TNPSC Current Affairs – English & Tamil – June 23, 2021
TNPSC Current Affairs – English & Tamil – June 23, 2021
TNPSC Aspirants,
The Current Affairs Section is one of the most important topics for the upcoming TNPSC Group I, Group II/IIA, Group IV, and TNUSRB Exams.
Check today’s TNPSC Daily Current Affairs(23rd June, 2021) in this post.
Aspirants can expect questions from the Daily Current Affairs section in the upcoming TNPSC Exams and learning the Current Affairs section will also aid them in successfully preparing for the descriptive paper. So this process is a 2 in 1 initiative.
To make the learning more convenient, we will be providing the TNPSC Daily Current Affairs in both ENGLISH & TAMIL. This has been made in such a way that reflects the TNPSC pattern as TNPSC uses both the languages in the Question Paper and this will also make the preparations of the aspirants meaningful and will 100% fulfill the needs of the aspirants.
Download PDF – TNPSC Daily Current Affairs – English & Tamil – June 23, 2021
TAMIL NADU
- Classical Tamil Research Conference started online
- Tamil Nadu Government’s Directorate of Tamil Etymology Agaramudali Project launched a five-day Classical Tamil (Sentamizh) Research Conference The event was presided over by Thanga. Kamarasu, the Director of the project.
- செந்தமிழ் ஆய்வரங்கம் இணையவழியில் தொடங்கியது
- தமிழக அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் சாா்பில் ஐந்து நாள்கள் நடைபெறவுள்ள செந்தமிழ் ஆய்வரங்கம் இணையவழியில் தொடங்கியது. நிகழ்ச்சிக்கு திட்டத்தின் இயக்குநா் தங்க. காமராசு தலைமை வகித்தாா்.
NATIONAL
- India and Fiji sign MoU for cooperation in the field of agriculture and allied sectors
- Union Minister for Agriculture and Farmers Welfare, Narendra Singh Tomar and Fiji’s Minister of Agriculture, Waterways and Environment, Mahendra Reddy, signed a Memorandum of Understanding (MoU) for cooperation in the field of Agriculture and allied sectors between India and Fiji in a virtual meeting.
- Under the MoU, a Joint Working Group will be established to set down procedures and plan and recommend programs of cooperation towards achieving its aims. The Working Group will hold its meetings alternatively in India and Fiji once in every two years.
- The MoU will remain valid for a period of five years.
- வேளாண் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்தியா மற்றும் ஃபிஜி கையெழுத்திட்டது
- இந்தியா மற்றும் ஃபிஜி நாடுகளுக்கிடையே வேளாண்மை மற்றும் சம்பந்தமான துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான ஓர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ஃபிஜி நாட்டின் வேளாண்மை, நீர் வழி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் டாக்டர் மகேந்திர ரெட்டி ஆகியோர் இன்று கையெழுத்திட்டனர்.
- மேற்குறிப்பிட்ட இலக்குகளை அடைவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டங்கள், செயல்முறைகளை வடிவமைப்பதற்கான கூட்டு பணிக்குழு இந்த ஒப்பந்தத்தின் கீழ் உருவாக்கப்படும். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தியா மற்றும் ஃபிஜி நாடுகளில் மாற்றல் முறையில் இந்தக் குழுவின் கூட்டம் நடைபெறும்.
- ஒப்பந்தம் கையெழுத்தான நாள் முதல்5 ஆண்டுகளுக்கு இது அமலில் இருக்கும்.
- NTPC anchors two-day BRICS Green Hydrogen Summit
- NTPC Ltd, (National Thermal Power Corporation) India’s largest energy company under the Union Ministry of Power, anchored a two-day workshop on Green Hydrogen.
- The online event saw leading experts from Brazil, Russia, India, China, South Africa (BRICS) countries who shared their insights and professional views on the subject as well as the latest developments going on in their countries in green hydrogen.
- NTPC is pioneering Green Hydrogen Initiatives in India. Green hydrogen has a great amount of potential to ensure sustainable energy supply, increase the level of energy availability and minimise the negative impact on the environment.
