TNPSC Current Affairs – English & Tamil – January 21, 2021

TNPSC Aspirants,

Current Affairs Section is one of the most important topics for the upcoming TNPSC Group I, Group II/IIA, Group IV, and TNUSRB Exams.

Check today’s TNPSC Daily Current Affairs(21st January 2020) in this post.

Aspirants can expect questions from the Daily Current Affairs section in the upcoming TNPSC Exams and learning the Current Affairs section will also aid them in successfully preparing for the descriptive paper. So this process is a 2 in 1 initiative.

To make the learning more convenient, we will be providing the TNPSC Daily Current Affairs in both ENGLISH & TAMIL. This has been made in such a way that reflects the TNPSC pattern as TNPSC uses both the languages in the Question Paper and this will also make the preparations of the aspirants meaningful and will 100% fulfill the needs of the aspirants.


Download PDF – TNPSC Daily Current Affairs – English & Tamil – January 21, 2021


Download_TNPSC_Daily_CUrrent_Affairs_PDF_7th_January_2021


  1. India Innovation Index
  • It was released by NITI Aayog.
  • Karnataka tops the index among the major States category.
  1. Karnataka
  2. Maharashtra
  3. Tamil Nadu
  4. Telangana
  5. Kerala
  • Jharkhand, Chattisgarh and Bihar were placed at the bottom.
  • Delhi topped among Union Territories.
  1. புதிய கண்டுபிடுப்புகளுக்கான இந்திய குறியீடு
  • இதை நிதி ஆயோக் வெளியிடுகிறது.
  • முக்கிய மாநிலங்கள் பட்டியலில் கர்நாடகா முதலிடத்தில் உள்ளது.
  1. கர்நாடகா
  2. மகாராஷ்டிரா
  3. தமிழ்நாடு
  4. தெலுங்கானா
  5. கேரளா
  • ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், பீகார் ஆகிய மாநிலங்கள் பட்டியலில் கீழே இருக்கின்றன.
  • யூனியன் பிரதேசங்கள் மத்தியில் டெல்லி முதலிடம் வகிக்கிறது.

  1. Tamil Nadu electorates
  • Total – 6.26 crore
  • Men – 3.08 crore
  • Women – 3.18 crore
  • Third gender -7200
  • Highest number of voters – Sholinganallur constituency.
  • Lowest number of voters – Chennai Harbour constituency.
  1. தமிழக வாக்காளர்கள்
  • மொத்தம்      – 6.26 கோடி
  • ஆண்கள் – 3.08 கோடி
  • பெண்கள் – 3.18 கோடி
  • மூன்றாம் பாலினம் – 7200
  • அதிக வாக்காளர்கள் – சோழிங்கநல்லூர் தொகுதி.
  • மிக குறைந்த வாக்காளர்கள் – சென்னை துறைமுகம் தொகுதி.

  1. Application Programming Interface (API) System
  • API systems will be used to monitor Metrowater tanker trips.
  • It had earlier used smartcard-based water dispensers, which releases only a specific amount of water if the driver swipes the smartcard.
  • API Systems will be much more efficient as they monitor the smartcard-based system with GPS and if any water theft or unassigned trips are detected, the smartcard will be blocked.
  1. அப்ளிகேஷன் புரோகிராமிங் இன்டர்ஃபேஸ் (API) அமைப்புகள்
  • மெட்ரோவாட்டர் டேங்கர்களின் பயணங்களை கண்காணிக்க API அமைப்புகள் பயன்படுத்தப்படும்.
  • இதற்கு முன்பு ஸ்மார்ட்கார்டு அடிப்படையிலான நீர் விநியோகிப்பான்கள் பயன்படுத்தப்பட்டது, இது ஸ்மார்ட்கார்டை தேய்த்தால் ஒரு குறிப்பிட்ட அளவு நீரை மட்டுமே வெளியிடுகிறது.
  • API அமைப்புகள், ஸ்மார்ட்கார்டு அடிப்படையிலான அமைப்பை ஜி.பி.எஸ்(GPS) உடன் கண்காணிப்பதனால் மிகவும் திறமையானதாக இருக்கும், மேலும் நீர் திருட்டு அல்லது ஒதுக்கப்படாத பயணங்கள் கண்டறியப்பட்டால், ஸ்மார்ட்கார்டு முடக்கப்படும்.

