TNPSC Current Affairs – English & Tamil – May 16 & 17, 2021

TNPSC Aspirants,

The Current Affairs Section is one of the most important topics for the upcoming TNPSC Group I, Group II/IIA, Group IV, and TNUSRB Exams.

Check today’s TNPSC Daily Current Affairs(16 & 17th May, 2021) in this post.

Aspirants can expect questions from the Daily Current Affairs section in the upcoming TNPSC Exams and learning the Current Affairs section will also aid them in successfully preparing for the descriptive paper. So this process is a 2 in 1 initiative.

To make the learning more convenient, we will be providing the TNPSC Daily Current Affairs in both ENGLISH & TAMIL. This has been made in such a way that reflects the TNPSC pattern as TNPSC uses both the languages in the Question Paper and this will also make the preparations of the aspirants meaningful and will 100% fulfill the needs of the aspirants.


Download PDF – TNPSC Daily Current Affairs – English & Tamil – May 16 & 17, 2021


1. Ramesh Pokhriyal Nishank was conferred ‘International Invincible Gold Medal’ of 2021

  • International Invincible Gold Medal of 2021 waqs conferred to Union Education Minister Ramesh Pokhriyal Nishank. The award is presented by Maharshi Organisation.
  • He has been recognised for his extraordinary commitment and outstanding service to humanity through his writings, social and illustrious public life.

 

1. ரமேஷ் பொக்ரியால் நிஷாங்கிற்கு 2021இன் ‘சர்வதேச இன்வின்சிபிள் தங்கப் பதக்கம்’ வழங்கப்பட்டுள்ளது

  • 2021ஆம் ஆண்டின், சர்வதேச இன்வின்சிபிள் தங்கப் பதக்கம், மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்கிற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை மகரிஷி அமைப்பு வழங்குகிறது.
  • அவர் தனது எழுத்துக்கள், சமூக சேவை மற்றும் பொது வாழ்க்கை மூலம் மனிதகுலத்திற்கு அசாதாரண மற்றும் சிறந்த சேவைக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.

2. Union Government increases the indigenous production of Covaxin under Atmanirbhar Bharat 3.0 Mission Covid Suraksha

  • Atmanirbhar Bharat 3.0 Mission COVID Suraksha was announced by the Union Ministry of Science and Technology to accelerate the production of indigenous COVID vaccines.
  • Union Government increased the indigenous production of Covaxin under Atmanirbhar Bharat 3.0 Mission Covid Suraksha. 
  • This is being implemented by the Department of Biotechnology at BIRAC, New Delhi.

 

2. ஆத்மனிர்பார் பாரத் 3.0 திட்டத்தின் கோவிட் சுரக்ஷா இயக்கத்தின் கீழ் உள்நாட்டு கோவாக்சின் உற்பத்தியை அரசு உயர்த்துகிறது

  • ஆத்மனிர்பார் பாரத் 0 கோவிட் சுரக்ஷா இயக்கம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தால் உள்நாட்டு கோவிட் தடுப்பூசிகளின் உற்பத்தியை விரைவுபடுத்துவதாக அறிவிக்கப்பட்டது.
  • ஆத்மனிர்பார் பாரத் 3.0 திட்டத்தின் கோவிட் சுரக்ஷா இயக்கத்தின் கீழ் கோவாக்சின் உள்நாட்டு உற்பத்தியை மத்திய அரசு அதிகரித்திருக்கிறது.
  • புது தில்லியில் உள்ள BIRACஇன் உயிரி தொழில்நுட்பத் துறை இதை செயல்படுத்தி வருகிறது.

3. DRDO develops an Oxycare system to regulate oxygen in COVID-19 patients body

  • The Defence Research and Development Organisation (DRDO) has developed an Oxycare system to regulate oxygen being administered to the patients based on the sensed values of oxygen saturation in the body.
  • The Oxycare system developed by DRDO optimises the consumption of oxygen based on oxygen saturation in the body. It reduces the workload of hospital staff eliminating the need of routine measurement and manual adjustment of oxygen flow. It saves oxygen by 30 to 40 per cent and has an audio warning.

