TNPSC Current Affairs – English & Tamil – June 19, 2021

TNPSC Aspirants,

The Current Affairs Section is one of the most important topics for the upcoming TNPSC Group I, Group II/IIA, Group IV, and TNUSRB Exams.

Check today’s TNPSC Daily Current Affairs(19th June, 2021) in this post.

Aspirants can expect questions from the Daily Current Affairs section in the upcoming TNPSC Exams and learning the Current Affairs section will also aid them in successfully preparing for the descriptive paper. So this process is a 2 in 1 initiative.

To make the learning more convenient, we will be providing the TNPSC Daily Current Affairs in both ENGLISH & TAMIL. This has been made in such a way that reflects the TNPSC pattern as TNPSC uses both the languages in the Question Paper and this will also make the preparations of the aspirants meaningful and will 100% fulfill the needs of the aspirants.


Download PDF – TNPSC Daily Current Affairs – English & Tamil – June 19 2021


SCIENCE AND TECHNOLOGY


  1. DBT-BIRAC supported SENSIT Rapid COVID-19 Ag Kit has been developed for rapid detection of COVID-19
  • Under the aegis of COVID-19 Research Consortium, DBT-BIRAC supported product, ‘SENSIT Rapid COVID-19 Ag kit’, has been developed by Ubio Biotechnology Systems Pvt. Ltd. for qualitative detection of SARS CoV-2 virus within 15 minutes. The samples are collected using nasopharyngeal swabs from the individual.
  • The test works on the principle of sandwich immunoassay and utilises a pair of monoclonal antibodies, which when bound to COVID-19 specific antigen, results in the appearance of a coloured line. The kit exhibits sensitivity and specificity of 86% and 100%, respectively and has a shelf life of 24 months.
  1. DBT-BIRACஇன் ஆதரவுடன் கோவிட்-19 விரைவாக கண்டறிவதற்காக சென்சிட் ரேபிட் கோவிட்-19 ஏஜி கிட் உருவாக்கப்பட்டுள்ளது
  • கோவிட்-19 ஆராய்ச்சி கூட்டமைப்பின் கீழ், DBT-BIRACஇன் ஆதரவுடன் 15 நிமிடங்களுக்குள் சார்ஸ் கோவி-2 வைரஸை தர ரீதியாக கண்டறிவதற்காகசென்சிட் ரேபிட் கோவிட்-19 ஏஜி கிட்‘, யூபியோ பயோடெக்னாலஜி சிஸ்டம்ஸ் பிரைவேட் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. தனிநபரின் மூக்கிலிருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதிக்கப்படும்.
  • இச்சோதனை சாண்ட்விச் இம்யுனோ அசே கோட்பாட்டின் அடிப்படையில் செயல்படுகிறது மற்றும் கோவிட்-19 குறிப்பிட்ட ஆன்டிஜெனுக்கு கட்டுப்பட்டால், ஒரு வண்ண கோடு தோன்றும். இம்முறை ஒரு ஜோடி மோனோகுளோனல் ஆன்டிபாடிகளைப் பயன்படுத்துகிறது. இந்த கிட் முறையே 86% மற்றும் 100% உணர்திறன் மற்றும் குறிப்புத் தன்மையை வெளிப்படுத்துகிறது மற்றும் 24 மாதங்கள் ஆயுட்காலம் உள்ளது.

