TNPSC Current Affairs – English & Tamil – April 26, 2021

TNPSC Aspirants,

The Current Affairs Section is one of the most important topics for the upcoming TNPSC Group I, Group II/IIA, Group IV, and TNUSRB Exams.

Check today’s TNPSC Daily Current Affairs(26th April, 2021) in this post.

Aspirants can expect questions from the Daily Current Affairs section in the upcoming TNPSC Exams and learning the Current Affairs section will also aid them in successfully preparing for the descriptive paper. So this process is a 2 in 1 initiative.

To make the learning more convenient, we will be providing the TNPSC Daily Current Affairs in both ENGLISH & TAMIL. This has been made in such a way that reflects the TNPSC pattern as TNPSC uses both the languages in the Question Paper and this will also make the preparations of the aspirants meaningful and will 100% fulfill the needs of the aspirants.


Download PDF – TNPSC Daily Current Affairs – English & Tamil – April 26, 2021


NATIONAL


1. Prime Minister launches distribution of e-property cards under SWAMITVA scheme

  • Prime Minister launched the distribution of e-property cards under SWAMITVA scheme. It enables the property cards issued under the scheme, to be generated online.

SVAMITVA Scheme

  • SVAMITVA (Survey of Villages and Mapping with Improvised Technology in Village Areas) scheme was launched by Prime Minister on 24 April 2020 (National Panchayat Raj Day) as a Central Sector Scheme. It uses modern technical tools like drones for mapping and surveying to mark the residential land ownership in rural areas.
  • Property cards recognised by the land revenue records department will be given to property owners and can be used for availing loans and other financial benefits.
  • The pilot phase of the scheme was implemented during 2020–21 in the States of Maharashtra, Karnataka, Haryana, Uttar Pradesh, Uttarakhand, Madhya Pradesh, and select villages of Punjab and Rajasthan, and now it has been extended to all the States.

 

1. ஸ்வமித்வா திட்டத்தின் கீழ் மின்னணு சொத்து அட்டை விநியோகத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்

  • பிரதமர் ஸ்வமித்வா திட்டத்தின் கீழ் மின்னணு சொத்து அட்டை விநியோகத்தைத் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சொத்து அட்டைகளை ஆன்லைனில் பெற இது உதவுகிறது.

ஸ்வமித்வா திட்டம்

  • ஸ்வமித்வா (கிராமங்களின் நில அளவை மற்றும் கிராமபகுதிகளில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் வரைபடம் தயாரிப்பு) திட்டம் 24 ஏப்ரல் 2020 அன்று (தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்) மத்திய அரசு திட்டமாக பிரதமரால் தொடங்கப்பட்டது. இது கிராமப்புறங்களில் குடியிருப்பு நில உரிமையை குறிக்கும் வரைபடம் மற்றும் நில அளவைக்கு ட்ரோன்கள் போன்ற நவீன தொழில்நுட்ப கருவிகளைப் பயன்படுத்துகிறது.
  • நில வருவாய் ஆவணத் துறையால் அங்கீகரிக்கப்பட்ட சொத்து அட்டைகள் சொத்து உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் மற்றும் கடன்கள் மற்றும் பிற நிதி சலுகைகளைப் பெற இதை பயன்படுத்தலாம்.
  • இத்திட்டம் முன்னோடி திட்டமாக மகாராஷ்டிரா, கர்நாடகா, ஹரியானா, உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், மத்தியப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தானின் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் 2020-21ஆம் ஆண்டில் செயல்படுத்தப்பட்டது, இப்போது இது அனைத்து மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

2. Kothagiri’s Child Rights activist P Rahul participated in the first online seminar of the United Nations Children’s Rights Conference

  • P Rahul of Kothagiri participated in the first online seminar of the United Nations Children’s Rights Conference.
  • He calls himself as the ‘Brother of Forests’ and is the only boy from India to participate in the conference titled ‘Environment and Child Rights’.
  • The seminar discussed how climate change is severely affecting children’s lives.

