஸ்லாவின் இலான் மஸ்க் முதலில் ஹைப்பர்லூப் யோசனையை 2013இல் முன்மொழிந்தார்.

INTERNATIONAL


6. Afghanistan, Pakistan, Uzbekistan and the USA forms a new Quad grouping

  • Afghanistan, Pakistan, Uzbekistan and the USA have formed a new diplomatic quadrilateral grouping with a focus to improve regional connectivity by establishing long-term peace in Afghanistan

 

6. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் அமெரிக்கா ஒரு புதிய நாற்கர குழுவை உருவாக்கியுள்ளன

  • ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் அமெரிக்கா ஆகியவை ஆப்கானிஸ்தான் பிராந்தியத்தில் நீண்டகால அமைதியை ஏற்படுத்துவதன் மூலம் பிராந்திய இணைப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் ஒரு புதிய நாற்கர குழுவை அமைத்துள்ளன.

PERSONS IN NEWS


7. Pulitzer Prize winner Danish Siddiqui passed away

  • Danish Siddiqui was a photojournalist who was killed in Afghanistan while covering the conflict between the Afghan armed forces and the Taliban.
  • He was awarded Pulitzer Prize in 2018 for covering the Rohingya crisis.

Pulitzer Prize

  • Pulitzer Prize is awarded annually in memory of Joseph Pulitzer in the fields of Journalism, Drama and Music by the Columbia University. Pulitzer Prize is the highest award for journalism in the USA. Pulitzer Prize is awarded annually in 21 categories. Each winner receives a certificate and a $15,000 cash award. The winner in the public service category is awarded a gold medal.

 

7. புலிட்சர் பரிசு வென்ற டேனிஷ் சித்திக் காலமானார்

  • டேனிஷ் சித்திக் ஒரு புகைப்பட கலைஞர் ஆவார். அவர் ஆப்கானிஸ்தானில் ஆப்கானிய படைகளுக்கும் தலிபானுக்கும் இடையிலான மோதலை பதிவு செய்யும் போது கொல்லப்பட்டார்.
  • ரோஹிங்கியா நெருக்கடியை பதிவு செய்தற்காக அவருக்கு 2018ஆம் ஆண்டில் புலிட்சர் பரிசு வழங்கப்பட்டது.

புலிட்சர் பரிசு

  • அமெரிக்க பத்திரிகையாளர் ஜோசப் புலிட்சர் நினைவாக பத்திரிகை, நாடகம் மற்றும் இசை உள்ளிட்ட துறையில் சிறந்து விளங்குவோருக்கு ஆண்டுதோறும் கொலம்பியா பல்கலைக்கழகத்தால் புலிட்சர் பரிசு வழங்கப்படுகிறது. புலிட்சர் பரிசு இதழியலுக்காக அமெரிக்காவில் வழங்கப்படும் மிக உயரிய விருதாகும். புலிட்சர் பரிசு ஆண்டுதோறும் 21 பிரிவுகளில் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு வெற்றியாளரும் ஒரு சான்றிதழ் மற்றும் 15,000  டாலர்களை  ரொக்க பரிசைப் பெறுவார். பொது சேவை பிரிவில் வெற்றி பெறுபவருக்கு தங்கப் பதக்கம் வழங்கப்படுகிறது.

MILITARY EXERCISES


8. India, Sri Lanka and the Maldives hold TTX-2021 joint exercise virtually

  • India, Sri Lanka and the Maldives held TTX-2021 a joint exercise on maritime security virtually.
  • It is a virtual trilateral exercise and the countries discussed best practices and procedures for countering common transnational maritime crimes and assistance in maritime search and rescue.
  • The exercise gains additional relevance due to the successful Operation Sagar Aaraksha 2 executed in support of MV X-Press Pearl, the Singapore-flagged cargo ship that caught fire in May.

 

8. இந்தியா, இலங்கை மற்றும் மாலத்தீவுகள் TTX-2021 கூட்டுப் பயிற்சியை மெய்நிகராக நடத்தியுள்ளன

  • இந்தியா, இலங்கை மற்றும் மாலத்தீவுகள் TTX-2021 கூட்டுப் பயிற்சியை நடத்தின. இது மெய்நிகராக நடத்தப்பட்ட கடல்சார் பாதுகாப்பு குறித்த கூட்டுப் பயிற்சி ஆகும்.
  • இது ஒரு மெய்நிகர் முத்தரப்பு பயிற்சியாகும். மேலும் அவர்கள் பொதுவான நாடு கடந்த கடல்சார் குற்றங்களை எதிர்கொள்வதற்கான சிறந்த நடைமுறைகள் மற்றும் கடல்சார் தேடல் மற்றும் மீட்புக்கான உதவி குறித்து விவாதித்தனர்.
  • மே மாதம் தீப்பிடித்த சிங்கப்பூர் சரக்குக் கப்பலான எம்.வி.எக்ஸ்-பிரஸ் பேர்லுக்கு (MV X-Press Pearl) ஆதரவாக நிறைவேற்றப்பட்ட சாகர் ஆரக்ஷா 2 திட்டம் வெற்றிகரமாக நிறைவு பெற்றதால், இந்த பயிற்சி கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.