NATIONAL


  1. Arjun Munda virtually inaugurates the Second National Sickle Cell Conclave
  • Union Minister of Tribal Affairs Arjun Munda virtually inaugurated the Second National Sickle Cell Conclave. The Conclave was held to mark the World Sickle Cell Day observed on 19 June 2021.
  • The Conclave was organised by the Union Ministry of Tribal Affairs in collaboration with the Federation of Indian Chambers of Commerce & Industry (FICCI), Novartis, Apollo Hospitals, Piramal Foundation, GASCDO and NASCO.
  • Sickle Cell Disease (SCD), which is the most prevalent inherited blood disorder, is widespread amongst many tribal population groups in India. There are several cost-effective interventions for the disease in India, but the access to care for SCD in the tribal regions of India is limited.
  1. அர்ஜுன் முண்டா இரண்டாவது தேசிய அரிவாளணு மாநாட்டைத் மெய்நிகராக தொடங்கி வைத்தார்
  • மத்திய பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சர் அர்ஜூன் முண்டா இரண்டாவது தேசிய அரிவாளணு மாநாட்டை தொடங்கி வைத்தார். 19 ஜூன் 2021 அன்று அனுசரிக்கப்படும் உலக அரிவாளணு தினத்தை குறிக்கும் வகையில் இந்த மாநாடு நடத்தப்படுகிறது.
  • இந்திய வர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்பு (FICCI), நோவார்ட்டிஸ், அப்பல்லோ மருத்துவமனைகள், பிரமல் அறக்கட்டளை, காஸ்க்டோ மற்றும் நாஸ்கோ ஆகியவற்றின் கூட்டமைப்புடன் இணைந்து மத்திய பழங்குடியினர் விவகார அமைச்சகத்தால் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • அரிவாளணு நோய் (SCD), மிகவும் பரவலான மரபுவழி இரத்த கோளாறு ஆகும். இந்தியாவில் பல பழங்குடி குழுக்களிடையே இந்த நோய் பரவலாக உள்ளது. இந்தியாவில் இந்த நோய்க்கு பல செலவு குறைந்த சிகிச்சைகள் உள்ளன. ஆனால் இந்தியாவின் பழங்குடி பகுதிகளில் இந்த நோய்க்கான பராமரிப்பு அணுகல் குறைவாக உள்ளது.

MILITARY EXERCISES


  1. Maiden bilateral naval exercise between Indian Navy and European Naval Force begins in the Gulf of Aden
  • The maiden bilateral naval exercise between Indian Navy and European Naval Force (EUNAVFOR) has begun in the Gulf of Aden. Indian Naval Ship Trikand, a mission deployed for anti-piracy operations, is participating in the exercise.
  • A total of five warships from four navies are participating in the exercise – Italian Navy Ship ITS Carabinere, Spanish Navy Ship ESPS Navarra, and two French Navy Ship FS Tonnerre and FS Surcouf.
  • Indian Navy and EUNAVFOR also have regular interaction through SHADE (Shared Awareness and De-confliction) meetings held annually in Bahrain.

  1. ஏடன் வளைகுடாவில் இந்திய கடற்படைக்கும் ஐரோப்பிய கடற்படைக்கும் இடையிலான முதல் இருதரப்பு கடற்படை பயிற்சி தொடங்கியது
  • ஏடன் வளைகுடாவில் இந்திய கடற்படைக்கும் ஐரோப்பிய கடற்படைக்கும் (EUNAVFOR)  இடையேயான முதல் இருதரப்பு கடற்படை பயிற்சி தொடங்கியது. கடற்கொள்ளை எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும் இந்திய கடற்படை கப்பல் திரிகன்ட் இந்த பயிற்சியில் பங்கேற்கிறது.
  • நான்கு கடற்படைகளில் இருந்து மொத்தம் ஐந்து போர்க்கப்பல்கள் இந்த பயிற்சியில் பங்கேற்கின்றன – இத்தாலிய கடற்படை கப்பலான கரபினேர், ஸ்பானிஷ் கடற்படை கப்பலான எஸ்பிஎஸ் நவாரா, மற்றும் இரண்டு பிரெஞ்சு கடற்படை கப்பல்களான எஃப்எஸ் டன்னர்ரே மற்றும் எஃப்எஸ் சுர்கூஃப்.
  • பஹ்ரைனில் ஆண்டுதோறும் நடைபெறும் ஷேட் (SHADEபகிரப்பட்ட விழிப்புணர்வு மற்றும் மோதல் நீக்கம்) கூட்டங்கள் மூலம் இந்திய கடற்படை மற்றும் EUNAVFOR ஆகியவை வழக்கமான தொடர்புகளைக் கொண்டுள்ளன.

