TNPSC Current Affairs – English & Tamil – April 17, 2021

TNPSC Aspirants,

The Current Affairs Section is one of the most important topics for the upcoming TNPSC Group I, Group II/IIA, Group IV, and TNUSRB Exams.

Check today’s TNPSC Daily Current Affairs(17th April, 2021) in this post.

Aspirants can expect questions from the Daily Current Affairs section in the upcoming TNPSC Exams and learning the Current Affairs section will also aid them in successfully preparing for the descriptive paper. So this process is a 2 in 1 initiative.

To make the learning more convenient, we will be providing the TNPSC Daily Current Affairs in both ENGLISH & TAMIL. This has been made in such a way that reflects the TNPSC pattern as TNPSC uses both the languages in the Question Paper and this will also make the preparations of the aspirants meaningful and will 100% fulfill the needs of the aspirants.


Download PDF – TNPSC Daily Current Affairs – English & Tamil – April 17, 2021


ECONOMY


1. ETMONEY has launched the India’s first Aadhaar-based SIP payments feature

  • ETMONEY has launched the country’s first Aadhaar-based SIP payments feature with which anyone can start a SIP online and set up automatic payments using a simple Aadhaar based OTP verification.

Systematic Investment Plan (SIP)

  • SIP payments feature is a feature in which investors invest regular, equal payments into mutual fund, trading account, etc.,

ETMONEY

  • ETMONEY is India’s largest app for financial services, including investment in zero-commission direct mutual funds for free.

 

1. இந்தியாவின் முதல் ஆதார் அடிப்படையிலான எஸ்ஐபி (SIP) பணம் செலுத்துதல் அம்சத்தை ETMONEY அறிமுகப்படுத்தியுள்ளது

  • ETMONEY நாட்டின் முதல் ஆதார் அடிப்படையிலான எஸ்ஐபி பணம் செலுத்துதல் அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, இதன் மூலம் எவரும் ஆன்லைனில் ஒரு எஸ்ஐபியைத் தொடங்கி, எளிய ஆதார் அடிப்படையிலான ஒரு முறை கடவுச்சொல்லைப் (OTP) பயன்படுத்தி தானியங்கி கட்டண செயல்பாடுகளை அமைக்கலாம்.

முறையான முதலீட்டுத் திட்டம் (எஸ்ஐபி)

  • எஸ்ஐபி பணம் செலுத்துதல் அம்சம் என்பது முதலீட்டாளர்கள் பரஸ்பர நிதி, வர்த்தகக் கணக்கு போன்றவற்றில் வழக்கமான, சமமான செலுத்துதல்களை முதலீடு செய்ய உதவும் ஒரு அம்சமாகும்.

ETMONEY

  • ETMONEY என்பது பரஸ்பர நிதிகளில் தரகற்ற நேரடி முதலீடு உட்பட நிதி சேவைகளுக்கான இந்தியாவின் மிகப்பெரிய பயன்பாடாகும்.

2. The National Pension System (NPS) will no longer compel investors to convert 40% into annuity

  • Post-retirement, a person has to take 40% of the total corpus as an annuity as per the law’s mandate, and 60% can be commuted and taken as a lump sum. Now the 40% cap has been removed. Thus the user can receive the total pension.
  • The regulator will issue fresh rules allow those saving up to ₹5 lakh in the NPS to take the whole amount at retirement, up from ₹2 lakh at present.

 

2. தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் (NPS) பயனாளா்கள் 40 சதவீதத்தை ஓய்வூதிய நிதி சேமிப்பாக முதலீடு செய்வது இனி கட்டாயமில்லை

