TNPSC Current Affairs – English & Tamil – January 29, 2021

TNPSC Aspirants,

The current Affairs Section is one of the most important topics for the upcoming TNPSC Group I, Group II/IIA, Group IV, and TNUSRB Exams.

Check today’s TNPSC Daily Current Affairs(29th January 2020) in this post.

Aspirants can expect questions from the Daily Current Affairs section in the upcoming TNPSC Exams and learning the Current Affairs section will also aid them in successfully preparing for the descriptive paper. So this process is a 2 in 1 initiative.

To make the learning more convenient, we will be providing the TNPSC Daily Current Affairs in both ENGLISH & TAMIL. This has been made in such a way that reflects the TNPSC pattern as TNPSC uses both the languages in the Question Paper and this will also make the preparations of the aspirants meaningful and will 100% fulfill the needs of the aspirants.


Download PDF – TNPSC Daily Current Affairs – English & Tamil – January 29, 2021


Download_TNPSC_Daily_CUrrent_Affairs_PDF_7th_January_2021


  1. President’s Address
  • 18 Opposition party leaders signed to boycott President’s Address.
  • They said that it is in response to the “undemocratic attitude” of the government toward farmers protest.

President’s Address

  • On first day of Budget session, President will address the Joint sitting of the Parliament.
  • Article 87– President shall address the first session after general election and first session of each year.
  • Originally, Constitution had the provision of President addressing the Parliament at the beginning of “every session”.
  • But this was changed in the first Constitutional Amendment.
  • President’s Address provides broad framework for government’s agenda.
  • The address is then discussed by moving a Motion of thanks usually for three days.
  • At the end of discussion, the Motion of thanks is put to vote.
  • Motion of thanks must be passed in the house otherwise it means the defeat of the government.
  1. குடியரசுத் தலைவர் உரை  
  • குடியரசுத் தலைவர் உரையை புறக்கணிக்க 18 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கையெழுத்திட்டனர். 
  • விவசாயிகள் போராட்டம் குறித்த அரசின் ஜனநாயகத்திற்கு விரோதமான போக்கிற்கு பதில் அளிக்கவேண்டும் என்று அவர்கள் கூறினர்.

குடியரசுத் தலைவர் உரை

  • வரவு செலவுத் திட்ட அமர்வின் முதல் நாளன்று பாராளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரையாற்றுவார்.
  • விதி 87– குடியரசுத் தலைவர் பொதுத் தேர்தலுக்குப் பின்னர் வரும் முதலாவது அமர்வு மற்றும் ஒவ்வொரு வருடத்தின் முதலாவது அமர்விலும் உரையாற்றுவார்.
  • ஆரம்பத்தில், “ஒவ்வொரு கூட்டத்தொடரின்” தொடக்கத்திலும் பாராளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரையாற்றும் வழக்கம் அரசியலமைப்பில் இருந்தது.
  • ஆனால், முதல் அரசியலமைப்பு திருத்தத்தில் இது மாற்றப்பட்டுள்ளது.
  • குடியரசுத் தலைவர் உரை அரசாங்கத்தின் நோக்கங்களுக்கான பரந்த கட்டமைப்பை வழங்குகிறது.
  • அதன் பிறகு மூன்று நாட்கள் நன்றி தீர்மானம் மூலம் இந்த உரை விவாதிக்கப்படுகிறது.
  • விவாதத்தின் முடிவில் நன்றி தீர்மானம் வாக்கெடுப்புக்கு உட்படுத்தப்படுகிறது.
  • நன்றி தீர்மானம் சபையில் நிறைவேற்றப்பட வேண்டும் இல்லையெனில் அது அரசாங்கத்தை தோற்கடிப்பது என்று பொருள்படும்.

