TNPSC Current Affairs – English & Tamil – July 22, 2021

TNPSC Aspirants,

The Current Affairs Section is one of the most important topics for the upcoming TNPSC Group I, Group II/IIA, Group IV, and TNUSRB Exams.

Check today’s TNPSC Daily Current Affairs (July 22, 2021) in this post.

Aspirants can expect questions from the Daily Current Affairs section in the upcoming TNPSC Exams and learning the Current Affairs section will also aid them in successfully preparing for the descriptive paper. So this process is a 2 in 1 initiative.

To make the learning more convenient, we will be providing the TNPSC Daily Current Affairs in both ENGLISH & TAMIL. This has been made in such a way that reflects the TNPSC pattern as TNPSC uses both the languages in the Question Paper and this will also make the preparations of the aspirants meaningful and will 100% fulfill the needs of the aspirants.


Download PDF – TNPSC Daily Current Affairs – English & Tamil – July 22, 2021


SCIENCE AND TECHNOLOGY


1. DRDO successfully flight-tests new generation Akash Missile

  • Defence Research and Development Organisation (DRDO) successfully flight-tested the new generation Akash Missile, a surface-to-air missile from the the Integrated Test Range off the coast of Odisha. It has high manoeuvrability to neutralise aerial threats and boost the air defence capabilities of the Indian Air Force.

 

1. புதிய தலைமுறை ஆகாஷ் ஏவுகணையை டி.ஆர்.டி.ஓ வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளது

  • ஒடிசா கடற்கரையின் ஒருங்கிணைந்த சோதனைத் தளத்திலிருந்து தரையிலிருந்து வான்வழி ஏவுகணையான புதிய தலைமுறை ஆகாஷ் ஏவுகணையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ) வெற்றிகரமாக பரிசோதித்தது. வான்வழி அச்சுறுத்தல்களை அழிக்கவும், இந்திய விமானப் படையின் விமானப் பாதுகாப்புத் திறன்களை அதிகரிக்கவும் இது அதிக மாற்றங்களைக் கொண்டுள்ளது.

2. DRDO successfully flight-tests indigenous Man-Portable Anti-Tank Missile

  • Defence Research and Development Organisation (DRDO) successfully flight tested indigenously developed low weight, fire and forget Man-Portable Anti-Tank Guided Missile (MPATGM) for minimum range.
  • The missile was launched from a man-portable launcher integrated with a thermal site. The missile is incorporated with state-of-the-art Miniaturised Infrared Imaging Seeker along with advanced avionics.

 

2. டி.ஆர்.டி.ஓ வெற்றிகரமாக உள்நாட்டு இலகுரக பீரங்கி எதிர்ப்பு ஏவுகணையை சோதனை செய்தது

  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ) உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட குறைந்த எடை கொண்ட இலகுரக பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டுதல் ஏவுகணையை (எம்.பி.ஏ.டி.ஜி.எம்) குறைந்தபட்ச வரம்பில் வெற்றிகரமாக சோதனை செய்தது.
  • இந்த ஏவுகணை வெப்ப தளத்துடன் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு எடுத்துச்செல்லக்கூடிய ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்டது. இந்த ஏவுகணை அதிநவீன நுண்ணோக்கி அகச்சிவப்பு இமேஜிங் சீக்கர் மற்றும் மேம்பட்ட ஏவியோனிக்ஸ் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது.

NATIONAL


3. Vice President M. Venkaiah Naidu addresses the inaugural session of the World Universities Summit 2021

  • Vice President M. Venkaiah Naidu addressed the inaugural session of the World Universities Summit 2021. The summit was organised virtually by O. P. Jindal University,
  • Theme: “Universities of the Future: Building Institutional Resilience, Social Responsibility and Community Impact”

 

3. 2021 உலக பல்கலைக்கழகங்கள் உச்சிமாநாட்டின் தொடக்க விழாவில் துணை குடியரசுத் தலைவர் எம். வெங்கையா நாயுடு உரையாற்றினார்

  • உலக பல்கலைக்கழகங்கள் உச்சிமாநாடு 2021இன் தொடக்க விழாவில் துணை குடியரசுத் தலைவர் எம். வெங்கையா நாயுடு உரையாற்றினார். இந்த உச்சிமாநாட்டை சோனிபட் ஓ. பி. ஜிண்டால் பல்கலைக்கழகம் மெய்நிகராக ஏற்பாடு செய்திருந்தது.
  • கருப்பொருள்: “எதிர்கால பல்கலைக்கழகங்கள்: நிறுவன நெகிழ்தன்மையை உருவாக்குதல், சமூக பொறுப்பு மற்றும் சமூக தாக்கம்”

4. UNESCO’s ‘Historic Urban Landscape’ project for Gwalior and Orchha was launched

  • Gwalior and Orchha cities of Madya Pradesh were selected by UNESCO under the ‘Historic Urban Landscape Project’. This project was started in the year 2011, for the inclusive and well-planned development of fast-growing historical cities while preserving the culture and heritage.
  • Madya Pradesh Chief Minister Shivraj Singh Chouhan virtually launched UNESCO’s ‘Historic Urban Landscape’ project for Gwalior and Orchha cities of the state through video conferencing. The development and management plan of these cities will be prepared by UNESCO.