 

2. கோத்தகிரியின் குழந்தைகள் உரிமை ஆா்வலா் பி.ராகுல், ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகளின் உரிமைகள் மாநாட்டின் முதல் இணையவழி கருத்தரங்கில் பங்கேற்றுள்ளாா்

  • ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகளின் உரிமைகள் மாநாட்டின் முதல் இணையவழி கருத்தரங்கில் இந்தியாவின் சாா்பில் கோத்தகிரியைச் சேர்ந்த பி.ராகுல் பங்கேற்றுள்ளாா்.
  • தன்னை வனங்களின் சகோதரா் என்று அழைத்துக் கொள்ளும் இவா், ‘சுற்றுச்சூழல் மற்றும் குழந்தை உரிமைகள்’ என்ற தலைப்பில் இந்தியாவிலிருந்து பங்கேற்ற ஒரே சிறுவன் ஆவாா்.
  • இந்தக் கருத்தரங்கில் பருவநிலை மாற்றம் குழந்தைகளின் வாழ்க்கையை எவ்வாறு கடுமையாக பாதிக்கிறது என்பது குறித்து விவாதித்துள்ளனா்.

INTERNATIONAL


3. Saudi Arabia joins ‘Net Zero Producers Forum’ on climate change

  • Saudi Arabia joined the ‘Net Zero Producers Forum’ for oil and gas producers.
  • United States, Canada, Norway, and Qatar have membership in this forum.
  • ‘Net Zero Producers Forum’ will discuss ways to achieve net-zero carbon emission targets to limit global warming.
  • Saudi Arabia is the world’s biggest crude oil exporter. It aims to reduce its carbon emissions by generating 50% of the Saudi Arabia’s energy from renewables by 2030. US President Joe Biden unveiled plans to cut emissions by 50%-52% from 2005 levels at the start of a two-day climate summit.

 

3. காலநிலை மாற்றம் குறித்தநிகர பூஜ்ஜிய தயாரிப்பாளர்கள் மன்றத்தில்சவுதி அரேபியா சேர்ந்துள்ளது

  • சவுதி அரேபியா எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியாளர்களுக்கான நிகர பூஜ்ஜிய உற்பத்தியாளர்கள் மன்றத்தில் இணைந்தது.
  • அமெரிக்கா, கனடா, நார்வே மற்றும் கத்தார் ஆகிய நாடுகள் இந்த மன்றத்தில் உறுப்பினராக உள்ளன.
  • ‘நிகர பூஜ்ஜிய உற்பத்தியாளர்கள் மன்றம்’ புவி வெப்பமடைதலைக் கட்டுப்படுத்த நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு இலக்குகளை அடைவதற்கான வழிகள் குறித்து விவாதிக்கும்.
  • சவுதி அரேபியா உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் ஏற்றுமதியாளராகும். 2030ஆம் ஆண்டில் சவுதி அரேபியாவில் 50% ஆற்றலை புதுப்பிக்கத்தக்க பொருட்களிலிருந்து உற்பத்தி செய்வதன் மூலம் அதன் கார்பன் உமிழ்வைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கார்பன் உமிழ்வை 2005ஆம் ஆண்டு நிலையிலிருந்து 50% -52% குறைக்கும் திட்டங்களை இரண்டு நாள் காலநிலை உச்சிமாநாட்டின் தொடக்கத்தில் வெளியிட்டார்.

4. Sunken missing Indonesian submarine KRI Nanggala was found at Bali Sea

  • KRI Nanggala, the missing Indonesian submarine, was found broken into three parts, at the bottom of the Bali Sea.
  • Bali Sea is located in Indonesia.

KRI Nanggala

  • The German-built submarine KRI Nanggala was in service with the Indonesian Navy since 1981.

Deep Submergence Rescue Vessel of India

  • Deep Submergence Rescue Vessel (DSRV) of India was sent to Indonesia from Vishakapatnam for search and rescue of KRI Nangala.

