TNPSC Current Affairs – English & Tamil – March 27, 28 & 29, 2021

TNPSC Aspirants,

The Current Affairs Section is one of the most important topics for the upcoming TNPSC Group I, Group II/IIA, Group IV, and TNUSRB Exams.

Check today’s TNPSC Daily Current Affairs(27, 28 & 29th March, 2021) in this post.

Aspirants can expect questions from the Daily Current Affairs section in the upcoming TNPSC Exams and learning the Current Affairs section will also aid them in successfully preparing for the descriptive paper. So this process is a 2 in 1 initiative.

To make the learning more convenient, we will be providing the TNPSC Daily Current Affairs in both ENGLISH & TAMIL. This has been made in such a way that reflects the TNPSC pattern as TNPSC uses both the languages in the Question Paper and this will also make the preparations of the aspirants meaningful and will 100% fulfill the needs of the aspirants.


Download PDF – TNPSC Daily Current Affairs – English & Tamil – March 27, 28 & 29, 2021


 1. President Ram Nath Govind gave assent to bill giving more powers to Delhi Lieutenant Governor

  • President Ram Nath Kovind gave his assent to the Government of National Capital Territory of Delhi (Amendment) Act, 2021.

Provisions of GNCTD Amendment Act

  • The GNCTD Amendment Act seeks to enhance the powers of the Lieutenant Governor of Delhi, appointed by the President of India, over the elected government.
  • The bill makes it mandatory for the elected government to consult the Lieutenant Governor before taking any executive action.
  • It also says that the ‘government’ in Delhi refers to the ‘Lieutenant Governor’.
  • The new bill directs the Delhi government to send its legislative proposals to the Lieutenant Governor at least a fortnight in advance.
  • The Lieutenant Governor is given the power to refer a bill to the Centre when he/she disagrees with the elected government of Delhi.
  • Another provision allows the Lieutenant Governor to take an immediate decision if he/she considers it an urgent issue, even if the matter is pending with the President.

 

1. தில்லியில் துணைநிலை ஆளுநருக்கு முதன்மை அதிகாரம் வழங்கும் மசோதாவுக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தாா்

  • தில்லி அரசு திருத்த மசோதா 2021 என்ற மசோதாவுக்கு குடியரசுத் தலைவா் ஒப்புதல் அளித்தாா்.

‘தில்லி அரசு திருத்த சட்டம் 2021’இன் முக்கிய அம்சங்கள்

  • தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மீது குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்ட தில்லி துணைநிலை ஆளுநரின் அதிகாரங்களை அதிகரிக்க ‘தில்லி அரசு திருத்த சட்டம் 2021’ முயல்கிறது.
  • இந்தச் சட்டத்தின்படி, தில்லி அரசானது எந்த நிா்வாக நடவடிக்கையை எடுக்கும் முன்னும் துணைநிலை ஆளுநரின் கருத்தை கேட்க வேண்டும்.
  • டெல்லியில் உள்ள அரசு, துணை நிலை ஆளுநரைக் குறிக்கிறது என்றும் அது கூறுகிறது.
  • இந்த புதிய சட்டதிருத்தம், தில்லி அரசு தனது சட்டமன்ற முன்மொழிவுகளை துணைநிலை ஆளுநருக்கு குறைந்தபட்சம் பதினைந்து நாட்களுக்கு முன்னதாக அனுப்ப உத்தரவிடுகிறது.
  • தில்லியின் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்துடன் உடன்படாத போது, ஒரு மசோதாவை மத்திய அரசுக்கு அனுப்ப துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது.
  • குடியரசுத் தலைவரிடம் நிலுவையில் இருந்தாலும், அதை அவசரப் பிரச்சினையாகக் கருதினால், துணைநிலை ஆளுநர் உடனடியான முடிவை எடுக்க மற்றொரு விதி அனுமதிக்கிறது.

2. India and US started two-day naval exercise PASSEX in Bay of Bengal

  • India and the US started a two-day naval exercise in the Bay of Bengal.
  • Indian Navy deployed its warship Shivalik and long-range maritime patrol aircraft P8I in the PASSEX exercise while the US Navy was represented by the USS Theodore Roosevelt carrier strike group.

