TNPSC Current Affairs – English & Tamil – July 20, 2021

TNPSC Aspirants,

The Current Affairs Section is one of the most important topics for the upcoming TNPSC Group I, Group II/IIA, Group IV, and TNUSRB Exams.

Check today’s TNPSC Daily Current Affairs (July 20, 2021) in this post.

Aspirants can expect questions from the Daily Current Affairs section in the upcoming TNPSC Exams and learning the Current Affairs section will also aid them in successfully preparing for the descriptive paper. So this process is a 2 in 1 initiative.

To make the learning more convenient, we will be providing the TNPSC Daily Current Affairs in both ENGLISH & TAMIL. This has been made in such a way that reflects the TNPSC pattern as TNPSC uses both the languages in the Question Paper and this will also make the preparations of the aspirants meaningful and will 100% fulfill the needs of the aspirants.


Download PDF – TNPSC Daily Current Affairs – English & Tamil – July 20, 2021


TAMIL NADU


1. India’s first mobile medical vehicle ‘Neyam’ has been launched at Thiruvallur

  • India’s first mobile medical vehicle ‘Neyam’ was launched at Thiruvallur to treat patients who were unable to move at their home. It was inaugurated by Tamil Nadu Dairy Minister M. Naser.

 

1. இந்தியாவின் முதல் நடமாடும் மருத்துவ வாகனமானநேயம்திருவள்ளூரில் தொடங்கப்பட்டுள்ளது

  • நடமாட முடியாமல் முடங்கிய இருக்கும் நோயாளிகளின் வீடுகளுக்கே சென்று சிகிச்சை அளிக்கும் இந்தியாவின் முதல் நடமாடும் மருத்துவ வாகனமானநேயம் திருவள்ளூரில் தொடங்கப்பட்டது. இதை தமிழ்நாடு பால்வளத் துறை அமைச்சா் சா. மு. நாசா் தொடக்கி வைத்தாா்.

SCIENCE AND TECHNOLOGY


2. Scientists develop indigenous cheap 3D robotic motion phantom that can reproduce human lung motion

  • Scientists of IIT-Kanpur and Sanjay Gandhi Postgraduate Institute of Medical Sciences (SGPGIMS), Lucknow have developed a novel and cheap 3D robotic motion phantom that can reproduce human lung motion. It will help to deliver focused radiation in cancer patients. This is the first time in India for manufacturing this type of robotic phantoms, and its program can be changed to produce different types of lung motion.
  • The technology developed with support from the Advanced Manufacturing Technologies program of the Department of Science & Technology (DST) of the Government of India.

 

2. விஞ்ஞானிகள் மனித நுரையீரல் இயக்கத்தை பிரதிபலிக்கும் உள்நாட்டு மலிவான முப்பரிமாண ரோபாட்டிக் இயக்க அமைப்பை உருவாக்கியுள்ளனர்

  • ஐஐடி-கான்பூர் மற்றும் லக்னோவின் சஞ்சய் காந்தி முதுகலை மருத்துவ அறிவியல் நிறுவனம் (SGPGIMS), விஞ்ஞானிகள் மனித நுரையீரல் இயக்கத்தை பிரதிபலிக்கும் ஒரு புதுமையான மற்றும் மலிவான முப்பரிமாண ரோபாட்டிக் இயக்க அமைப்பை உருவாக்கியுள்ளனர். இது புற்றுநோய் நோயாளிகளுக்கு குவிய கதிர்வீச்சை வழங்க உதவும். இந்த வகை ரோபாட்டிக் அமைப்புகளை உற்பத்தி செய்வது இந்தியாவில் இதுவே முதல் முறையாகும். மேலும் அதில் பல்வேறு வகையான நுரையீரல் இயக்கத்தை உருவாக்க கட்டளைகளை மாற்ற இயலும்.
  • மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் மேம்பட்ட உற்பத்தி தொழில்நுட்பத் திட்டத்தின் ஆதரவுடன் இந்த தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டது.

ECONOMY


3. India emerges as the 5th largest foreign exchange reserves holder in the world

  • India emerged as the 5th largest foreign exchange reserves holder in the world $ 608.99 billion after China, Japan, Switzerland and Russia.
  • In 2020-21, India’s balance of payments recorded a surplus in both current account and capital account which contributed to the increase in foreign exchange reserves during the year.

