TNPSC Current Affairs – English & Tamil – July 8, 2021

TNPSC Aspirants,

The Current Affairs Section is one of the most important topics for the upcoming TNPSC Group I, Group II/IIA, Group IV, and TNUSRB Exams.

Check today’s TNPSC Daily Current Affairs(July 8, 2021) in this post.

Aspirants can expect questions from the Daily Current Affairs section in the upcoming TNPSC Exams and learning the Current Affairs section will also aid them in successfully preparing for the descriptive paper. So this process is a 2 in 1 initiative.

To make the learning more convenient, we will be providing the TNPSC Daily Current Affairs in both ENGLISH & TAMIL. This has been made in such a way that reflects the TNPSC pattern as TNPSC uses both the languages in the Question Paper and this will also make the preparations of the aspirants meaningful and will 100% fulfill the needs of the aspirants.


Download PDF – TNPSC Daily Current Affairs – English & Tamil – July 8, 2021


TAMIL NADU


1. I Leoni was appointed as the Chairman of Tamil Nadu Textbook Corporation

  • Dindigul I. Leoni was appointed as the Chairman of Tamil Nadu Textbook Corporation.
  • The Tamil Nadu Textbook Corporation prepares, prints and distributes textbooks to schools.
  • Leoni is a stage speaker and a comedy bar moderator. He is the recipient of the Kalaimamani Award.

 

1. தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவராக ஐ. லியோனி நியமனம்

  • தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவராக திண்டுக்கல் ஐ. லியோனி நியமிக்கப்பட்டுள்ளார்.
  • தமிழ்நாடு பாடநூல் கழகம்பள்ளிகளுக்குப் பாடப் புத்தகங்களைத் தயாரித்து, அச்சிட்டு, விநியோகம் செய்து வருகிறது.
  • லியோனி ஒரு மேடைப் பேச்சாளர் மற்றும் நகைச்சுவைபட்டிமன்ற நடுவராவார். இவர் கலைமாமணி விருது பெற்றவர்.

2. L. Murugan of Tamil Nadu finds a place in the reshuffled Union Cabinet

  • Murugan of Tamil Nadu was appointed as a Cabinet Minister in the reshuffled Union Cabinet.
  • He was appointed as the Union Minister of State (MoS) for Information and Broadcasting; and Union Minister of State for Fisheries, Animal Husbandry and Dairy.

 

2. மாற்றியமைக்கப்பட்ட மத்திய அமைச்சரவையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த எல். முருகன் இடம் பிடித்துள்ளார்

  • மாற்றியமைக்கப்பட்ட மத்திய அமைச்சரவையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த எல். முருகன் கேபினட் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • அவர் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர்; மற்றும் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்பண்ணைத் துறை இணையமைச்சர் (எம்.ஓ.எஸ்) ஆக நியமிக்கப்பட்டார்.

ECOLOGY AND ENVIRONMENT


3. Gujarat exports GI tagged Bhalia wheat

  • The first commercial shipment of Geographical Indication (GI) certified Bhalia variety of wheat was exported to Kenya and Sri Lanka from Gujarat. The GI-certified wheat has high protein content and is sweet in taste. The crop is grown mostly across the Bhal region of Gujarat.
  • It is grown in a rainfed condition. The Bhalia variety of wheat received the GI certification in 2011.

 

3. குஜராத் புவிசார் குறியீடு பெற்ற பாலியா கோதுமையை ஏற்றுமதி செய்தது

  • புவிசார் குறியீடு பெற்ற (GI) பாலியா கோதுமையின் முதல் வர்த்தக தொகுதி, குஜராத்தில் இருந்து கென்யா மற்றும் இலங்கைக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. புவிசார் குறியீடு பெற்ற இக்கோதுமை அதிக புரதத்தைக் கொண்டது மற்றும் இனிமையான சுவையைக் கொண்டது. இந்த பயிர் பெரும்பாலும் குஜராத்தின் பால் (Bhal) பகுதியில் பயிரிடப்படுகிறது.
  • இது மானாவாரி நிலையில் வளர்க்கப்படுகிறது. பாலியா வகை கோதுமை 2011இல் புவிசார் குறியீடு பெற்றது.

