TNPSC Current Affairs – English & Tamil – March 26, 2021

TNPSC Aspirants,

The Current Affairs Section is one of the most important topics for the upcoming TNPSC Group I, Group II/IIA, Group IV, and TNUSRB Exams.

Check today’s TNPSC Daily Current Affairs(26th March, 2021) in this post.

Aspirants can expect questions from the Daily Current Affairs section in the upcoming TNPSC Exams and learning the Current Affairs section will also aid them in successfully preparing for the descriptive paper. So this process is a 2 in 1 initiative.

To make the learning more convenient, we will be providing the TNPSC Daily Current Affairs in both ENGLISH & TAMIL. This has been made in such a way that reflects the TNPSC pattern as TNPSC uses both the languages in the Question Paper and this will also make the preparations of the aspirants meaningful and will 100% fulfill the needs of the aspirants.


Download PDF – TNPSC Daily Current Affairs – English & Tamil – March 26, 2021


 1. NHRC issued notice to Rajasthan government over rising incidents of crime against women in Rajasthan

  • National Human Rights Commission (NHRC) has issued notices to the Chief Secretary, and the Director General of Police, Rajasthan over complaints of exponential increase in the incidents of crime against women in the State.
  • The NHRC said that 80 thousand cases were registered in the State in the last one year.
  • Accordingly, the Commission had directed them to enquire into the specific incidents and submit an Action Taken Report within four weeks.

National Human Rights Commission (NHRC):

  • National Human Rights Commission is a statutory bodyestablished under the Protection of Human Rights Act of 1993.
  • It was established on 12 October 1993.
  • It consists of a Chairman and seven other members with a tenure of 5 years or 70 years of age.
  • The chairperson is a retired Chief Justice of India or a Judge of the Supreme Court.
  • They are appointed by the President on the recommendations of a six-member committee consisting of:
  1. Prime Minister (Head)
  2. Speaker of the Lok Sabha
  3. Deputy Chairman of the Rajya Sabha
  4. Leaders of the Opposition in Lok Sabha
  5. Leaders of the Opposition in Rajya Sabha
  6. Union Home Minister
  • They can be removed by the President under specific circumstances.

 

1. ராஜஸ்தான் மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவது தொடர்பாக ராஜஸ்தான் அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது

  • ராஜஸ்தான் மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது என்ற புகார் தொடர்பாக, தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC) ராஜஸ்தான் தலைமைச் செயலாளருக்கும், ராஜஸ்தான் காவல்துறை தலைமை இயக்குநருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
  • கடந்த ஓராண்டில் மாநிலத்தில் 80 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
  • அதன்படி, குறிப்பிட்ட சம்பவங்கள் குறித்து விசாரித்து, நான்கு வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்பட்ட அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என, ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC):

  • தேசிய மனித உரிமைகள் ஆணையம் 1993ஆம் ஆண்டு மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட ஒரு சட்ட அமைப்பு ஆகும்.
  • இது 12 அக்டோபர் 1993இல் நிறுவப்பட்டது.
  • இது ஒரு தலைவர் மற்றும் ஏழு உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. இவர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் அல்லது 70 வயது வரை.
  • தலைவர் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி அல்லது உச்சநீதிமன்ற நீதிபதியாக இருப்பார்.
  • அவர்கள் கீழ்கண்ட ஆறு பேர் அடங்கிய குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுவர்:
  1. பிரதமர் (தலைவர்)
  2. மக்களவை சபாநாயகர்
  3. மாநிலங்களவை துணைத் தலைவர்
  4. மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்
  5. மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர்
  6. மத்திய உள்துறை அமைச்சர்
  • குறிப்பிட்ட சூழ்நிலைகளில் அவர்களை பதவி நீக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு உள்ளது.

2. Saurabh Garg is appointed as the CEO of Unique Identification Authority of India (UIDAI)

  • Senior bureaucrat Saurabh Garg has been appointed as the Chief Executive Officer (CEO) of Unique Identification Authority of India (UIDAI). Garg is at present serving in his cadre state Odisha. He is a 1991 batch IAS officer.

Unique Identification Authority of India

  • The Unique Identification Authority of India (UIDAI) is a statutory authority.
  • It was established by the Government of India under the Ministry of Electronics and Information Technology on 12 July 2016 under the provisions of the Aadhaar Act 2016.
  • The UIDAI is mandated to assign a 12-digit unique identification number (Aadhaar) to all the residents of India.

 

2. இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI)யின் தலைமை நிர்வாக அதிகாரியாக சவுரப் கார்க் நியமிக்கப்பட்டுள்ளார்.

  • இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI)யின் தலைமை செயல் அதிகாரியாக (CEO) மூத்த அதிகாரி சவுரப் கார்க் நியமிக்கப்பட்டுள்ளார். கார்க் தற்போது ஒடிசாவில் பணியாற்றி வருகிறார் . இவர் 1991ஆம் பிரிவின் ஐ.ஏ.எஸ்.(IAS) அதிகாரி ஆவார்.

இந்திய தனித்துவ அடையாள ஆணையம்

  • இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஒரு சட்டப் அமைப்பாகும்.
  • இது இந்திய அரசால் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் 12 ஜூலை 2016இல் ஆதார் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டது.
  • இந்திய குடியுரிமை பெற்ற அனைவருக்கும் 12 இலக்க தனித்துவ அடையாள எண் (ஆதார்) ஒதுக்குவதே UIDAIஇன் முக்கிய வேலையாகும்.

3. Bacteria found on International Space Station named after Indian scientist Ajmal Khan

  • According to a study published in the Frontiers in Microbiology, four strains from the family of Mytholobacteriaceae were found on various locations on the International Space Station (ISS).
  • It has been named after Indian scientist Ajmal Khan.

 

3. சர்வதேச விண்வெளி நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பாக்டீரியாவிற்கு இந்திய விஞ்ஞானி அஜ்மல்கான் பெயர் சூட்டப்பட்டது

  • ஃபிரண்டியர்ஸ் இன் மைக்ரோபயாலஜியில் (Frontiers in Microbiology) வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, மைத்தாலோபாக்டீரியேசியே குடும்பத்தின் நான்கு திரிபுகள் தொடர்ச்சியாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) பல்வேறு இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டன.
  • இதற்கு இந்திய விஞ்ஞானி அஜ்மல்கானின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

4. NASA Perseverance rover captures sounds of it driving around Mars

  • NASA’s rover to the Mars has sent back an audio file containing sounds of the Perseverance driving on the Red Planet.
  • This is the first such audio recorded of any vehicle driving around in Mars.

 

4. நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர் அது செவ்வாய் கிரகத்தில் பயணிக்கும் ஒலிகளை ஒலிப்பதிவு செய்துள்ளது

  • செவ்வாய் கிரகத்தில் நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர் ஓடும் தான் பயணிக்கும் ஒலிகள் கொண்ட ஒரு ஒலிக்கோப்பை திருப்பி அனுப்பியுள்ளது.
  • செவ்வாய் கிரகத்தில் பயணிக்கும் வாகனம் செய்த முதல் பதிவு இதுவே.

5. Bengaluru’s Kempegowda airport became the first airport in South India to have operational parallel runways

  • Kempegowda International Airport created history when its northern runway re-opened for operations alongside its southern runway, making it the only airport in south India to have parallel operation runways.

It received approval from the Directorate General of Civil Aviation (DGCA) and commenced its operations for North runway.

  • Parallel runway in Bengaluru Airport, will offer the flexibility to operate both runways in low visibility and adverse weather conditions.

Simultaneous opposite direction parallel runway operations (SODPROPS)

  • Simultaneous opposite direction parallel runway operations (SODPROPS), is a method of coordinating the arrival and departure of aircraft on parallel runways.

 

5. பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையம் தென்னிந்தியாவின் முதல் இணையான செயல்பாட்டு ஓடுபாதைகளைக் கொண்ட விமான நிலையமாக மாறியது

  • கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் அதன் தெற்கு ஓடுதளத்தின் அருகில் வடக்கு ஓடுதளம் நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டபோது வரலாற்றை உருவாக்கியது, இது தென் இந்தியாவில் இணையான செயல்பாட்டு ஓடுபாதைகளைக் கொண்ட ஒரே விமான நிலையமாக இது உள்ளது.

இது சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகத்திடமிருந்து (DGCA) ஒப்புதலைப் பெற்று வடக்கு ஓடுபாதைக்கான தனது நடவடிக்கைகளைத் தொடங்கியது.

  • பெங்களூரு விமான நிலையத்தின் இணை ஓடுபாதை, குறைந்த பார்வை மற்றும் மோசமான வானிலையில் இரண்டு ஓடுபாதைகள் இயக்க நெகிழ்வு வழங்க அமைக்கப்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில் எதிர் திசை இணை ஓடுபாதை செயல்பாடுகள் (SODPROPS)

  • ஒரே நேரத்தில் எதிர் திசை இணை ஓடுபாதை நடவடிக்கைகள் (SODPROPS) என்பது இணை ஓடுபாதைகளில் விமானம் வருகை மற்றும் புறப்பாடு ஒருங்கிணைப்பு முறை ஆகும்.