 

3. அந்நியச் செலாவணி கையிருப்பில் உலகின் 5வது பெரிய நாடாக இந்தியா உள்ளது

  • அந்நியச் செலாவணி கையிருப்பில் சீனா, ஜப்பான், சுவிட்சர்லாந்து மற்றும் ரஷ்யாவை அடுத்து உலகின் 5வது பெரிய நாடாக 99 பில்லியன் டாலர்களுடன் இந்தியா உள்ளது.
  • 2020-21ஆம் ஆண்டில், இந்தியாவின் கொடுப்பனவு இருப்பு நடப்புக் கணக்கு மற்றும் மூலதனக் கணக்கு இரண்டிலும் உபரியைப் பதிவு செய்தது, இது இந்த ஆண்டில் அந்நியச் செலாவணி இருப்பின் அதிகரிப்புக்கு காரணமானது.

4. First-ever elections of Balika Panchayat successfully held at Kunariya village of Gujarat

  • The Kunariya village of Gujarat has held a unique first-ever Balika Panchayat Young females aged between 10 to 21 years contested in the elections.
  • It aims to develop leadership qualities in the girls for Future Panchayat polls. This Panchayat will be run by the girls and for the girls. It will take up issues of adolescent girls and women in the village.
  • 20-year-old Bharti Garva was elected as the first-ever sarpanch of Balika panchayat.

 

4. குஜராத்தின் குனாரியா கிராமத்தில் முதல் முறையாக பாலிகா பஞ்சாயத்து தேர்தல் வெற்றிகரமாக நடைபெற்றது

  • குஜராத்தின் குனாரியா கிராமம் ஒரு தனித்துவமான முதல் பாலிகா பஞ்சாயத்து தேர்தலை நடத்தியுள்ளது. 10 முதல் 21 வயதிற்குட்பட்ட இளம் பெண்கள் இத்தேர்தலில் போட்டியிட்டனர்.
  • எதிர்கால பஞ்சாயத்து தேர்தலுக்காக பெண்களில் தலைமைப் பண்புகளை வளர்ப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த ஊராட்சியை இளம் பெண்கள், இளம் பெண்களுக்காக நடத்துவார்கள். இது கிராமத்தில் உள்ள இளம் பெண்கள் மற்றும் பெண்கள் தொடர்பான பிரச்சினைகளை முன்னெடுக்கும்.
  • 20 வயதான பார்தி கர்வா பாலிகா பஞ்சாயத்துக்கு முதல் முறையாக சர்பஞ்சாக (பஞ்சாயத்து தலைவர்) தேர்ந்தெடுக்கப்பட்டார்.

NATIONAL


5. Union Government to set up a world-class ‘Indian Institute of Heritage’ at Noida

  • Union Government plans to set up a world-class ‘Indian Institute of Heritage’ at Noida, Gautam Buddha Nagar to focus on conservation and research in India’s rich tangible heritage. This would be a standalone Institution of its type in the country. This will impact higher education and research in the field related to rich Indian heritage and its conservation.

 

5. மத்திய அரசு நொய்டாவில் உலகத்தரம் வாய்ந்த ‘இந்திய பாரம்பரிய நிறுவனத்தை’ அமைக்கவுள்ளது

  • இந்தியாவின் வளமான உறுதியான பாரம்பரியத்தின் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சியில் கவனம் செலுத்துவதற்காக நொய்டாவில் உள்ள கவுதம் புத்தர் நகரில் உலகத்தரம் வாய்ந்த ‘இந்திய பாரம்பரிய நிறுவனத்தை’ அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது நாட்டில் அதன் வகையின் ஒரு தனித்துவமான நிறுவனமாக இருக்கும். இது வளமான இந்திய பாரம்பரியம் மற்றும் அதன் பாதுகாப்பு தொடர்பான துறையில் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சியை மேம்படுத்தும்.

6. Indian Railways introduces ‘Tejas smart coaches’ in Rajdhani express

  • Indian Railways introduced ‘Tejas smart coaches’ in Mumbai Rajdhani express of western railways with intelligent sensor-based systems.
  • It aims to move to predictive maintenance instead of preventive maintenance.