 

4. குவாலியர் மற்றும் ஓர்ச்சாவுக்கான யுனெஸ்கோவின் ‘வரலாற்று நகர்ப்புற நிலப்பரப்பு’ திட்டம் தொடங்கப்பட்டது

  • மத்திய பிரதேசத்தின் குவாலியர் மற்றும் ஓர்ச்சா நகரங்கள் யுனெஸ்கோவால் ‘வரலாற்று நகர்ப்புற நிலப்பரப்பு திட்டத்தின்’ கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பாதுகாக்கும் அதே வேளையில், வேகமாக வளர்ந்து வரும் வரலாற்று நகரங்களின் உள்ளடக்கிய மற்றும் நன்கு திட்டமிடப்பட்ட வளர்ச்சிக்காக இந்த திட்டம் 2011ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
  • மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் குவாலியர் மற்றும் ஓர்ச்சா நகரங்களுக்கான யுனெஸ்கோவின் ‘வரலாற்று நகர்ப்புற நிலப்பரப்பு’ திட்டத்தை காணொலி காட்சி மூலம் மெய்நிகராக தொடங்கி வைத்தார். இந்த நகரங்களின் வளர்ச்சி மற்றும் மேலாண்மைத் திட்டம் யுனெஸ்கோவால் தயாரிக்கப்படும்.

INTERNATIONAL


5. Union Environment Minister Bhupender Yadav addresses the 16th G20 Environment Ministerial Meet

  • Union Environment Minister Bhupender Yadav addressed the 16th G20 Environment Ministerial (EMM) Meet.
  • The meeting was held in a hybrid format and India participated through video conferencing. Italy was the President of the summit.

 

5. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ் 16வது ஜி20 சுற்றுச்சூழல் அமைச்சர்கள் கூட்டத்தில் உரையாற்றினார்

  • மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ் 16வது ஜி20 சுற்றுச்சூழல் அமைச்சர்கள் கூட்டத்தில் உரையாற்றினார்.
  • இந்த கூட்டம் கலப்பின வடிவத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் காணொலி காட்சி வாயிலாக இந்தியா பங்கேற்றது. இந்த உச்சிமாநாட்டிற்கு இத்தாலி தலைமை வகிக்கிறது.

6. Ariel Henry was sworn in as the new Prime Minister of Haiti

  • Ariel Henry was sworn in as the new Prime Minister of Haiti after the country’s President Jovenel Moise was assassinated in the capital Port-au-Prince.
  • Ariel Henry succeeded Joseph as the Prime Minister.

 

6. ஹைதியின் புதிய பிரதமராக ஏரியல் ஹென்றி பதவியேற்றுள்ளார்

  • தலைநகர் போர்ட்-ஓ-பிரின்ஸ் நகரில் ஹைதி நாட்டின் அதிபர் ஜோவெனல் மோயிஸ் படுகொலை செய்யப்பட்ட பின்னர் ஏரியல் ஹென்றி ஹைதியின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ளார்.
  • ஏரியல் ஹென்றி, ஜோசப்பிற்கு பிறகு பிரதமராக பதவியேற்றார்.

7. Liverpool has been stripped of its World Heritage status

  • Liverpool had been stripped of its World Heritage status after a UN Committee found developments that threatened the value of the city’s waterfront.
  • The city was awarded the World Heritage status in 2004 in recognition of its historical and architectural impact.

 

7. லிவர்பூலின் உலக பாரம்பரிய அந்தஸ்து பறிக்கப்பட்டுள்ளது

  • லிவர்பூல் நகரத்தின் நீர்நிலையின் மதிப்பை அச்சுறுத்தும் மேம்பாட்டுப் பணிகளை ஐ.நா குழு கண்டறிந்ததை அடுத்து லிவர்பூலின் உலக பாரம்பரிய அந்தஸ்து பறிக்கப்பட்டுள்ளது.
  • இந்த நகரத்தின் வரலாற்று மற்றும் கட்டிடக்கலை தாக்கத்தை அங்கீகரிக்கும் வகையில் 2004ஆம் ஆண்டில் இந்நகரத்திற்கு உலக பாரம்பரிய அந்தஸ்து வழங்கப்பட்டது.

SPORTS


8. Australia’s Brisbane to host the 2032 Summer Olympic Games

  • The International Olympic Committee announced that the Australian city of Brisbane will host the 2032 Summer Olympic Games. It will also host the 2032 Paralympic Games.