SCHEMES


  1. Quality Council of India launches the Indian Certification of Medical Devices Plus Scheme
  • Quality Council of India (QCI) has launched the Indian Certification of Medical Devices (ICMED) Plus Scheme.
  • ICMED Scheme had been launched for Certification of Medical Devices in 2016. The ICMED 13485 PLUS scheme, which is a modified version of the ICMED Scheme, will undertake verification of the quality, safety and efficacy of medical devices.
  • This is the first scheme in the world in which quality management systems along with product certification standards are integrated with regulatory requirements.
  1. இந்திய தர கவுன்சில் இந்திய மருத்துவ சாதனங்கள் பிளஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தியது
  • இந்திய தர கவுன்சில் (QCI) மருத்துவ சாதனங்களின் இந்திய சான்றிதழ் (ICMED) பிளஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • 2016ஆம் ஆண்டு மருத்துவச் சாதனங்களின் சான்றளிப்புக்காக ICMED திட்டம் தொடங்கப்பட்டது. ICMED திட்டத்தின் திருத்தப்பட்ட பதிப்பை உள்ளடக்கிய ICMED 13485 பிளஸ் திட்டம் மருத்துவ சாதனங்களின் தரம், பாதுகாப்பு மற்றும் செயல்திறனை சரிபார்க்கும்.
  • தயாரிப்பு சான்றிதழ் தரங்களுடன் தரமான மேலாண்மை அமைப்புகள் ஒழுங்குமுறை தேவைகளுடன் ஒருங்கிணைக்கப்பட்ட உலகின் முதல் திட்டம் இதுவாகும்.

REPORTS AND INDICES


  1. Global Peace Index 2021
  • 15th edition of Global Peace Index 2021 was released by the Institute of Economics and Peace (IEP) based in Sydney, Australia. In this index, 163 countries were ranked according to the level of peacefulness in their country. The IEP uses 23 qualitative and quantitative indicators to measure the state of peace across three parameters of societal safety and security, ongoing domestic and international conflict and the degree of militarisation.
RANK COUNTRY
1 Iceland
2 New Zealand
3 Denmark

 

Highlights Global Peace Index 2021

  • Bhutan, Nepal and Bangladesh emerged as the top three most peaceful countries in South Asia.
  • Afghanistan has been ranked as the least peaceful country in the South Asian
  • Out of the 10 most peaceful countries in the world, 8 are from Europe.
  • Only three out of nine regions in the world have improved in the peace index. The largest improvement occurred in the Middle East and North Africa.
  • The economic impact of violence to the global economy in 2020 was $14.96 trillion in purchasing power parity (PPP) terms which is equivalent to 6 per cent of the world’s economic activity.
  • The report points out that the average level of global peacefulness declined by 0.07 per cent.

5. உலக அமைதி குறியீடு 2021

  • 2021ஆம் ஆண்டின் உலக அமைதிக் குறியீட்டின் 15வது பதிப்பை ஆஸ்திரேலியாவின் சிட்னியை தளமாகக் கொண்ட பொருளாதாரம் மற்றும் அமைதி நிறுவனம் (IEP) வெளியிட்டது. இந்த குறியீட்டில், 163 நாடுகள் தங்கள் நாட்டின் அமைதிக்கு ஏற்ப தரவரிசைப்படுத்தப்பட்டன. சமூக பாதுகாப்பு, நடந்து கொண்டிருக்கும் உள்நாட்டு மற்றும் சர்வதேச மோதல் மற்றும் இராணுவமயமாக்கலின் அளவு ஆகிய மூன்று அளவுருக்கள் முழுவதும் சமாதான நிலையை அளவிட IEP 23 தர மற்றும் அளவு குறிகாட்டிகளைப் பயன்படுத்துகிறது
தரவரிசை நாடு
1 ஐஸ்லான்ட்
2 நீயூஸிலாந்து
3 டென்மார்க்