 

6. இந்திய ரயில்வே ராஜ்தானி எக்ஸ்பிரஸில் ‘தேஜாஸ் ஸ்மார்ட் பெட்டிகளை’ அறிமுகம் செய்துள்ளது

  • புத்திசாலித்தனமான சென்சார் அடிப்படையிலான அமைப்புகளைக் கொண்ட மேற்கு ரயில்வேயின் மும்பை ராஜ்தானி எக்ஸ்பிரஸில் இந்திய ரயில்வே ‘தேஜாஸ் ஸ்மார்ட் பெட்டிகளை’ அறிமுகப்படுத்தியது.
  • இது தடுப்பு பராமரிப்புக்கு பதிலாக முன்கணிப்பு பராமரிப்புக்கு மாறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

INTERNATIONAL


7. Russia successfully tests the state-of-the-art ‘Zircon’ (Tsirkon) Hypersonic missile

  • Russia successfully tested the state-of-the-art Hypersonic missile ‘Zircon’ (Tsirkon) which is 9 times faster than sound in the White Sea. The missile’s range is 1000 km.

 

7. அதிநவீனஷிா்கான்ஹைபா்சானிக் ஏவுகணையை ரஷ்யா வெற்றிகரமாக பரிசோதித்தது

  • ஒலியைவிட 9 மடங்கு வேகத்தில் செல்லும் ஷிா்கான் அதிநவீன ஹைபா்சானிக் ஏவுகணையை ரஷ்யா வெண் கடலில் வெற்றிகரமாக பரிசோதித்தது. இந்த ஏவுகணை 1000 கி.மீ. தொலைவு சென்று இலக்கைத் தாக்கும் திறன் கொண்டது.

8. Vaidehi Dongre was crowned as the Miss India USA 2021

  • 25-year-old Vaidehi Dongre of Michigan was crowned as the ‘Miss India USA 2021’ and Arshi Lalani of Georgia was declared the first runner up.
  • Vaidehi Dongre also won the ‘Miss Talented’ award for her performance of Kathak.
  • Miss India USA is the longest-running Indian pageant outside India.

 

8. வைதேகி டோங்ரே மிஸ் இந்தியா அமெரிக்கா 2021ஆக முடிசூட்டப்பட்டார்

  • மிச்சிகனைச் சேர்ந்த 25 வயதான வைதேகி டோங்ரே ‘மிஸ் இந்தியா அமெரிக்கா 2021’ஆக முடிசூட்டப்பட்டார். ஜார்ஜியாவைச் சேர்ந்த அர்ஷி லாலானி முதல் ரன்னர் அப் ஆக அறிவிக்கப்பட்டார்.
  • பிழையின்றி கதக் நடனம் ஆடியதற்காக வைதேகி டோங்ரே ‘மிஸ் டேலண்ட்’ விருதையும் வென்றார்.
  • மிஸ் இந்தியா அமெரிக்கா, இந்தியாவுக்கு வெளியே நீண்ட காலமாக நடக்கும் இந்திய போட்டியாகும்.

APPOINTMENTS


9. Mukhtar Abbas Naqvi was appointed as the Deputy Leader of House in Rajya Sabha

  • Union Minority Affairs Minister Mukhtar Abbas Naqvi has been appointed as the Deputy Leader of the House in the Rajya Sabha. He has succeeded Commerce and Industry Minister Piyush Goyal, who has now taken over as the Leader of House in the Rajya Sabha.

 

9. முக்தார் அப்பாஸ் நக்வி மாநிலங்களவை துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்

  • மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி மாநிலங்களவையில் அவைத் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். அவர் வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயலைத் தொடர்ந்து பதவிக்கு வந்துள்ளார். பியூஷ் கோயல் இப்போது மாநிலங்களவையில் அவைத் தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.

AWARDS AND RECOGNITIONS


10. Union Government announces the launch of ‘National Logistics Excellence Awards’

  • Union Government announced the launch of the ‘National Logistics Excellence Awards’ for the logistics sector.
  • The Awards will give due recognition to various players involved in the logistics supply chain. The awards are in two categories, the first group includes logistics infrastructure and service providers and the second one is for various user industries. The awards will highlight best practices including consolidation, process standardisation, technological upgrade, digital transformations, and sustainable practices.