POLITY


4. Amit Shah to head the new Union Ministry of Cooperation along with Home Affairs

  • A new Ministry named the Union Ministry of Cooperation was created by the Union Government.
  • Amit Shah was appointed as the Union Minister of the new Union Ministry of Cooperation along with the Union Ministry Home Affairs.

 

4. மத்திய அரசின் உள்துறையுடன் சேர்த்து புதிய மத்திய கூட்டுறவு அமைச்சகத்தையும் தலைமை தாங்குகிறார் அமித் ஷா

  • மத்திய கூட்டுறவு அமைச்சகம் என்று அழைக்கப்படும் ஒரு புதிய மத்திய அமைச்சகம் மத்திய அரசால் உருவாக்கப்பட்டது.
  • உள்துறை அமைச்சகத்துடன் சேர்த்து புதிய மத்திய கூட்டுறவு அமைச்சகத்தின் மத்திய அமைச்சராக அமித் ஷா நியமிக்கப்பட்டுள்ளார்.

5. Union Cabinet was reshuffled by Prime Minister Narendra Modi

  • The Union Cabinet was reshuffled by Prime Minister Narendra Modi, in which 15 new Cabinet Ministers and 28 new Union Ministers of State were selected. They were sworn in by President Ram Nath Govind.

List of the new Union Cabinet Ministers:

S.No Cabinet Minister Portfolio
1. Mansukh Mandaviya Minister of Health and Family Welfare;

Minister of Chemicals and Fertilizers

2. Bhupendra Yadav Minister of Environment, Forest and Climate Change;

Minister of Labour and Employment

3. Parshottam Rupala Minister of Fisheries, Animal Husbandry and Dairying
4. Narayan Rane Minister of Micro, Small and Medium Enterprises
5. Sarbananda Sonowal Minister of Ports, Shipping and Waterways; Minister of AYUSH
6. Virendra Kumar Minister of Social Justice and Empowerment
7. Jyotiraditya Scindia Minister of Civil Aviation
8. Ramchandra Prasad Singh Minister of Steel
9. Ashwini Vaishnaw Minister of Railways;

Minister of Communications;

Minister of Electronics and Information Technology

10. Pashu Pati Kumar Paras Minister of Food Processing Industries
11. Kiren Rijiju Minister of Law and Justice
12. Raj Kumar Singh Minister of Power;

Minister of New and Renewable Energy

13. Hardeep Singh Puri Minister of Petroleum and Natural Gas;

Minister of Housing and Urban Affairs

14. G Kishan Reddy Minister of Culture;

Minister of Tourism;

Minister of Development of North Eastern Region

15. Anurag Singh Thakur Minister of Information and Broadcasting; Minister of Youth Affairs and Sports
  • Amit Shah will head the newly created Union Ministry of Cooperation.
  • This Union Government has 27 OBC Ministers, including 5 with Cabinet rank, 12 ministers from scheduled caste communities and eight from scheduled tribes.
  • Five leaders of the minority community are now Ministers in the Union Government.
  • The average age of the Parliament is now reduced from 61 to 58.

 

5. மத்திய அமைச்சரவையை பிரதமர் நரேந்திர மோடி மாற்றியமைத்தார்

  • மத்திய அமைச்சரவையை பிரதமர் நரேந்திர மோடி மாற்றியமைத்தார். இதில் 15 புதிய மத்திய அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் 28 புதிய மத்திய இணையமைச்சர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

புதிய மத்திய அமைச்சரவை அமைச்சர்களின் பட்டியல்:

.எண் அமைச்சரவை அமைச்சர் அமைச்சகம்
1. மன்சுக் மண்டவியா சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர்;

