TNPSC Current Affairs – English & Tamil – March 11, 2021

TNPSC Aspirants,

The Current Affairs Section is one of the most important topics for the upcoming TNPSC Group I, Group II/IIA, Group IV, and TNUSRB Exams.

Check today’s TNPSC Daily Current Affairs(11th March, 2020) in this post.

Aspirants can expect questions from the Daily Current Affairs section in the upcoming TNPSC Exams and learning the Current Affairs section will also aid them in successfully preparing for the descriptive paper. So this process is a 2 in 1 initiative.

To make the learning more convenient, we will be providing the TNPSC Daily Current Affairs in both ENGLISH & TAMIL. This has been made in such a way that reflects the TNPSC pattern as TNPSC uses both the languages in the Question Paper and this will also make the preparations of the aspirants meaningful and will 100% fulfill the needs of the aspirants.



Download PDF – TNPSC Daily Current Affairs – English & Tamil – March 11, 2021


Download_TNPSC_Daily_CUrrent_Affairs_PDF_7th_January_2021


  1. Union Cabinet approved the Pradhan Mantri Swasthya Suraksha Nidhi as a single non-lapsable reserve fund for Healthaa
  • The Union Cabinet, chaired by Prime Minister Narendra Modi, had approved the Pradhan Mantri Swasthya Suraksha Nidhi (PMSSN) as a single non-lapsable reserve fund for a share of Health from the proceeds of Health and Education Cess levied under the Finance Act, 2007.
  • PMSSN will be utilized for the flagship schemes of the Union Ministry of Health & Family Welfare such as Ayushman Bharat – Pradhan Mantri Jan Arogya Yojana (AB-PMJAY), Ayushman Bharat – Health and Wellness Centres (AB-HWCs) and Pradhan Mantri Swasthya Suraksha Yojana (PMSSY), etc.
  1. சுகாதாரத்திற்கான லாபமில்லா இருப்பு நிதியான பிரதம மந்திரி ஸ்வஸ்திய சுரக்ஷ நிதிக்கு ஒப்புதல் அளித்துள்ளது மத்திய அமைச்சரவை
  • பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அமைச்சரவை, நிதிச் சட்டம், 2007இன் கீழ் வசூலிக்கப்படும் சுகாதார மற்றும் கல்வி செஸ் மூலம் கிடைக்கும் வருமானத்தில் இருந்து சுகாதாரத்தின் பங்கிற்காக லாபமில்லா இருப்பு நிதியான பிரதம மந்திரி ஸ்வஸ்திய சுரக்ஷ நிதிக்கு (பி.எம்.எஸ்.எஸ்.என்) ஒப்புதல் அளித்துள்ளது.
  • ஆயுஷ்மான் பாரத் – பிரதம மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா (ஏபி-பி.எம்.ஜே), ஆயுஷ்மான் பாரத் – சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய மையங்கள் (ஏபி-எச்.டபிள்யூ.சி), பிரதம மந்திரி ஸ்வஸ்தன சூரக்ஷா யோகா போன்ற சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் முதன்மை திட்டங்களுக்கு பி.எம்.எஸ்.எஸ்.என் நிதி பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  1. ICAR received the King Bhumibol World Soil Day 2020 Award by FAO
  • Suchitra Durai, Ambassador of India to Thailand, received the prestigious ‘King Bhumibol World Soil Day 2020 Award’ of FAO on behalf of the Indian Council of Agricultural Research.
  • The international recognition was announced by the FAO, Rome, in view of the ICAR’s excellent contributions in “Soil Health Awareness”on the theme “Stop soil erosion, save our future” during the year 2020.
  1. இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சில், உணவு மற்றும் வேளாண் அமைப்பின் கிங் புமிபோல் உலக மண் தினம் 2020 விருதைப் பெற்றது.
  • தாய்லாந்தின் இந்திய தூதர் சுசித்ரா துரை, இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சிலின்  சார்பாக உணவு மற்றும் வேளாண் அமைப்பின் மதிப்புமிக்க ‘கிங் புமிபோல் உலக மண் தினம் விருது 2020’ பெற்றுக் கொண்டார்.
  • 2020ஆம் ஆண்டில், “மண்அரிப்புகளை தடுத்தல்,எதிர்காலத்தைக் காத்தல்” மற்றும் “மண் வள விழிப்புணர்வு” ஆகிய கருப்பொருளில் ஐ.சி.ஏ.ஆர் ஆற்றிய சிறந்த பங்களிப்புகளை கருத்தில் கொண்டு, இத்தாலியின் ரோமைத் தலைமையகமாகக் கொண்ட உணவு மற்றும் வேளாண் அமைப்பு இந்த சர்வதேச அங்கீகாரத்தை அளித்துள்ளது.