IMPORTANT DAYS


9. Nelson Mandela International Day – 18 July

  • Nelson Mandela International Day is observed on 18 July annually to mark the birth anniversary of Nelson Mandela. This day is popularly known as 67 Minutes Mandela Day.
  • He was the South African President who fought for 67 years for social justice and democracy. He is referred to as the “Father of the Nation” in South Africa. He was the first African head of the state and the first democratically elected president of a free South Africa. He was also known as the South African Gandhi. He was a human rights lawyer, an international peacemaker and a freedom fighter.
  • The idea of celebrating his birthday was first initiated by Mandela himself in 2010. In 2014, the UN General Assembly introduced the Nelson Mandela Prize. This award was dedicated to the people who lived their lives in service of humanity.
  • Theme 2021: “One hand can feed another”

 

9. நெல்சன் மண்டேலா சர்வதேச தினம் – 18 ஜூலை

  • நெல்சன் மண்டேலாவின் பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் ஆண்டுதோறும் 18 ஜூலை அன்று நெல்சன் மண்டேலா சர்வதேச தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள் பிரபலமாக 67 நிமிடங்கள் மண்டேலா தினம் என்று அழைக்கப்படுகிறது.
  • அவர் சமூக நீதி மற்றும் ஜனநாயகத்திற்காக 67 ஆண்டுகள் போராடிய தென்னாப்பிரிக்க அதிபராவார். அவர் தென்னாப்பிரிக்காவின் தேசத் தந்தை” என்று குறிப்பிடப்படுகிறார். அவர் தென்னாப்பிரிக்காவின் முதல் ஆப்பிரிக்க ஜனாதிபதி ஆவார். அவர் சுதந்திர தென்னாப்பிரிக்காவின் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஜனாதிபதி ஆவார். அவர் தென்னாப்பிரிக்காவின் காந்தி எனவும் அழைக்கப்பட்டார். அவர் ஒரு மனித உரிமைகள் வழக்கறிஞர், சர்வதேச சமாதானவாதி மற்றும் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் ஆவார்.
  • அவரது பிறந்தநாளைக் கொண்டாடும் யோசனை முதலில் மண்டேலாவால் 2010இல் தொடங்கப்பட்டது. 2014ஆம் ஆண்டில், ஐ.நா. பொதுச் சபை நெல்சன் மண்டேலா பரிசை அறிமுகப்படுத்தியது. இந்த விருது மனித குலத்தின் சேவைக்காக தங்கள் வாழ்க்கையை அர்பணித்த மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
  • கருப்பொருள் 2021: ஒரு கை இன்னொருவருக்கு உணவளிக்க முடியும்”

DAY IN HISTORY


10. Kadambini Ganguly’s Birth Anniversary – 18 July

  • Kadambini Ganguly was born in Bhagalpur of British India, now in Bangladesh, on 18 July 1861. She was the first woman to be trained as a physician in India. She studied at Bethune School and became the first woman to pass the University of Calcutta entrance examination in 1878.
  • Kadambini and Chandramukhi Basu were also the first women to graduate college in Indian history.
  • In 1886, Kadambini graduated from the Calcutta Medical College and became the first woman to become an Indian-educated doctor.
  • She joined six others to form the first all-women delegation Indian National Congress in 1889.
  • Note: Anandibai Gopalrao Joshi was the first woman from the erstwhile Bombay Presidency of India to study and graduate with a two-year degree in western medicine in the United States.