  1. e-Bikes
  • Chief Minister Edappadi Palanisamy launched e-bikes and next generation bikes to facilitate non-motorised transport in Chennai.
  • This has been implemented under Smart City Mission.
  • There are three types of bikes in Chennai – eco-bike, e-bike and next gen bike.
  • It can be hired through Smartbikes App.
  • Payment is only on online mode.
  1. இ-பைக்குகள் (மின்-பைக்குகள்)
  • சென்னையில் மோட்டார் இல்லாப் போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இ-பைக்குகள் (மின்-பைக்குகள்) மற்றும் அடுத்த தலைமுறை பைக்குகளை அறிமுகப்படுத்தினார்.  
  • ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
  • சென்னையில் மூன்று வகையான பைக்குகள் உள்ளன – ஈகோ-பைக், இ-பைக்  மற்றும் அடுத்த தலைமுறை பைக்குகள்.
  • ஸ்மார்ட்பைக்ஸ் செயலி மூலம் இதை வாடகைக்கு எடுக்கலாம்.
  • இணைய வழியில் மட்டுமே   கட்டணம் செலுத்த முடியும்.

  1. Appointment on compassionate grounds
  • Madurai High Court observed that appointment on compassionate grounds in public employment violates Article 16 of the constitution.
  • Article 16 – Equality in opportunity in matters of public employment.
  • Madurai High Court observed that compassion ground is to get over the immediate financial crisis.
  • Petition should be filed within 3 years of the death of the deceased.
  1. கருணை அடிப்படையில் பணி நியமனம்
  • அரசு வேலைவாய்ப்பில் கருணை அடிப்படையில் நியமனம் என்பது அரசியல் சட்டத்தின் 16வது விதியை மீறுவதாகும் என மதுரை உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
  • விதி 16 – பொது வேலை விஷயங்களில் சம வாய்ப்பு.
  • உடனடி நிதி நெருக்கடியைத் தீர்க்கவே கருணைக்களம் கொடுக்கப்பட்டுள்ளது என்று மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
  • இறந்தவரின் மரணத்திற்கு பின் 3 ஆண்டுகளுக்குள் இதற்கான மனு தாக்கல் செய்யப்பட வேண்டும்.

  1. Economic Survey
  • Economic Survey is prepared by the Chief Economic Advisor. K.V Subramanian.
  • The Budget will be presented on February 1, 2021.
  • Generally, the Economic Survey is presented a day before the Budget, but this year it will be presented earlier than usual.
  • Economic Survey provides a review of the economy of the current financial year and forecasts a path for the next year.
  • It will also project India’s GDP growth for FY 22.
  • As the Budget session has gone paperless this year, all the documents, including the Economic Survey, it would be made available online soon after the authenticated copies are laid on the Table of the House.
  • Since 1950-51 to 1964, it was used to be presented along with the Union Budget.
  • From 1964, the Ministry started to release the survey a day before Budget.
  • In 2019, the entire Economic Survey was printed in pink, carrying a message for women empowerment and gender equality.
  • In 2020, the theme was wealth creation and KV Subramanian’s ‘Thalinomics.
  1. பொருளாதார ஆய்வறிக்கை
  • பொருளாதார ஆய்வறிக்கையை தலைமை பொருளாதார ஆலோசகர் கே.வி.சுப்பிரமணியன் தயாரித்துள்ளார்.
  • 2021 ம் ஆண்டு பிப்ரவரி 1ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
  • பொதுவாக, பொருளாதார ஆய்வறிக்கை பட்ஜெட்டுக்கு ஒரு நாள் முன்னதாக தாக்கல் செய்யப்படுகிறது, ஆனால் இந்த ஆண்டு அது வழக்கத்தை விட முன்னதாகவே தாக்கல் செய்யப்படுகிறது.
  • பொருளாதார ஆய்வறிக்கை நடப்பு நிதியாண்டின் பொருளாதாரத்தின் மறுஆய்வு மற்றும் அடுத்த ஆண்டுக்கான நிதி பாதையை முன்னறிவிக்கிறது.
  • மேலும், 2022-வது நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி எவ்வளவு இருக்கும் என்றும் அது கணிக்கிறது.
  • இந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத் தொடர் காகிதமின்றி நடத்தப்படும் நிலையில், பொருளாதார ஆய்வறிக்கை உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும், அவையில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் இணையத்தில் கிடைக்கும்.
  • 1950-51 முதல் 1964 வரை இது மத்திய பட்ஜெட்டுடன் சேர்த்து தாக்கல் செய்யப்பட்டது.
  • 1964 ஆம் ஆண்டு முதல், பட்ஜெட்டுக்கு ஒரு நாள் முன்னதாகவே அமைச்சகம் இந்த ஆய்வை வெளியிடத் தொடங்கியது.
  • 2019 இல், முழு பொருளாதார கணக்கெடுப்பும் இளஞ்சிவப்பு நிறத்தில் அச்சிடப்பட்டது, அதன் கருப்பொருள் “பெண்கள் அதிகாரம் மற்றும் பாலின சமத்துவம்” ஆகும்.
  • 2020-ல் செல்வக் குவிப்பு, கே.வி.சுப்பிரமணியனின் ‘தாலியனாமிக்ஸ்’ ஆகியவை கருப்பொருளாக இருந்தன.

