TNPSC Current Affairs – English & Tamil – July 23, 2021

TNPSC Aspirants,

The Current Affairs Section is one of the most important topics for the upcoming TNPSC Group I, Group II/IIA, Group IV, and TNUSRB Exams.

Check today’s TNPSC Daily Current Affairs (July 23, 2021) in this post.

Aspirants can expect questions from the Daily Current Affairs section in the upcoming TNPSC Exams and learning the Current Affairs section will also aid them in successfully preparing for the descriptive paper. So this process is a 2 in 1 initiative.

To make the learning more convenient, we will be providing the TNPSC Daily Current Affairs in both ENGLISH & TAMIL. This has been made in such a way that reflects the TNPSC pattern as TNPSC uses both the languages in the Question Paper and this will also make the preparations of the aspirants meaningful and will 100% fulfill the needs of the aspirants.


Download PDF – TNPSC Daily Current Affairs – English & Tamil – July 23, 2021


TAMIL NADU


1. Laguleesar statue of Pallava found in Uttaramerur

  • A statue of Laguleesar belonging to the seventh century AD of the Pallava period was found in Kozhiyalam village next to Uttaramerur.
  • ‘Lakulam’ means stick and ‘Esam’ means Eshwaran. Laguleesar is the 28th incarnation of Lord Shiva in human form to propagate Saivism with a stick.
  • This Laguleesam arose from the Pasupata, the sect of Saivism. It originated in Gujarat in the second century AD and began to spread in Tamil Nadu after the third century AD. This Laguleesm, which was at its peak during the Pallava period, gradually weakened.

 

1. பல்லவர் கால லகுலீசர் சிலை உத்திரமேரூரில் கண்டெடுக்கப்பட்டுள்ளது

  • உத்திரமேரூரை அடுத்த கோழியாளம் கிராமத்தில், பல்லவர் காலத்தை சார்ந்த, கி.பி. ஏழாம் நுாற்றாண்டு லகுலீசரின் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
  • ‘லகுலம்’ என்றால் தடி, ‘ஈசம்’ என்றால் ஈஸ்வரன். தடியைக் கொண்டு சைவ சமயத்தை பரப்ப சிவபெருமானே மனித உருவில், 28வது அவதாரமாக உருவெடுத்ததே லகுலீசர் என்பதாகும்.
  • சைவ சமயத்தின் பிரிவான பாசுபதத்திலிருந்து இந்த லகுலீசம் தோன்றியது. இது கி.பி. 2ஆம் நுாற்றாண்டில், குஜராத் மாநிலத்தில் தோன்றி, தமிழகத்தில் மூன்றாம் நுாற்றாண்டிற்கு பின் பரவத் துவங்கியது. பல்லவர் காலத்தில் உச்சத்திலிருந்த இந்த லகுலீசம், படிப்படியாக வலுவிழந்தது.

NATIONAL


2. India’s first green hydrogen plant is set to be built at Mathura

  • Indian Oil Corporation (IOC) is set to build India’s first ‘green hydrogen’ plant at its Mathura It aims towards a greener future.

 

2. மதுராவில் இந்தியாவின் முதல் பசுமை ஹைட்ரஜன் ஆலை கட்டப்படவுள்ளது

  • இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி) இந்தியாவின் முதல் ‘பசுமை ஹைட்ரஜன்’ ஆலையை அதன் மதுரா சுத்திகரிப்பு ஆலையில் கட்ட உள்ளது. இது பசுமையான எதிர்காலத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

3. Union Defence Ministry issues tender for Project 75

  • Union Defence Ministry had issued a tender for Project 75 to Mazgaon Dock Shipbuilders and L&T. Project 75 is a programme by the Indian Navy to build six Scorpene-class attack submarines.

 

3. மத்திய பாதுகாப்பு அமைச்சகம் திட்டம் 75க்கான குத்தகையை வெளியிட்டுள்ளது

  • மத்திய பாதுகாப்பு அமைச்சகம் மஸ்கான் கப்பல் கட்டும் நிறுவனம் மற்றும் எல் அண்ட் டி நிறுவனங்களுக்கு திட்டம் 75க்கான குத்தகையை வழங்கியது. திட்டம் 75 என்பது ஆறு ஸ்கார்பீன்-வகுப்பு தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்கும் இந்திய கடற்படையின் திட்டமாகும்.