6. Indian Defence Minister Rajnath Singh and his South Korean Defence Minister Suh Wook inaugurated Indo-Korean Bilateral Friendship Park

  • Indian Defence Minister Rajnath Singh and South Korean Defence Minister Suh Wook inaugurated the Indo-Korean Bilateral Friendship Park in Delhi Cantonment.
  • Friendship Park has been built to commemorate the contribution of Indian peacekeepers during the Korean War from 1950 to 1953.

Korean War

  • Korean war took place between North Korea and South Korea from 1950 to 1953.
  • It was actually a proxy war between USA and USSR.

 

6. இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் அவரது தென் கொரிய பாதுகாப்பு அமைச்சர் சூ வூக் ஆகியோர் இந்தியா-கொரிய இருதரப்பு நட்புறவு பூங்காவை திறந்து வைத்தனர்

  • இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் தென் கொரிய பாதுகாப்பு அமைச்சர் சூ வூக் ஆகியோர் டெல்லி இராணுவ தளவாடத்தில் இந்திய-கொரிய இருதரப்பு நட்புறவு பூங்காவைத் திறந்து வைத்தனர்.
  • 1950 முதல் 1953 வரை நடந்த கொரிய ப்போரில் இந்திய அமைதிப்படையின் பங்களிப்பை நினைவுகூரும் வகையில் இந்த நட்புறவுப் பூங்கா கட்டப்பட்டுள்ளது.

கொரியப் போர்

  • 1950 முதல் 1953 வரை வட கொரியாவிற்கும் தென் கொரியாவிற்கும் இடையே கொரியப் போர் நடந்தது.
  • இது உண்மையில் அமெரிக்கா மற்றும் USSR இடையே ஒரு பினாமி போர் ஆகும்.

7. India and Madagascar conducted the first-ever joint patrol in Madagascar EEZ and PASSEX

  • The navies of India and Madagascar undertook joint patrolling of Madagascar’s Exclusive Economic Zone (EEZ) and conducted a Passage Exercise (PASSEX).
  • INS Shardul and Malagasy Navy ship MNS Trozona carried out a Passage Exercise (PASSEX).

 

7. இந்தியா மற்றும் மடகாஸ்கர் இருநாடுகளும் மடகாஸ்கரின் பிரத்யேக பொருளாதார மண்டலத்தில் (EEZ) முதல் முறையாக கூட்டு ரோந்து பயிற்சி மற்றும் PASSEX பயிற்சி நடத்தின

  • இந்தியா மற்றும் மடகாஸ்கர் கடற்படைகள் மடகாஸ்கர் பிரத்யேக பொருளாதார மண்டலத்தில் (EEZ) கூட்டாக ரோந்து பயிற்சி மற்றும் PASSEX பயிற்சியை நடத்தியது.
  • INS ஷர்துல் மற்றும் மடகாஸ்கர் கடற்படை கப்பல் MNS Trozona PASSEX பயிற்சியை நடத்தியது.

8. Tejaswini Sawant and Sanjeev Rajput won gold in 50m rifle 3 positions mixed team event

  • Tejaswini Sawant and Sanjeev Rajput won a gold medal in the 50m rifle mixed team event at the ISSF World Cup held in Delhi.
  • Aishwary Pratap Singh Tomar and Sunidhi Chauhan won the bronze medal against USA’s Timothy Sherry and Virginia Thrasher (31-15) at the Karni Singh Shooting Range.

 

8. 50மீ ரைபிள் 3 இடங்களில் கலப்பு அணி போட்டியில் தேஜஸ்வினி சாவந்த் மற்றும் சஞ்சீவ் ராஜ்புத் தங்கம் வென்றனர்

  • டெல்லியில் நடைபெற்ற ISSF உலககோப்பை போட்டியில் 50மீ ரைபிள் கலப்பு அணி பிரிவில் தேஜஸ்வினி சாவந்த் மற்றும் சஞ்சீவ் ராஜ்புத் ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றனர்.
  • ஐஷ்வரி பிரதாப் சிங் மற்றும் சுனிதி சௌகான் அமெரிக்காவின் திமோதி ஷெர்ரி மற்றும் விர்ஜீனியா த்ராஷர் (31-15) ஆகியோருக்கு எதிராக வெண்கலப் பதக்கம் வென்றனர்.

9. Para Shooter Sidhartha Babu claimed bronze medal: India finished with 7 medals

  • Para shooter Sidhartha Babu claimed a bronze medal as India ended their campaign with seven medals including two gold medals at the Al Ain 2021 World Shooting Para Sport World Cup held in the United Arab Emirates.
  • Ukraine finished top of the medal table with 11 medals, followed by host nation UAE which won five medals while India finished third place with 7 medals (two gold medals, one silver, and four bronze medals).
  • Para shooter Manish Narwal had set a new world record on way to clinching gold in the P4 mixed 50m pistol SH1 event.