  1. Door delivery of diesel
  • Door delivery of diesel has been started a year ago.
  • Now many startups are showing interest in this field.
  • They will be supplying to the commercial units.
  1. டீசல் நேரடி விநியோகம்
  • ஒரு வருடத்திற்கு முன், நேரடி விநியோகம் செய்யும் பணி துவங்கியது.
  • இப்போது பல தொடக்க நிறுவனங்கள் (Startups) இந்த துறையில் ஆர்வம் காட்டுகின்றன.
  • அவை வணிக நிறுவனங்களுக்கு விநியோகம் செய்யப்படும்.

  1. “By Many a happy accident”

 

  • It is the autobiography of Hamid Ansari, former Vice President of India.

 

  • He had noted many important incidents during his tenure including unexpected visit of Prime Minister.
  • He has explained his dissatisfaction over the subvertion of the core values of Constitution in the book.
  1. “பை மெனி அ ஹாப்பி ஆக்சிடென்ட்” (By Many a happy accident)
  • இது முன்னாள் இந்திய துணை குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரியின்  சுயசரிதையாகும்.
  • அவர் தனது பதவிக் காலத்தில் எதிர்பாராத பிரதமர் வருகை உள்ளிட்ட பல முக்கிய நிகழ்வுகளை இதில் குறிப்பிட்டுள்ளார்.
  • அவர் இந்நூலில் அரசியல் சாசனத்தின் முக்கிய விழுமியங்களின் ஒடுக்குதலைப் பற்றிய தனது அதிருப்தியை விளக்கியுள்ளார்.

  1. Best tableau award
  • Uttar Pradesh receives best tableau award among 32 tableaux from States, Union Territories and Ministries.
  • Theme: Ayodhya, Cultural heritage of Uttar Pradesh.
  • Top three places
  1. Uttar Pradesh
  2. Tripura
  3. Uttrakhand
  • Kiren Rijiju, Minister of Sports and Youth Affairs gave away the awards to participants.
  1. சிறந்த அலங்கார ஊர்தி விருது
  • மாநிலம், யூனியன் பிரதேசங்கள் மற்றும் அமைச்சகங்களின் 32 அலங்கார ஊர்திகளில் உத்தரப்பிரதேசம் சிறந்த அலங்கார ஊர்தி விருதப் பெறுகிறது.
  • கருப்பொருள்: அயோத்தி, உத்தரப் பிரதேச கலாச்சார பாரம்பரியம்.
  • முதல் மூன்று இடங்கள்
  1. உத்திரப் பிரதேசம்
  2. திரிபுரா
  3. உத்திரகாண்ட்
  • விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, போட்டிகளில் கலந்து கொண்டோருக்கு விருதுகளை வழங்கினார்.