உலக அமைதி குறியீடு 2021இன் சிறப்பம்சங்கள்

  • தெற்காசியாவில் மிகவும் அமைதியான முதல் மூன்று நாடுகளாக பூட்டான், நேபாளம் மற்றும் பங்களாதேஷ் ஆகியவை உள்ளன.
  • தெற்காசிய பிராந்தியத்தில் ஆப்கானிஸ்தான் மிகவும் அமைதியற்ற நாடாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
  • உலகின் மிகவும் அமைதியான 10 நாடுகளில், 8 ஐரோப்பாவை சேர்ந்தவை.
  • உலகின் ஒன்பது பிராந்தியங்களில் மூன்று மட்டுமே அமைதிக் குறியீட்டில் மேம்பட்டன. மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டது.
  • 2020இல் உலகப் பொருளாதாரத்திற்கு வன்முறையின் பொருளாதார தாக்கம் வாங்கும் சக்தி சமநிலையில் (PPP) 96 டிரில்லியன் டாலராக இருந்தது. இது உலகின் பொருளாதார நடவடிக்கைகளில் 11.6 சதவீதத்திற்கு சமமாகும்.
  • உலக அமைதியின் சராசரி அளவு07 சதவிகிதம் குறைந்துவிட்டது என்று இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
  1. ‘Vital Statistics of India Based on The Civil Registration System’ report was released by the Registrar General of India
  • ‘Vital Statistics of India Based on The Civil Registration System’ report was released by the Registrar General of India.

Highlights of the report:

  • 14 States/Union Territories achieved a 100% level of birth registrations.
  • 19 States/Union Territories achieved a 100% level of death registrations.
  • The level of death registration declined in Manipur, Arunachal Pradesh and Daman and Diu.
  • Mizoram and Tripura reported 100% registration of both births and deaths.
  • Telangana recorded the highest increase in the share of registered deaths from 5% to 97.2%.

Top 3 states in Sex Ratio at Birth (SRB)

S.No State Sex Ratio at Birth
1. Arunachal Pradesh 1024
2. Nagaland 1001
3. Mizoram 975

Bottom 3 states in Sex Ratio at Birth (SRB)

S.No State Sex Ratio at Birth
1. Gujarat 901
2. Assam 903
3. Madhya Pradesh 905

 

S.No Category 2018 2019
1. Birth registration 87.8% 92.7%
2. Death registration 84.6% 92%
3. Registered births 2.33 crore 2.48 crore
4. Registered deaths 69.5 lakh 76.4 lakh

SEX RATIO

S.No Category 2019
1. Institutional births in the total registered births 81.2%.
2.

 

Male 52.1%
3. Female 47.9%.

DEATH

S.No Category Percentage
1. Male 59.6%
2. Female 40.4%.

 INFANT DEATH

S.No Category Percentage
1. Urban 75.5%
2. Rural 24.5%

6. சிவில் பதிவு முறையின் அடிப்படையில் இந்திய முக்கிய புள்ளிவிவரங்கள்அறிக்கை இந்திய பதிவாளர் ஜெனரலால் வெளியிடப்பட்டது

  • சிவில் பதிவு முறையின் அடிப்படையில் இந்திய முக்கிய புள்ளிவிவரங்கள் அறிக்கை இந்திய பதிவாளர் ஜெனரலால் வெளியிடப்பட்டது.

அறிக்கையின் சிறப்பம்சங்கள்:

  • 14 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் 100% பிறப்பு பதிவு செய்திருக்கின்றன.
  • 19 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் 100% இறப்பு பதிவு செய்திருக்கின்றன.
  • மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் டாமன் மற்றும் டையூவில் இறப்பு பதிவு அளவு குறைந்தது.
  • மிசோரம் மற்றும் திரிபுராவில் பிறப்பு மற்றும் இறப்புகள் இரண்டும் 100% பதிவு செய்யப்பட்டுள்ளது.
  • பதிவு செய்யப்பட்ட இறப்புகளின் அதிக உயர்வை தெலுங்கானா5% லிருந்து 97.2% ஆக பதிவு செய்தது.

பிறப்பு பாலின விகிதத்தில் சிறந்த 3 மாநிலங்கள் (SRB)

.எண் மாநிலம் பிறப்பு பாலின விகிதம்
1. அருணாச்சலபிரதேசம் 1024
2. நாகாலாந்து 1001
3. மிசோரம் 975

பிறப்பு பாலின விகிதத்தில் கீழே உள்ள 3 மாநிலங்கள் (SRB)

.எண் மாநிலம் பிறப்பு பாலின விகிதம்
1. குஜராத் 901
2. அசாம் 903
3. மத்தியப் பிரதேசம் 905

 

.எண் வகை 2018 2019
1. பிறப்பு பதிவு 87.8% 92.7%
2. இறப்பு பதிவு 84.6% 92%
3. பதிவு செய்யப்பட்ட பிறப்புகள் 2.33 கோடி 2.48 கோடி
4. பதிவு செய்யப்பட்ட இறப்புகள் 69.5 லட்சம் 76.4 லட்சம்

பாலின விகிதம்

.எண் வகை 2019
1. பதிவு செய்யப்பட்ட மொத்த பிறப்புகளில் நிறுவன ரீதியான பிறப்புகள் 81.2%.
2.