 

10. மத்திய அரசு ‘தேசிய தளவாட சிறப்பு விருதுகளை’ அறிமுகப்படுத்தியுள்ளது

  • தளவாடங்கள் துறைக்கான ‘தேசிய தளவாட சிறப்பு விருதுகளை’ அறிமுகப்படுத்துவதாக மத்திய அரசு அறிவித்தது.
  • இந்த விருதுகள் தளவாட விநியோக சங்கிலியில் ஈடுபட்டுள்ள பல்வேறு பங்குதாரர்களுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்கும். இவ்விருதுகள் இரண்டு பிரிவுகளில் உள்ளன. முதல் குழு தளவாட உள்கட்டமைப்பு மற்றும் சேவை வழங்குநர்கள் மற்றும் இரண்டாவது குழு பல்வேறு பயனர் தொழில்களுக்கானது ஆகும். ஒருங்கிணைப்பு, செயல்முறை தரப்படுத்தல், தொழில்நுட்ப மேம்பாடு, டிஜிட்டல் மாற்றங்கள் மற்றும் நிலையான நடைமுறைகள் உள்ளிட்ட சிறந்த நடைமுறைகளை இந்த விருதுகள் வழங்கப்படும்.

SPORTS


11. Lewis Hamilton wins the British Grand Prix 2021

  • Lewis Hamilton won the British Grand Prix 2021, which is his eighth Grand Prix victory.

British Grand Prix

  • The British Grand Prix is a motor race organised in the United Kingdom by the Royal Automobile Club. It was first held in 1926. FIA Formula One World Championship is being held every year since 1950.

 

11. பிரிட்டிஷ் கிராண்ட் பிரிக்ஸ் 2021இல் லூயிஸ் ஹாமில்டன் வெற்றி பெற்றுள்ளார்

  • லூயிஸ் ஹாமில்டன் பிரிட்டிஷ் கிராண்ட் பிரிக்ஸ் 2021ஐ வென்றார். இது அவரது எட்டாவது கிராண்ட் பிரிக்ஸ் வெற்றியாகும்.

பிரிட்டிஷ் கிராண்ட் பிரிக்ஸ்

  • பிரிட்டிஷ் கிராண்ட் பிரிக்ஸ் என்பது ராயல் ஆட்டோமொபைல் கிளப்பால் லண்டனில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு மோட்டார் பந்தயமாகும். இது முதலில் 1926இல் நடைபெற்றது. எஃப்.ஐ.ஏ ஃபார்முலா ஒன் உலக சாம்பியன்ஷிப் 1950 முதல் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது.

12. Viswanathan Anand wins Sparkassen Trophy 2021

  • Viswanathan Anand defeated Vladimir Kramnik to win the Sparkassen Trophy 2021 at Dortmund. He made a draw in the final game of the No-Castling Chess event to win the trophy.

Sparkassen Trophy

  • The Dortmund Sparkassen Chess is an elite chess tournament held every summer in Dortmund, Germany. Dortmund is an invite-only event.

 

12. ஸ்பார்க்கசன் கோப்பை 2021இல் விஸ்வநாதன் ஆனந்த் வெற்றி பெற்றுள்ளார்

  • விஸ்வநாதன் ஆனந்த் விளாடிமிர் க்ரம்னிக்கை தோற்கடித்து டோர்ட்முண்டில் நடந்த ஸ்பார்க்கசன் கோப்பை 2021ஐ வென்றார். நோ-காஸ்ட்லிங் செஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தை சமன் செய்து அவர் இக்கோப்பையை வென்றார்.

ஸ்பார்க்கசன் கோப்பை

  • டோர்ட்மண்ட் ஸ்பார்க்கசன் சதுரங்கம் என்பது ஜெர்மனியின் டோர்ட்முண்டில் ஒவ்வொரு கோடையிலும் நடைபெறும் ஒரு உயரடுக்கு சதுரங்கப் போட்டியாகும். டோர்ட்மண்ட் ஒரு அழைப்பு-மட்டும் நிகழ்வு ஆகும்.

