TNPSC Current Affairs – English & Tamil – June 12, 2021
Want to Become a Bank, Central / State Govt Officer in 2020?
Join the Most awarded Coaching Institute & Get your Dream Job
Now Prepare for Bank, SSC Exams from Home. Join Online Coure @ lowest fee
Lifetime validity Bank Exam Coaching | Bank PO / Clerk Coaching | Bank SO Exam Coaching | All-in-One SSC Exam Coaching | RRB Railway Exam Coaching | TNPSC Exam Coaching | KPSC Exam Coaching
TNPSC Current Affairs – English & Tamil – June 12, 2021
TNPSC Aspirants,
The Current Affairs Section is one of the most important topics for the upcoming TNPSC Group I, Group II/IIA, Group IV, and TNUSRB Exams.
Check today’s TNPSC Daily Current Affairs(12th June, 2021) in this post.
Aspirants can expect questions from the Daily Current Affairs section in the upcoming TNPSC Exams and learning the Current Affairs section will also aid them in successfully preparing for the descriptive paper. So this process is a 2 in 1 initiative.
To make the learning more convenient, we will be providing the TNPSC Daily Current Affairs in both ENGLISH & TAMIL. This has been made in such a way that reflects the TNPSC pattern as TNPSC uses both the languages in the Question Paper and this will also make the preparations of the aspirants meaningful and will 100% fulfill the needs of the aspirants.
Download PDF – TNPSC Daily Current Affairs – English & Tamil – June 12, 2021
TAMIL NADU
- Andhra tops in funds received under the SMAM scheme
- Sub Mission on Agricultural Mechanisation (SMAM) was a scheme introduced in the financial year 2015 with an objective to increase mechanisation among small and marginal farmers.
- The maximum fund under this scheme was allocated to Andhra Pradesh (Rs. 621.23 crores) and Tamil Nadu (Rs. 421.65 crores) by the Union Ministry of Agriculture and Farmers Welfare. West Bengal received the least allocation (Rs. 53.81 crores).
- வேளாண் இயந்திரமயமாக்கல் துணைத் திட்டத்தின் கீழ் ஆந்திர பிரதேசம் அதிக நிதி பெற்றுள்ளது
- சிறு மற்றும் குறு விவசாயிகளிடையே இயந்திரமயமாக்கலை அதிகரிக்கும் நோக்கத்துடன் 2015ஆம் நிதியாண்டில் வேளாண் இயந்திரமயமாக்கல் துணை திட்டம் (SMAM) அறிமுகப்படுத்தப்பட்டது.
- இத்திட்டத்தின் கீழ் அதிகபட்ச நிதி, ஆந்திரப் பிரதேசம் (ரூ.621.23 கோடி) மற்றும் தமிழ்நாட்டிற்கு (ரூ.421.65 கோடி) மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தால் ஒதுக்கப்பட்டது. மேற்கு வங்காளம் குறைந்த ஒதுக்கீட்டைப் பெற்றது (ரூ. 53.81 கோடி).
SCIENCE AND TECHNOLOGY
- CHIME telescope detects numerous fast radio bursts
- CHIME telescope has detected numerous Fast Radio Bursts (FRB). Canadian Hydrogen Intensity Mapping Experiment (CHIME) collaboration includes researchers of Tata Institute for Fundamental Research (TIFR), Pune, and the National Centre for Radio Astrophysics (NCRA). They have assembled the largest collection of Fast Radio Bursts (FRB) in the telescope’s first FRB catalogue.
Fast Radio Bursts (FRB)
- FRBs are oddly bright flashes of radio waves that blaze for a few milliseconds and vanish without a trace. Their origins are unknown. The first FRB was detected in 2007.
CHIME project
- The CHIME project consists of a large stationary radio telescope in British Columbia, Canada. CHIME comprises of four massive cylindrical radio antennas located at the Dominion Radio Astrophysical Observatory, operated by the National Research Council of Canada in British Columbia.
- The telescope receives radio signals each day from half of the sky as the Earth rotates. Digital signal processing makes CHIME able to reconstruct and look in thousands of directions simultaneously. It has nearly quadrupled the number of fast radio bursts discovered to date.