 

ஆண் 52.1%
3. பெண் 47.9%.

இறப்பு

.எண் வகை  விழுக்காடு
1. ஆண் 59.6%
2. பெண் 40.4%.

குழந்தை மரணம்

.எண் வகை விழுக்காடு
1. நகரம் 75.5%
2. கிராமம் 24.5%

 


SPORTS


  1. Indian sprint legend flying Sikh Milkha Singh passed away at the age of 91
  • Indian sprint legend flying Sikh Milkha Singh passed away due to COVID-19 at the age of 91. He was a Padma Shri
  • Captain Milkha Singh was an Indian track and field sprinter. He was the only athlete to win gold in 400 meters race at the Asian Games as well as the Commonwealth Games. He also won gold medals in the 1958 and 1962 Asian Games.
  • The Flying Sikh represented India in the 1956 Summer Olympics in Melbourne, the 1960 Summer Olympics in Rome and the 1964 Summer Olympics in Tokyo.

7. இந்திய தடகள ஜாம்பவான் பறக்கும் சீக்கியர் மில்கா சிங் தனது 91 வயதில் காலமானார்

  • இந்திய தடகள ஜாம்பவான் பறக்கும் சீக்கியர் மில்கா சிங் தனது 91 வயதில் கோவிட்-19 காரணமாக காலமானார். இவர் பத்மஸ்ரீ விருது பெற்றவர்.
  • கேப்டன் மில்கா சிங் ஒரு இந்திய தடகள வீரர் ஆவார். ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்ற ஒரே தடகள வீரர் இவர் மட்டுமே. 1958 மற்றும் 1962 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றார்.
  • பறக்கும் சீக்கியர் மெல்போர்னில் 1956 கோடைக்கால ஒலிம்பிக், ரோமில் 1960 கோடை ஒலிம்பிக் மற்றும் டோக்கியோவில் 1964 கோடை ஒலிம்பிக் ஆகியவற்றில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தினார்.

  1. India’s Shefali Verma becomes the youngest woman cricketer to score twin half-centuries in debut Test match
  • India’s 17-year-old Shafali Verma became the youngest woman cricketer and the fourth overall to score twin half-centuries in her debut Test match. She scored 96 in the first innings and 55 in the second innings
  • She beat the record of Australia’s Jessica Louise Jonassen, who was 22 when she scored fifties in both innings of her debut Test match against England.
  1.  அறிமுக டெஸ்ட் போட்டியில் இரட்டை அரைசதம் அடித்த இளம் பெண் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை இந்தியாவின் ஷெஃபாலி வர்மா பெற்றார்
  • இந்தியாவின் 17 வயதான ஷெஃபாலி வர்மா தனது முதல் டெஸ்ட் போட்டியில் இரட்டை அரைசதங்கள் அடித்த இளம் பெண் கிரிக்கெட் வீரர் மற்றும் ஒட்டுமொத்தத்தில் நான்காவது வீரர் ஆனார். அவர் முதல் இன்னிங்ஸில் 96 ரன்கள் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் 55 ரன்கள் எடுத்திருந்தார்.
  • இங்கிலாந்துக்கு எதிரான தனது முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் அரைசதம் அடித்த போது, 22 வயதான ஆஸ்திரேலியாவின் ஜெசிகா லூயிஸ் ஜோனாசனின் சாதனையை அவர் முறியடித்தார்.