4.Pardoning power of Governor

Governor of Tamil Nadu had been delaying a decision for years even after the government has recommended a pardon for Former Prime Minister Rajiv Gandhi’s assassination case convict Perarivalan.

Article 161

  • Governor can pardon any offence related to State law.
  • It excludes death sentences and punishments by court-martials.
  • Even though it is his discretion, it should be in harmony with the Council of Ministers.
  • So, this case is an extraordinary situation.

4.ஆளுநரின் மன்னிக்கும் அதிகாரம்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை  வழக்கில் குற்றவாளியான பேரறிவாளனுக்கு   அரசு பரிந்துரை செய்த பிறகும் தமிழக ஆளுநர் பல ஆண்டுகளாக ஒரு முடிவை எடுக்கத் தாமதப்படுத்திவருகிறார்.

விதி 161

  • மாநில சட்டம் தொடர்பான எந்த ஒரு குற்றத்தையும் ஆளுநர் மன்னிக்கலாம்.
  • இது மரணதண்டனை மற்றும் ராணுவ நீதிமன்ற தண்டனைகளுக்குப் பொருந்தாது.
  • அது அவரது சிறப்பு அதிகாரத்தின் கீழ் இருந்தாலும், அது அமைச்சரவை முடிவுடன் இணக்கமாக இருக்க வேண்டும்.
  • எனவே, இந்த வழக்கு ஒரு அசாதாரண நிலைமையாகும்.

  1. Gambling is a reasonable restriction
  • Gambling cannot be protected under Article 19(1)(g) of the Constitution.
  • Article 19(g) – Right to carry on any occupation, trade or business.
  • But this right should not affect the existing law, interests of the general public, etc.,
  • Tamil Nadu government ordinance of 2020 banned all the online games that were played with stakes in cyberspace.
  • Rummy was the main reason behind this move.
  1. சூதாட்டம் ஒரு நியாயமான கட்டுப்பாடு
  • அரசியல் சட்டத்தின் 19(1)(g) பிரிவின் கீழ் சூதாட்டத்தை பாதுகாக்க முடியாது.
  • விதி 19 (g) – ஏதேனும் தொழில், வியாபாரம் அல்லது தொழிலை மேற்கொள்ளும் உரிமை.
  • ஆனால் இந்த உரிமை, நடைமுறையில் உள்ள சட்டம், பொது மக்களின் நலன்கள் போன்றவற்றைப் பாதிக்கக் கூடாது.
  • தமிழக அரசின் அவசர சட்டம், 2020 பணம் வைத்து ஆடும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதித்தது.
  • இந்த நடவடிக்கைக்கு ரம்மி தான் மிக முக்கிய காரணம் ஆகும்.

  1. Road accident report, 2019
  • This report is being released by the Ministry of Road Transport and Highways (MoRTH).
  • Best performing State on Road safety – Tamil Nadu.
  • Tamil Nadu has been awarded for two consecutive years 2018 and 2019.
  • Base year – 2016.
  • Fatalities have been reduced by 54% compared to 2016 and 13.84% compared to 2018.
  • Our state has already achieved the millennium goal – To reduce accidents by 50% by 2025 (base year-2016).
  • An additional Superintendent of Police-level officer was appointed as nodal officer for traffic and road safety work in every district.
  1. சாலை விபத்து அறிக்கை, 2019
  • இந்த அறிக்கை சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தால் வெளியிடப்படுகிறது .
  • சாலை பாதுகாப்பில் சிறப்பாக செயல்படும் மாநிலம் – தமிழ்நாடு.
  • 2018 மற்றும் 2019 ஆகிய இரண்டு ஆண்டுகளில் தமிழகத்திற்கு தொடர்ந்து இரண்டு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
  • அடிப்படை ஆண்டு – 2016.
  • 2016 உடன் ஒப்பிடுகையில் உயிரிழப்பு 54% மற்றும் 2018 உடன் ஒப்பிடுகையில் 13.84% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
  • நம் மாநிலம் ஏற்கனவே மில்லினியம் இலக்கை அடைந்துவிட்டது – 2025 ஆம் ஆண்டில் 50% விபத்துக்களைக் குறைக்க வேண்டும் (அடிப்படை ஆண்டு-2016).
  • ஒவ்வொரு மாவட்டத்திலும் போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ப் பணிகளுக்கான ஒருங்கிணைப்பு அலுவலராக கூடுதல் காவல் கண்காணிப்பாளர்-நிலை அலுவலர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