 

4. நீரில் மூழ்கி காணாமல் போன இந்தோனேசிய நீர்மூழ்கிக்கப்பலான கே.ஆர்.. நங்கலா பாலி கடலில் கண்டுபிடிக்கப்பட்டது

  • காணாமல் போன இந்தோனேசிய நீர்மூழ்கிக் கப்பலான கே.ஆர்.. நங்கலா, பாலி கடலின் அடிப்பகுதியில் மூன்று பகுதிகளாக உடைந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
  • பாலி கடல் இந்தோனேசியாவில் அமைந்துள்ளது.

கே.ஆர்.. நங்கலா

  • ஜெர்மனியில் கட்டப்பட்ட நீர்மூழ்கிக் கப்பலான கே.ஆர்.. நங்கலா 1981 முதல் இந்தோனேசிய கடற்படை சேவையில் இருந்து வருகிறது.

இந்திய கடற்படையின் ஆழமான நீரில் மூழ்கும் மீட்பு கப்பல்

  • இந்திய கடற்படையின் ஆழமான நீரில் மூழ்கும் மீட்பு கப்பல் (DSRV), கே.ஆர்.. நங்கலா-வை தேடி மீட்கும் பணிக்காக விசாகப்பட்டினத்திலிருந்து இந்தோனேசியாவிற்கு அனுப்பப்பட்டது.

MILITARY EXERCISES


5. The 19th edition of India and French Navy bilateral exercise VARUNA-2021 started

  • The 19th edition of the Indian and French Navy bilateral exercise VARUNA-2021 started in the Arabian Sea on 25 April. The three-day exercise will see high tempo-naval operations at sea, including advanced air defence and anti-submarine exercises.
  • Guided-missile stealth destroyer INS Kolkata, guided-missile frigates INS Tarkash, INS Talwar and Chetak integral helicopters will participate in the exercise representating the Indian Navy.
  • The French Navy will be represented by the Aircraft Carrier Charles-de-Gaulle with Rafale-M fighter, E2C Hawkeye aircraft and Command and supply ship,
  • The Indian Navy will be led by Rear Admiral Ajay Kochhar, Flag Officer Commanding Western Fleet, while the French Navy will be led by Rear Admiral Marc Aussedat, Commander Task Force 473.

 

5. இந்தியா மற்றும் பிரெஞ்சு கடற்படை இருதரப்பு பயிற்சியின் 19வது பதிப்பான வருணா-2021 தொடங்கியது

  • இந்தியா மற்றும் பிரெஞ்சு கடற்படை இருதரப்பு பயிற்சியின் 19வது பதிப்பான வருணா-2021 25 ஏப்ரல் அன்று அரேபிய கடலில் தொடங்கியது. இந்த மூன்று நாள் பயிற்சியில் கடலில் அதிக டெம்போ-கடற்படை நடவடிக்கைகள் இருக்கும், இதில் மேம்பட்ட வான் பாதுகாப்பு மற்றும் நீர்மூழ்கி எதிர்ப்பு பயிற்சிகளும் அடங்கும்.
  • இந்திய கடற்படையின் தரப்பில் இருந்து, வழிகாட்டப்பட்ட ஏவுகணை மறைந்திருந்து அழிக்கும் .என்.எஸ் கொல்கத்தா, வழிகாட்டப்பட்ட ஏவுகணை போர் கப்பல்கள் .என்.எஸ் தர்காஷ், .என்.எஸ் தல்வார் மற்றும் சேடக் ஒருங்கிணைந்த ஹெலிகாப்டர்கள் இந்த பயிற்சியில் பங்கேற்கும். பிரெஞ்சு கடற்படை சார்பாக விமானம் தாங்கி சார்லஸ்டிகோலே ரஃபேல்எம் போர் விமானம், E2C ஹாக் விமானம் மற்றும் கட்டளை மற்றும் விநியோக கப்பல் வர் அகியவை கலந்துகொள்ளும்.
  • இந்திய அணியை மேற்கு படையின் கொடி அதிகாரி ரியர் அட்மிரல் அஜய் கோச்சர் வழிநடத்துவார், பிரெஞ்சு அணியை டாஸ்க் ஃபோர்ஸ் 473இன் கமாண்டர் ரியர் அட்மிரல் மார்க் ஆஸ்ஸெடாட் தலைமை தாங்குவார்.