IMPORTANT DAYS


  1. Sickle Cell Day – 19 June
  • World Sickle Cell Day is observed every year on 19 June. United Nations General Assembly (UNGA) acknowledged Sickle Cell Disease as a public health problem in The day aims to raise awareness about Sickle Cell Disease.
  • Sickle Cell Disease is an inherited blood disease, which is most common among people of African, Arabian and Indian origin. It is primarily a group of disorders, which affects the molecule in red blood cells and haemoglobin. People diagnosed with Sickle Cell Disease have haemoglobin S. This is an atypical haemoglobin molecule that has the tendency to distort red blood cells into a sickle.
  • Common symptoms of Sickle Cell Disease include anaemia, swelling in hands and feet, eyesight problems, pain, delay in growth and regular infections. The only cure for this disease is either stem cell transplant or bone marrow.
  1. அரிவாளணு தினம் – 19 ஜூன்
  • உலக அரிவாளணு தினம் ஒவ்வொரு ஆண்டும் 19 ஜூன் அன்று அனுசரிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் பொதுச் சபை (UNGA) 2008இல் அரிவாளணு நோயை ஒரு பொது சுகாதார பிரச்சினையாக அறிவித்தது. அரிவாளணு நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • அரிவாளணு நோய் என்பது ஆப்பிரிக்க, அரேபிய மற்றும் இந்திய வம்சாவளி மக்களிடையே மிகவும் பொதுவான ஒரு மரபுவழி இரத்த நோயாகும். இது முதன்மையாக இரத்த சிவப்பணுக்கள் மற்றும் ஹீமோகுளோபின் மூலக்கூற்றை பாதிக்கும் கோளாறுகளின் குழு ஆகும். அரிவாளணு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஹீமோகுளோபின் எஸ் மூலக்கூறு இருக்கும். இது இரத்த சிவப்பணுக்களை அரிவாள்களாக சிதைக்கும் போக்கு கொண்ட ஒரு அசாதாரண ஹீமோகுளோபின் மூலக்கூறு ஆகும்.
  • அரிவாளணு நோயின் பொதுவான அறிகுறிகள் இரத்த சோகை, கைகள் மற்றும் கால்களில் வீக்கம், கண்பார்வை பிரச்சினைகள், வலி, வளர்ச்சியில் தாமதம் மற்றும் வழக்கமான தொற்றுகள் ஆகியவை அடங்கும். இந்த நோயின் ஒரே சிகிச்சை ஸ்டெம்செல் மாற்று அறுவை சிகிச்சை அல்லது எலும்பு மஜ்ஜை சிகிச்சை ஆகும்.

  1. World Refugee Day – 20 June
  • World Refugee Day is observed every year on 20 June to respect and honour the courage and resilience of refugees. The day aims to build up public awareness and support for the human rights of refugees.
  • 2021 Theme: “Together we heal, learn and shine”
  • According to the United Nations 1951 Refugee Convention, “People who fled their homes and countries due to “a well-founded fear of persecution because of his/her race, religion, nationality, membership of a particular social group, or political opinion is a refugee”.
  • World Refugee Day was first held on 20 June 2001. It was earlier known as Africa Refugee Day. The United Nations General Assembly designated it as an international day in December 2020.
  1. உலக அகதிகள் தினம் – 20 ஜூன்
  • அகதிகளின் தைரியம் மற்றும் தாங்குதன்மையை மதித்து கௌரவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் 20 ஜூன் அன்று உலக அகதிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. அகதிகளின் மனித உரிமைகளுக்கு பொது விழிப்புணர்வையும் ஆதரவையும் பெருக்குவதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 2021 கருப்பொருள்: ஒன்றாக நாம் குணமடைவோம், கற்போம் மற்றும் பிரகாசிப்போம்
  • ஐக்கிய நாடுகள் அகதிகள் உடன்படிக்கை 1951இன் படி, “அவரது இனம், மதம், தேசியம், “ஒரு குறிப்பிட்ட சமூகக் குழுவின் உறுப்பினர் அல்லது அரசியல் கருத்து காரணமாக துன்புறுத்தலின் நன்கு நிறுவப்பட்ட பயம்” காரணமாக தங்கள் வீடுகளையும் நாடுகளையும் விட்டு வெளியேறிய மக்கள் அகதிகளாவர்”.
  • உலக அகதிகள் தினம் முதன்முதலில் 20 ஜூன் 2001 அன்று அனுசரிக்கப்பட்டது. இது முன்னர் ஆப்பிரிக்க அகதிகள் தினம் என்று அழைக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் பொதுச் சபை டிசம்பர் 2020இல் அதை ஒரு சர்வதேச தினமாக அறிவித்தது.