  1. Sainik schools in collaboration with private players to provide ‘CBSE Plus’ type of educational environment
  • Union Government had proposed to bring a new scheme for setting up Sainik schools in the country in partnership with NGOs, Private Schools, States, etc.
  • The endeavor is to provide schooling opportunities in the “CBSE Plus” type of educational environment by involving desirous Government/Private Schools/NGOs to partner in establishing/aligning their system with Sainik schools.
  • It envisages enrolling existing/upcoming schools to be run on the lines of the Sainik school curriculum and proposed to be affiliated to Sainik Schools Society under the Union Ministry of Defence.

  1. சைனிக் பள்ளிகள் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து ‘சிபிஎஸ்இ பிளஸ்’ வகை கல்விச் சூழலை வழங்க உள்ளது
  • தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் / தனியார் பள்ளிகள் / மாநிலங்கள் போன்றவற்றுடன் இணைந்து நாட்டில் சைனிக் பள்ளிகளை அமைப்பதற்கான புதிய திட்டத்தை அரசு முன்மொழிந்துள்ளது.
  • “சிபிஎஸ்இ பிளஸ்” வகை கல்விச் சூழலில் பள்ளிக்கல்வி வாய்ப்புகளை வழங்க விரும்பும் அரசு / தனியார் பள்ளிகள் / தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சைனிக் பள்ளிகளுடன் இணைந்து தங்கள் கல்வி அமைப்பை சீரமைப்தே இந்த முயற்சியின் நோக்கமாகும்.
  • இந்த முயற்சியில் இணையும் பள்ளிகளை, சைனிக் பள்ளிகளின் பாடத்திட்டத்தின் கீழ் பதிவு செய்வதோடு, பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள சைனிக் பள்ளிகள் சங்கத்துடன் இணைக்கவும் அரசு திட்டமிடப்பட்டுள்ளது.

  1. President Ram Nath Kovind attended events in Tamil Nadu from 9 to 11 March 2021
  • President Ram Nath Kovind visited Vellore to grace the 16thannual convocation of the Thiruvalluvar University on 10 March 2021.
  • The President also attended the 41stannual convocation of Anna University in Chennai on 11  March 2021.
  1. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 9 முதல் 11 மார்ச் 2021 வரை தமிழகத்தின் முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்றார்
  • 10 மார்ச் 2021 அன்று வேலூரில், திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் 16வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்றார்.
  • 11 மார்ச் 2021 அன்று சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் 41வது ஆண்டு பட்டமளிப்பு விழாவிலும் கலந்து கொண்டார்.