SCIENCE AND TECHNOLOGY


6. NASA’s Perseverance rover makes Oxygen from Mars’ carbon dioxide atmosphere

  • NASA’s Perseverance rover has made oxygen from the carbon dioxide atmosphere on Mars. It is the second successful technology demonstration on the mission, while the first was the flight of a mini-helicopter known as Ingenuity.
  • The generation of oxygen was performed by a toaster-sized unit in the rover called the Moxie– the Mars Oxygen In-Situ Resource Utilization Experiment. It made 5 grams of the gas – equivalent to what an astronaut at Mars would need to breathe for roughly 10 minutes.
  • Mars’ atmosphere is dominated by carbon dioxide (CO₂) at a concentration of 96 per cent.

 

6. செவ்வாய் கிரகத்தில் நாசாவின் பெர்செவரன்ஸ் ரோவர் அக்கிரகத்தின் கார்பன் டை ஆக்சைடு வளிமண்டலத்திலிருந்து ஆக்ஸிஜனை உருவாக்குகிறது

  • செவ்வாய் கிரகத்தில் நாசாவின் பெர்செவரன்ஸ் ரோவர் கிரகத்தின் கார்பன் டை ஆக்சைடு வளிமண்டலத்திலிருந்து ஆக்ஸிஜனை உருவாக்கியுள்ளது. இது இந்த பயணத்தின் இரண்டாவது வெற்றிகரமான தொழில்நுட்ப சோதனையாகும். முதல் சோதனை இன்ஜெனியுட்டி என்னும் மினி ஹெலிகாப்டரைப் பறக்கவைத்ததாகும்.
  • இந்த ஆக்ஸிஜனின் உருவாக்கம் ரோவரிலுள்ள ஒரு டோஸ்டர் அளவிலான கருவியான மோக்ஸி – மார்ஸ் ஆக்ஸிஜன் கள வள பயன்பாட்டு சோதனை என்ற ரோவரில் மூலம் செய்யப்பட்டது. இது செவ்வாய் கிரகத்தில் ஒரு விண்வெளி வீரர் சுமார் 10 நிமிடங்கள் சுவாசிக்க தேவையான 5 கிராம் வாயுவை உருவாக்கியது.
  • செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலத்தில் 96 சதவீதம் கார்பன் டை ஆக்சைடு (CO) ஆதிக்கம் செலுத்துகிறது.

AWARDS AND RECOGNITIONS


7. The 12th National Panchayati Raj Day was virtually commemorated on 24 April 2021

  • Ministry of Panchayati Raj (MoPR), Government of India has been incentivising the best performing Panchayats recommended by the State Governments/UT Administrations since 2011-12. The awards are given on the National Panchayati Raj Day celebrated on 24 April every year.
  • The National Panchayat Awards 2021 were conferred under the following categories: Deen Dayal Upadhyay Panchayat Sashaktikaran Puraskar (to 224 Panchayats), Nanaji Deshmukh Rashtriya Gaurav Gram Sabha Puraskar (to 30 Gram Panchayats), Gram Panchayat Development Plan Award (to 29 Gram Panchayats), Child-friendly Gram Panchayat Award (to 30 Gram Panchayats) and e-Panchayat Puraskar (to 12 States).

 

7. 12வது தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் 24 ஏப்ரல் 2021 அன்று மெய்நிகராக தொடங்கப்பட்டது

  • மத்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் 2011-12ஆம் ஆண்டு முதல் மாநில அரசுகள் / யூனியன் பிரதேச நிர்வாகங்களால் பரிந்துரைக்கப்பட்ட சிறந்த செயல்திறன் கொண்ட பஞ்சாயத்துகளுக்கு ஊக்கம் அளிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 2ஆம் தேதி கொண்டாடப்படும் தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தன்று இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
  • தீன தயாள உபாத்யாய பஞ்சாயத்து சஷக்திகரன் புரஸ்கார் (224 பஞ்சாயத்துகளுக்கு), நானாஜி தேஷ்முக் ராஷ்ட்ரிய கௌரவ கிராம சபா புரஸ்கார் (30 கிராம பஞ்சாயத்துகளுக்கு), கிராம பஞ்சாயத்து வளர்ச்சித்திட்ட விருது (29 கிராம பஞ்சாயத்துகளுக்கு), குழந்தை நட்பு கிராம பஞ்சாயத்து விருது (30 கிராம பஞ்சாயத்துகளுக்கு) மற்றும் இ-பஞ்சாயத்து புரஸ்கார் (12 மாநிலங்களுக்கு) ஆகிய பிரிவுகளின் கீழ் தேசிய பஞ்சாயத்து விருதுகள் 2021 வழங்கப்பட்டன.