- சைம் தொலைநோக்கி பல வேகமான ரேடியோ வெடிப்புகளைக் கண்டறிந்துள்ளது
- சைம் தொலைநோக்கி பல வேகமான ரேடியோ வெடிப்புகளை (FRB) கண்டறிந்தது. கனடியன் ஹைட்ரஜன் தீவிர மேப்பிங் பரிசோதனை (CHIME) ஒத்துழைப்பில், புனேவில் உள்ள அடிப்படை ஆராய்ச்சிக்கான டாடா நிறுவனம் (TIFR) மற்றும் தேசிய ரேடியோ வானியற்பியல் மையம் (NCRA) ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்களும் உள்ளனர். அவர்கள் தொலைநோக்கியின் முதல் FRB பட்டியலில் வேகமான ரேடியோ வெடிப்புகளின் (FRB) மிகப்பெரிய தொகுப்பை ஒன்றுசேர்த்துள்ளனர்.
வேகமான ரேடியோ வெடிப்புகள் (FRB)
- FRBக்கள் ஒரு சில மில்லி விநாடிகள் எரிந்து பின்னர் ஒரு தடயமும் இல்லாமல் மறைந்துவிடும் ரேடியோ அலைகளின் விசித்திரமான பிரகாசமான மின்னல்கள் ஆகும். அவற்றின் தோற்றம் பற்றி தெரியவில்லை. முதல் FRB 2007இல் கண்டறியப்பட்டது.
சைம் திட்டம்
- சைம் திட்டம் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள ஒரு பெரிய நிலையான ரேடியோ தொலைநோக்கியாகும். பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள கனடாவின் தேசிய ஆராய்ச்சி கவுன்சிலால் இயக்கப்படும் டொமினியன் ரேடியோ வானியற்பியல் ஆய்வகத்தில் அமைந்துள்ள நான்கு பெரிய உருளை ரேடியோ ஆண்டெனாக்களை சைம் கொண்டுள்ளது.
- பூமி சுழலும்போது தொலைநோக்கி ஒவ்வொரு நாளும் வானத்தின் ஒரு பாதியிலிருந்து ரேடியோ சமிக்ஞைகளைப் பெறுகிறது. டிஜிட்டல் சிக்னல் செயலாக்கம் சைம் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான திசைகளில் மறுகட்டமைக்க மற்றும் பார்க்க வழி செய்கிறது. இது இன்று வரை கண்டுபிடிக்கப்பட்ட வேகமான ரேடியோ வெடிப்புகளின் எண்ணிக்கையை கிட்டத்தட்ட நான்கு மடங்காக அதிகரித்துள்ளது.
- Russia supplies Iran with a new spy satellite ‘Kanopus-V’
- Russia is set to supply Iran with an advanced satellite system, ‘Kanopus-V’. It is a spy satellite that can be used to monitor middle-east and Gulf regions.
- Kanopus-V, last year came so close to CARTOSAT-2F, both being earth observation satellites moving in the Low Earth Orbit. But they didn’t collide with each other.
- ரஷ்யா ஈரானுக்கு ஒரு புதிய உளவு செயற்கைக்கோளான ‘கனோபஸ்–V‘ஐ வழங்குகிறது
- ரஷ்யா ஈரானுக்கு ஒரு மேம்பட்ட செயற்கைக்கோள் அமைப்பான ‘கனோபஸ்–வ V ‘ஐ வழங்க உள்ளது. இது மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா பிராந்தியங்களை கண்காணிக்க பயன்படுத்தக்கூடிய ஒரு உளவு செயற்கைக்கோள் ஆகும்.
- கனோபஸ்–V, கடந்த ஆண்டு கார்டோசாட்-2Fக்கு மிக நெருக்கமாக வந்தது. இரண்டும் கீழ் பூமி சுற்றுப்பாதையில் நகரும் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்களாகும். ஆனால் அவை ஒன்றுகொன்று மோதவில்லை.
ECONOMY
- Union Finance Minister Nirmala Sitharaman chairs the 44th GST Council meeting
- Union Finance Minister Nirmala Sitharaman chaired the 44th Goods and Services Tax (GST) Council meeting.