  • ஓய்வு பெற்ற பின்னர், ஒருவர் 40 சதவீதத்தை ஓய்வூதிய நிதி சேமிப்பாக முதலீடு செய்ய வேண்டியது சட்டத்தின்படி கட்டாயமாக இருந்தது, மீதமுள்ள 60 சதவீத தொகையை ஒரே நேரத்தில் அவா்கள் பெற்றுக் கொள்ளலாம். 40 சதவீத வரம்பு இனி கட்டாயமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக பயனாளா்களுக்கு இனி முழு ஓய்வூதியப் பலனும் கிடைக்கும்.
  • ஓய்வூதியத் திட்டத்தில் ரூ.5 லட்சம் வரை சேமிப்புத் தொகை கொண்ட பயனாளா்கள், பணி ஓய்வு பெறும்போது மொத்த தொகையையும் பெற்றுக் கொள்வதற்கு விரைவில் அனுமதி அளிக்கப்படவுள்ளது. இதுவரை ரூ.2 லட்சம் வரை சேமிப்புத் தொகை கொண்ட பயனாளா்களுக்கே இந்த அனுமதி வழங்கப்பட்டு வந்தது.

NATIONAL


3. Union Education Minister Ramesh Pokhriyal Nishank launched the World’s 1st affordable and long-lasting hygiene product DuroKea Series

  • Union Education Minister Ramesh Pokhriyal Nishank has launched the World’s first affordable and long-lasting hygiene product DuroKea Series. It was developed by IIT Hyderabad.
  • This next-generation DuroKea antimicrobial technology starts at 189 rupees, kills 99.99 percent of germs instantly, and leaves behind the long-lasting protective nanoscale coating for upto 35 days till the next wash.
  • The unique property of the DuroKea range is to ensure instant killing (within 60 sec) and prolonged protection, which is an immense necessity during this current pandemic situation.

 

3. மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் உலகின் முதல் மலிவு மற்றும் நீண்டகால சுகாதார தயாரிப்பான டியூரோகியா தொடரை அறிமுகப்படுத்தினார்

  • மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் உலகின் முதல் மலிவு மற்றும் நீண்டகால சுகாதார தயாரிப்பான டியூரோகியா தொடரை அறிமுகப்படுத்தினார். இது ஹைதராபாத் ஐஐடியால் உருவாக்கப்பட்டது.
  • இந்த அடுத்த தலைமுறை டியூரோகியா நுண்ணுயிர் எதிர்ப்பு தொழில்நுட்பம் 189 ரூபாயிலிருந்து தொடங்குகிறது, உடனடியாக99 சதவீதம் கிருமிகளை கொல்கிறது, மற்றும் அடுத்து கழுவும் வரையில் அதிகபட்சம் 35 நாட்கள் வரை நீண்ட கால பாதுகாப்பு வழங்கும் நானோ பூச்சு ஆகும்.
  • தற்போதைய தொற்றுநோய் நிலைமையின் ஒரு மகத்தான தேவையான உடனடி கிருமி நீக்கம்(60 நொடிக்குள்) மற்றும் நீண்ட பாதுகாப்பை உறுதி செய்வது டியூரோகியாவின் தனித்துவமாகும்.

AWARDS AND RECOGNITIONS


4. Aditya Birla Group’s cellulose arm bags maiden UN award for sustainability

  • Birla Cellulose, a part of the Aditya Birla Group has won the first edition of the “National Innovative and Sustainable Supply Chain Awards” by UN Global Compact Network India award for the innovative and sustainable supply chain.
  • It solved the challenge of mounting textile waste which is either incinerated or landfilled due to lack of recycling technologies.

 

4. ஆதித்யா பிர்லா குழுமத்தின் செல்லுலோஸ் பிரிவு நிலைத்தன்மைக்கான முதல் .நா விருதைப் பெற்றது

  • ஆதித்யா பிர்லா குழுமத்தின் ஒரு பகுதியான பிர்லா செல்லுலோஸ், ஐ.நா குளோபல் காம்பாக்ட் நெட்வொர்க் இந்தியாவின் புதுமையான மற்றும் நிலையான விநியோக சங்கிலிக்கான “தேசிய புதுமையான மற்றும் நிலையான விநியோக சங்கிலி விருதுகள்”இன் முதல் பதிப்பை வென்றுள்ளது.
  • அது மறுசுழற்சி தொழில்நுட்பங்கள் இல்லாததால் எரிக்கப்படும் அல்லது புதைக்கப்படும் ஜவுளிகழிவுகளால் அதிகரிக்கும் சவாலை தீர்த்தது.