Awards


  • Deen Dayal Upadhyay Panchayat Sashaktikaran Puraskar (DDUPSP) is given to best performing Panchayats across the States/UTs in recognition of the good work for improving the delivery of services and public goods under nine thematic categories.
  • Nanaji Deshmukh Rashtriya Gaurav Gram Sabha Puraskar (NDRGGSP) is given to Gram Panchayats/Village Councils for their outstanding contribution to the socio-economic development by involving Gram Sabhas.
  • Gram Panchayat Development Plan Award (GPDPA) is given to Gram Panchayat/ Village Council, which has developed its GPDP according to the State/UT specific guidelines prepared in line with the model guidelines issued by MoPR.
  • Child-friendly Gram Panchayat Award (CFGPA) is given to the best performing Gram Panchayat/Village Council for adopting child-friendly practices.
  • e-Panchayat Puraskar is given to the best performing states for effective implementation of e-applications of Central and State Governments.

விருதுகள்


  • தீன தயாள உபாத்யாய பஞ்சாயத்து சஷக்திகரன் புரஸ்கார் (டி.டி.யு.பி.எஸ்.பி) ஒன்பது கருப்பொருள் பிரிவுகளின் கீழ் சேவைகள் மற்றும் பொதுப் பொருட்களை வழங்குவதை மேம்படுத்துவதற்கான நல்ல பணியை அங்கீகரிக்கும் வகையில் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் முழுவதும் சிறப்பாக செயல்படும் ஊராட்சிகளுக்கு வழங்கப்படுகிறது.
  • நானாஜி தேஷ்முக் ராஷ்ட்ரிய கௌரவ் கிராம சபா புரஸ்கார் (என்.டி.ஆர்.ஜி.ஜி.எஸ்.பி) கிராம சபைகளை ஈடுபடுத்துவதன் மூலம் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக கிராம பஞ்சாயத்துகள் / கிராம சபைகளுக்கு வழங்கப்படுகிறது.
  • கிராம பஞ்சாயத்து வளர்ச்சித்திட்ட விருது (ஜி.பி.டி.பி.) கிராம பஞ்சாயத்து / கிராம கவுன்சிலுக்கு வழங்கப்படுகிறது, இது பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் வழங்கிய மாதிரி வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப தயாரிக்கப்பட்ட மாநில / யூனியன் பிரதேச குறிப்பிட்ட வழிகாட்டுதல்களின்படி அதன் ஜி.பி.டி.பி.யை உருவாக்கியுள்ளது.
  • குழந்தை நட்பு கிராம பஞ்சாயத்து விருது (சி.எஃப்.ஜி.பி.) சிறப்பாக செயல்படும் கிராம பஞ்சாயத்து / கிராம கவுன்சிலுக்கு குழந்தை நட்பு நடைமுறைகளை பின்பற்றுவதற்காக வழங்கப்படுகிறது.
  • பஞ்சாயத்து புரஸ்கார் மத்திய மற்றும் மாநில அரசுகளின் மின்னணு பயன்பாடுகளை திறம்பட செயல்படுத்துவதற்காக சிறப்பாக செயல்படும் மாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது.

IMPORTANT DAYS


8. National Panchayat Raj Day – 24 April

  • National Panchayat Raj Day is celebrated every year on 24 April. The day marks the institutionalisation of the Panchayat Raj institution by Ministry of Panchayat Raj through the 73rd Constitutional Amendment Act of 1992, which was effective from 24 April 1993.