INTERNATIONAL


4. World’s first 3D-printed steel bridge opens in Amsterdam

  • World’s first 3D-printed 12-metre-long steel bridge was opened to the public in Amsterdam. This bridge will capture and transmit data on its health in real-time to show how it changes over its lifespan. So it will act as a ‘living laboratory’.

 

4. உலகின் முதல் முப்பரிமான எஃகு பாலம் ஆம்ஸ்டர்டாமில் திறக்கப்பட்டுள்ளது

  • உலகின் முதல் 12-மீட்டர்-நீளமுள்ள முப்பரிமான எஃகு பாலம் ஆம்ஸ்டர்டாமில் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது. அது அதன் ஆயுட்காலத்தில் எவ்வாறு மாற்றம் அடைகிறது என்பதைக் காட்ட நிகழ் நேரத்தில் அதன் மாற்றம் பற்றிய தரவைப் படம்பிடித்து அனுப்பும். எனவே அது ஒரு ‘வாழும் ஆய்வகமாக’ செயல்படும்.

5. China launches the world’s largest emission trading system

  • China is the world’s largest emitter of greenhouse gases. It has launched its first national emissions trading system. It is the world’s largest emission trading system. In this system, carbon emission would be traded in a carbon market.
  • It works on a cap-and-trade model where coal and gas-fired energy plants are allocated a specific number of emissions allowances. If they exceed this limit, they are permitted to buy allowances from the open market.
  • If they stay within their prescribed limits, they can sell the remainder of their allowances to other emitters. As allowances become stricter, prices rise, encouraging companies to become greener.

 

5. உலகின் மிகப்பெரிய உமிழ்வு வர்த்தக முறையை சீனா அறிமுகப்படுத்தியுள்ளது

  • பசுமை இல்ல வாயுக்களை வெளியேற்றும் உலகின் மிகப்பெரிய நாடாக சீனா உள்ளது. அது தனது முதல் தேசிய உமிழ்வு வர்த்தக முறையைத் தொடங்கியுள்ளது. இது உலகின் மிகப்பெரிய உமிழ்வு வர்த்தக அமைப்பு ஆகும். இந்த அமைப்பில், கார்பன் உமிழ்வு, கார்பன் சந்தையில் வர்த்தகம் செய்யப்படும்.
  • இதில் நிலக்கரி மற்றும் எரிவாயு எரிசக்தி ஆலைகளுக்கு ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான உமிழ்வு படிகள் ஒதுக்கப்படும். இது வரம்பு வர்த்தக மாதிரியில் வேலை செய்கிறது.அவர்கள் இந்த வரம்பை மீறினால், அவர்கள் வெளிச்சந்தையில் இருந்து படிகளை வாங்க அனுமதிக்கப்படுகிறார்கள்.
  • அவர்களது உமிழ்வு தங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட வரம்புகளுக்குள் இருந்தால், அவர்கள் தங்கள் கொடுப்பனவுகளில் எஞ்சியதை மற்றவர்களுக்கு விற்கலாம். கொடுப்பனவுகள் கடுமையாகும் போது, விலைகள் உயரும். இது நிறுவனங்கள் பசுமையாக மாற ஊக்குவிக்கின்றன.

AWARDS AND RECOGNITIONS


6. Indian-origin diagnostics company ‘GeneStore’ wins the ‘Best Investment in France’ laurel

  • GeneStore, a biotechnology company focused on infectious disease eradication, was recently awarded the ‘Best Investment in France’ laurel by the Business France Department of the French Embassy in India at the Indo-France Awards held in New Delhi.