- The last GST Council meeting had recommended full exemption from IGST on several specified COVID-19 related goods which are valid up to 31 August 2021.
GST Council
- GST Council is a constitutional body set up under Article 279A of the Indian Constitution.
- The Council recommends the Union and State Government on issues related to Goods and Services Tax.
- The GST Council is chaired by the Union Finance Minister.
- The members are the Union State Minister of Revenue or Finance and Ministers in charge of Finance or Taxation of all the States.
- 44வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமை தாங்குகினார்
- 44வது சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் கூட்டத்திற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமை தாங்கினார்.
- கடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், கோவிட்-19 தொடர்புடைய பல பொருட்களுக்கு ஐஜிஎஸ்டியில் இருந்து முழு விலக்கு பரிந்துரைக்கப்பட்டது. இது 31 ஆகஸ்ட் 2021 வரை செல்லுபடியாகும்.
ஜிஎஸ்டி கவுன்சில்
- ஜிஎஸ்டி கவுன்சில் என்பது இந்திய அரசியலமைப்பின் 279ஏ விதியின் கீழ் நிறுவப்பட்ட அமைப்பு ஆகும்.
- இது சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பான பிரச்சினைகளில் மத்திய மற்றும் மாநில அரசுக்கு பரிந்துரைக்கிறது.
- ஜிஎஸ்டி கவுன்சில் மத்திய நிதியமைச்சர் தலைமையில் இயங்கும்.
- மத்திய வருவாய் அல்லது நிதி அமைச்சர் மற்றும் அனைத்து மாநிலங்களின் நிதி அல்லது வரிவிதிப்புக்கு பொறுப்பான அமைச்சர்கள் ஐஜிஎஸ்டி கவுன்சிலின் உறுப்பினர்கள் ஆவர்.
NATIONAL
- UNDP India report lauds Indis’s Aspirational Districts Programme
- In an independent appraisal report, United Nations Development Programme (UNDP) India has lauded the Aspirational Districts Programme (ADP) of India. It is seen as a very successful model of local area development that should serve as a best practice for several other countries where regional disparities in development status persist for many reasons.
- The report was handed over by UNDP India Resident Representative Shoko Noda to NITI Aayog Vice-Chairman Dr. Rajiv Kumar and CEO Amitabh Kant.
Aspirational Districts Programme
- The Aspirational Districts Programme was launched by the Prime Minister in January 2018 as a part of the government’s effort to raise the living standards of its citizens and ensure inclusive growth for all, ‘Sabka Saath Sabka Vikas’.
- UNDP இந்தியா அறிக்கை இந்தியாவின் ஆர்வமுள்ள மாவட்டங்கள் திட்டத்திற்கு பாராட்டு தெரிவித்தது
- ஐக்கிய நாடுகள் மேம்பாடு திட்டம் (UNDP) இந்தியா, ஒரு சுயாதீனமான மதிப்பீட்டு அறிக்கையில், இந்தியாவின் ஆர்வமுள்ள மாவட்டங்கள் திட்டத்தை (ADP) பாராட்டியுள்ளது. இது உள்ளூர் பகுதி வளர்ச்சியின் மிகவும் வெற்றிகரமான முன்மாதிரியாக பார்க்கப்படுகிறது. இது பல காரணங்களுக்காக வளர்ச்சி நிலையில் பிராந்திய ஏற்றத்தாழ்வுகள் நீடிக்கும் பல நாடுகளுக்கு சிறந்த நடைமுறையாக இருக்கும்.
- இந்த அறிக்கையை, ஐக்கிய நாடுகள் மேம்பாடு திட்ட இந்திய பிரதிநிதி ஷோகோ நோடா, நிதி ஆயோக் துணைத் தலைவர் டாக்டர் ராஜீவ் குமார் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த் ஆகியோரிடம் வழங்கினார்.
ஆர்வமுள்ள மாவட்டங்கள் திட்டம்
- 2018 ஜனவரியில், குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், அனைவருக்கும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்யவும் மத்திய அரசு மேற்கொண்ட முயற்சியின் ஒரு பகுதியாக, ‘அனைவரும் இணைவோம் அனைவரும் வளர்வோம்‘ என்ற திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்.
