TNPSC Current Affairs – English & Tamil – July 28, 2021

TNPSC Aspirants,

The Current Affairs Section is one of the most important topics for the upcoming TNPSC Group I, Group II/IIA, Group IV, and TNUSRB Exams.

Check today’s TNPSC Daily Current Affairs (July 28, 2021) in this post.

Aspirants can expect questions from the Daily Current Affairs section in the upcoming TNPSC Exams and learning the Current Affairs section will also aid them in successfully preparing for the descriptive paper. So this process is a 2 in 1 initiative.

To make the learning more convenient, we will be providing the TNPSC Daily Current Affairs in both ENGLISH & TAMIL. This has been made in such a way that reflects the TNPSC pattern as TNPSC uses both the languages in the Question Paper and this will also make the preparations of the aspirants meaningful and will 100% fulfill the needs of the aspirants.


Download PDF – TNPSC Daily Current Affairs – English & Tamil – July 28, 2021


TAMIL NADU


1. Sankaraiah has been selected for the ‘Tagaisal Tamizhar’ Award 2021

  • Veteran freedom fighter Sankaraiah has been selected for the ‘Tagaisal Tamizhar’ award 2021, which is given to those who have played a major role in the development of Tamil Nadu and Tamils.
  • Tamil Nadu Chief Minister M. K. Stalin introduced this new award.

Sankaraiah

  • Sankaraiah was born in Kovilpatti on 15 July 1922. He is a politician, social activist and freedom fighter.
  • He studied in American College, Madurai. He was one of the 32 communist leaders who laid the foundation of the Communist Party of India-Marxist (CPI(M) when the Communist Party of India (CPI) broke into two factions.
  • He was elected to the Tamil Nadu Assembly in 1967, 1977 and

Tagaisal Tamizhar Award

  • Tamil Nadu Chief Minister M. K. Stalin had introduced a new award called ‘Tagaisal Tamizhar’ (தகைசால் தமிழர்) (Distinguished Tamil) to recognise those who contributed to the development of Tamils and Tamil Nadu.
  • The Tamil Nadu Chief Minister will preside over the selection committee of the award. The committee consists of the Tamil Nadu Minister of Industries, Tamil Official Language and Tamil Culture Minister and the Chief Secretary.
  • A cheque of 10 lakhs and a certificate of appreciation will be issued to the awardee by the Chief Minister of Tamil Nadu during the Independence Day celebrations.

 

1. ‘தகைசால் தமிழர்விருதுக்கு சங்கரய்யா தேர்வு செய்யப்பட்டுள்ளார்

  • முதுபெரும் சுதந்திர போராட்ட வீரர் என். சங்கரய்யா, தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் தகைசால் தமிழர்விருது 2021க்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • இந்த புதிய விருதை தமிழ்நாடு முதல்வர் மு. க. ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார்.

சங்கரய்யா

  • சங்கரய்யா, 15 ஜூலை 1922 அன்று கோவில்பட்டியில் பிறந்தார். அவர் ஒரு அரசியல்வாதி, சமூக ஆர்வலர் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர் ஆவார்.
  • அவர் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரண்டு பிரிவுகளாக உடைந்த போது, இந்திய மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு CPI(M), அடித்தளம் அமைத்த 32 கம்யூனிஸ்ட் தலைவர்களில் இவரும் ஒருவர்.
  • இவர் 1967, 1977 மற்றும் 1980ஆம் ஆண்டுகளில் தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தகைசால் தமிழர் விருது

  • தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்தும் வகையில் தகைசால் தமிழர் என்ற புதிய விருதை தமிழ்நாடு முதல்வர் மு. க. ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார்.
  • இந்த விருதிற்கான தேர்வு குழுவிற்கு தமிழ்நாடு முதல்வர் தலைமை தாங்குவார். அக்குழுவில் தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர், தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ்ப் பண்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர் ஆகியோர் இருப்பர்.
  • விருது பெறுபவருக்கு பத்து இலட்சம் ரூபாய்க்கான காசோலையும், பாராட்டுச் சான்றிதழும், சுதந்திர தின விழாவின் போது தமிழ்நாடு முதல்வரால் வழங்கப்படும்.