 

3. கோவிட்-19 நோயாளிகளின் உடலில் ஆக்ஸிஜனை ஒழுங்குபடுத்த DRDO ஒரு ஆக்ஸிகேர் அமைப்பை உருவாக்கியுள்ளது

  • உடலில் ஆக்ஸிஜன் செறிவூட்டலின் உணரப்பட்ட மதிப்புகளின் அடிப்படையில், நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் செலுத்தப்படுவதை ஒழுங்குபடுத்த, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) ஒரு ஆக்ஸிகேர் அமைப்பை உருவாக்கியுள்ளது.
  • DRDO உருவாக்கிய இந்த ஆக்ஸிகேர் அமைப்பு, உடலில் ஆக்ஸிஜன் செறிவூட்டலின் அடிப்படையில் ஆக்ஸிஜன் நுகர்வை மேம்படுத்துகிறது. இது வழக்கமான அளவீடு மற்றும் ஆக்ஸிஜன் ஓட்டத்தை கைமுறையாக சரிசெய்தல் ஆகியவற்றின் தேவையை அகற்றி மருத்துவமனை ஊழியர்களின் பணிச்சுமையைக் குறைக்கிறது. இது ஆக்ஸிஜனை 30 முதல் 40 சதவீதம் சேமிக்கிறது மற்றும் ஆடியோ எச்சரிக்கை வசதியும் உள்ளது.

4. Chhattisgarh launches virtual school to educate children affected by COVID

  • In Chhattisgarh, a virtual school is being set up so that children’s education is not affected due to COVID-19 crisis. This virtual school will operate under the Chhattisgarh State Open School. All schools have been closed for the past several days due to the COVID-19 pandemic.
  • In such circumstances, to impart online education to the children affected by COVID-19 crisis and on-going lockdown, Chhattisgarh Government has launched a virtual school using information technology. Students from class 9 to 12 will be able to take admission in this virtual school. From the admission process to the studies and examinations, all the work will be on virtual platform. Students will also have the facility to choose a mentor of their choice and get their doubts cleared online.

 

4. கோவிட் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்க சத்தீஸ்கர் அரசு மெய்நிகர் பள்ளியைத் தொடங்கியது

  • சத்தீஸ்கரில், கோவிட்-19 நெருக்கடி காரணமாக குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க ஒரு மெய்நிகர் பள்ளி அமைக்கப்படுகிறது. இந்த மெய்நிகர் பள்ளி சத்தீஸ்கர் மாநில திறந்தநிலை பள்ளியின் கீழ் செயல்படும். கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக அனைத்து பள்ளிகளும் கடந்த பல நாட்களாக மூடப்பட்டுள்ளன.
  • கோவிட்-19 நெருக்கடி மற்றும் தொடர்ந்து வரும் பொதுமுடக்கம் போன்ற இத்தகைய சூழ்நிலைகளில், குழந்தைகளுக்கு ஆன்லைன் கல்வியை வழங்க, சத்தீஸ்கர் அரசு தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு மெய்நிகர் பள்ளியைத் தொடங்கியுள்ளது. 9 முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் இந்த மெய்நிகர் பள்ளியில் சேர முடியும். சேர்க்கை செயல்முறை முதல் ஆய்வுகள் மற்றும் தேர்வுகள் வரை, அனைத்து வேலைகளும் மெய்நிகர் மேடையில் இருக்கும். மாணவர்கள் தங்கள் விருப்பப்படி ஒரு வழிகாட்டியைத் தேர்ந்தெடுத்து, தங்கள் சந்தேகங்களை ஆன்லைனில் தெளிவுபடுத்துவதற்கான வசதியையும் கொண்டிருப்பார்கள்.