- என்.டி.பி.சி. இரண்டு – நாள் பிரிக்ஸ் பசுமை ஹைட்ரஜன் உச்சி மாநாட்டை தொகுத்து வழங்குகிறது
- மத்திய மின் அமைச்சகத்தின் கீழ் இந்தியாவின் மிகப்பெரிய எரிசக்தி நிறுவனம் என்.டி.பி.சி ( தேசிய அனல் மின் நிலையம்) பசுமை ஹைட்ரஜன் குறித்த இரண்டுநாள் மாநாட்டை தொகுத்து வழங்கியது.
- இந்த ஆன்லைன் நிகழ்வில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா (பிரிக்ஸ்) நாடுகளைச் சேர்ந்த முன்னணி வல்லுநர்கள் தங்கள் நுண்ணறிவு மற்றும் தொழில்முறை கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர், அத்துடன் பசுமை ஹைட்ரஜனில் தங்கள் நாடுகளில் நடந்து வரும் சமீபத்திய முன்னேற்றங்களையும் பகிர்ந்து கொண்டனர்.
- என்.டி.பி.சி இந்தியாவில் பசுமை ஹைட்ரஜன் முயற்சிகளுக்கு முன்னோடியாக உள்ளது. பசுமை ஹைட்ரஜன் நிலையான ஆற்றல் விநியோகத்தை உறுதி செய்ய, ஆற்றல் கிடைக்கும் அளவை அதிகரிக்க மற்றும் சுற்றுச்சூழலில் எதிர்மறையான தாக்கத்தை குறைக்க அதிக அளவு திறனைக் கொண்டுள்ளது.
- Gujarat CM Vijay Rupani e-launches Agricultural Diversification Scheme-2021
- Gujarat, Chief Minister Vijay Rupani e-launched Agricultural Diversification Scheme-2021 benefiting vanbandhu-farmers in tribal areas.
- The scheme will make agriculture sustainable and profitable in the tribal areas.
- Under this scheme, tribal farmers will get fertilizer-seed assistance of Rs. 31 crores in which 45 kg of urea, 50 kg of NPK and 50 kg of ammonium sulphate will be provided. Seeds of crops like maize, Bitter Melon (karela), Calabash (dudhi), tomato, millet,, are provided under this scheme.
- குஜராத் முதல்வர் விஜய் ரூபானி வேளாண் பன்முகப்படுத்தல் திட்டம்-2021ஐ ஆன்லைனில் தொடங்கி வைத்தார்
- குஜராத், முதல்வர் விஜய் ரூபானி, பழங்குடியினர் பகுதிகளில் உள்ள வனபந்து–விவசாயிகள் பயனடையும் வேளாண் பன்முகப்படுத்தல் திட்டம்-2021ஐ ஆன்லைனில் தொடங்கி வைத்தார்.
- இத்திட்டம் பழங்குடியினர் பகுதிகளில் விவசாயத்தை நிலையானதாகவும் இலாபகரமாகவும் மாற்றும்.
- இத்திட்டத்தின் கீழ் பழங்குடியின விவசாயிகளுக்கு ரூ. 31 கோடி உர விதை உதவி கிடைக்கும். இதில் 45 கிலோ யூரியா, 50 கிலோ என்.பி.கே மற்றும் 50 கிலோ அம்மோனியம் சல்பேட் வழங்கப்படும். மக்காச்சோளம், பிட்டர் முலாம்பழம் (கரேலா), காலபஷ் (துதி), தக்காளி, திணை போன்ற பயிர்களின் விதைகள் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படுகின்றன.
- ‘Sakshama’, COVID helpline for the specially-abled rolled out in Bengaluru
- Karnataka Deputy Chief Minister and state COVID Task Force head Dr C N Ashwatha Narayana rolled out Sakshama COVID helpline for specially-abled in Bengaluru.
- This dedicated COVID helpline 0120 690 4999 can be used by specially-abled persons to seek the benefits of Government welfare programmes. The helpline will be of aid to specially-abled people for BPL cards or even for job opportunities. The state Government has earmarked four per cent of budget allocation for the welfare of the specially-abled people.