INTERNATIONAL
- Sri Lankan President Gotabaya Rajapaksa inaugurates China-Sri Lanka Friendship Hospital in Polonnaruwa
- Sri Lankan President Gotabaya Rajapaksa inaugurated the China-Sri Lanka Friendship Hospital in Polonnaruwa. It was built with a Chinese grant of $60 million. The hospital is mainly focused on treating kidney ailments, which is widely prevalent among farmers there. The causal factor is unknown.
- Other projects with China’s support:
- Bandaranaike Memorial International Conference Hall in Colombo
- The Nelum Pokuna Mahinda Rajapaksa Threate
- Project with India’s support:
- Jaffna Cultural Centre is completed yet not inaugurated.
- பொலன்னறுவையில் சீனா– இலங்கை நட்புறவு மருத்துவமனையை இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சே திறந்து வைத்தார்
- இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே பொலன்னறுவையில் உள்ள சீனா-இலங்கை நட்புறவு மருத்துவமனையை திறந்து வைத்தார். இம்மருத்துவமனை 60 மில்லியன் டாலர் சீன மானியத்துடன் கட்டப்பட்டது. இது முக்கியமாக சிறுநீரக நோய்களுக்கு சிகிச்சையளிப்பதில் கவனம் செலுத்துகிறது. சிறுநீரக நோய் அங்குள்ள விவசாயிகளிடையே பரவலாக உள்ளது. ஆனால் இதன் காரணம் தெரியவில்லை.
- சீனாவின் ஆதரவுடன் பிற திட்டங்கள்:
- கொழும்புவில் பண்டாரநாயக்க நினைவு சர்வதேச மாநாட்டு மண்டபம்
- நீலும் பொக்குன மஹிந்த ராஜபக்சே கலையரங்கம்
- இந்தியாவின் ஆதரவுடன் திட்டம்:
- யாழ்ப்பாண கலாசார நிலையம் முடிவுற்று இன்னும் திறந்து வைக்கப்படவில்லை.
- Costa Rica’s Grynspan becomes the first woman to head UNCTAD
- Costa Rica’s Grynspan became the first woman and Central American Secretary-General of the UNCTAD. Grynspan has been the Secretary-General of the Ibero-American General Secretariat since 2014. She was the second Vice-President of Costa Rica from 1994 to 1998.
United Nations Conference on Trade and Development (UNCTAD)
- UNCTAD was established in It supports developing countries in their efforts to benefit from the globalised economy and to deal with potential drawbacks from economic integration.
- Headquarters: Geneva, Switzerland
- Reports published by UNCTAD:
- Trade and Development Report
- World Investment Report
- The Least Developed Countries Report
- Information and Economy Report
- Technology and Innovation Report
- Commodities and Development Report
- கோஸ்டா ரிகாவின் கிரின்ஸ்பான் UNCTADஇன் முதல் பெண் தலைவர் ஆகிறார்
- கோஸ்டா ரிகாவின் கிரின்ஸ்பான் UNCTADஇன் முதல் பெண் மற்றும் மத்திய அமெரிக்க பொதுச் செயலாளர் ஆனார். கிரின்ஸ்பான் 2014 முதல் ஐபீரோ-அமெரிக்க பொதுச் செயலகத்தின் பொதுச் செயலாளராக இருந்து வருகிறார். அவர் 1994 முதல் 1998 வரை கோஸ்டா ரிகாவின் இரண்டாவது துணை ஜனாதிபதியாக இருந்தார்.
வர்த்தகம் மற்றும் அபிவிருத்தி தொடர்பான ஐக்கிய நாடுகள் மாநாடு (UNCTAD)
- UNCTAD 1964இல் நிறுவப்பட்டது. உலகமயப்படுத்தப்பட்ட பொருளாதாரத்தில் இருந்து பயனடைவதற்கும் பொருளாதார ஒருங்கிணைப்பிலிருந்து சாத்தியமான குறைபாடுகளைக் கையாள்வதற்கும் வளரும் நாடுகள் மேற்கொண்ட முயற்சிகளுக்கு இது ஆதரவளிக்கிறது.