  1. Three private colleges were brought under Tamil Nadu Health Department.
  1. Rajah Muthiah Medical College
  2. Rani Meyammai College of Nursing
  3. Rajah Muthiah Dental College and Hospital
  • This had been announced in FY-2021 budget by Deputy Chief Minister.
  • These will be affiliated to MGR Medical University.
  1. தமிழ்நாடு சுகாதாரத் துறையின் கீழ் மூன்று தனியார் கல்லூரிகள் கொண்டு வரப்பட்டன.
  1. ராஜா முத்தையா  மருத்துவக் கல்லூரி
  2. ராணி மெய்யம்மை  செவிலியர் கல்லூரி
  3. ராஜா முத்தையா  பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை
  • 2021-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் துணை முதல்வர் இதை அறிவித்தார்.
  • இவை எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட உள்ளன.

  1. Namma Chennai Selfie Point
  • CM launched the selfie point on 28/1/2021 in Chennai.
  • It has been modelled on the structures at Delhi, Hyderabad and Bengaluru.
  • It has been built under Smart Cities Mission.
  • It is 28 ft width, 10 ft height and 2 ft thick.
  • This is the the first one in Tamil Nadu and fourth in  the country.
  • It has been designed to withstand any cyclone and weight of 2.5 tonnes.
  1. நம்ம சென்னை சுயபட மேடை
  • சென்னையில் 28-1-2021 அன்று முதல்வர் சுயபட மேடை ஒன்றை திறந்து வைத்தார்.
  • டெல்லி, ஹைதராபாத் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களில் உள்ள கட்டமைப்புகளின் மாதிரியில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • ஸ்மார்ட் சிட்டி மிஷனின் கீழ் இது கட்டப்பட்டுள்ளது.
  • இது 28 அடி அகலம், 10 அடி உயரம் மற்றும் 2 அடி தடிமனானது.
  • இது தமிழ்நாட்டில் முதல் மற்றும் இந்தியாவில் நான்காவது ஒன்றாகும்.
  • இது எந்த சூறாவளியையும் மற்றும் 2.5 டன் எடை தாங்கும் திறனும் கொண்டது.

  1. COVID-19 Performance Index
  • It has been released by Lowy Institute, an Australian think tank.
  • It assessed the impact of geographical, polital and economic developments in assessing the outcome.
  • China was not included due to lack of public data.
  • It assessed 98 countries.
  1. New Zealand
  2. Vietnam
  3. Taiwan
  4. Thailand
  5. Cyprus

were ranked as the best performing countries.

Neighbours of India

  • Sri Lanka -10 – The best among South Asia.
  • Maldives – 25
  • Pakistan  – 69
  • Nepal – 70
  • Bangladesh – 84
  • India – 86
  • U.S – 94
  • Brazil – 98
  1. கோவிட்-19 (COVID-19) செயல்திறன் குறியீடு
  • இது லௌலி நிறுவனம் என்ற ஒரு ஆஸ்திரேலிய சிந்தனைக் குழுவால் வெளியிடப்பட்டது.
  • இது விளைவுகளை மதிப்பிடுவதில் புவியியல், அரசியல் மற்றும் பொருளாதார வளர்ச்சிகளின் தாக்கத்தை மதிப்பீடு செய்துள்ளது.
  • பொது தகவல் இல்லாததால் சீனா சேர்க்கப்படவில்லை.
  • 98 நாடுகளை அது மதிப்பிட்டது.
  1. நியூசிலாந்து
  2. வியட்நாம்
  3. தைவான்
  4. தாய்லாந்து
  5. சைப்பிரஸ்

        சிறப்பாக பங்காற்றிய நாடுகளாக மதிப்பிடப்பட்டன.