 

2. வங்கக் கடலில் 2 நாள் கடற்படை பயிற்சிபாஸ்எக்ஸ் (PASSEX) இந்தியாவும் அமெரிக்காவும் தொடங்கின

  • வங்கக் கடலில் இந்தியாவும், அமெரிக்காவும் இரண்டு நாள் கடற்படை பயிற்சியைத் தொடங்கின.
  • ‘பாஸ்எக்ஸ்’ என்ற இந்த கூட்டுப் பயிற்சியில் இந்தியா சாா்பில் ‘ஷிவாலிக்’ போா்க் கப்பலும், நீண்டதூர கண்காணிப்பு போா் விமானமான ‘P8I’ ஆகியவை ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அமெரிக்கா யுஎஸ்எஸ் தியோடோா் ரூஸ்வெல்ட் போா் விமானம் தாங்கி கப்பல் குழுவை ஈடுபடுத்தியுள்ளது.

3. Prime Minister Narendra Modi lauded the Coimbatore-based bus conductor for providing free saplings with tickets to bus passengers at the Mann Ki Baat event.

  • Marimuthu Yoganathan, a bus conductor in Coimbatore, also provides free saplings to the passengers along with the In this way, he has planted numerous trees. He spends a large sum of his wages on this.
  • Prime Minister Narendra Modi congratulated him on his encouraging service at the Mann Ki Baat event.

 

3. “மனதின் குரல்நிகழ்ச்சியில் பயணிகளுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கிய கோவை நடத்துநரைப் பிரதமர் மோடி பாராட்டினார்

  • கோயம்புத்தூரில் பேருந்து நடத்துநராகப் பணியாற்றி வரும் மாரிமுத்து யோகநாதன், பயணச்சீட்டு கொடுக்கையில் மரக்கன்றுகளையும் இலவசமாக அளித்து வருகிறார். இந்த வகையில் எண்ணற்ற மரக்கனறுகளை அவர் நட்டு வைத்துள்ளார். தனது ஊதியத்திலிருந்து பெரும் தொகையை இதற்காக அவர் செலவிட்டு வருகிறார்.
  • அவரது ஊக்கமளிக்கும் சேவைக்குப் பாராட்டுகளைத் தெரிவிததுக் கொள்கிறேன் என மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கூறினார்.

4. Uttar Pradesh topped in the number of digital transactions

  • Uttar Pradesh topped in the number of digital transactions in India.
  • The transactions through banks have crossed the figure of Rs 286 crore till December 2020, in the financial year 2020-21, which was Rs 151 crore more than during the same period in 2019-20, recording an increase of 112 percent.

 

4. இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் உத்தரப்பிரதேசம் முதலிடம்

  • இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் உத்தரப்பிரதேசம் முதலிடம்.
  • 2020-21-ஆம் நிதியாண்டில், கடந்த டிசம்பர் 2020 வரையில் உத்தரப்பிரதேசத்தில் ரூ.286 கோடிக்கு டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது, இதே காலக்கட்டத்தில் 2019-20ஆம் நிதியாண்டில் இது ரூ.151 கோடியாக இருந்தது, இது 112 சதவீதம் அதிகமாகும்.

5. Reserve Bank of India has identified two districts in Uttar Pradesh as Digital districts

  • The Reserve Bank of India (RBI) has identified two districts in Uttar Pradesh namely, Siddhartha Nagar and Firozabad as the ‘digital districts’. The digital transactions are being encouraged through expanding and strengthening the digital payment system in these districts.

 

5. இந்திய ரிசர்வ் வங்கி, உத்திரப்பிரதேசத்தில் உள்ள இரண்டு மாவட்டங்களை டிஜிட்டல் மாவட்டங்களாக அறிவித்துள்ளது

  • உத்தரப்பிரதேச மாநிலத்தின் சித்தார்த்தா நகர் மற்றும் ஃபிரோஸாபாத் மாவட்டங்களை இந்திய ரிசர்வ் வங்கி ‘டிஜிட்டல் மாவட்டங்கள்’ என்று அறிவித்தது. இந்த மாவட்டங்களில் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளை விரிவுபடுத்துதல் மற்றும் வலுப்படுத்துதல் மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் ஊக்குவிக்கப்படுகின்றன.

6. Union Health Minister Harsh Vardhan launched ‘Tribal TB Initiative’ in pursuit of TB Mukt Bharat

  • Union Health Minister Harsh Vardhan launched the ‘Tribal TB Initiative’ in pursuit of TB Mukt Bharat.
  • The government accords top priority to ensuring Universal Access to free treatment and care for TB across the country.
  • Union Territories of Lakshadweep and the district of Badgam in Jammu and Kashmir declared TB Free on World TB Day (March 24).