Panchayat Raj

  • Panchayat Raj system was given constitutional status by the 73rd amendment through the addition of Part IX (The Panchayat) to the Constitution.
  • Rajasthan was the first state to implement the Panchayat Raj system.

Panchayat Raj system consists of a three-tier system, namely

  • Zilla Parishad – District level
  • Panchayat Samiti – Block level
  • Gram Panchayat – Village level

Committees related to Panchayat Raj

  • Balwant rai Mehta Committee (1957)
  • Ashok Mehta Committee (1977)
  • L M Singhvi Committee (1986)

 

8. தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் – 24 ஏப்ரல்

  • ஒவ்வொரு ஆண்டும் 24 ஏப்ரல் அன்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. 1992ஆம் ஆண்டில் 73வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் மூலம் பஞ்சாயத்து ராஜ் நிறுவனத்தை பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் நிறுவனமயமாக்கியதை இந்த நாள் குறிக்கிறது, இது 1993 ஏப்ரல் 24 முதல் நடைமுறைக்கு வந்தது.

பஞ்சாயத்து ராஜ்

  • பஞ்சாயத்து ராஜ் அமைப்பிற்கு 73வது திருத்தத்தின் மூலம் அரசியலமைப்பில் பகுதி 9 (பஞ்சாயத்து) சேர்க்கப்பட்டதையடுத்து அரசியலமைப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது.
  • பஞ்சாயத்து ராஜ் முறையை அமல்படுத்திய முதல் மாநிலம் ராஜஸ்தான்.

பஞ்சாயத்து ராஜ் அமைப்பு மூன்று அடுக்கு முறையைக் கொண்டுள்ளது, அவை

  • ஜில்லா பரிஷத் – மாவட்ட அளவில்
  • பஞ்சாயத்து சமிதி – வட்டார அளவில்
  • கிராம ஊராட்சி – கிராம மட்டம்

பஞ்சாயத்து ராஜ் தொடர்பான குழுக்கள்

  • பல்வந்த் ராய் மேத்தா குழு (1957)
  • அசோக் மேத்தா குழு (1977)
  • எல் எம் சிங்வி குழு (1986)

9. World Malaria Day – 25 April

  • World Malaria Day is observed on 25 April every year to take urgent action in the control of Malaria.
  • The theme of World Malaria Day 2021: “Reaching the zero-malaria target”

Malaria

  • Malaria is caused by Plasmodium parasite and female Anopheles mosquitoes act as a vector.
  • 5-year National Strategic Plan for Malaria Elimination was started in 2017 that focused on Malaria elimination by 2022.
  • MERA-India (Malaria Elimination Research Alliance-India) was launched by Indian Council of Medical Research (ICMR), which is a conglomeration of partners working on the control of malaria.

 

9. உலக மலேரியா தினம்

  • மலேரியாவை கட்டுப்படுத்த அவசர நடவடிக்கை எடுப்பதற்காக உலக மலேரியா தினம் ஒவ்வொரு ஆண்டும் 25 ஏப்ரல் அன்று அனுசரிக்கப்படுகிறது.
  • உலக மலேரியா தினம் 2021இன் கருப்பொருள்: பூஜ்ஜிய மலேரியா இலக்கை அடைவது” .

மலேரியா

  • மலேரியா பிளாஸ்மோடியம் ஒட்டுண்ணியால் ஏற்படுகிறது, இதில் பெண் அனோபில்ஸ் கொசுக்கள் நோய்கடத்தியாக செயல்படுகிறது.
  • 5 ஆண்டு கால மலேரியாவை ஒழிப்பதற்கான தேசிய மூலோபாயத் திட்டம் 2017ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது, இது 2022ஆம் ஆண்டிற்குள் மலேரியாவை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • மேராஇந்தியா (MERA- மலேரியா ஒழிப்பு ஆராய்ச்சி கூட்டணி-இந்தியா) இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) மூலம் தொடங்கப்பட்டது, இது மலேரியாவை கட்டுப்படுத்த வேலை செய்யும் பங்குதாரர்களின் ஒருங்கிணைப்பு ஆகும்.