SPORTS


5. Vinesh Phogat and Anshu Malik clinched maiden gold medals in Almaty Asian Wrestling Championships

  • India completed Asian Wrestling Championships 2021 with 7 medals (4 gold, 1 silver, and 2 bronze).
  • The list of winners are as follows:
S.No PLAYER CATEGORY MEDAL
1. Vinesh Phogat 53 kg Gold
2. Anshu Malik 57 kg Gold
3. Divya Kakran 72 kg Gold
4. Sarita Mor 59 kg Gold
5. Sakshi Malik 65 kg Silver
6. Seema Bisla 50 kg Bronze
7. Pooja 76 kg Bronze

 

Asian Wrestling Championships

  • Asian Wrestling Championships is an annual event organised by the Asian Associated Wrestling Committee (AAWC). Men’s tournament began in 1979 and women’s tournament in 1996.

 

5. அல்மாட்டி ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் வினேஷ் போகாட் மற்றும் அன்ஷு மாலிக் ஆகியோர் தங்கள் முதல் தங்கப் பதக்கங்களை வென்றனர்

  • ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் 2021 போட்டியை 7 பதக்கங்களுடன் (4 தங்கம், 1 வெள்ளி மற்றும் 2 வெண்கலம்) இந்தியா நிறைவு செய்தது.
  • வெற்றியாளர்களின் பட்டியல் பின்வருமாறு:
.எண் வீராங்கனை பிரிவு பதக்கம்
1. வினேஷ் போகாட் 53 கிகி தங்கம்
2. அன்ஷு மாலிக் 57 கிகி தங்கம்
3. திவ்யா கக்ரன் 72 கிகி தங்கம்
4. சரிதா மோர் 59 கிகி தங்கம்
5. சாக்ஷி மாலிக் 65 கிகி வெள்ளி
6. சீமா பிஸ்லா 50 கிகி வெண்கலம்
7. பூஜா 76 கிகி வெண்கலம்

 

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்

  • ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் என்பது ஆசிய அசோசியேட்டட் மல்யுத்தக் குழு (AAWC) ஏற்பாடு செய்யும் வருடாந்திர நிகழ்வாகும். ஆண்கள் போட்டி 1979இல் தொடங்கியது மற்றும் பெண்கள் போட்டி 1996இல் தொடங்கியது.

6. Wisden Almanack announces the ODI player of the decade

  • Virat Kohli was named the Wisden ODI player of 2010s.
  • Dom Sibley, Zak Crawley, Jason Holder, Mohammed Rizwan and Darren Stevens were named Wisden Cricketers of the Year in the 2021 edition of Wisden Almanack.
  • Ben Stokes was declared as the ‘Leading Cricketer in the World’ for the second year in a row.
  • Australia’s Beth Mooney was declared as the ‘Leading Women’s Cricketer in the World’.
  • West Indian all-rounder Kieron Pollard was named the Leading T20 Cricketer in the World.
  • Sachin Tendulkar was the ODI Cricketer of the 1990s.
  • Kapil Dev,  was named as the ODI Cricketer for the 1980s.

Wisden Cricketers’ Almanack

  • Wisden Cricketers’ Almanack is known as the Bible of Cricket.
  • To commemorate the 50th anniversary of the first One-Day International, five ODI cricketers of the year have been named in 2021.

 

6. விஸ்டன் அல்மானாக் தசாப்தத்தின் ஒருநாள் கிரிக்கெட் போட்டி வீரரை அறிவித்தது

  • இந்திய கேப்டன் விராட் கோலி 2010களின் ஒருநாள் போட்டியின் வீரராக அறிவிக்கப்பட்டார்.
  • விஸ்டன் அல்மானாக் 2021 பதிப்பில் டோம் சிபிலி, ஜாக் கிராலி, ஜேசன் ஹோல்டர், முகமது ரிஸ்வான் மற்றும் டேரன் ஸ்டீவன்ஸ் ஆகியோர் விஸ்டன் கிரிக்கெட் வீரர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
  • பென் ஸ்டோக்ஸ் தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக ‘உலகின் முன்னணி கிரிக்கெட் வீரர்’ என அறிவிக்கப்பட்டார். 
  • ஆஸ்திரேலியாவின் பெத் மூனி ‘உலகின் முன்னணி கிரிக்கெட் வீராங்கனை’ என அறிவிக்கப்பட்டார். 
  • மேற்கு இந்திய ஆல்ரவுண்டர் கீரோன் பொல்லார்ட் உலகின் முன்னணி டி20 கிரிக்கெட் வீரராகவும் தேர்வு செய்யப்பட்டார்.
  • 1990களின் ஒருநாள் கிரிக்கெட் வீரர் – சச்சின்
  • 1980களில் ஒருநாள் கிரிக்கெட் வீரர் – கபில் தேவ்

