TNPSC Current Affairs – English & Tamil – March 9 & 10, 2019

TNPSC Aspirants,

Current Affairs Section is one of the most important topics for the upcoming TNPSC Group I, Group II/IIA, Group IV, and TNUSRB Exams.

Check the TNPSC Daily Current Affairs of today (9th & 10th March 2019) in this post.

Aspirants can expect questions from the Daily Current Affairs in the TNPSC Exams and learning the Current Affairs section will also aid them in successfully preparing for the descriptive paper. So this process is a 2 in 1 initiative.

To make the learning more convenient, we will be providing the TNPSC Daily Current Affairs in both ENGLISH & TAMIL. This has been made as TNPSC uses both the languages in the Question Paper and this will also make the preparations of the aspirants meaningful and will 100% fulfill the needs of the aspirants.


New Finance Secretary

  • Economic Affairs Secretary Subhash Chandra Garg was on Friday appointed as the Finance Secretary, according to a Personnel Ministry order.
  • Former Finance Secretary Ajay Narayan Jha superannuated on February 28. Mr Jha has taken over as Member, 15th Finance Commission.

புதிய நிதித்துறை செயலர்

  • மத்திய நிதித்துறை செயலராக சுபாஷ் சந்திர கார்க் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இதற்கு முன்பாக பொருளாதார விவகார செயலராக சுபாஷ் சந்திர கார்க் இருந்தார்.
  • நிதித்துறை செயலராக இருந்த அஜய் நாராயணனின் பதவிக் காலம் பிப்ரவரி 28-ம் தேதியுடன்
    நிறைவு பெற்றது. தற்போது அஜய் நாராயண் 15-வது நிதிக் கமிஷன் உறுப்பினராக உள்ளார்.

Mukhyamantri Anchal Amrit Yojana

  • The government of Uttarakhand has launched the Mukhyamantri Anchal Amrit Yojana to provide milk at the Anganwadi Centres.
  • About the Scheme Under the Mukhyamantri Anchal Amrit Yojana, the government would provide 100 ml milk twice a week for children under six years of age in every Anganwadi centre.

முக்கியமந்திரி அன்சல் அம்ரித் யோஜனா

  • அங்கன்வாடி மைய்யங்களில் பால் வழங்கும் திட்டமான முக்கியமந்திரி அன்சல் அம்ரித் யோஜனா எனும் திட்டத்தை உத்தரகாண்ட் மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இத்திட்டத்தின்படி மாநிலத்தின் அனைத்து அங்கன்வாடி மையங்களில்லும் 6 வயது கீழ் உள்ள குழந்தைகளுக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் 100மி.லி அளவுக்கு பால் வழங்கப்படும்.

Nagpur Metro

  • Prime Minister Narendra Modi inaugurated a 13.5 km stretch under phase I of the Metro Rail in Nagpur, making it the second city in Maharashtra after Mumbai to get a Metro Rail.

நாக்பூர் மெட்ரோ

  • பிரதமர் நரேந்திர மோடி 13.5 கிலோ மீட்டர் நீளம் உள்ள நாக்பூர் மெட்ரோ ரயிலின் முதல்
    தடத்தை தொடங்கிவைத்தார். இதன் மூலம் மும்பை மெட்ரோவிற்கு அடுத்து மகாராஷ்டிரா
    மாநிலத்தின் இரண்டாவது மெட்ரோவாக நாக்பூர் உருவெடுத்துள்ளது.

Chakra III Attack Submarine

  • India sealed a $3 billion deal with Russia for leasing of a nuclear-powered attack submarine for the Indian Navy for a period of 10 years.
  • Under the pact, Russia will have to deliver the Akula class submarine, to be known as Chakra III, to the Indian Navy by 2025. It will be the third Russian submarine to be leased to the Indian Navy.
  • The first Russian nuclear-powered submarine — christened INS Chakra — was taken in 1988 under a three year lease. A second INS Chakra was taken on lease in 2012 for a period of 10 years.