இந்தியாவின் அண்டை நாடுகள்

  • இலங்கை -10  –  தென்ஆசியாவில் சிறந்த நாடு.
  • மாலத்தீவு – 25
  • பாகிஸ்தான்  – 69
  • நேபாளம் – 70
  • வங்காளதேசம் – 84
  • இந்தியா – 86
  • அமெரிக்கா – 94
  • பிரேசில் – 98

  1. First sitting of Supreme Court
  • January 29, 1950 marked the first sitting of Supreme Court.
  • First Chief Justice of India – Js. Sir Harilal Jekisundas Kania
  • First Attorney General – M.C.Stalvad
  • Current Chief Justice of India – Sharad A Bobde
  • Current Attorney General – K.K.Venugopal
  1. உச்ச நீதிமன்றத்தின் முதல் அமர்வு
  • 1950 ஜனவரி 29 ஆம் நாள் உச்ச நீதிமன்றத்தின் முதல் அமர்வு நடைபெற்றது.  
  • முதல் தலைமை நீதிபதி –  ஜே.எஸ். சர்.ஹரிலால் ஜெகிசுன்தாஸ் கானியா
  • முதல் அட்டர்னி ஜெனரல் –  எம்.சி.ஸ்டால்வாட்
  • தற்போதைய தலைமை நீதிபதி – ஷரத் ஏ பாப்டே
  • தற்போதைய சட்டமா அதிபர் –  கே.கே.வேணுகோபால் 

  1. Opening of Jayalalithaa’s Veda House
  • The Veda Nilayam memorial at Poes Garden, where former Chief Minister Jayalalithaa lived, was inaugurated on January 28.
  • Chief Minister Edappadi Palaniswami has said that Jayalalitha’s birthday will be celebrated as a government function on February 24.
  • The name plate of the state-owned Vedic Center where Jayalalithaa lived – the memorial house – was placed in the main entrance area of ​​the house. 
  1. ஜெயலலிதாவின் வேதா இல்லம் திறப்பு
  • மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா நிலையம் நினைவு இல்லமாக ஜனவரி 28 திறந்து வைக்கப்பட்டது.
  • ஜெயலலிதாவின் பிறந்த தினம் பிப்ரவரி 24 அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
  • வீட்டின் பிரதான வாயில் பகுதியில் ‘ஜெயலலிதா வாழ்ந்த அரசுடைமையாக்கப்பட்ட வேத நிலையம் – நினைவு இல்லம்’ என்ற பெயர்ப் பலகை வைக்கப்பட்டிருந்தது.

  1. Tamil Studies Festival
  • The World Tamil Research Institute Taramani in Chennai will celebrate the Birth anniversary of Jayalalithaa from February 1 to March 8 as ‘Tamil Thai 73 – Tamil Studies Festival’.
  • Deputy Chief Minister O. Panneerselvam will be present and deliver the golden jubilee anniversary.
  • This was followed by the Minister of Tamil Development K. Pandiarajan will deliver a special address.
  1. தமிழாய்வுப் பெருவிழா
  • சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஜெயலலிதாவின் பிறந்த தினம் ‘தமிழ்த்தாய் 73 – தமிழாய்வுப் பெருவிழா’வாக பிப்ரவரி 1 – ஆம் தேதி முதல் மார்ச் 8 – ஆம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது.
  • இந்த தொடக்க விழாவில் சிறப்பு அழைப்பாளராக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பொன்விழா ஆண்டு மலரை வெளியிட்டு தொடக்கவுரையாற்றவுள்ளார்.
  • இதை தொடர்ந்து தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் சிறப்புரையாற்றவுள்ளார்.

  1. Satellite Control Centre at College
  • The nano-satellite developed by students of Jeppiaar College of Technology will be launched from Sriharikota in month of February.
  • For this purpose, ISRO Chairman K Sivan inaugurated the Ground Station Control Centre set up at the college campus through video conferencing on January 28.
  • Jeppiaar College is functioning at Sriperumbudur in Kancheepuram District.
  • The Unit D SAT-JITSAT, a satellite developed by a 12-member team of students of the college, will be launched from the Sriharikota Space Research Institute in February.  
  1. கல்லூரியில் செயற்கைகோள் கட்டுப்பாட்டு மையம்
  • ஜேப்பியார் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய நானோ செயற்கைகோள் பிப்ரவரி மாதம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
  • இதற்காக கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தரை தள கட்டுப்பாட்டு மையத்தை இஸ்ரோ தலைவர் கே சிவன் ஜனவரி 28 அன்று காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.
  • காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் ஜேப்பியார் கல்லூரி இயங்கி வருகிறது.
  • இக்கல்லூரி மாணவர்கள் 12 பேர் அடங்கிய குழுவினர் உருவாக்கிய யுனிட் டிசாட் – ஜேஐடிசாட் என்ற செயற்கை கோள் பிப்ரவரி மாதம் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