 

9. பாரா துப்பாக்கி சுடுதல் வீரர் சித்தார்த்த பாபு வெண்கலப் பதக்கம்: இந்தியா 7 பதக்கங்களுடன் போட்டியை முடித்தது

  • பாரா துப்பாக்கி சுடுதல் வீரர் சித்தார்த் பாபு வெண்கலப் பதக்கம் வென்றார். ஐக்கிய அரபு நாடுகளின் அல் அய்னில் நடைபெற்ற 2021 உலக துப்பாக்கி சுடுதல் பாரா உலகக் கோப்பையில் இந்தியா 7 தங்கப் பதக்கங்கள் உட்பட ஏழு பதக்கங்களை வென்றுள்ளது.
  • பதக்க அட்டவணையில் 11 பதக்கங்களுடன் பிரிட்டன் முதலிடத்தைப் பிடித்தது, அதைத் தொடர்ந்து ஐக்கிய அரபு நாடுகளின் ஐந்து பதக்கங்களை வென்றது, இந்தியா 7 பதக்கங்களுடன் (இரண்டு தங்கப் பதக்கங்கள், ஒரு வெள்ளி மற்றும் நான்கு வெண்கலப் பதக்கங்களுடன்) மூன்றாவது இடத்தை பிடித்தது.
  • P4 கலப்பு 50மீ பிஸ்டல் SH1 போட்டியில் பாரா துப்பாக்கி சுடும் வீரர் மனிஷ் நர்வால் தங்கம் வென்று புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

10. Navi Mumbai, Ahmedabad, Bhubaneswar was chosen as venues for 2022 Women’s Asian Cup

  • Navi Mumbai, Ahmedabad and Bhubaneswar were finalised as the three venues for the 2022 AFC Women’s Asian Cup football tournament to be hosted by India
  • India is hosting the Women’s Asian Cup from 20 January to 6 February 2022. India is also scheduled to host the next edition of the FIFA Women’s U-17 World Cup in 2022.
  • The DY Patil Stadium (Navi Mumbai), Trans Stadia (Ahmedabad) and the Kalinga Stadium (Bhubaneswar) will host the matches.

Asian Football Confederation (AFC)

  • The Asian Football Confederation(AFC) is one of the six confederations within FIFA and is the governing body of association football in Asia and Australia.
  • Headquarters: Kuala Lumpur, Malaysia
  • It wa found in 1954

 

10. நவி மும்பை, அகமதாபாத், புவனேஸ்வர் ஆகிய மூன்றும் 2022 மகளிர் ஆசியக் கோப்பைக்கான மைதானங்களாக தேர்வு செய்யப்பட்டன

  • 2022ஆம் ஆண்டு இந்தியா நடத்தும் AFC மகளிர் ஆசியகோப்பை கால்பந்து போட்டியில் மூன்று மைதானங்களாக நவிமும்பை மற்றும் அகமதாபாத் மற்றும் புவனேஷ்வர் ஆகிய மூன்று இடங்களும் இறுதி செய்யப்பட்டன.
  • 2022 ஜனவரி 20 முதல் பிப்ரவரி 6 வரை மகளிர் ஆசியக் கோப்பை போட்டிகளை இந்தியா நடத்துகிறது. 2022-ம்ஆண்டு பிபா மகளிர் 17 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலகக் கோப்பையின் அடுத்த போட்டியை இந்தியா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
  • டி.ஒய்.பாட்டீல் ஸ்டேடியம் (நவி மும்பை), டிரான்ஸ் ஸ்டேடியா (அகமதாபாத்) மற்றும் கலிங்கா ஸ்டேடியம் (புவனேஸ்வர்) ஆகியவை இந்த போட்டிகளை நடத்தும்.

ஆசிய கால்பந்து கூட்டமைப்பு (AFC)

  • ஆசிய கால்பந்து கூட்டமைப்பு (AFC) ஃபிஃபாவில் (FIFA) உள்ள ஆறு கூட்டமைப்புகளில் ஒன்றாகும் மற்றும் ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள கால்பந்து சங்கங்களின் ஆளுமை அமைப்பாகும்.
  • தலைமையகம்: கோலாலம்பூர், மலேசியா
  • இது 1954இல் நிறுவப்பட்டது.

Students can download the Daily TNPSC Current Affairs in English & Tamil as PDF from the links given below – TNPSC daily Current Affairs – English & Tamil – March 26, 2021. 


Download TNPSC Daily Current Affairs – PDF
26th March, 2021 Will be Available soon

Check TNPSC – Daily Current Affairs – March Month in TAMIL & English from bankersdaily from the links below. 


Read – TNPSC Daily Current Affairs – March 2021