இரசாயன மற்றும் உரங்கள் அமைச்சர்

2. பூபேந்திர யாதவ் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சர்; தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர்
3. பர்ஷோத்தம் ரூபாலா மீன்பிடி, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சர்
4. நாராயண் ரானே சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர்
5. சர்பானந்தா சோனோவால் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழி அமைச்சர்;

ஆயுஷ் அமைச்சர்

6. வீரேந்திர குமார் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர்
7. ஜோதிராதித்ய சிந்தியா சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர்
8. ராமச்சந்திர பிரசாத் சிங் எஃகு (Steel) அமைச்சர்
9. அஸ்வினி வைஷ்ணவ் இரயில்வே அமைச்சர்;

தகவல் தொடர்பு அமைச்சர்; மின்னணு மற்றும் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர்

10. பசு பதி குமார் பராஸ் உணவு பதப்படுத்தல் நிறுவன அமைச்சர்
11. கிரண் ரிஜிஜு சட்டம் மற்றும் நீதி அமைச்சர்
12. ராஜ் குமார் சிங் எரிசக்தி அமைச்சர்;

புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர்

13. ஹர்தீப் சிங் பூரி பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர்;

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சர்

14. ஜி கிஷன் ரெட்டி கலாச்சார அமைச்சர்; சுற்றுலாத்துறை அமைச்சர்; வடகிழக்கு பிராந்திய அபிவிருத்தி அமைச்சர்
15. அனுராக் சிங் தாக்கூர் தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர்;

இளைஞர் அலுவல்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர்

  • புதிதாக உருவாக்கப்பட்ட மத்திய கூட்டுறவு அமைச்சகத்தின் தலைவராக அமித் ஷா நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இந்த அமைச்சரவையில் அமைச்சரவை அந்தஸ்து பெற்ற 5 பேர், ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த 12 பேர் மற்றும் பழங்குடியினர் எட்டு பேர் உட்பட 27 பிற பிற்படுத்ப்பட்ட இனத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர்.
  • சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஐந்து தலைவர்கள் இப்போது மத்திய அமைச்சரவையில் அமைச்சர்களாக உள்ளனர்.
  • பாராளுமன்றத்தின் சராசரி வயது இப்போது 61இல் இருந்து 58ஆக குறைந்துள்ளது.

NATIONAL


6. World’s first solo motorcycle expedition in Umlingla Pass culminates

  • World’s first solo motorcycle expedition, organised by the Border Roads Organisation (BRO), from the BRO Headquarters in New Delhi, culminates. Kanchan Ugursandi, a 29-year-old woman biker, undertook the challenge to cover 3,187 km in 1 month.
  • She is the first woman solo woman to cover the 18 passes and also the first woman to cross Umlingla Pass, the highest motorable pass at 19,301 feet in the world.
  • The route which was traversed is New Delhi-Manali-Leh-Umlingla Pass–New Delhi. 

 

6. உலகின் முதல் தனி மோட்டார் சைக்கிள் பயணம் உம்லிங்லா கணவாயில் முடிவடைந்தது

  • புது தில்லியில் உள்ள எல்லை சாலைகள் அமைப்பு (BRO) தலைமையகத்தில் BRO ஏற்பாடு செய்திருந்த முதல் தனி பெண் மோட்டார் சைக்கிள் பயணம் முடிவடைந்தது. கஞ்சன் உகுர்சாண்டி என்ற 29 வயது பெண் பைக்கர் 1 மாதத்தில் 3,187 கி.மீ. தூரத்தைக் கடந்தார்.
  • அவர் 18 கணவாய்களை கடந்த முதல் தனி பெண் மற்றும் 19,301 அடி உயரத்தில் அமைந்துள்ள உலகின் மிக உயர்ந்த வாகனம் செல்லக்கூடிய கணவாயான உம்லிங்லா கணவாயைக் கடந்த முதல் பெண் ஆவார்.
  • இந்த பயணம் புது தில்லி-மணாலி-லே-உம்லிங்லா கணவாய்-புது தில்லி வழியே நிகழ்ந்தது. 