  1. DPIIT compliance portal
  • Department of Industry and Internal Trade(DPIIT) has created a regulatory portal that will bridge citizens, industries and government.
  • It is the first of its kind central online repository of all Central and State level compliances.
  1. DPIIT இணக்க வலைத்தளம்
  • தொழிற்சாலைகள் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்துறை, தொழில், குடிமக்கள் மற்றும் அரசுகளை இணைக்கும் ஒரு ஒழுங்குமுறை வலைத்தளம் ஒன்றை உருவாக்கியுள்ளது.
  • மத்திய மற்றும் மாநில அளவிலான அனைத்து இணக்கப்பாடுகளின் முதல் மத்திய ஆன்லைன் களஞ்சியமாக இது உள்ளது.

8.Kamala Harris

  • First woman Vice-President of US.
  • Thulasendrapuram in the Tiruvarur district is the ancestral village of Kamala Harris.

8.கமலா ஹாரிஸ்

  • அமெரிக்காவின் முதல் பெண் துணை குடியரசுத் தலைவர்.
  • திருவாரூர் மாவட்டத்தில் உள்ள துளசந்திரபுரம் கமலா ஹாரிஸின் மூதாதையர் கிராமம் ஆகும்.

  1. Lasith Malinga – CRICKET
  • He retired from Franchise cricket.
  • Sri Lankan fast bowler.
  • He is the first bowler to take 100 wickets in T20 and the first bowler to claim two T20 hat-tricks.
  • He was the second to take four wickets with four consecutive balls, after Rashid Khan.
  1. லசித் மலிங்கா – கிரிக்கெட்
  • இவர் அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.
  • இவர் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் ஆவார்.
  • டி20 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்து வீச்சாளர் மற்றும் இரண்டு டி20 ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்து வீச்சாளர் என்ற பெயர் இவருக்கு உள்ளது.
  • ரஷீத் கானுக்குப் பிறகு தொடர்ச்சியாக நான்கு பந்துகளில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் ஆவார்.

  1. Rishabh Pant – CRICKET
  • He moved to 13th place in ICC Test batting rankings with 691 points.
  • This made him the top-ranked wicket-keeper batsman in the world after his Brisbane game.

10.ரிஷப் பந்த் – கிரிக்கெட்

  • ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் 691 புள்ளிகளுடன் 13 வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
  • அவரது பிரிஸ்பேன் விளையாட்டுக்குப் பிறகு உலகின் முதல் தரவரிசை விக்கெட்-கீப்பர் பேட்ஸ்மேன் ஆகியுள்ளார்.

  1. The Gujarat government has decided to change the name of the dragon fruit to Kamalam.
  • Gujarat Chief Minister – Vijay Rupani
  • The word dragon reminds China. Since this fruit is like a lotus, the Gujarat government has decided to change the name of the fruit to Kamalam.
  1. டிராகன் பழத்தின் பெயரை கமலம் என்று மாற்றுவதற்கு குஜராத் அரசு முடிவு செய்துள்ளது.
  • குஜராத் மாநில முதல்வர் – விஜய் ரூபானி
  • டிராகன் என்ற வார்த்தை சீனாவை நினைவுபடுத்துகிறது. இந்தப் பழம் தாமரைப் பூவைப் போல இருப்பதால் இந்த பழத்தின் பெயரை கமலம் என்று மாற்றுவதற்கு குஜராத் மாநில அரசு முடிவு செய்துள்ளது.

  1. Guru Gobind Singh, the tenth Guru of the Sikh religion, celebrated his 354th birthday on January 20.
  2. சீக்கிய மதத்தின் பத்தாவது குருவான குரு கோபிந்த் சிங்கின் 354-ஆவது பிறந்த தினம் ஜனவரி 20 அன்று கொண்டாடப்பட்டது.