நீர்மூழ்கி போர்க்கப்பல் சக்ரா 3

  • அணுசக்தியால் இயங்கக்கூடிய நீர்மூழ்கி போர்க் கப்பலை, 3 பில்லியன் டாலருக்கு 10 ஆண்டுகள் இந்தியா குத்தகைக்கு வாங்க ரஷ்யாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
  • அகுலா என்ற வகையை சேர்ந்த இந்த நீர்மூழ்கிக் கப்பல், 2025ல் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும். இந்த கப்பல், ‘சக்ரா-3’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டு, 10 ஆண்டுகள் பயன்படுத்தப்பட உள்ளது. 
  • ரஷ்யாவிடமிருந்து இந்தியா குத்தகைக்கு பெறும் 3-வது நீர்மூழ்கிக் கப்பல் ஆகும். இதேபோல் ‘சக்ரா-2’ , 2012ம் ஆண்டில், 10 ஆண்டுகள் குத்தகையாக பெறப்பட்டது. 1988ல் ஐஎன்எஸ் சக்ரா என்ற நீர்மூழ்கி கப்பலை இந்தியா முதல்முறை 3 ஆண்டுகளுக்கு குத்தகை எடுத்தது.

Bhabha Atomic Research Centre

  • Ajit Kumar has been appointed as Director of Bhabha Atomic Research Centre(BARC) for the period of three years. The Bhabha Atomic Research Centre(BARC) is headquartered in Trombay, Maharashtra.

பாபா அணு ஆராய்ச்சி மையம்

  • பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் இயக்குனராக அஜித் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் தலைமையகம் மகாராஷ்டிராவின் டிராம்பேவில் அமைந்துள்ளது.

Yashwantrao Chavan National Award

  • Raghuram Rajan, former governor of RBI has been chosen for the ‘Yashwantrao Chavan National Award 2018’ by Yashwantrao Chavan Prathisthan for his contribution to economic development.
  • Yashwantrao Chavan was the 1st Chief Minister of State of Maharashtra and has also served as Deputy Prime Minister of India in the cabinet of Prime Minister Charan Singh between 1979-1980.
  • After the death of Yashwantrao Chavan, Yashwantrao Chavan Prathisthan was constituted by his followers and associates to take forward his works.

யஷ்வந்தராவ் சவான் தேசிய விருது

  • யஷ்வந்தராவ் சவான் பிரதிஸ்தான் அமைப்பால் வழங்கப்படும் 2018 ஆம் ஆண்டிற்கான யஷ்வந்தராவ் சவான் தேசிய விருது ஆர்பிஐ-யின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜனுக்கு பொருளாதார வளர்ச்சியில் அவருடைய பங்களிப்பிற்;க்காக வழங்கப்பட்டது.
  • யஷ்வந்தராவ் சவான் மகாராஷ்டிராவின் முதல் முதலமைச்சர் ஆவார்.
  • மேலும் இவர் சரண் சிங் பிரதமராக இருந்த காலத்தில் துணை பிரதமராக இருந்துள்ளார்.
  • யஷ்வந்தராவ் சவான் மரணத்திற்கு பின் அவரை பின்பற்றுபவர்கள் அவருடைய பணிகளை முன்னோக்கி எடுத்து செல்ல யாஷ்வந்தரா சவான் பிரதிஸ்தான் அமைப்பை தொடங்கினர்.

Idukki’s Marayoor Jaggery

  • Traditional and handmade product from Idukki district of Kerala, Marayoor Jaggery received the Geographical Indication tag from the Central Government.

இடுக்கியின் மறையூர் வெல்லம்

  • புழமை வாய்ந்த மற்றும் கையினால் தயாரிக்கப்படும் கேரளாவின் இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த மறையூர் வெல்லம் மத்திய அரசிடமிருந்து புவிசார் குறியீட்டைப் பெற்றுள்ளது.