 

6. சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் காசநோய் முக்த் பாரத்தை அடையும் நோக்கோடுபழங்குடியினர் காசநோய் முன்முயற்சியை தொடங்கி வைத்தார்

  • காசநோய் முக்த் பாரத்தைமுன்னிட்டு சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் பழங்குடியினர் காசநோய் முன்முயற்சி‘யைத் தொடங்கி வைத்தார்.
  • நாடு முழுவதும் காசநோய்க்கான இலவச சிகிச்சை மற்றும் பராமரிப்பிற்கான உலகளாவிய அணுகலை உறுதி செய்வதற்கு அரசாங்கம் முன்னுரிமை அளிக்கிறது.
  • இந்த ஆண்டு உலக காசநோய் தினத்தில் (மார்ச் 24) யூனியன் பிரதேசங்களான லட்சத்தீவு மற்றும் ஜம்முகாஷ்மீரில் உள்ள பேட்காம் மாவட்டம் காசநோய் இல்லாததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

7. AYUSH Ministry set up an interdisciplinary team head by HR Nagendra to explore the potential of Yoga

  • The Ministry of AYUSH has set up an interdisciplinary team of experts to explore the potential of Yoga as a productivity enhancing tool for the population.
  • The committee is chaired by HR Nagendra, Chancellor of Swami Vivekananda Yoga Anusandhana Samsthana (SVYASA).

 

7. ஆயுஷ் அமைச்சகம் யோகாவின் திறனை ஆராய எச்.ஆர்.நாகேந்திரா தலைமையிலான இடைநிலைக் குழுவை அமைத்தது

  • ஆயுஷ் (AYUSH) அமைச்சகம் யோகாவின் திறனை மக்கள்தொகையின் உற்பத்தித்திறனை அதிகரிக்கும் ஓர் கருவியாக ஆராய ஒரு நிபுணர் குழுவை அமைத்துள்ளது.
  • இந்தக் குழுவின் தலைவராக சுவாமி விவேகானந்தர் யோகா அனுசந்தனா சமஸ்தானத்தின் (SVYASA) தலைவரான எச்.ஆர்.நாகேந்திரா நியமிக்கப்பட்டுள்ளார்.

8. FSSAI has made BIS licence mandatory for packaged drinking water companies

  • The Food Safety and Standards Authority of India (FSSAI) said that from April 1, the BIS licence will become a “pre-condition” for manufacturers of packaged drinking water and mineral water to obtain or renew the FSSAI licence.
  • According to the regulations, manufacturers need to display both, the FSSAI licence number as well as the BIS Certification mark on their labels.
  • The Food Safety Authority said that this decision was made after it found that several packaged drinking water and mineral water players are in operation without the BIS certification mark.

 

8. FSSAI பெட்டியில் அடைக்கப்பட்ட குடிநீர் நிறுவனங்களுக்கு BIS உரிமத்தை அவசியமாக்கியுளளது.

  • இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் ஒழுங்கு அமைப்பு (FSSAI) ஏப்ரல் 1 முதல், பெட்டியில் அடைக்கப்பட்ட குடிநீர் மற்றும் மினரல் வாட்டர் உற்பத்தியாளர்களுக்கு FSSAI உரிமத்தைப் பெற அல்லது புதுப்பிக்க ஒரு முன் நிபந்தனையாக BIS உரிமம் மாறும் என்று FSSAI கூறியுள்ள்து.
  • விதிமுறைகளின்படி, உற்பத்தியாளர்கள் தங்கள் லேபிள்களில் – FSSAI உரிம எண் மற்றும் BIS சான்றிதழ் குறி இரண்டையும் காட்ட வேண்டும்.
  • பல பெட்டியில் அடைக்கப்பட்ட குடிநீர் மற்றும் மினரல் வாட்டர் விநியோகங்கள் BIS சான்றிதழ் குறி இல்லாமல் செயல்படுவதைக் கண்டறிந்த பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக உணவு பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

9. Pakistan successfully test-fired nuclear-capable ballistic missile Shaheen-1A

  • The Pakistan army successfully test-fired a nuclear-capable surface-to-surface ballistic missile Shaheen-1A.
  • Shaheen 1-A has a range of 900 kilometers and with its sophisticated and advanced guidance system, it is a highly accurate missile system.
  • In February, Pakistan successfully test-fired a nuclear-capable surface-to-surface ballistic missile Ghaznavi which can strike targets up to 290 kilometres.