விஸ்டன் கிரிக்கெட் அல்மானாக்

  • விஸ்டன் கிரிக்கெட் அல்மானாக் கிரிக்கெட்டின் பைபிள் என அழைக்கப்படுகிறது.
  • “சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் 50வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில், விஸ்டன் கிரிக்கெட் வீரர்களின் அல்மானாக் 2021 பதிப்பில் ஐந்து ஒருநாள் கிரிக்கெட் வீரர்கள் பெயரிடப்பட்டுள்ளன.

IMPORTANT DAYS


7. World Hemophilia Day – 17 April

  • 17 April is observed as the World Hemophilia Day every year. The day marks the birth anniversary of Frank Schnabel, founder of the World Federation of Haemophilia. The day was first observed in 1989.
  • Hemophilia is a rare blood disorder in which blood does not clot normally because it lacks sufficient blood-clotting proteins.
  • The theme of World Haemophilia Day 2021: “Adapting to change: sustaining care in a new world”

 

7. உலக குருதிப் பெருக்குநோய் தினம் – 17 ஏப்ரல்

  • ஒவ்வொரு ஆண்டும் 17 ஏப்ரல் அன்று உலக குருதிப் பெருக்குநோய் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள் உலக குருதிப் பெருக்குநோய் (ஹீமோபிலியா) கூட்டமைப்பின் நிறுவனரான பிராங்க் ஷ்னாபெல்லின் பிறந்த நாளைக் குறிக்கிறது. இந்த நாள் முதன்முதலில் 1989இல் அனுசரிக்கப்பட்டது.
  • குருதிப் பெருக்குநோய் (ஹீமோபிலியா) என்பது ஒரு அரிய இரத்தக்கோளாறு ஆகும், இதில் போதுமான இரத்த உறைதல் புரதங்கள் இல்லாததால் பொதுவாக இரத்தம் உறைவதில்லை.
  • உலக குருதிப் பெருக்குநோய் தினம் 2021இன் கருப்பொருள்: “மாற்றத்திற்கு தகவமைத்தல்: புதிய உலகில் பராமரிப்பை நிலைநிறுத்துதல்”

DAY IN HISTORY


8. Theeran Chinnamalai’s birth anniversary – 17 April

  • Theerthagiri known as Theeran Chinnamalai was a Palayakkarar of Kongu country who fought the British East India Company. He was born on 17 April 1756.

Three of his battles are important:

  1. The 1801 battle on Cauvery banks
  2. The 1802 battle in Odanilai
  3. The 1804 battle in Arachalur
  • During the final battle in 1805, Chinnamalai was betrayed by his cook Nallappan and was hanged in Sangagiri fort.

 

8. தீரன் சின்னமலை பிறந்த நாள் – 17 ஏப்ரல்

  • தீரன் சின்னமலை என அறியப்பட்ட தீர்த்தகிரி ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியை எதிர்த்துப் போரிட்ட கொங்குநாட்டுப் பாளையக்காரர் ஆவார்.

சின்னமலையின் போர்களில்மு க்கியமானவை மூன்று:

  1. 1801 ஆம்ஆண்டு காவிரிக்கரையில் நடைபெற்ற போர்
  2. 1802ஆம்ஆண்டு ஓடாநிலையில் நடந்த போர்
  3. 1804இல் நடந்தஅரச்சலூர் போர் ஆகும்
  • 1805இல் நடைபெற்ற அவரது இறுதிப் போரில் சின்னமலை அவருடைய சமையல்காரர் நல்லப்பனால் துரோகம் இழைக்கப்பட்டு, சங்ககிரி கோட்டையில் தூக்கிலிடப்பட்டார்.