61st Grandmaster for India

  • P. Iniyan, hailing from Erode, defeated Sergey Fedorchuk of Ukraine at Noisiel Open in France to become the 61st Grandmaster for India.

இந்தியாவின் 61வது கிராண்ட் மாஸ்டர்

  • பாரிஸில் நடைபெற்ற நொய்சியல் ஓபன் போட்டியில் ஈரோட்டைச் சேர்ந்த பி. இனியன் உக்ரைனின் செர்ஜி ஃபெடோர்சுக்கை வீழ்த்தி இந்தியாவின் 61வது கிராண்ட் மாஸ்டராக உருவெடுத்துள்ளார்.

Pritzker Prize 2019

  • Japanese architect Arata Isozaki has been named 2019 laureate of the Pritzker Prize, architecture’s most prestigious award.
  • Pritzker Prize is an annual award to honour a living architect or architects whose built work demonstrates a combination of those qualities of talent, vision, and commitment.

பிரிட்ஸ்கர் விருது 2019

  • கட்டிடக் கலைஞர்களின் வழங்கப்படும் மிகவும் புகழ்பெற்ற விருதான 2019 ஆம் ஆண்டின்
    பிரிட்ஸ்கர் விருதுக்கு ஜப்பானைச் சேர்ந்த கட்டிடக் கலைஞரான அராடா இசோசகி
    தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • பிரிட்ஸ்கர் விருது என்பது தனது திறமை, தொலைநோக்குப் பார்வை மற்றும் அர்ப்பணிப்பு
    ஆகியவற்றை எடுத்துக் காட்டும் கட்டிடப் பணியை மேற்கொண்டுள்ள கட்டிடக் கலைஞர்களை
    கௌரவிப்பதற்காக வழங்கப்படும் ஒரு வருடாந்திர விருதாகும்.

Yuvashree Arpan Scheme

  • Chief Minister of West Bengal Mamata Banerjee has unveiled a new scheme Yuvashree Plan II or Yuvashree Arpan to encourage entrepreneurship among youth.
  • Under this Scheme around 50000 Youths who have passed out of ITI or other polytechnic institutes will be eligible to get financial support of Rs One Lakh from the state MSME department to set up their own business initiatives.

யுவஸ்ரீ அர்பன் திட்டம்

  • இளைஞர்களிடையே தொழில் முனைவை ஊக்குவிப்பதற்காக யுவஸ்ரீ திட்டம் ஐஐ அல்லது
    யுவஸ்ரீ அர்பன் என்ற ஒரு புதிய திட்டத்தை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி
    தொடங்கிவைத்துள்ளார்.
  • இந்த திட்டத்தின் கீழ் ஐடிஐ அல்லது இதர தொழில்நுட்ப நிறுவனங்களில் இருந்து பயின்று
    வெளியேறும் ஏறக்குறைய 5000 இளைஞர்கள தனது சொந்த வணிக முன்னெடுப்புகளை
    அமைப்பதற்காக மாநில சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனத் துறையிடமிருந்து;
    ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி பெற்றத் தகுதியுடையவர்கள் ஆவர்.

இதற்கு முந்தைய நாட்களில் வந்த TNPSC பொது அறிவு நிகழ்வுகளை பற்றிய பதிவுகளுக்கு கீழே உள்ளவற்றை பார்க்கவும்.



தமிழகத்தின் தலைசிறந்த TNPSC பயிற்சி மையம்

RACE TNPSC Exam Coaching Institute

TNPSC Group I | Group II | Group II-A | Group IV & VAO (CCSE) | TNUSRB | TNFUSRC | TET



Buy the Quantitative Aptitude, Reasoning Ability & English Language Topic Wise Tests – Online Tests from the below-given links. 





Aspirants can get the test packages from our Official Bankersdaily Store (https://bankersdaily.testpress.in)


 If you have any doubts regarding the 4 new Topic Wise Test Packages, kindly mail your queries to virtualracetest@gmail.com.


#1 TRENDING VIDEO in Race YOUTUBE CHANNEL