7. Union Government brings the Department of Public Enterprises under the Union Finance Ministry

  • The Union Government is set to bring the Department of Public Enterprises (DPE) under the Union Ministry of Finance.
  • The DPE was earlier under the Union Ministry of Heavy Industries and Public Enterprises.
  • It was brought under the Union Ministry of Finance to ease coordination related to future disinvestment plans.

 

7. மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களை மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் கொண்டு வருகிறது

  • மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களை (DPE) மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் கொண்டு வர உள்ளது.
  • DPE முன்னதாக மத்திய கனரக தொழில்கள் மற்றும் பொது நிறுவனங்கள் அமைச்சகத்தின் கீழ் இருந்தது.
  • எதிர்கால பங்கு விற்பனைத் திட்டங்கள் தொடர்பான ஒருங்கிணைப்பை எளிதாக்குவதற்காக இது மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது.

8. DBT-NIBMG creates the world’s first database of genomic variants of oral cancer ‘dbGENVOC’

  • DBT-National Institute of Biomedical Genomics (NIBMG), Kalyani, an autonomous institute funded by the Department of Biotechnology has created the world’s first database of genomic variants of oral cancer, ‘dbGENVOC’. It is an online database of genomic variants of oral cancer and is a free resource. The repository will be updated annually.
  • Oral cancer is the most prevalent form of cancer among men in India, largely fuelled by tobacco-chewing.
  • Tata Memorial Centre published the first of its kind study on the cost of illness and treatment of oral cancer in India.

DBT

  • The Department of Biotechnology (DBT) under the Union Ministry of Science and Technology augments the development of the biotechnology ecosystem in India.

NIBMG

  • The National Institute of Biomedical Genomics (NIBMG) has been established as an autonomous institution under the Department of Biotechnology.
  • This is the first institution in India explicitly devoted to research, training, translation and service and capacity-building in biomedical genomics.
  • It is located in Kalyani, West Bengal.

 

8. DBT-NIBMG வாய் புற்றுநோய் மரபணு மாறுபாடுகளின் உலகின் முதல் தரவுத்தளமானடிபிஜென்வோக் உருவாக்குகியுள்ளது

  • கல்யாணியில் உள்ள உயிரி தொழில்நுட்பத் துறையால் நிதியளிக்கப்பட்ட ஒரு தன்னாட்சி நிறுவனமான DBT – தேசிய உயிரி-மருத்துவ மரபியல் நிறுவனம் (NIBMG), வாய்புற்றுநோய் மரபணு மாறுபாடுகளின் உலகின் முதல் தரவுத்தளமான ‘டிபிஜென்வோக்’ஐ உருவாக்கியுள்ளது. இது வாய்வழி புற்றுநோயின் மரபணு மாறுபாடுகளின் ஆன்லைன் தரவுத்தளமாகும் மற்றும் இது ஒரு இலவச ஆதாரமாகும். இந்த களஞ்சியம் ஆண்டுதோறும் புதுப்பிக்கப்படும்.
  • வாய்புற்றுநோய் இந்தியாவில் ஆண்கள் மத்தியில் மிகவும் பரவலாக உள்ள புற்றுநோய் வடிவம் ஆகும். இது பெரும்பாலும் புகையிலை மெல்வதால் பாதிக்கிறது.
  • டாடா நினைவு மையம் இந்தியாவிலேயே முதன்முறையாக வாய்வழி புற்றுநோய்க்கான செலவு குறித்த ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளது.

DBT

  • மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள உயிரி தொழில்நுட்பத் துறை (DBT) இந்தியாவில் உயிரி தொழில்நுட்ப சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்துகிறது.