10. World Intellectual Property Day – 26 April

  • ‘World Intellectual Property Day’ is celebrated by the World Intellectual Property Organization (WIPO) each year, on 26 April.
  • The day discusses the role that intellectual property (IP) rights play in encouraging innovation and creativity.
  • The theme of World Intellectual Property Day 2021: ‘Taking your ideas to the market’.

 

10. உலக அறிவுசார் சொத்துரிமை தினம் – 26 ஏப்ரல்

  • ‘உலக அறிவுசார் சொத்துரிமை தினம்’ ஒவ்வொரு ஆண்டும் 26 ஏப்ரல் அன்று உலக அறிவுசார் சொத்து அமைப்பால் (WIPO) கொண்டாடப்படுகிறது.
  • கண்டுபிடிப்பு மற்றும் படைப்பாற்றலை ஊக்குவிப்பதில் அறிவுசார் சொத்து (IP) உரிமைகள் வகிக்கும் பங்கை இந்த நாள் விவாதிக்கிறது.
  • உலக அறிவுசார் சொத்து தினம் 2021இன் கருப்பொருள்: உங்கள் யோசனைகளை சந்தைக்கு எடுத்துச் செல்லுதல் 

11. World Veterinary Day – 24 April

  • World Veterinary Day is observed annually on the last Saturday of April every year. The day was first declared by “The World Veterinary Association” in 2001.
  • The main objective is, ‘to provide global leadership for the veterinary profession and promote animal health and welfare and public health, through advocacy, education, and partnership’.
  • The theme for 2021: ‘The Veterinarian Response to the Covid-19 Crisis’

 

11. உலக கால்நடை தினம் – 24 ஏப்ரல்

  • உலக கால்நடை தினம் ஆண்டுதோறும் ஏப்ரலின் கடைசி சனிக்கிழமை அன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள் முதன்முதலில் உலக கால்நடை சங்கத்தால் 2001இல் அறிவிக்கப்பட்டது.
  • “கால்நடைத் தொழிலுக்கு உலகளாவிய தலைமையை வழங்குவதும், கால்நடை உடல்நலம் மற்றும் சுகாதாரம் மற்றும் பொது சுகாதாரத்தை விளம்பரப்படுத்துதல், கல்வி மற்றும் கூட்டாண்மை மூலம் ஊக்குவிப்பதும்,” இதன் முக்கிய நோக்கமாகும்.
  • 2021ஆம் ஆண்டுக்கான கருப்பொருள்: கோவிட்-19 நெருக்கடிக்கு கால்நடை மருத்துவரின் மறுமொழி

DAY IN HISTORY


12. Mahavir Jayanti – 25 April

  • Mahavir Jayanti is celebrated annually on 25 April. It marks the birth anniversary of 24th and the last Jain Tirthankara Mahavir. Mahavir Jayanti is one of the most auspicious events for Jains and their religious life.

Mahavira

  • Vardhamana Mahavira was known as Nigantha Nataputta. He was born around 540 BCE in Kundagrama, a suburb of Vaishali. He was a member of the ruling family of a gana-sangha and his father Siddhartha, was the chief of the Jnatrika clan. His mother Trishala was a Lichchavi princess and sister of its chief Chetaka.
  • Mahavira left his home at the age of 30 and wandered about as a mendicant for 12 years in search of true knowledge. In the 13th year of his wandering, at the age of 42, Vardhamana attained enlightenment or
  • He then became a Tirthankara and came to be called a Jina or Mahavira (the Great Conqueror). He preached for 30 years and was patronised by the rich and the elite. He died about 468 BCE at the age of 72 in Pavapuri near Rajgriha.

Jainism

  • Jainism was earlier known as Nirgranthas (free from bonds). Tirthankara was known as Jina (conqueror) of the soul, and hence this sect came to be known as Jainism and Samanam in Tamil Nadu.
  • Risabha is considered the first Tirthankara, and Mahavir as the last Tirthankara. Yajur Veda mentions three of the Tirthankaras, viz., Risabha, Ajitanatha and Aristanemi.
  • Mahavira, who is the 24th Tirthankar, organised his members into monastic and lay followers.