5. Sikkim Statehood Day – 16 May

  • Sikkim celebrated its statehood day on 16 May. It marks the day in 1975 when Sikkim became the 22nd state of India.
  • Sikkim was an Indian princely state ruled by Chogyal. Sikkim became a ‘protectorate’ of India after 1947 with defence, external affairs, and communications under the Government of India. The 35th Constitutional Amendment Act, 1974, made Sikkim an ‘associate state’ of the Indian Union. For this purpose, a new Article 2-A and a new Schedule (10th Schedule containing the terms and conditions of association) were inserted in the Indian Constitution.
  • The 36th Constitutional Amendment Act, 1975, made Sikkim the 22nd state of the Indian Union. This constitutional amendment added a new article Article 371-F, to provide for special provisions with respect to the administration of Sikkim. It also repealed Article 2-A and the 10th Schedule that were added by the 35th Constitutional Amendment Act, 1974.

 

5. சிக்கிம் மாநில நாள் – 16 மே

  • சிக்கிம் தனது மாநில தினத்தை 16 மே அன்று கொண்டாடுகிறது. இது 1975இல் சிக்கிம் இந்தியாவின் 22வது மாநிலமாக மாறிய நாளைக் குறிக்கிறது.
  • சிக்கிம் சோக்யால் ஆட்சி செய்த ராஜ்ஜியமாகும். 1947க்குப் பிறகு சிக்கிமின் பாதுகாப்பு, வெளியுறவு மற்றும் தகவல் தொடர்பு பொறுப்புகள் இந்திய அரசின் கீழ் வந்தன. சிக்கிம் இந்தியாவின் பாதுகாவல் மாநிலமாக மாறியது. 35வது அரசியலமைப்பு திருத்த சட்டம், 1974, சிக்கிமை இந்திய ஒன்றியத்தின் ‘இணை மாநிலமாக’ ஆக்கியது. இதற்காக, இந்திய அரசியலமைப்பில் புதிய விதி 2-ஏ மற்றும் புதிய அட்டவணை (‘இணை மாநிலத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் அடங்கிய 10வது அட்டவணை) ஆகியவை சேர்க்கப்பட்டன.
  • 36வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம், 1975, சிக்கிம் இந்திய ஒன்றியத்தின் 22வது மாநிலமாக மாற்றியது. சிக்கிம் நிர்வாகம் தொடர்பாக சிறப்பு விதிகளை வழங்குவதற்காக இந்த திருத்தம் ஒரு புதிய சட்டப்பிரிவு 371-F ஐ சேர்த்தது. 1974ஆம் ஆண்டின் 35வது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தால் சேர்க்கப்பட்ட விதி 2-ஏ மற்றும் 10ஆம் அட்டவணையையும் அது ரத்து செய்தது.

6. Nagaland conservationist, Nuklu Phom wins the prestigious “Whitley Awards 2021”

  • Nagaland conservationist, Nuklu Phom, won the prestigious “Whitley Awards 2021”. Whitely Award is also known as Green Oscar. The award was presented by Whitley Fund for Nature (WFN). The award honours six grassroots conservationists along with Nuklu with Whitley
  • Nuklu won the Biodiversity Award 2018. He is also a recipient of the Governor’s gold medal and popularly known as the ‘Amur falcon man of Nagaland’.

 

6. நாகாலாந்து பாதுகாவலர், நுக்லு போம் மதிப்புமிக்க “வைட்லி விருதுகள் 2021″ஐ வென்றார்

  • நாகாலாந்து பாதுகாவலரான ஒய். நுக்லு போம், மதிப்புமிக்க “வைட்லி விருதுகள் 2021″ஐ வென்றார். வைட்லி விருது ‘கிரீன் ஆஸ்கார்’ என்றும் அழைக்கப்படுகிறது. இந்த விருதை வைட்லி ஃபண்ட் ஃபார் நேச்சர் (WFN) வழங்குகிறது. இந்த விருது நுக்லுவுடன் சேர்த்து ஆறு அடிமட்ட பாதுகாவலர்களுக்கு வைட்லி விருது வழங்கி கௌரவிக்கிறது.
  • நுக்லு உயிர்ப்பன்மை விருது 2018ஐ வென்றார். அவர் ஆளுநரின் தங்கப் பதக்கத்தைப் பெற்றவர் மற்றும் ‘நாகாலாந்தின் அமூர் பால்கன் மனிதர்’ என்று பிரபலமாக அறியப்படுகிறார்.