  1. The Maharashtra state government passed the “Socially and Educationally Backward Classes (SEBC)” act 2018 for the backward classes in the society and education, providing 16% reservation for Maratha communities in education and employment in Maharashtra.
  • The High Court’s opinion: The Maratha community has ordered reservation of employment not exceeding 12% and not more than 13% in education .
  • But the final verdict was not delivered.
  1. மகாராஷ்டிர மாநிலத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மராத்தா சமூகத்தினருக்கு 16 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கும் வகையில் கடந்த 2018-ஆம் ஆண்டு ‘சமூகத்திலும் கல்வியிலும் பின்தங்கிய வகுப்பினருக்கான சட்டம் 2018’ (எஸ்இபிசி) என்ற சட்டத்தை மாநில அரசு இயற்றியது.
  • உயர்நிதிமன்றத்தின் கருத்து: மராத்தா சமூகத்தின் வேலைவாய்ப்பில் 12 சதவீதத்துக்கு மிகாமலும், கல்வியில் 13 சதவீதத்துக்கு மிக்காமலும் இடஒதுக்கீடு இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
  • ஆனால் இதன் இறுதி தீர்ப்பு வழங்கப்படவில்லை.

  1. German luxury carmaker Mercedes-Benz introduced its popular SUV model, the 2021version of GLC to the Indian market.
  • The 2021 ‘Mercedes MeConnect’ technology has been integrated with Alexa Home, Google Home,  Guidance,  Parking Space Detection facilities.
  1. ஜெர்மனியின் சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ் தனது புகழ் பெற்ற எஸ்யூவி வகைக்காரான ஜிஎல்சியின் 2021-ஆம் ஆண்டு பதிப்பை இந்தியச் சந்தைக்கு அறிமுகப்படுத்தியது.
  • 2021 ‘மெர்சிடிஸ் மீ கனெக்ட்’ என்ற இந்தத் தொழில் நுட்பத்தில் அலெக்சா ஹோம், கூகிள் ஹோம், வழிகாட்டும் வசதி, பார்க்கிங் இடங்களை கண்டறியும் வசதிகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

  1. Noted Malayalam actor Unnikrishnan Namboodri passes away.
  • “Namboodiri is known as the grandfather of South Indian cinema,” said ramesh chennilatha, leader of the opposition in the state.
  1. பிரபல மலையாள நடிகர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி காலமானார்.
  • “தென்னிந்திய திரையுலகின் தாத்தாவாக அறியப்பட்டவர் நம்பூதிரி” என்று அம்மாநில எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிலதா கூறியுள்ளார்.

  1. Pradhan Mantri Awas Yojana (PMAY) – Housing Scheme: In Uttar Pradesh, Prime Minister Modi provided Rs 2,691 crore to the beneficiaries of the Prime Minister’s Rural Housing Scheme.
  • Pradhan Mantri Awas Yojana was introduced in the year  1st June  2015
  • Under this scheme, houses are being constructed for the poor.
  • In addition to the Prime Minister’s Rural Housing Scheme, the Ujjwala Scheme for Providing LPG Connection, The Saubhagya Scheme for Electricity Connection and Jal Jeevan Scheme for Water Pipeline Connection are also being implemented.
  1. கிராமப்புற வீட்டுவசதி திட்டம்: உத்திர பிரதேசத்தில் பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதித் திட்டத்தின் பயனாளிகளுக்கு ரூ.2,691 கோடி நிதியை பிரதமர் மோடி வழங்கினார்.
  • பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதி திட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டுஜூன் 1, 2015
  • இத்திட்டத்தின் கீழ் ஏழை மக்களுக்கு வீடுகள் கட்டி தரப்படுகின்றன.
  • பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித் திட்டத்துடன் சேர்த்து சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் உஜ்வலா திட்டம், மின்சார இணைப்பு வழங்கும் சௌபாக்யா திட்டம், குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் ஜல் ஜீவன் திட்டம் ஆகியவையும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

Students can download the Daily TNPSC Current Affairs in English & Tamil as PDF from the links given below – TNPSC daily Current Affairs – English & Tamil – January 21, 2021. 


Download TNPSC Daily Current Affairs – PDF
21st January 2020 Download Link

Check TNPSC – Daily Current Affairs – January Month in TAMIL & English from bankersdaily from the links below. 


Read – TNPSC Daily Current Affairs – January 2021