- தலைமையகம்: ஜெனீவா, சுவிட்சர்லாந்து
- UNCTAD வெளியிடும் அறிக்கைகள்:
- வர்த்தக மற்றும் அபிவிருத்தி அறிக்கை
- உலக முதலீட்டு அறிக்கை
- குறைந்த வளர்ச்சியடைந்த நாடுகள் அறிக்கை
- தகவல் மற்றும் பொருளாதார அறிக்கை
- தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அறிக்கை
- பொருட்கள் மற்றும் அபிவிருத்தி அறிக்கை
PERSONS IN NEWS
- The first Olympian from independent India to complete a marathon at the Olympics, Surat Singh Mathur passed away at 90
- The first Olympian from independent India to complete a marathon at the Olympics, Surat Singh Mathur passed away at 90. Mathur completed the marathon in 52nd place in 2:58.92s in the 1952 Helsinki Olympics.
- He also won a bronze medal at the first Asian Games in 1951.
- ஒலிம்பிக்கில் மராத்தான் ஓட்டத்தை முடித்த சுதந்திர இந்தியாவின் முதல் ஒலிம்பிக் வீரர் சூரத் சிங் மாத்தூர் 90 வயதில் காலமானார்.
- ஒலிம்பிக்கில் மராத்தான் ஓட்டத்தை முடித்த சுதந்திர இந்தியாவின் முதல் ஒலிம்பிக் வீரர் சூரத் சிங் மாத்தூர் தனது 90 வயதில் காலமானார். மாத்தூர், 1952 ஹெல்சின்கி ஒலிம்பிக்கில் 2:58.92 நொடிகளில் 52வது இடத்தில் மராத்தான் ஓட்டத்தை நிறைவு செய்தார்.
- 1951ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தையும் வென்றார்.
- UNSG’s report recalls Indian peacekeeper Sepoy Johnson Beck of UNDOF
- Indian peacekeeper Sepoy Johnson Beck sacrificed in the line of duty while serving in the UNDOF (UN Disengagement Observer Force) Mission. He was commemorated on the International Day of United Nations Peacekeepers on 29 May 2020 and was posthumously awarded the prestigious Dag Hammarskjold Medal.
UNDOF
- India is currently the third-largest troop contributor to UNDOF, with a contingent of around 200 UN Peacekeepers are known as blue helmets.
- ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளரின் அறிக்கை UNDOFஇன் இந்திய அமைதிகாக்கும் சிப்பாய் ஜான்சன் பெக்கை நினைவுகூர்ந்துள்ளது
- இந்திய அமைதிகாக்கும் சிப்பாய் ஜோன்சன் பெக், UNDOF(ஐ.நா. பணிநீக்க பார்வையாளர் படை) பணியில் பணியாற்றியபோது கடமையின்போது உயிர்த்தியாகம் செய்தார். 29 மே 2020 அன்று ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் படையினரின் சர்வதேச தினத்தன்று நினைவுகூரப்பட்ட அவருக்கு மரணத்திற்குப் பிறகு மதிப்புமிக்க டாக் ஹம்மர்ஸ்க்ஜோல்ட் பதக்கம் வழங்கப்பட்டது.
UNDOF
- இந்தியா தற்போது சுமார் 200 அமைதிகாக்கும் படைவீரர்களுடன் UNDOFக்கு மூன்றாவது பெரிய படை பங்களிப்பாளராக உள்ளது. ஐ.நா. அமைதிகாக்கும் படையினர் புளூ ஹெல்மெட்ஸ் என்று அழைக்கப்படுகின்றனர்.
SPORTS
- Five Indian women cricketers join the Hundred women’s competition
- Five Indian women cricketers – Shafali Verma, Harmanpreet Kaur, Jemimah Rodrigues, Smriti Mandhana, and Deepti Sharma, have joined The Hundred women’s competition.
- The Hundred tournament is organised by the England and Wales Cricket Board. It is played in a 100-ball format in which some of the best women cricketers from around the world will compete for different franchises.