NIBMG

  • தேசிய உயிரி-மருத்துவ மரபியல் நிறுவனம் (NIBMG) உயிரி தொழில்நுட்பத் துறையின் கீழ் ஒரு தன்னாட்சி நிறுவனமாக நிறுவப்பட்டது.
  • இது இந்தியாவில் முதன்முதலாக உயிரி-மருத்துவ மரபியல் ஆராய்ச்சி, பயிற்சி, மொழிபெயர்ப்பு மற்றும் சேவை மற்றும் திறன் மேம்படுத்தலுக்கு வெளிப்படையாக அர்ப்பணிக்கப்பட்ட நிறுவனம் ஆகும்.
  • இது இந்தியாவின் மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா அருகே உள்ள கல்யாணியில் அமைந்துள்ளது.

9. INS Tabar participates in exercises with the Italian Navy

  • INS Tabar took part in a partnership exercise with ITS Antonio Marceglia, a frontline frigate of the Italian Navy in the Tyrrhenian Sea.
  • The Tyrrhenian Sea is a part of the Mediterranean Sea. This exercise is a part of the deployment of INS Tabar in the Mediterranean Sea.

 

9. ஐஎன்எஸ் தபார் இத்தாலிய கடற்படையுடன் பயிற்சிகளில் பங்கேற்றது

  • ஐஎன்எஸ் தபார் டைர்ஹெனியன் கடலில் இத்தாலிய கடற்படையின் முன்னணி போர்க் கப்பலான ITS அன்டோனியோ மார்செக்லியாவுடன் கூட்டுப் பயிற்சியில் பங்கேற்றது.
  • டைர்ஹெனியன் கடல் மத்தியதரைக் கடலின் ஒரு பகுதியாகும். இந்த பயிற்சி மத்தியதரைக் கடலில் ஐஎன்எஸ் தபாரை நிலைநிறுத்தலின் ஒரு பகுதியாகும்.

INTERNATIONAL


10. Haiti President Jovenel Moise passed away

  • Haiti President Jovenel Moise passed away. He was assassinated at the capital, Port-au-Prince. Moise had led the Caribbean country, Haiti, one of the poorest nations in the world, since 2017.

 

10. ஹைதி அதிபர் ஜோவெனல் மோயிஸ் காலமானார்

  • ஹைதி அதிபர் ஜோவெனல் மோயிஸ் காலமானார். அவர் தலைநகர் போர்ட்-ஓ-பிரின்ஸில் படுகொலை செய்யப்பட்டார். மோயிஸ் கரீபியன் நாடான ஹைதியை 2017 முதல் தலைமை தாங்கி வழிநடத்தினார். ஹைதி உலகின் மிக ஏழ்மையான நாடுகளில் ஒன்றாகும்.

AWARDS AND RECOGNITIONS


11. Indian economist Kaushik Basu was awardedthe Humboldt Research Award for Economics

  • Indian economist Kaushik Basu was awarded the Humboldt Research Award for Economics. He is currently a professor of Economics at the Cornell University. He served as the Chief Economist of the World Bank.
  • He also served as India’s Chief Economic Advisor from 2009 to 2012.

 

11. இந்திய பொருளாதார நிபுணர் கவுசிக் பாசுவிற்கு பொருளாதாரத்திற்கான ஹம்போல்ட் ஆராய்ச்சி விருது வழங்கப்பட்டது

  • இந்திய பொருளாதார வல்லுநர் கௌசிக் பாசுவுக்கு பொருளாதாரத்திற்கான ஹம்போல்ட் ஆராய்ச்சி விருது வழங்கப்பட்டது. அவர் தற்போது கார்னெல் பல்கலைக்கழகத்தில் பொருளியல் பேராசிரியராக உள்ளார். அவர் உலக வங்கியின் தலைமை பொருளாதார நிபுணராக பணியாற்றினார்.
  • அவர் 2009 முதல் 2012 வரை இந்தியாவின் தலைமை பொருளாதார ஆலோசகராகவும் பணியாற்றினார்.