  1. Bronze statue of Tirumala Nayak
  • The birth anniversary of King Tirumala Nayak who built Madurai city is celebrated as a state function at the palace complex he created.
  • The statue was erected during the era of former Chief Minister MGR.
  • They have demanded that it be converted into a bronze statue.
  • As the state holiday has been declared for Thaipusam since this year, the birthday of Tirumala Nayak will no longer be observed with the holiday.
  1. திருமலை நாயக்கருக்கு முழுஉருவ வெண்கலச் சிலை
  • மதுரை நகரை நிர்மாணித்த மன்னர் திருமலை நாயக்கரின் பிறந்த நாள் விழா அவர் உருவாக்கிய அரண்மனை வாளகத்தில் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது.
  • முன்னாள் முதல்வர் எம் ஜி ஆர் காலத்தில் திருமலை நாயக்கருக்கு சிலை அமைக்கப்பட்டது. 
  • அதை வெண்கலச் சிலையாக மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். 
  • நிகழாண்டு முதல் தைப்பூசத்துக்கு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், திருமலை நாயக்கரின் பிறந்த நாள் விழா இனி விடுமுறையோடு அனுசரிக்கப்படும்.

  1. Rajah Muthiah Medical College handed over to Health Department
  • The Welfare Department has issued orders to convert Chidambaram Rajah Muthiah Medical College into Cuddalore District Government Medical College.
  • This medical college has been brought under the control of The Health Department of Tamil Nadu.
  1. சுகாதாரக் துறையின் கீழ் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி
  • சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியாக மாற்றி மக்கள் நல் வாழ்வுத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
  • இதன் மூலம் தமிழக சுகாதாரத் துறையின் கீழ் இந்த மருத்துவக் கல்லூரி கொண்டுவரப்பட்டுள்ளது.

  1. Jayalalitha temple opens near Madurai
  • The Chief Minister and Deputy Chief Minister of Tamil Nadu are scheduled to inaugurate the late Chief Minister Jayalalithaa Temple at T. Kunnathur near Thirumangalam in Madurai District on January 30.
  • Cars will be gifted at the festival at Alanganallur Jallikattu to the player who has the most bulls and the best bull owner.
  • All training and counseling will be provided at the Jayalalithaa Temple Campus for the Competitive Exam Training Class, Mentoring Center for Alternative Skills and Individual Trainings for Students.
  1. மதுரை அருகே ஜெயலலிதா கோயில் திறப்பு
  • மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள டி.குன்னத்தூரில் கட்டப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கோயிலை தமிழக முதல்வரும் துணை முதல்வரும் ஜனவரி 30 அன்று திறந்து வைக்க உள்ளனர்.
  • விழாவில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் அதிக காளைகளைப் பிடித்த வீரருக்கும், சிறந்த காளை உரிமையாளருக்கும் கார்களை பரிசாக வழங்க உள்ளனர்.
  • ஜெயலலிதா கோயில் வளாகத்தில் போட்டித் தேர்வுக்கானப் பயிற்சி வகுப்பு, மாற்றுத் திறனாளிகளுக்கான வழிகாட்டி மையம், மாணவ -மாணவிகளுக்கான தனித்துவ பயிற்சிகள் போன்ற அனைத்துப் பயிற்சிகளும் ஆலோசனைகளும் வழங்கப்படும்.