7. China launches Changasei 2C rocket into orbit

  • China launched Changasei 2C rocket from the Xichang satellite launch centre.
  • Changasei 2C is a Yaogon satellite, which is a series of reconnaissance satellites. Reconnaissance satellites are spy satellites that are used for military purposes.
  • The satellite will be used for electromagnetic environment surveys and other related technical tests.

 

7. சீனா சாங்கசி 2சி ராக்கெட்டை சுற்றுப்பாதையில் செலுத்தியது

  • ஜிசாங் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து சாங்கசி 2சி ராக்கெட்டை சீனா விண்ணில் செலுத்தியது.
  • சாங்காசி 2சி என்பது ஒரு யோகான் செயற்கைக்கோள் ஆகும். இச்செயற்கைக்கோள் யகூன் என்னும் உளவு செயற்கைக்கோள் தொடர்ச்சி ஆகும். உளவு செயற்கைக்கோள்கள் இராணுவ நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் செயற்கைக்கோள்கள் ஆகும்.
  • இந்த செயற்கைக்கோள், மின்காந்த சுற்றுச்சூழல் ஆய்வுகள் மற்றும் பிற தொடர்புடைய தொழில்நுட்ப சோதனைகளுக்கு பயன்படுத்தப்படும்.

8. Care Ratings revises India’s GDP forecast to 9.2% for FY22

  • Care Ratings agency revised India’s GDP growth forecast for the current fiscal year (2021–2022) to 2 per cent from 10.2 per cent. This is the fourth revision by the rating agency in its GDP growth forecast for FY (2021–22) since March 2021.

 

8. Care மதிப்பீடுகள் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி கணிப்பை நிதியாண்டு 2022க்கு 9.2% ஆக மாற்றியமைத்திருக்கிறது

  • நடப்பு நிதியாண்டிற்கான (2021–22) இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி கணிப்பை 2 சதவீதத்திலிருந்து 9.2 சதவீதமாக Care மதிப்பீட்டு நிறுவனம் திருத்தியமைத்திருக்கிறது . இது மார்ச் 2021 முதல் இந்த நிதியாண்டுக்கான (2021–22) இந்தியாவிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி முன்னறிவிப்பில், அம்மதிப்பீட்டு முகமையின் நான்காவது திருத்தமாகும்.

IMPORTANT DAYS


9. International Day of Living Together in Peace – 16 May

  • International Day of Living Together in Peace is celebrated globally on 16 May since December 2017. The day aims to uphold the desire to live and act together, united in differences and diversity, in order to build a sustainable world of peace, solidarity and harmony.
  • The United Nations General Assembly (UNGA) declared 16 May as the International Day of Living Together in Peace.

 

9. சர்வதேச சமாதானத்தோடு ஒன்றாக வாழும் தினம் 16 மே

  • சர்வதேச சமாதானத்தோடு ஒன்றாக வாழும் தினம் டிசம்பர் 2017 முதல் 16 மே அன்று உலகளவில் கொண்டாடப்படுகிறது. சமாதானம், ஒற்றுமை மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றின் நிலையான உலகைக் கட்டியெழுப்புவதற்காக, வேறுபாடுகள் மற்றும் பன்முகத்தன்மையில் ஒன்றிணைந்து வாழவும் செயல்படவும் வேண்டும் என்ற விருப்பத்தை நிலைநிறுத்துவதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ஐக்கிய நாடுகள் பொதுச் சபை (UNGA) 16 மே-யை சர்வதேச சமாதானத்தோடு ஒன்றாக வாழும் தினமாக அறிவித்தது.