 

9. பாகிஸ்தான் ஷாஹீன் 1- என்ற அணுசக்தி திறன் கொண்ட ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்தது

  • பாகிஸ்தான் அணுசக்தி திறன் கொண்ட மேற்பரப்பு முதல் மேற்பரப்பு வரை பாயும் ஷாஹீன் -1 ஏ என்ற பாலிஸ்டிக் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது.
  • ஷாஹீன் -1 ஏவுகணை 900 கிலோமீட்டர் வீச்சு கொண்டுள்ளது மற்றும் அதன் அதிநவீன மற்றும் மேம்பட்ட வழிகாட்டுதல் அமைப்புடன் மிகவும் துல்லியமான ஏவுகணை அமைப்பாக விளங்குகிறது.
  • பிப்ரவரியில், பாகிஸ்தான் அணுசக்தி திறன் கொண்ட மேற்பரப்பு முதல் மேற்பரப்பு பாலிஸ்டிக் ஏவுகணையான கஸ்னவியை வெற்றிகரமாக சோதனை செய்தது. இது 290 கிலோமீட்டர் வரை இலக்குகளை தாக்கும் திறன் கொண்டது.

10. ‘Earth Hour’ was observed on 27 March

  • ‘Earth Hour’ is observed on the last Saturday of March across the world.
  • It was organised by the World Wide Fund for Nature (WWF).
  • Earth hour is observed for one hour from 8:30 PM to 9.30 PM, to raise awareness towards the need to protect nature for building a sustainable future for all.
  • 2021 Theme: “Climate Change to Save Earth”

 

10. ‘புவி மணிநேரம்’ மார்ச் 27 அன்று அனுசரிக்கப்பட்டது

  • உலகம் முழுவதும் மார்ச் மாதத்தின் கடைசி சனிக்கிழமையில் ‘புவி மணிநேரம்’ தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • இது இயற்கைக்கான உலகளாவிய நிதியத்தால் (WWF) ஏற்பாடு செய்யப்பட்டது.
  • அனைவருக்கும் நிலையான எதிர்காலத்தை உருவாக்க இயற்கையை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துவதற்காக இரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை ஒரு மணி நேரம் புவி நேரம் அனுசரிக்கப்படுகிறது.
  • 2021 கருப்பொருள்: “புவியைக் காப்பாற்ற காலநிலை மாற்றம்

11. Vijayveer and Tejaswani won gold in 25m rapid fire pistol mixed event in ISSF world cup 2021

  • India’s Vijayveer Sidhu and Tejaswani claimed the gold medal in the 25m rapid fire pistol mixed team event of the ISSF World Cup held in New Delhi. They beat the combo of Gurpreet Singh and Ashok Abhidnya Patil.
  • Sidhu won the individual silver medal in the 25m rapid fire pistol event.

 

11. 2021 ISSF உலகக் கோப்பையில் 25மீ ராபிட் ஃபயர் பிஸ்டல் கலப்பு போட்டியில் விஜய்வீர் மற்றும் தேஜஸ்வினியும் தங்கம் வென்றனர்

  • புதுதில்லியில் நடைபெற்ற ISSF உலகக் கோப்பை 25மீ ராபிட் ஃபயர் பிஸ்டல் கலப்பு அணிபோட்டியில் இந்தியாவின் விஜய்வீர் சித்து மற்றும் தேஜஸ்வினி ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றனர். அவர்கள் குர்பிரீத் சிங் மற்றும் அசோக் அபித்நியா பாட்டீல் ஜோடியை வீழ்த்தினர்.
  • 25மீ ரேபிட் ஃபயர் பிஸ்டல் தனிநபர் போட்டியில் சித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

12. Importance of 29 March in Indian History

  • On 29 March 1857 marks the day in which a sepoy of the 34th Native Infantry, Mangal Pandy refused to obey the orders on the parade ground at Barrackpore.
  • He was hanged for this incident.
  • This led to increased violence and Mutiny against British Rule which finally culminated in the 1857 revolt.

 

12. இந்திய வரலாற்றில் 29 மார்ச்சின் முக்கியத்துவம்

  • 29 மார்ச் 1857 அன்று, 34வது உள்நாட்டு காலாட்படை சிப்பாய் மங்கல் பாண்டே, பராக்பூரின் அணிவகுப்பு மைதானத்தில் பிரிட்டிஷாரின் கட்டளைகளுக்கு கீழ்ப்படிவதற்கு மறுத்துவிட்டார்.
  • இதனால் அவர் தூக்கிலிடப்பட்டார்.
  • இது வன்முறை மற்றும் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான கலகத்திற்கு வழிவகுத்து, 1857 பெருங்கலகத்தில் நிறைவுற்றது.

Students can download the Daily TNPSC Current Affairs in English & Tamil as PDF from the links given below – TNPSC daily Current Affairs – English & Tamil – March 27, 28 & 29, 2021. 


Download TNPSC Daily Current Affairs – PDF
27, 28 & 29th March, 2021 Will be Available soon

Check TNPSC – Daily Current Affairs – March Month in TAMIL & English from bankersdaily from the links below. 


Read – TNPSC Daily Current Affairs – March 2021