SCIENCE AND TECHNOLOGY


2. Fermi Gamma-ray Space Telescope spots the first short-duration gamma-ray burst from a stellar collapse

  • NASA’s Fermi Gamma-ray Space Telescope detected a very short, powerful burst of high-energy radiation that lasted for about a second and had been racing towards the Earth for nearly half the present age of the universe. It showed for the first time that a dying star can produce short bursts too.
  • GRB 200826A is the shortest gamma-ray burst (GRB) caused by the death of a massive star. Indian astronomers were a part of this team.
  • GRBs are the most powerful events in the universe, detectable across billions of light-years.

 

2. ஃபெர்மி காமா-கதிர் விண்வெளி தொலைநோக்கி ஒரு நட்சத்திர அழிவிலிருந்து வெளிப்பட்ட முதல் குறுகிய கால காமா-கதிர் வெடிப்பைக் கண்டறிந்துள்ளது

  • நாசாவின் ஃபெர்மி காமா-கதிர் விண்வெளி தொலைநோக்கி, ஒரு நொடி நீடித்த மற்றும் பிரபஞ்சத்தின் தற்போதைய வயதில் கிட்டத்தட்ட பாதிகாலமாக பூமியை நோக்கி வந்து கொண்டிருந்த உயர் ஆற்றல் கதிர்வீச்சின் மிக குறுகிய, சக்திவாய்ந்த வெடிப்பைக் கண்டறிந்தது. இறக்கும் நட்சத்திரமும் குறுகிய வெடிப்புகளை உருவாக்க முடியும் என்பதை இது முதல் முறையாகக் காட்டியுள்ளது.
  • GAP 200826A என்பது ஒரு பெரிய நட்சத்திரத்தின் மரணத்தால் ஏற்படும் குறுகிய காமா-கதிர் வெடிப்பு (GRB) ஆகும். இந்திய வானியலாளர்கள் இந்த குழுவில் ஒரு பகுதியாக இருந்தனர்.
  • GRBக்கள் பிரபஞ்சத்தின் மிக சக்திவாய்ந்த நிகழ்வுகள், பில்லியன் கணக்கான ஒளி ஆண்டுகளில் கண்டறியக்கூடியவை.

NATIONAL


3. Parliament passes the ‘Marine Aids to Navigation Bill 2021’ to repeal and replace the Lighthouse Act, 1927

  • Parliament passed the Marine Aids to Navigation Bill, 2021, which aims to replace the Lighthouse Act, 1927.
  • This bill aims to incorporate the global best practices, technological developments and India’s international obligations in the field of marine aids to navigation.

 

3. கலங்கரை விளக்கம் சட்டம் 1927ஐ நீக்குவதற்கும் மாற்றுவதற்கும் ‘கடல்சார் வழிசெலுத்தல் உதவிகள் மசோதா 2021’ஐ நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது

  • கலங்கரை விளக்கம் சட்டம், 1927ஐ மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட கடல்சார் வழிசெலுத்தல் உதவிகள் மசோதா, 2021ஐ நாடாளுமன்றம் நிறைவேற்றியது.
  • இது உலகளாவிய சிறந்த நடைமுறைகள், தொழில்நுட்ப வளர்ச்சிகள் மற்றும் கடல்சார் துறையில் இந்தியாவின் சர்வதேச கடமைகளை வழிசெலுத்தலுடன் இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

4. Dholavira becomes the 40th UNESCO World Heritage Site of India

  • Dholavira, the Harappan City in the Rann of Kutch of Gujarat became the 40th UNESCO World Heritage Site of India.
  • India now has 40 World Heritage Sites overall, which includes 32 cultural, 7 natural and one mixed site. Thus, India joined the ‘Super 40’ club, which constists of Italy, Spain, Germany, China and France. Recently Ramappa temple in Telangana was announced as the 39th World Heritage Site of India.

Dholavira

  • Dholavira is a Harappan city. It is the 6th largest Harappan site. Unlike the other Harappan sites, Dholavira is not near any river.
  • It has an expansive water management system.