  1. India–Uzbekistan joint military exercise “DUSTLIK II” commenced in Ranikhet, Uttarakhand
  • The India–Uzbekistan joint military exercise “DUSTLIK II” commenced in Foreign Training Node Chaubatia, Ranikhet (Uttarakhand) on 10 March 2021.
  • This is the second edition of the annual bilateral joint exercise of both armies, which will continue till 19 March 2021. The first edition of the exercise was held in Uzbekistan in Nov 2019.
  1. இந்தியா-உஸ்பெகிஸ்தான் கூட்டு இராணுவப் பயிற்சி “டஸ்ட்லிக் II” உத்தரகண்ட் மாநிலத்தின் ராணிக்கேத்தில் 10 மார்ச் 2021 அன்று தொடங்கியது
  • இந்தியா-உஸ்பெகிஸ்தான் கூட்டு இராணுவப் பயிற்சி “டஸ்ட்லிக் II” 10 மார்ச் 2021 அன்று ராணிகேத் (உத்தரகண்ட்), சௌபாத்தியாவில் உள்ள வெளிநாட்டு பயிற்சி முனையத்தில் தொடங்கியது.
  • இந்த இருதரப்பு படைகளின் வருடாந்திர கூட்டுப் பயிற்சியின் இரண்டாம் பதிப்பு 20 மார்ச் 2021 வரை நடைபெற உள்ளது. இப்பயிற்சியின் முதல் பதிப்பு நவம்பர் 2019ல் உஸ்பெகிஸ்தானில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

  1. INS Karanj, the third Kalvari class submarine commissioned at Naval Dockyard, Mumbai
  • Indian Navy’s third stealth Scorpene-class submarine, INS Karanj, had been commissioned at the Naval Dockyard, Mumbai and this year is celebrated as the ‘Swarnim Vijay Varsh’, which marks 50 years of the 1971 Indo–Pak war.
  • Six Scorpene-class submarines are being built in India by the Mazagon Dock Shipbuilders Limited (MDL) Mumbai, under collaboration with the Naval Group of France.
  1. ஐ.என்.எஸ் கரஞ்ச், மூன்றாவது கல்வாரி நீர்மூழ்கி கப்பல் மும்பையின் கடற்படை வளாகத்தில் நியமிக்கப்பட்டது
  • இந்திய கடற்படையின் மூன்றாவது இரகசிய கண்கானிப்பு ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பல் ஐ.என்.எஸ் கரஞ்ச், மும்பையில் கடற்படையில் நிறுவப்பட்டது. மேலும், 1971 இந்தியா-பாகிஸ்தான் போரின் 50 ஆண்டுகள் நிறைவைக் குறிக்கும் வகையில் ‘ஸ்வர்னிம் விஜய் வர்ஷ்’ கொண்டாடப்பட்டது.
  • இந்தியாவில் ஆறு ஸ்கார்பீன் வகுப்பு நீர்மூழ்கிக் கப்பல்களை, மசாகன் டாக் ஷிப் பில்டர்ஸ் லிமிடெட் (எம்.டி.எல்) மும்பை, மற்றும் பிரான்சின் கடற்படைக் குழுமம் ஆகியவை இணைந்து கட்டமைத்து வருகின்றன.

  1. Union Ministry of Tourism launched campaigns to promote tourism to the North-Eastern region
  • Union Ministry of Tourism had launched campaigns to promote tourism to the North-Eastern region on various platforms in digital, print and social media under its different schemes such as Swadesh Darshan, PRASHAD, etc.
  • International Tourism Mart (ITM) is an annual event organised by the Union Ministry of Tourism in the North-Eastern region with the objective of highlighting the tourism potential of the region in the domestic and international market.
  1. சுற்றுலா அமைச்சகம் வடகிழக்கு பிராந்தியத்தின் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான இயக்கத்தைச் செயல்படுத்தி வருகிறது
  • சுற்றுலா அமைச்சகம், டிஜிட்டல், அச்சு மற்றும் சமூக ஊடகங்களில் வடகிழக்கு பிராந்தியத்தின் சுற்றுலாவை ஊக்குவிக்கும் பிரச்சாரங்களை அதன் வெவ்வேறு திட்டங்களான சுதேஷ் தரிசனம், பிரஷாத் போன்றவற்றின் கீழ் நடத்தி வருகிறது.
  • சர்வதேச சுற்றுலா மார்ட் (ஐ.டி.எம்) என்பது உள்நாட்டு மற்றும் சர்வதேச அளவில் வடகிழக்கு பிராந்தியத்தின் சுற்றுலாத் திறனை முன்னிலைப்படுத்தும் நோக்கத்துடன் சுற்றுலா அமைச்சகத்தால் நடத்தப்படும் வருடாந்திர நிகழ்வாகும்.