13. Indian Grandmaster Praggnanandhaa wins Gabriel Sargissian in the FIDE chess World Cup match

  • 15-year-old Indian Grandmaster R Praggnanandhaa of Tamil Nadu won 37-years -old Armenian Grandmaster Gabriel Sargissian in the first game of the two-game mini-match in the second round of the FIDE chess World Cup.

 

13. பி.ஐ.டி.இ. உலகக் கோப்பை சதுரங்க போட்டியில் கேப்ரியல் சர்கிசியன் வெற்றி பெற்றுள்ளார்

  • 15 வயதான இந்திய கிராண்ட்மாஸ்டர் ஆர் பிராக்னநந்தா 37 வயதான ஆர்மீனிய கிராண்ட்மாஸ்டர் கேப்ரியல் சர்கிசியனை பி.ஐ.டி.இ. (உலக சதுரங்க சம்மேளனம்) உலகக் கோப்பை சதுரங்க போட்டியின் இரண்டாவது சுற்றில் இரண்டு ஆட்டங்கள் கொண்ட மினி போட்டியின் முதல் ஆட்டத்தில் வென்றார்.

IMPORTANT DAYS


14. International Chess Day – 20 July

  • International Chess Day is celebrated on 20 July This day marks the foundation day of FIDE (World Chess Federation). Chess was invented in India in the fifth century. It was then named “Chaturanga”.
  • The UN General Assembly adopted the day as International Chess Day in

Chess:

  • Chess is a board game for two players. It is played on a square board, made of 64 smaller squares, with eight squares on each side.

 

14. சர்வதேச சதுரங்க தினம் – 20 ஜூலை

  • சர்வதேச சதுரங்க தினம் ஆண்டுதோறும் 20 ஜூலை அன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாள் பி.ஐ.டி.இ (உலக சதுரங்க சம்மேளனம்) தொடங்கப்பட்ட நாளைக் குறிக்கிறது. ஐந்தாம் நூற்றாண்டில் இந்தியாவில் சதுரங்கம் (செஸ்) கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு “சதுரங்கம்” என்று பெயரிடப்பட்டது.
  • ஐ.நா. பொதுச் சபை இந்த நாளை சர்வதேச சதுரங்க தினமாக 2019இல் ஏற்றுக்கொண்டது.

சதுரங்கம்:

  • சதுரங்கம் என்பது இரண்டு வீரர்களுக்கான பலகை விளையாட்டு ஆகும். இது ஒரு சதுர பலகையில் விளையாடப்படுகிறது. இதில் 64 சிறிய சதுரங்கள், ஒவ்வொரு பக்கத்திலும் எட்டு சதுரங்களுடன் இருக்கும்.

DAY IN HISTORY


15. Gregor Johann Mendel’s bicentenary Birth Anniversary– 20 July

  • Gregor Johann Mendel, known as the ‘Father of Genetics’, was born on 20 July 1821. His bicentenary birth anniversary is celebrated this year.
  • He did his research on pea plants. In 1866, he published his first article entitled “Experiments on Plant Hybrids”.
  • He chose 7 types of characters for his experiment. He found in his research that that quality is hidden in the first generation expressed in the second generation.

 

15. கிரிகோர் ஜோஹன் மெண்டல் இருநூறாமாண்டு பிறந்தநாள் – 20 ஜூலை

  • மரபியலின் தந்தை என அறியப்படும் கிரிகோர் ஜோஹன் மெண்டல் 20 ஜூலை 1821 அன்று பிறந்தார். அவரது இருநூறாமாண்டு பிறந்தநாள் இந்த வருடம் கொண்டாடப்படுகிறது.
  • அவர் பட்டாணிச் செடிகளில் ஆராய்ச்சியை மேற்கொண்டார். 1866இல் தன்னுடைய முதல் கட்டுரையை தாவரக் கலப்பினங்கள் குறித்த பரிசோதனைகள்என்னும் தலைப்பில் வெளியிட்டார்.
  • அவற்றில் 7 விதமான இணைப் (ஜோடி) பண்புகளை தம்முடைய பரிசோதனைக்குத் தேர்வு செய்தார். அந்தப் பண்பு முதல் தலைமுறையில் அடங்கியிருந்து (மறைந்திருந்து) இரண்டாம் தலைமுறையில் வெளிபடுத்தப்படுகிறது என தனது ஆராய்ச்சியில் கண்டறிந்தார்.