  1. 8 – point action plan to improve India-China relations
  • External Affairs Minister Jaishankar unveils 8-point policy to promote India-China relations.
  • Foreign Minister Jaishankar addressed the 13th All India Conference on China’s Border Studies on January 28
  1. இந்திய – சீனா உறவு மேம்பட 8 அம்ச திட்டம்
  • இந்தியா – சீனா இடையிலான உறவை மேம்படுத்த 8 அம்ச கொள்கைகளை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் வெளியிட்டார்.
  • சீன எல்லை ஆய்வுகள் தொடர்பான 13 – ஆவது அகில இந்திய மாநாட்டில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஜனவரி 28ல் கலந்து கொண்டு பேசினார்.

  1. Repco Bank Managing Director Women leader of the year Award
  • Repco Bank Managing Director R.S. Isabella has received the award for Best Female Leader.
  • The National Cooperative Bank Summit was held on 22nd and 23rd January.
  • Repco Bank was awarded the award under three categories.
  • Accordingly, R S Isabella, Managing Director, Repco Bank, has been awarded the Best Female President award.
  • Repco Bank has also won two more awards under the best digital banking and best initiatives to control fraud.
  1. ரெப்கோ வங்கியின் நிர்வாக இயக்குநருக்கு சிறந்த பெண் தலைவருக்கான விருது
  • ரெப்கோ வங்கியின் நிர்வாக இயக்குநர் ஆர்.எஸ். இஸபெல்லாவுக்கு சிறந்த பெண் தலைவருக்கான விருது கிடைத்துள்ளது.
  • தேசிய கூட்டுறவு வங்கிகளின் உச்சி மாநாடு ஜனவரி 22 மற்றும் 23 – ஆம் தேதிகளில் நடைபெற்றது.
  • இதில் ரெப்கோ வங்கிக்கு மூன்று பிரிவுகளின் கீழ் விருது வழங்கப்பட்டது.
  • அதன்படி ரெப்கோ வங்கியின் நிர்வாக இயக்குநர் ஆர் எஸ் இஸபெல்லாவுக்கு சிறந்த பெண் தலைவருக்கான விருது கிடைத்துள்ளது. 
  • இது தவிர சிறந்த டிஜிட்டல் வங்கி மற்றும் மோசடிகளை கட்டுப்படுத்துவதற்கு சிறந்த முறையில் முன்முயற்சிகளை மேற்கொண்டது ஆகிய பிரிவுகளின் கீழ் மேலும் இரண்டு விருதுகளை ரெப்கோ வங்கி பெற்றுள்ளது.

  1. Women’s Asia Cup football in India in January 2022 
  • The Asian Football Federation announced on January 28 that the Women’s Asia Cup football tournament will be held in India from January 20 to February 6, 2022.  
  • The tournament also offers an opportunity to qualify for the FIFA Women’s World Cup 2023.
  • India to host women’s Asia Cup football tournament in 2021 and will host the FIFA World Cup for women under 17 in 2022.
  1. இந்தியாவில் 2022 ஜனவரியில் மகளிர் ஆசிய கோப்பை கால்பந்து
  • மகளிருக்கான ஆசிய கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவில் 2022 ஜனவரி 20 முதல் பிப்ரவரி 6 வரை நடைபெறவுள்ளதாக ஆசிய கால்பந்து சம்மேளனம் ஜனவரி 28 அன்று அறிவித்தது.
  • மேலும் 2023-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஃபிஃபா மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பையும் இந்தப் போட்டி வழங்குகிறது.
  • 2021-இல் மகளிர் ஆசிய கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் இந்தியா, 2022-இல் 17 வயதுக்கு உள்பட்ட மகளிருக்கான ஃபிஃபா உலக கோப்பை போட்டியையும் நடத்தவுள்ளது.

Students can download the Daily TNPSC Current Affairs in English & Tamil as PDF from the links given below – TNPSC daily Current Affairs – English & Tamil – January 29, 2021. 


Download TNPSC Daily Current Affairs – PDF
29th January 2020 Download Link

Check TNPSC – Daily Current Affairs – January Month in TAMIL & English from bankersdaily from the links below. 


Read – TNPSC Daily Current Affairs – January 2021