  1. Researchers found that Metal-rich environment is crucial for light giant planets but not necessary for heavy giant ones
  • Scientists studying the short-orbit exo-planets had found that a host star with a metal-rich environment provides the favourable condition for the formation of Jupiter-type low-mass giant planets.
  • The new study published in the Astronomical Journalsuggests that this is not necessarily the case for the long orbit high-mass giant planets discovered by the direct imaging technique.
  • This study explores connections between the planet and host star properties that can help in understanding how planets form and evolve at large orbital distances. The study was conducted by the Indian Institute of Astrophysics (IIA) andTata Institute of Fundamental Research.
  1. உலோக வளமான சூழல் மெல்லிய பெருங்கோள்களுக்கு அவசியமானது என்றும் கனமான பெருங்கோள்களுக்கு அவசியமில்லை என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்
  • குறுகிய-சுற்றுப்பாதை எக்ஸோ-கிரகங்களைப் ஆராயும் விஞ்ஞானிகள், வியாழன் போன்ற மெல்லிய பெருங்கோள்கள் உருவாகுவதற்கு உலோகம் நிறைந்த சூழலைக் கொண்ட ஹோஸ்ட் நட்சத்திரம் சாதகமான நிலையை வழங்குவதை கண்டறிந்தனர்.
  • தற்போது வானியல் இதழில் வெளியிடப்பட்ட புதிய ஆய்வின்படி, நேரடி இமேஜிங் நுட்பத்தால் கண்டுபிடிக்கப்பட்ட சுற்றுப்பாதையின் கனமான பெருங்கோள்களுக்கு இது அவசியமில்லை என்பதை கண்டறிந்துள்ளனர்.
  • கோள்களுக்கும் ஹோஸ்ட் ஸ்டார் பண்புகளுக்கும் இடையிலான தொடர்புகளையும், நீண்ட சுற்றுப்பாதையில் கோள்கள் எவ்வாறு உருவாகின்றன என்பதைப் புரிந்துகொள்ள உதவும் இந்த ஆய்வை, இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஆஸ்ட்ரோபிசிக்ஸ் (IIA) மற்றும் டாடா இன்ஸ்டிடியூட் ஆப் ஃபண்டமெண்டல் ரிசர்ச் ஆகியவை இணைந்து நடத்தியுள்ளது.

  1. Tamilisai Soundararajan was presented the Top 20 Global Women of Excellence Award for 2020
  • Governor of Pudhucherry Tamilisai Soundararajan was presented the Top 20 Global Women of Excellence Award for 2020 on 8 March 2021.
  • Tamilisai Soundararajan joined a league of extraordinary women achievers across the world chosen for the award, including US Vice President Kamala Harris.
  • The award instituted by the US Congressional Multi Advisory Task Force was presented virtually during the 9th Congressional International Women’s Day Gala at Naperville, Illinois.
  1. தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுக்கு 2020ஆம் ஆண்டிற்கான 2020ஆம் ஆண்டிற்கான சர்வதேச தலைசிறந்த பெண்மணி விருது வழங்கப்பட்டது
  • 8 மார்ச் 2021 அன்று புதுச்சேரியின் துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுக்கு 2020ஆம் ஆண்டிற்கான சர்வதேச தலைசிறந்த பெண்மணி விருது வழங்கப்பட்டது.
  • அமெரிக்க துணைத் தலைவர் கமலா ஹாரிஸ் உட்பட உலகெங்கிலும் உள்ள சிறந்த பெண் சாதனையாளர்களின் பட்டியலில் தமிழிசை சௌந்தரராஜனும் இணைந்தார்.
  • அமெரிக்க காங்கிரஸின் ஆலோசனை பணிக்குழுவால் நிறுவப்பட்ட இந்த விருது, இல்லினாய்ஸின் நேப்பர்வில்லில் நடைபெற்ற 9வது காங்கிரஸ் சர்வதேச மகளிர் தின விழாவில் காணொலிக் காட்சியின் மூலம் வழங்கப்பட்டது.