 

12. மகாவீரர் ஜெயந்தி – 25 ஏப்ரல்

  • மகாவீரர் ஜெயந்தி ஒவ்வொரு ஆண்டும் 25 ஏப்ரல் அன்று கொண்டாடப்படுகிறது. அது 24வது மற்றும் கடைசி சமண தீர்த்தங்கரரான மகாவீரரின் பிறந்த நாளைக் குறிக்கிறது. மகாவீரர் ஜெயந்தி சமண சமூகத்திற்கும் அவர்களின் மத வாழ்க்கைக்கும் மிகவும் புனிதமான நிகழ்வுகளில் ஒன்றாக கருதப்படுகிறது

மகாவீரர்

  • வர்த்தமான மகாவீரர் நிகந்த நடபுத்தர் என்று குறிப்பிடப்படுகிறார். அவர் ஏறத்தாழ பொ.ஆ.மு. 540இல் வைசாலிக்கு அருகில் உள்ள குந்தகிராமம் என்ற இடத்தில் பிறந்தார். இவர் ஒரு கணசங்கத்தை ஆளும் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை சித்தார்த்தர், ஞானத்ரிகா என்ற இனக்குழுவின் தலைவர் ஆவார். இவரது தாய் திரிஷலை ஒரு லிச்சாவி இளவரசி ஆவார். அவர் லிச்சாவியின் தலைவர் சேதகரின் சகோதரியாவார்.
  • மகாவீரர் தமது முப்பதாவது வயதில் வீட்டைவிட்டு வெளியேறினார். உண்மையான ஞானத்தைத் தேடிப் பன்னிரண்டாண்டுகள் அலைந்தார். இப்படித் திரிய ஆரம்பித்த பதின்மூன்றாவது ஆண்டில், தனது நாற்பத்தியிரண்டாம் வயதில் வர்த்தமானர் ஞானம் அல்லது நிர்வாணத்தை அடைந்தார்.
  • பிறகு தீர்த்தங்கரர் ஆனார். அவர் ஜீனர் (வெற்றி பெற்றவர்) என்றும் மகாவீரர் என்றும் அழைக்கப்பட்டார். அவர் முப்பதாண்டு காலம் உபதேசம் செய்தார். செல்வர்களும் மேட்டுக்குடியினரும் அவரை ஆதரித்தனர். பொ.ஆ.மு. 468 வாக்கில் தனது எழுபத்தியிரண்டாம் வயதில், ராஜகிருகத்திற்கு அருகில் உள்ள பவபுரியில் மரணமடைந்தார்.

சமணம்

  • சமணம் முதலில் நிர்கிரந்தம் (தளைகளிலிருந்து விடுபட்டது) என்று அழைக்கப்பட்டது. தீர்த்தங்கரர் ஜீனர்(உலகைவென்றவர்) என்று அழைக்கப்பட்டதால், இந்த பிரிவு ஜைனம் என்றும் அழைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் சமணம் என்று அழைக்கப்படுகிறது.
  • ரிஷபர் முதல் தீர்த்தங்கரராகவும் மகாவீரர் கடைசி தீர்த்தங்கரராகவும் கருதப்படுகிறார்கள். யஜுர் வேதம் ரிஷபர், அஜிதானந்தர், அரிஷ்டநேமி என்ற மூன்று தீர்த்தங்கரர்களைக் குறிப்பிடுகிறது.
  • 24வது தீர்த்தங்கரரான மகாவீரர் தமது உறுப்பினர்களைத் துறவிகளாகவும், துறவறம் கொள்ளாது தம்மைப் பின்பற்றுபவர்களாகவும் திரட்டினார்.

Students can download the Daily TNPSC Current Affairs in English & Tamil as PDF from the links given below – TNPSC daily Current Affairs – English & Tamil – April 26, 2021. 


Download TNPSC Daily Current Affairs – PDF
26th April, 2021 Will be Available soon

Check TNPSC – Daily Current Affairs – April Month in TAMIL & English from bankersdaily from the links below. 


Read – TNPSC Daily Current Affairs – April 2021