TNPSC Current Affairs – English & Tamil – January 17, 2021

TNPSC Aspirants,

Current Affairs Section is one of the most important topics for the upcoming TNPSC Group I, Group II/IIA, Group IV, and TNUSRB Exams.

Check today’s TNPSC Daily Current Affairs(17th January 2020) in this post.

Aspirants can expect questions from the Daily Current Affairs section in the upcoming TNPSC Exams and learning the Current Affairs section will also aid them in successfully preparing for the descriptive paper. So this process is a 2 in 1 initiative.

To make the learning more convenient, we will be providing the TNPSC Daily Current Affairs in both ENGLISH & TAMIL. This has been made in such a way that reflects the TNPSC pattern as TNPSC uses both the languages in the Question Paper and this will also make the preparations of the aspirants meaningful and will 100% fulfill the needs of the aspirants.


Download PDF – TNPSC Daily Current Affairs – English & Tamil – January 17, 2021


Download_TNPSC_Daily_CUrrent_Affairs_PDF_7th_January_2021


1. Whatsapp announced that it has extended its policy deadline to May 15 by three months because of the confusion created by its new update. It also added that no one’s account will be deleted or suspended by February 8.

1. வாட்ஸ்அப் தனது புதிய புதுப்பிப்பால் உருவாக்கப்பட்ட குழப்பம் காரணமாக, கொள்கை காலக்கெடுவை மே 15 வரை மூன்று மாதங்களுக்கு நீட்டித்துள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் பிப்ரவரி 8 ஆம் தேதிக்குள் யாருடைய கணக்கும் நீக்கவோ அல்லது இடைநிறுத்தவோ செய்யாது என்று தெரிவித்துள்ளது.


2. The Jallikattu event held at Alanganallur in Madurai was flagged off by CM Edappadi K. Palaniswamy and Deputy CM O. Paneerselvam.

2. மதுரை அலங்கநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்வை முதல்வர் எடப்பாடி க.பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கொடியாட்டி துவக்கி வைத்தனர்.


3. Directorate General of Civil Aviation gave its approval for the Orvakal airport on the outskirts of Kurnool city in Andhra Pradesh.

3. ஆந்திராவின் கர்னூல் நகரின் புறநகரில் உள்ள ஓர்வக்கல் விமான நிலையத்திற்கு உள்நாட்டு விமானப் போக்குவரத்து இயக்குநரகம் ஒப்புதல் அளித்துள்ளது.


4. According to the reports of the Ministry of Environment and Forest (MoEF), Gujarat stands fourth in the top 5 with highly polluted rivers in the state. Sabarmathi is the most polluted river in the country along with 20 other rivers in the critically polluted category.

4. சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் (MoEF) அறிக்கைகளின்படி, மாநிலத்தில் அதிக மாசுபட்ட ஆறுகளைக் கொண்ட முதல் 5 இடங்களில் குஜராத் நான்காவது இடத்தில் உள்ளது. சபர்மதி நாட்டின் மிகவும் மாசுபட்ட நதியாகும், மேலும் மாநிலத்தின் 20 நதிகளும் மோசமாக மாசடைந்த பிரிவில் உள்ளன.


5. Mr. Yoweri Museveni has been elected as the President for the Sixth time in Uganda. He has been ruling for almost four decades since 1986.

5. திரு யோவரி முசவேனி உகாண்டாவின் ஜனாதிபதியாக ஆறாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் 1986 முதல் கிட்டத்தட்ட நான்கு தசாப்தங்களாக ஆட்சி செய்து வருகிறார்.


6. A recent study conducted by an international team on cancer metabolism found the roles of genes in breast cancer cell’s glucose utilization. The gene CBX2 promotes breast cancer cell’s glucose uptake and consumption and its sister gene CBX7 does the opposite. New treatments for cancer can be identified by targeting these two genes or their glucose pathway.

6. புற்றுநோய் வளர்சிதை மாற்றம் குறித்து சர்வதேச குழு சமீபத்தில் நடத்திய ஆய்வில் மார்பக புற்றுநோய் செல்களின் குளுக்கோஸ் பயன்பாட்டில் உள்ள மரபணுக்களின் பங்கு கண்டறியப்பட்டது. CBX2 மரபணு, மார்பக புற்றுநோய் செல்களின் குளுக்கோஸ் அதிகரிப்பு மற்றும் நுகர்வு ஆகியவற்றை ஊக்குவிக்கிறது மற்றும் அதன் சகோதரி மரபணு CBX7 இதற்கு நேர்மாறாக செயல்படுகிறது. இந்த இரண்டு மரபணுக்களையும் அல்லது அவற்றின் குளுக்கோஸ் பாதையையும் அறிவதன் மூலம் புற்றுநோய்க்கான புதிய சிகிச்சைகள் அடையாளம் காண வாய்ப்பு உள்ளது.


7. Researchers at the Indian Institute of Science and Technology, Mohali found that the fruit flies evolve to adopt/change their reproductive traits depending on the environmental changes. The study has been conducted on 150 generations of fruit flies spanning 6 years.

7. இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன ஆராய்ச்சியாளர்கள் (மொகாலி), பழ ஈக்கள் சுற்றுச்சூழல் மாற்றங்களைப் பொறுத்து அவற்றின் இனப்பெருக்க பண்புகளை மாற்றி உருவாகின்றன என்பதைக் கண்டறிந்தனர். 6 ஆண்டுகளாக, 150 தலைமுறை பழ ஈக்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.


Students can download the Daily TNPSC Current Affairs in English & Tamil as PDF from the links given below – TNPSC daily Current Affairs – English & Tamil – January 17, 2021. 


Download TNPSC Daily Current Affairs – PDF
17th January 2020 Download Link

Check TNPSC – Daily Current Affairs – January Month in TAMIL & English from bankersdaily from the links below. 


Read – TNPSC Daily Current Affairs – January 2021