  1. Koneru Humpy won the BBC India Sportswoman of the Year Award 2020
  • Indian Chess player Koneru Humpy bagged the BBC India Sportswoman of the Year Award 2020.
  • The award was based on a public vote in which Koneru Humpy beat sprinter Dutee Chand, shooter Manu Bhaker, wrestler Vinesh Phogat and hockey captain Rani Rampal.
  1. கொனேரு ஹம்பி 2020ஆம் ஆண்டிற்கான பிபிசி இந்தியா விளையாட்டு வீராங்கணை விருதை வென்றார்
  • இந்திய செஸ் வீராங்கணை கொனேரு ஹம்பி 2020ஆம் ஆண்டிற்கான பிபிசி இந்தியா விளையாட்டு வீராங்கணை விருதைப் பெற்றார்.
  • பொது வாக்கெடுப்பின் அடிப்படையில், தடகள வீராங்கணை டூட்டி சந்த், துப்பாக்கி சுடுதலில் மனு பாகர், மல்யுத்த வீராங்கணை வினேஷ் போகாத் மற்றும் ஹாக்கி கேப்டன் ராணி ராம்பால் ஆகியோரை விட ஹம்பி அதிக வாக்குகள் பெற்று விருதை வென்றுள்ளார்.

  1. 17 states successfully implemented the One Nation One Ration Card scheme
  • Seventeen (17) states have successfully operationalised the “One Nation One Ration Card” system.
  • Uttarakhand became the latest state to complete the reform.
  • States completing the One Nation One Ration Card system reform are eligible for an additional borrowing of 0.25 percent of the Gross State Domestic Product (GSDP).
  • Tamil Nadu was the 11th state in the country, which successfully implemented the ‘One Nation, One Ration Card’ scheme in all its districts.
  1. 17 மாநிலங்கள் ஒரு நாடு ஒரு ரேஷன் அட்டை திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளன.
  • பதினேழு (17) மாநிலங்கள் வெற்றிகரமாக ” ஒரு நாடு ஒரு ரேஷன் அட்டை” திட்டத்தை செயல்படுத்தியுள்ளன.
  • உத்தரகண்ட் சமீபத்தில் இந்த பட்டியலில் இணைந்த மாநிலம் ஆகும்.
  • ஒரு நாடு ஒரு ரேஷன் அட்டை திட்டத்தை நிறைவு செய்யும் மாநிலங்களுக்கு, மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.எஸ்.டி.பி) 0.25 சதவீத கூடுதல் கடன் வழங்கப்படுகிறது..
  • .தமிழ்நாடு, ஒரு நாடு ஒரு ரேஷன் அட்டை திட்டத்தை அதன் அனைத்து மாவட்டங்களிலும் வெற்றிகரமாக செயல்படுத்திய நாட்டின் 11வது மாநிலம் ஆகும்.

 

Students can download the Daily TNPSC Current Affairs in English & Tamil as PDF from the links given below – TNPSC daily Current Affairs – English & Tamil – March 11, 2021. 


Download TNPSC Daily Current Affairs – PDF
11th March, 2021 Will be Available soon

Check TNPSC – Daily Current Affairs – March Month in TAMIL & English from bankersdaily from the links below. 


Read – TNPSC Daily Current Affairs – March 2021