 

4. இந்தியாவின் 40வது யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக தோலாவிரா அறிவிக்கப்பட்டுள்ளது

  • குஜராத்தின் கட்ச் வளைகுடா பகுதியில் உள்ள ஹரப்பா நகரமான தோலாவிரா, இந்தியாவின் 40வது யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்தியாவில் இப்போது ஒட்டுமொத்தமாக 40 உலக பாரம்பரிய தளங்கள் உள்ளன. இதில் 32 கலாச்சார தளங்கள், 7 இயற்கை தளங்கள் மற்றும் ஒரு கலப்பு தளம் ஆகியன அடங்கும். இதனால், இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனி, சீனா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் அடங்கிய ‘சூப்பர் 40’ குழுவில் இந்தியா இணைந்தது.சமீபத்தில் தெலுங்கானாவில் உள்ள ராமப்பா கோவில் இந்தியாவின் 39வது உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டது.

தோலாவிரா

  • தோலாவிரா ஒரு ஹரப்பா நகரம் ஆகும். இது 6வது பெரிய ஹரப்பன் தளம் ஆகும். மற்ற ஹரப்பா இடங்களைப் போல் தோலாவிரா எந்த நதிக்கும் அருகில் இல்லை.
  • இது ஒரு விரிவான நீர் மேலாண்மை அமைப்பைக் கொண்டுள்ளது.

5. Basavaraj Bommai was sworn in as the 23rd Chief Minister of Karnataka

  • Basavaraj Bommai was sworn in as the 23rd Chief Minister of Karnataka. The ceremony was held at the Glass House of the Karnataka Raj Bhavan in Bengaluru.
  • Karnataka Governor Thaawarchand Gehlot administered the oath of office to Basavaraj Bommai. Basavaraj Bommai is the son of the former Chief Minister of Karnataka, S. R. Bommai.

 

5. கர்நாடகத்தின் 23வது முதலமைச்சராக பசவராஜ் பொம்மை பதவியேற்றார்

  • கர்நாடகத்தின் 23வது முதலமைச்சராக பசவராஜ் பொம்மை பதவியேற்றார். இந்த விழா பெங்களூருவில் உள்ள கர்நாடக ஆளுநர் மாளிகையான ராஜ் பவனிலுள்ள கண்ணாடி மாளிகையில் நடைபெற்றது.
  • கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட், பசவராஜ் பொம்மைக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பசவராஜ் பொம்மை கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ். ஆர். பொம்மையின் மகன் ஆவார்.

6. Assam Chief Minister Himanta Biswa Sarma lays the foundation stone of the first Bamboo Industrial Park of India

  • Assam Chief Minister Himanta Biswa Sarma laid the foundation stone of the first-ever Bamboo Industrial Park of India at Manderdisa in Dima Hasao district of Assam. Union Ministry of Development of North East Region (DoNER) implements this project.

 

6. அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா இந்தியாவின் முதல் மூங்கில் தொழில் பூங்காவுக்கு அடிக்கல் நாட்டினார்

  • அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, அசாமின் திமா ஹசாவோ மாவட்டத்தில் உள்ள மந்தர்டிசாவில் இந்தியாவின் முதல் மூங்கில் தொழில் பூங்காவிற்கு அடிக்கல் நாட்டினார். மத்திய வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சகம் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறது.

PERSONS IN NEWS


7. Arjuna awardee Nandu Natekar passed away at 88

  • Former World No. 3 badminton player and Arjuna awardee Nandu Natekar passed away at the age of 88.
  • He was born in Maharashtra. He was the first Indian to win an international badminton title when he won the Sellanger International in Malaysia in 1956. He represented India at the 1965 Commonwealth Games in Jamaica.
  • He was conferred with the prestigious Arjuna Award in 1961.