REPORTS AND INDICES


9. United Nations Population Fund (UNFPA) launched its flagship State of World Population Report 2021

  • United Nations Population Fund (UNFPA) launched its flagship State of World Population Report 2021 with the title ‘My Body is My Own’. The report talks about bodily autonomy including, child marriage, female genital mutilation, contraceptive choices, unwanted sex, etc.
  • The report shows that in countries where data is available, only 55 percent of women are fully empowered to make choices over healthcare, contraception, and the ability to say yes or no to sex.
  • The United Nations Population Fund (UNFPA) is a UN agency created in 1969 with the aim of improving reproductive and maternal health worldwide. Its headquarters is situated in New York.

 

9. ஐக்கிய நாடுகள் மக்கள் தொகை நிதியம் (UNFPA) அதன் முதன்மை உலக மக்கள் தொகை அறிக்கை 2021 வெளியிட்டது

  • ஐக்கிய நாடுகள் மக்கள் தொகை நிதியம் (UNFPA) அதன் முதன்மை உலக மக்கள் தொகை அறிக்கை 2021ஐ ‘என் உடல் என் சொந்தம்’ என்ற தலைப்பில் அறிமுகப்படுத்தியது. குழந்தைத் திருமணம், பெண் பிறப்புறுப்பு சிதைப்பு, கருத்தடைத் தேர்வுகள், தேவையற்ற கலவி உள்ளிட்ட உடல் சுயாட்சி பற்றி இந்த அறிக்கை பேசுகிறது.
  • தரவுகள் கிடைத்த நாடுகளில் 55 சதவீத பெண்கள் மட்டுமே சுகாதாரம், கருத்தடை மற்றும் கலவிக்கு ஆம் அல்லது இல்லை என்று சொல்லும் திறன் ஆகியவற்றில் தேர்வுகளை செய்ய முழுமையாக அதிகாரம் பெற்றுள்ளனர் என்று அறிக்கை காட்டுகிறது.
  • ஐக்கிய நாடுகள் மக்கள் தொகை நிதியம் (UNFPA) என்பது உலகெங்கிலும் இனப்பெருக்க மற்றும் தாய்வழி ஆரோக்கியத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு 1969இல் நிறுவப்பட்ட ஒரு அமைப்பாகும். இதன் தலைமையகம் நியூயார்க்கில் அமைந்துள்ளது.

PERSONS IN NEWS


10. Famous Tamil film actor Vivek passes away at 60

  • Famous Tamil film actor and Padma Sri awardee Vivek passed away in Chennai due to a massive heart attack. He was bestowed with the Padma Shri Award, India’s fourth-highest civilian award in the year 2009 by the Union government.
  • The renowned comedian Vivek was popularly called ‘Chinna Kalaivanar’ for his social reformative dialogues in Tamil cinema.

 

10. பிரபல தமிழ் திரைப்பட நடிகர் விவேக் தனது 60 வயதில் காலமானார்

  • பிரபல தமிழ் திரைப்பட நடிகரும், பத்ம ஸ்ரீ விருது பெற்ற நடிகருமான விவேக் மாரடைப்பால் சென்னையில் காலமானார். 2009ஆம் ஆண்டில் இந்தியாவின் நான்காவது உயரிய விருதான பத்மஸ்ரீ விருதை மத்திய அரசு இவருக்கு வழங்கியது.
  • தமிழ் சினிமாவில் சமூக ரீதியாக வரும் வசனங்களுக்காக பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் ‘சின்ன கலைவாணார்’ என்று அழைக்கப்பட்டார்.

Students can download the Daily TNPSC Current Affairs in English & Tamil as PDF from the links given below – TNPSC daily Current Affairs – English & Tamil – April 17, 2021. 


Download TNPSC Daily Current Affairs – PDF
17th April, 2021 Will be Available soon

Check TNPSC – Daily Current Affairs – April Month in TAMIL & English from bankersdaily from the links below. 


Read – TNPSC Daily Current Affairs – April 2021