 

10. காதம்பினி கங்குலி பிறந்த நாள் – 18 ஜூலை

  • காதம்பினி கங்குலி, பிரிட்டிஷ் இந்தியாவின் பாகல்பூரில் 18 ஜூலை 1861 அன்று பிறந்தார். இவ்விடம் இப்போது பங்களாதேஷில் உள்ளது. இவர் இந்தியாவில் மருத்துவராகப் பயிற்சி பெற்ற முதல் பெண்மணி ஆவார். பெத்தூன் பள்ளியில் படித்த அவர், 1878ஆம் ஆண்டு கல்கத்தா பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற முதல் பெண்மணி ஆனார்.
  • காதம்பினி மற்றும் சந்திரமுகி பாசு ஆகியோர் இந்திய வரலாற்றில் கல்லூரி பட்டம் பெற்ற முதல் பெண்களாவர்.
  • 1886ஆம் ஆண்டில், காதம்பினி கல்கத்தா மருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்றார். மேலும் இந்தியாவில் படித்து மருத்துவரான முதல் பெண்மணி ஆனார்.
  • அவர் 1889இல் அமைக்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரஸின் முதல் அனைத்து பெண்கள் குழுவில் மற்ற ஆறு பேருடன் இடம் பெற்றார்.
  • குறிப்பு: இந்தியாவின் முந்தைய பம்பாய் மாகாணத்திலிருந்து அமெரிக்காவில் மேற்கத்திய மருத்துவத்தில் இரண்டு ஆண்டு பட்டம் பெற்ற முதல் பெண்மணி அன்ந்திபாய் கோபால்ராவ் ஜோஷி ஆவார்.

11. The Resolution for renaming Tamil Nadu was passed – 18 July 1967

  • A resolution was passed in the Tamil Nadu State Legislature to change the name of the Madras Presidency’ toTamil Naduon 18 July 1967.
  • The bill regarding the same was passed in the Parliament on 23 November 1968.
  • The naming ceremony of Tamil Nadu was held on 1 December 1968.

 

11. தமிழ்நாட்டின் பெயர் மாற்றத் தீர்மானம் நிறைவேற்றம் – 18 ஜூலை 1967

  • 18 ஜூலை 1967 அன்று சென்னை மாகாணத்தின் பெயரை தமிழ்நாடு என மாற்ற வேண்டும் என்று தமிழ்நாடு மாநில சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  • இது தொடர்பான மசோதா, 23 நவம்பர் 1968 அன்று, பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
  • 1 டிசம்பர் 1968 அன்று, தமிழ்நாட்டின் பெயர் சூட்டு விழா நடைபெற்றது.

12. Nationalisation of Banks – 19 July 1969

  • The first phase of nationalisation of banks was carried out on 19 July 1969, in which the Government of India nationalised 14 commercial banks. All the commercial banks with a deposit of over rupees 50 crores were nationalised.
  • Nationalisation was an important move in the financial inclusion of India.

 

12. வங்கிகளை தேசியமயமாக்குதல் – 19 ஜூலை 1969

  • 19 ஜூலை 1969 அன்று வங்கிகளை தேசியமயமாக்குதலின் முதல் கட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதில் இந்திய அரசு, 14 வணிக வங்கிகளை தேசியமயமாக்கியது. 50 கோடி ரூபாய்க்கு மேல் வைப்பு உள்ள அனைத்து வணிக வங்கிகளும் தேசியமயமாக்கப்பட்டன.
  • தேசியமயமாக்கல் என்பது இந்தியாவின் நிதி உள்ளடக்கத்தில் ஒரு முக்கியமான நடவடிக்கையாகும்.

13. Birth Anniversary of Mangal Pandey – 19 July

  • Mangal Pandey was an Indian soldier who played a key part in the events preceding the outbreak of the Great Revolt of 1857. He was a sepoy in the 34th Bengal Native Infantry regiment of the British East India Company.
  • He refused to obey the orders on the parade ground at Barrackpore. He was hanged for this incident.
  • This led to increased violence and mutiny against British Rule, which finally culminated in the 1857 revolt.

 

13. மங்கள் பாண்டே பிறந்த நாள் – 19 ஜூலை

  • மங்கள் பாண்டே ஒரு இந்திய சிப்பாய் ஆவார். அவர் 1857 பெருங்கலகம் வெடிப்பதற்கு முந்தைய நிகழ்வுகளில் முக்கிய பங்கு வகித்தார். அவர் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின் 34வது வங்காள பூர்வீக காலாட்படை சிப்பாய் ஆவார்.
  • அவர் பராக்பூரின் அணிவகுப்பு மைதானத்தில் பிரிட்டிஷாரின் கட்டளைகளுக்கு கீழ்ப்படிவதற்கு மறுத்துவிட்டார். இதனால் அவர் தூக்கிலிடப்பட்டார்.
  • இது வன்முறை மற்றும் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான கலகத்திற்கு வழிவகுத்து 1857 பெருங்கலகத்தில் நிறைவுற்றது.