 

6. இந்திய வம்சாவளி நோயறிதல் நிறுவனமான ‘ஜீன்ஸ்டோர்’ ‘பிரான்சில் சிறந்த முதலீடு’ விருதை வென்றுள்ளது

  • தொற்று நோய் ஒழிப்பில் கவனம் செலுத்தும் ஒரு உயிரி-தொழில்நுட்ப நிறுவனமான ஜீன்ஸ்டோருக்கு, சமீபத்தில் புது தில்லியில் நடைபெற்ற இந்திய-பிரான்ஸ் விருதுகளில் இந்தியாவில் உள்ள பிரெஞ்சு தூதரகத்தின் பிஸினஸ் பிரான்ஸ் துறையால் ‘பிரான்சில் சிறந்த முதலீடு’ என்ற விருது வழங்கப்பட்டது.

MILITARY EXERCISES


7. The maiden naval exercise between India and UK was held in the Bay of Bengal

  • The maiden exercise between the Indian Navy and the Royal Navy of England was held in the Bay of Bengal. The bilateral Passage Exercise (PASSEX) was designed to increase the ability of the two navies to operate together in the maritime domain.

 

7. இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையிலான முதல் கடற்படை பயிற்சி வங்காள விரிகுடாவில் நடைபெற்றது

  • இந்திய கடற்படைக்கும் இங்கிலாந்துக்கு ராயல் கடற்படைக்கும் இடையிலான முதல் கடற்படை பயிற்சி வங்காள விரிகுடாவில் நடைபெற்றது. இந்த இருதரப்பு பாசெக்ஸ் பயிற்சி (PASSEX) கடல்சார் களத்தில் இரண்டு கடற்படைகளும் ஒன்றாக செயல்படும் திறனைப் பெற வடிவமைக்கப்பட்டுள்ளது.

IMPORTANT DAYS


8. National Broadcasting Day – 23 July

  • National Broadcasting Day is observed on 23 July On 23 July 1927, India’s first-ever radio broadcast went on air from Bombay station.

 

8. தேசிய ஒலிபரப்பு தினம் 23 ஜூலை

  • தேசிய ஒலிபரப்பு தினம் ஆண்டுதோறும் 23 ஜூலை அன்று அனுசரிக்கப்படுகிறது. 23 ஜூலை 1927 அன்று, இந்தியாவின் முதல் வானொலி ஒளிபரப்பு, பம்பாய் நிலையத்திலிருந்து ஒளிபரப்பப்பட்டது.

DAY IN HISTORY


9. Chandra Shekhar Azad’s Birth Anniversary – 23 July

  • Chandra Shekhar Azad reorganised Hindustan Socialist Republican Army (HSRA). He was involved in the Kakori robbery of 1925 and the shooting of Saunders in 1928.

 

9. சந்திரசேகர் ஆசாத் பிறந்த நாள் – 23 ஜூலை

  • சந்திரசேகர் ஆசாத், இந்துஸ்தான் சோசலிஸ்ட் குடியரசு இராணுவத்தை (எச்.எஸ்.ஆர்.ஏ.வை) மறுசீரமைத்தார். அவர் 1925ஆம் ஆண்டு ககோரி கொள்ளையிலும் மற்றும் 1928இல் சாண்டர்ஸ் சுட்டுக் கொல்லப்பட்டதிலும் ஈடுபட்டார்.

10. Lokmanya Bal Gangadhar Tilak birth anniversary – 23 July

  • Lokmanya Bal Gangadhar Tilak was one of the extremist leaders of the Indian national movement. The British named him the ‘Father of the Indian Unrest’. He gave the slogan, “Swaraj is my birthright and I shall have it”. He introduced the Home Rule Movement in April 1916 in Bombay city.

 

10. லோகமான்ய பால் கங்காதர் திலக் பிறந்த நாள் – 23 ஜூலை

  • லோக்மான்ய பால் கங்காதர் திலக் இந்திய தேசிய இயக்கத்தின் தீவிர தேசியவாத தலைவர்களில் ஒருவர் ஆவார். பிரிட்டிஷ் அவரை ‘இந்திய அமைதியின்மையின் தந்தை’ என்று பெயரிட்டது. “சுயராஜ்யம் என் பிறப்புரிமை, அதை நான் அடைந்தே தீருவேன்” என்ற கோஷத்தை அவர் வழங்கினார். 1916 ஏப்ரலில் பம்பாயில் நகரில் தன்னாட்சி இயக்கத்தை அறிமுகப்படுத்தினார்.