 

7. அர்ஜுனா விருது பெற்ற நந்து நடேகர் தனது 88வது வயதில் காலமானார்

  • முன்னாள் உலக நம்பர் 3 பேட்மிண்டன் வீரரும் அர்ஜுனா விருது பெற்றவருமான நந்து நடேகர் தனது 88வது வயதில் காலமானார்.
  • அவர் மகாராஷ்டிராவில் பிறந்தார். 1956ஆம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச செல்லங்கர் பட்டத்தை வென்ற போது, சர்வதேச பேட்மிண்டன் பட்டத்தை பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை இவர் பெற்றார். ஜமைக்காவில் 1965ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் சார்பில் அவர் பங்கேற்றார்.
  • அவருக்கு 1961ஆம் ஆண்டு மதிப்புமிக்க அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.

TOKYO OLYMPICS 2020


8. 57-year-old Al-Rashidi becomes the oldest man to win an Olympic medal

  • 57-year-old Al-Rashidi of Kuwait won the bronze medal in the men’s skeet shooting event at the Tokyo Olympics 2020 and became the oldest man to win an Olympic medal.

 

8. ஒலிம்பிக் பதக்கம் வென்ற வயதான நபராகியுள்ளார் 57 வயதான அல்-ரஷிதி

  • குவைத்தை சேர்ந்த 57 வயதான அல்-ரஷிதி, டோக்கியோ ஒலிம்பிக் 2020 ஆண்கள் ஸ்கீட் துப்பாக்கிச் சூடு போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று ஒலிம்பிக் பதக்கம் வென்ற மிக வயதான மனிதர் ஆனார்.

IMPORTANT DAYS


9. World Nature Conservation Day – 28 July

  • World Nature Conservation Day is observed annually on 28 July. It aims to conserve the animals and trees that are on the verge of going extinct from the natural environment of the earth.

 

9. உலக இயற்கை பாதுகாப்பு தினம் – 28 ஜூலை

  • உலக இயற்கை பாதுகாப்பு தினம் ஆண்டுதோறும் 28 ஜூலை அன்று அனுசரிக்கப்படுகிறது. பூமியின் இயற்கைச் சூழலில் இருந்து அழியும் விளிம்பில் இருக்கும் விலங்குகள் மற்றும் மரங்களைப் பாதுகாப்பதை இந்நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.

10. World Hepatitis Day – 28 July

  • World Hepatitis Day is observed every year on 28 July to spread awareness about viral hepatitis. Hepatitis is an infectious disease caused by the viral infection that affects the liver. It is known by its various variants, like A, B, C, D and E. It is also induced due to excessive consumption of alcohol, toxins and medications.
  • 28 July marks the birth anniversary of Nobel Prize-winning scientist Baruch Blumberg. He discovered the Hepatitis B virus (HBV) and the vaccine to treat the Hepatitis B virus.
  • Theme 2021: “Hepatitis Can’t Wait”

 

10. உலக கல்லீரல் அழற்சி தினம் – 28 ஜூலை

  • வைரஸால் பரவும் கல்லீரல் அழற்சி (ஹெபடைடிஸ்) பற்றிய விழிப்புணர்வை பரப்புவதற்காக உலக கல்லீரல் அழற்சி தினம் ஒவ்வொரு ஆண்டும் 28 ஜூலை அன்று அனுசரிக்கப்படுகிறது. கல்லீரல் அழற்சி என்பது கல்லீரலை பாதிக்கும் வைரஸ் தொற்றால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். இது ஏ, பி, சி, டி மற்றும் ஈ போன்ற பல்வேறு வகைகளால் அறியப்படுகிறது. மேலும், அதிக அளவு மது அருந்துதல், நச்சுப் பொருட்கள் மற்றும் மருந்துகள் உட்கொள்ளுதல் போன்ற காரணங்களாலும் இது தூண்டப்படுகிறது.
  • 28 ஜூலை, நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி டாக்டர். பரூச் ப்ளம்பெர்க்கின் பிறந்த நாளைக் குறிக்கிறது. ஹெபடைடிஸ் பி வைரஸ் (HBV) மற்றும் அதற்கு சிகிச்சையளிக்கும் தடுப்பூசி ஆகியவற்றை அவர் கண்டுபிடித்தார்.
  • கருப்பொருள் 2021: கல்லீரல் அழற்சியால் காத்திருக்க முடியாது”