- ‘சாக்ஷாமா‘, மாற்றுத் திறனாளிகளுக்கான கோவிட் ஹெல்ப்லைன் பெங்களூருவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
- கர்நாடக துணை முதல்வரும் அம்மாநில கோவிட் பணிக்குழு தலைவருமான டாக்டர் சி.என். அஸ்வதா நாராயணா பெங்களூருவில் மாற்றுத் திறனாளிகளுக்கான சாக்ஷாமா கோவிட் ஹெல்ப்லைனை வெளியிட்டார்.
- இந்த பிரத்யேக கோவிட் ஹெல்ப்லைன் 0120 690 4999 மாற்றுத் திறன் கொண்ட நபர்கள் பயன்படுத்தி அரசு நலத் திட்டங்களின் பயன்களைப் பெறலாம். பிபிஎல் கார்டு அல்லது வேலை வாய்ப்புகளுக்கு கூட மாற்றுத் திறன் கொண்டவர்களுக்கு இந்த ஹெல்ப்லைன் உதவியாக இருக்கும். மாநில அரசு, மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக பட்ஜெட் ஒதுக்கீட்டில் நான்கு சதவீதத்தை ஒதுக்கியுள்ளது.
MILITARY EXERCISES
- Indian Navy and US Navy participate in the Carrier Strike Group Passage Exercise
- Indian Naval Ships Kochi and Tegalong with P8I and MiG 29K aircraft, participated in a Passage Exercise with US Navy Carrier Strike Group Ronald Reagan in the Indian Ocean Region.
- The Passex was a part of regular exercises between the Indian and US navies.
- இந்திய மற்றும் அமெரிக்க கடற்படைகள் கேரியர் ஸ்ட்ரைக் குழு கூட்டு பயிற்சியில் பங்கேற்கின்றனர்
- இந்திய கடற்படை கப்பல்கள் கொச்சி மற்றும் டெக் மற்றும் பி8ஐ மற்றும் மிக் 29கே விமானங்களுடன் அமெரிக்க கடற்படை கேரியர் ஸ்ட்ரைக் குழு ரொனால்ட் ரீகனுடன் இந்திய பெருங்கடல் பகுதியில்கூட்டுபயிற்சியில்பங்கேற்றன.
- இந்த பயிற்சி இந்திய அமெரிக்க கடற்படைக்ளின் வழக்கமான பயிற்சியாகும்.
SPORTS
- Golfer Anirban Lahiri qualifies for Tokyo Olympics
- Indian golfer Anirban Lahiri qualified for the Tokyo Games. He was placed 60th on the final Olympic golf rankings list.
- Lahiri was a former Asia No. 1 and two-time winner on the European Tour. He will be representing the country in Olympics for the second time.
- டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு கோல்ப் வீரர் அனிர்பன் லாஹிரி தகுதி பெற்றுள்ளார்
- இந்திய கோல்ப் வீரர் அனிர்பன் லாஹிரி டோக்கியோ விளையாட்டுப் போட்டிக்கு தகுதி பெற்றார். இறுதி ஒலிம்பிக் கோல்ஃப் தரவரிசைபட்டியலில் அவர் 60வது இடத்தில் இருந்தார்.
- லாஹிரி முன்னாள் ஆசிய நம்பர் 1 மற்றும் ஐரோப்பிய சுற்றுப்பயணத்தில் இரண்டு முறை வெற்றி பெற்றவராவார். அவர் இரண்டாவது முறையாக ஒலிம்பிக்கில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.
- Manpreet Singh is named the Captain of men’s hockey team for the Tokyo Olympics
- Hockey India has named Manpreet Singh as captain of the 16-member men’s hockey team. Birendra Lakra and Harmanpreet Singh, were named vice-captains.