 

8. ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் 2032 கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்த உள்ளது

  • ஆஸ்திரேலிய நகரமான பிரிஸ்பேன் 2032 கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் என்று சர்வதேச ஒலிம்பிக் குழு அறிவித்துள்ளது. அந்நகரம் 2032 பாராலிம்பிக் விளையாட்டுக்களையும் நடத்துகிறது.

IMPORTANT DAYS


9. National Mango Day – 22 July

  • National Mango Day is observed annually on 22 July.
  • India is the top producer of mangoes in the world. Mango was first cultivated over 5000 years ago in India.
  • Mango is popularly known as the ‘King of Fruits’. It is an edible stone fruit that originated in India. Its scientific name is Mangifera indica. The Mango tree is the national tree of Bangladesh.

 

9. தேசிய மாம்பழ தினம் – 22 ஜூலை

  • தேசிய மாம்பழ தினம் ஆண்டுதோறும் 22 ஜூலை அன்று அனுசரிக்கப்படுகிறது.
  • உலகிலேயே மாம்பழ உற்பத்தியில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. இந்தியாவில் 5000 ஆண்டுகளுக்கு முன்பு மாம்பழம் முதன்முதலில் பயிரிடப்பட்டது.
  • மாம்பழம் ‘பழங்களின் ராஜா’ என்று பிரபலமாக அறியப்படுகிறது. இது இந்தியாவில் தோன்றிய ஒரு உண்ணக்கூடிய கல் பழம் ஆகும். இதன் அறிவியல் பெயர் மாங்கிஃபெரா இண்டிகா. மாமரம் பங்களாதேஷின் தேசிய மரமாகும்.

DAY IN HISTORY


10. Adoption of the Indian National Flag – 22 July 1947

  • Indian National Flag was adopted by the Indian Constituent Assembly on 22 July 1947.
  • The Indian National Flag – ‘Tricolour’ comprises of four colours: saffron, white, green and
  • The flag was hoisted for the first time by Sachindra Prasad Bose in 1906 in Calcutta. In 1907, the flag was unfurled by Madam Bhikaji Kama in Stuttgart. It was the first time that the Indian flag was hoisted outside India.
  • Pingali Venkayya designed the current Indian flag, which was accepted in 1931 and was declared as the official flag of the Congress Committee.
  • In 1947, the flag committee headed by Dr. Rajendra Prasad decided to adopt the flag of the Congress as the national flag of India with slight modifications – the charkha in the middle was replaced with the Ashoka Chakra.
  • The official tricolour flag was hoisted by Jawaharlal Nehru on 15 August 1947 at Red Fort, Delhi. It was woven at Gudiyatham in the Vellore district of Tamil Nadu. This flag is now an art exhibit at the George Fort Museum, Chennai.
  • The right to manufacture the national flag of India is held by the Khadi Development and Village Industries Commission.

 

10. இந்திய தேசியக் கொடியை ஏற்றுக்கொண்ட தினம் – 22 ஜூலை 1947

  • இந்திய தேசியக் கொடி 22 ஜூலை 1947 அன்று இந்திய அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
  • இந்திய தேசியக் கொடி ‘மூவர்ணக்கொடி’, நான்கு வண்ணங்களைக் கொண்டுள்ளது: காவி, வெள்ளை, பச்சை மற்றும் நீலம்.
  • 1906ஆம் ஆண்டு கல்கத்தாவில் சச்சிந்திர பிரசாத் போஸ் முதல் முறையாக கொடியை ஏற்றினார். 1907இல் ஸ்டட்கார்ட்டில் பிகாஜி காமா அம்மையார் கொடியை ஏற்றினார். இந்தியாவுக்கு வெளியே இந்திய கொடி ஏற்றப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
  • பிங்காலி வெங்கையா தற்போதைய இந்தியக் கொடியை வடிவமைத்தார். இது 1931இல் ஏற்றுக்கொள்ளப்பட்டு, காங்கிரஸ் குழுவின் அதிகாரப்பூர்வ கொடியாக அறிவிக்கப்பட்டது.
  • 1947இல் டாக்டர். ராஜேந்திர பிரசாத் தலைமையிலான கொடிக் குழு, காங்கிரசின் கொடியை இந்தியாவின் தேசியக் கொடியாக சிறிய மாற்றங்களுடன் ஏற்க முடிவு செய்தது — நடுவில் இருந்த சக்கரத்திற்கு பதிலாக அசோக சக்கரம் மாற்றப்பட்டது.
  • தில்லி செங்கோட்டையில் 15 ஆகஸ்ட் 1947 அன்று ஜவஹர்லால் நேருவால் அதிகாரப்பூர்வ மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டது. இது தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் என்ற இடத்தில் நெய்யப்பட்டது. இந்தக் கொடி தற்போது சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை அருங்காட்சியகத்தில் ஒரு கலை பொருளாக உள்ளது.
  • இந்தியாவின் தேசியக் கொடியை உற்பத்தி செய்யும் உரிமை கதர் வளர்ச்சி மற்றும் கிராமத் தொழில் ஆணையத்திடம் உள்ளது.