- ஹண்டிரட் பெண்கள் போட்டியில் ஐந்து இந்திய கிரிக்கெட் வீராங்கனைகள் இணைந்துள்ளனர்
- ஷஃபாலி வர்மா, ஹர்மன்பிரீத் கவுர், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஸ்மிருதி மந்தனா மற்றும் தீப்தி சர்மாஆகிய ஐந்து இந்திய கிரிக்கெட் வீராங்கனைகள், ஹண்டிரட் பெண்கள் போட்டியில் இணைந்துள்ளனர்.
- இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்தால் ஹண்டிரட் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது. இது 100 பந்துகளுக்கு விளையாடப்படுகிறது. இதில் உலகெங்கிலும் உள்ள சிறந்த கிரிக்கெட் வீராங்கனைகள் வெவ்வேறு அணிகளுக்காக போட்டியிடுவார்கள்.
IMPORTANT DAYS
- World Day Against Child Labour – 12 June
- World Day Against Child Labour is observed on 12 June every year. World Day Against Child Labour was first observed in 2002 by the International Labour Organisation (ILO), a United Nations agency.
- 2021 Theme: ‘Act Now, End Child Labour’
- சர்வதேச குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிரான தினம் – 12 ஜூன்
- சர்வதேச குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிரான தினம் ஒவ்வொரு ஆண்டும் 12 ஜூன் அன்று அனுசரிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பான சர்வதேச தொழிலாளர் அமைப்பு ILO) 2002ஆம் ஆண்டில் சர்வதேச குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிரான தினத்தை முதன்முதலில் அனுசரித்தது.
- 2021 கருப்பொருள்: ‘இப்போது செயல்படுங்கள், குழந்தைத் தொழிலாளரரை முடிவுக்கு கொண்டுவாருங்கள்‘ (Act Now, End Child Labour)
DAY IN HISTORY
- Nazi’s Holocaust victim Anne Frank’s Birth Anniversary – 12 June
- Jewish victim of Nazi’s Holocaust, Anne Frank, was born on 12 June 1929 in Germany. She was forced into hiding with her family for two years during the Nazi occupation of The Netherlands during World War II.
- She wrote a diary which was later published as “The Diary of a Young Girl” by her father in 1947. The diary was gifted for her 13th birthday and it depicts her life from 12 June 1942 to 1 August 1944. She was later captured and transferred to the Bergen-Belson concentration camp, where she died of typhoid in 1945.
- நாஜியின் இனப்படுகொலையில் பாதிக்கப்பட்ட அன்னே பிராங்கின் பிறந்த நாள் – 12 ஜூன்
- நாஜியின் இனப்படுகொலையில் பாதிக்கப்பட்ட யூதப்பெண் அன்னே ஃபிராங்க், ஜெர்மனியில் 12 ஜூன் 1929 அன்று பிறந்தார். இரண்டாம் உலகப் போரில் நெதர்லாந்தில் நாஜி ஆக்கிரமிப்பின் போது அவர் இரண்டு ஆண்டுகள் தனது குடும்பத்துடன் ஒளிந்து கொண்டார்.
- அவர் ஒரு நாட்குறிப்பை எழுதினார். அது பின்னர் அவரது தந்தையால் “ஒரு இளம் பெண்ணின் நாட்குறிப்பு“ என்று 1947இல் வெளியிடப்பட்டது. அவரது 13வது பிறந்த நாளுக்காக இந்த நாட்குறிப்பு பரிசாக வழங்கப்பட்டது. அது 12 ஜூன் 1942 முதல் 1 ஆகஸ்ட் 1944 வரை உள்ள அவரது வாழ்க்கையை சித்தரிக்கிறது. பின்னர் அவர் பிடிபட்டு பெர்கன்–பெல்சன் சித்திரவதை முகாமுக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் 1945இல் டைபாய்டு நோயால் இறந்தார்.
Students can download the Daily TNPSC Current Affairs in English & Tamil as PDF from the links given below – TNPSC daily Current Affairs – English & Tamil – June 12, 2021.
Download TNPSC Daily Current Affairs – PDF | |
12th May, 2021 | Will be Available soon |
Check TNPSC – Daily Current Affairs – May Month in TAMIL & English from bankersdaily from the links below.
Read – TNPSC Daily Current Affairs – May 2021