- Under Manpreet’s captaincy, the Indian team won
- The Asia Cup in 2017
- The Asian Champions Trophy in 2018
- The FIH Series Final in 2019
- டோக்கியோ ஒலிம்பிக்கிற்கான ஆண்கள் ஹாக்கி அணியின் கேப்டனாக மன்பிரீத் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்
- 16 பேர் கொண்ட ஆண்கள் ஹாக்கி அணியின் கேப்டனாக மன்பிரீத் சிங்கை ஹாக்கி இந்தியா அறிவித்துள்ளது. பிரேந்திர லக்ரா மற்றும் ஹர்மன்பிரீத் சிங் ஆகியோர் துணை கேப்டன்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
- மன்பிரீத்தின் தலைமையின் கீழ், இந்திய அணி பெற்ற வெற்றிகள்
- 2017இல் ஆசியக் கோப்பை
- 2018ஆம் ஆண்டில் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை
- 2019இல் எஃப்ஐஎச் தொடர் இறுதிப் போட்டி
IMPORTANT DAYS
- International Olympic Day – 23 June
- International Olympic Day was celebrated on 23 June to encourage more people to participate in the Olympic games and raise awareness about the number of sports held during this event. The first modern Olympic Games were held in Athens in 1896.
- The first International Olympic Day was celebrated on 23 June in 1948. The date of 23 June was chosen to mark the formation of the International Olympic Committee in 1894 by Baron Pierre de Coubertin.
- சர்வதேச ஒலிம்பிக் தினம் – 23 ஜூன்
- ஒலிம்பிக் போட்டிகளில் அதிக மக்கள் பங்கேற்கவும், இந்த நிகழ்வின் போது நடைபெறும் விளையாட்டுகளின் எண்ணிக்கை குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் சர்வதேச ஒலிம்பிக் தினம் 23 ஜூன் அன்று கொண்டாடப்பட்டது. முதல் நவீன ஒலிம்பிக் போட்டிகள் 1896இல் ஏதென்ஸில் நடைபெற்றன.
- முதல் சர்வதேச ஒலிம்பிக் தினம் 23 ஜூன் 1948 அன்று பாரன் பியர் டி கூபர்டின் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியை உருவாக்கியதைக் குறிக்கும் வகையில் கொண்டாடப்பட்டது.
- International Widows Day – 23 June
- 23 June is observed as International Widows Day every year to create awareness about the situation of widows across the world.
- The day was first observed in 2005 by the Loomba Foundation. Rajinder Paul Loomba, Member of the House of Lords, London was its founder. It was on this day Pushpawati Loomba, his mother became a widow in 1954. The day was officially adopted as International Widow Day by the United National General Assembly in 2010.
- Theme 2021: “Invisible Women, Invisible Problems”
- சர்வதேச கைம்பெண்கள் தினம் – 23 ஜூன்
- உலகம் முழுவதும் கைம்பெண்களின் நிலைமை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் 23 ஜூன் சர்வதேச கைம்பெண்கள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
- இந்த நாள் முதலில் 2005இல் லூம்பா அறக்கட்டளையால் அனுசரிக்கப்பட்டது. லண்டன் பிரபுக்கள் சபையின் உறுப்பினரான ராஜிந்தர் பால் லூம்பா அதன் நிறுவனர் ஆவார். இந்த நாளில்தான் அவரது தாயார் புஷ்பவதி லூம்பா, 1954இல் விதவையானார். இந்த நாள் அதிகாரப்பூர்வமாக 2010இல் ஐக்கிய தேசிய பொதுச் சபையால் சர்வதேச கைம்பெண்கள் தினமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
- கருப்பொருள் 2021: “கண்ணுக்கு தெரியாத பெண்கள், கண்ணுக்கு தெரியாத பிரச்சினைகள்“ (Invisible Women, Invisible Problems)
Students can download the Daily TNPSC Current Affairs in English & Tamil as PDF from the links given below – TNPSC daily Current Affairs – English & Tamil – June 23, 2021.
Download TNPSC Daily Current Affairs – PDF | |
23rd June, 2021 | Will be Available soon |
Check TNPSC – Daily Current Affairs – May Month in TAMIL & English from bankersdaily from the links below.
Read – TNPSC Daily Current Affairs – May 2021