10. International Day of Light – 16 May

  • The International Day of Light is celebrated on 16 May each year to commemorate the anniversary of the first successful operation of the laser in 1960 by physicist and engineer, Theodore Maiman.
  • The message of the International Day of Light 2021 is “Trust Science”

 

10. சர்வதேச ஒளி தினம் 16 மே

  • சர்வதேச ஒளி தினம் ஒவ்வொரு ஆண்டும் 16 மே அன்று கொண்டாடப்படுகிறது. இந்நாள் இயற்பியலாளர் மற்றும் பொறியாளர் தியோடர் மைமன் மூலம் 1960இல் முதல் வெற்றிகரமான லேசர் அறுவை சிகிச்சை செய்த நாளாகும்.
  • 2021இன் கருப்பொருள்: “அறிவியலை நம்புங்கள்”

11. National Dengue Day – 16 May

  • National Dengue Day is observed on 16 May every year. This day aims at spreading awareness about dengue, informing people about the disease, and encouraging them to take the necessary precautions to prevent it. The Union Ministry of Health and Family Welfare had decided 16 May to be observed as the National Dengue Day in India.
  • Dengue is caused by Dengue virus and is transmitted by Aedes aegypti mosquito. Dengvaxia is the first dengue vaccine.

 

11. தேசிய டெங்கு தினம் 16 மே

  • ஒவ்வொரு ஆண்டும் 16 மே தேசிய டெங்கு தினமாக அனுசரிக்கப்படுகிறது. டெங்கு பற்றிய விழிப்புணர்வை பரப்புவதையும், நோயைப் பற்றி மக்களுக்கு அறிவிப்பதும், அதைத் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அவர்களை ஊக்குவிப்பதும் இந்த நாளின் நோக்கமாகும். 16 மே தேசிய டெங்கு தினமாக அனுசரிக்கப்பட வேண்டும் என்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் முடிவு செய்தது.
  • டெங்கு நோய் டெங்கு வைரஸால் ஏற்படுகிறது மற்றும் ஏடிஸ் ஏஜிப்டி கொசுவால் பரவுகிறது. டெங்வாக்சியா முதல் டெங்கு தடுப்பூசி ஆகும்.

12. World Telecommunication and Information Society Day – 17 May

  • World Telecommunication and Information Society Day is observed on 17 May every year. The day is celebrated with an aim to raise awareness of the possibilities that the use of the internet can have to bridge the gap in society. The day was proclaimed in November 2006 by the International Telecommunication Union Plenipotentiary Conference in Antalya, Turkey.
  • 2021 Theme: “Accelerating Digital Transformation in challenging times”

 

12. உலக தொலைத்தொடர்பு மற்றும் தகவல் சமூக தினம் 17 மே

  • உலக தொலைத்தொடர்பு மற்றும் தகவல் சமூக தினம் ஒவ்வொரு ஆண்டும் 17 மே அன்று அனுசரிக்கப்படுகிறது. இணையத்தைப் பயன்படுத்துவது சமூகத்தில் உள்ள இடைவெளியைக் குறைக்க வேண்டிய சாத்தியக்கூறுகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. இந்நாள் 2006 நவம்பரில் துருக்கியின் அன்டாலியாவில் நடைபெற்ற சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் பிளெனிபொடன்ஷியரி மாநாட்டால் பிரகடனப்படுத்தப்பட்ட நாள் ஆகும்.
  • 2021இன் கருப்பொருள்: “சவாலான காலங்களில் டிஜிட்டல் மாற்றத்தை முடுக்கிவிடுதல்”

13. World Hypertension Day – 17 May

  • World Hypertension Day is observed annually on 17 May every year. The day was initiated to increase the awareness of hypertension and was designated by The World Hypertension League. The day was first inaugurated in May 2005.
  • 2021 Theme: “Measure Your Blood Pressure Accurately, Control It, Live Longer”

 

13. உலக உயர் இரத்த அழுத்தம் தினம் – 17 மே

  • உலக உயர் இரத்த அழுத்தம் தினம் ஆண்டுதோறும் 17 மே அன்று அனுசரிக்கப்படுகிறது. உயர் இரத்த அழுத்தம் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்க இந்த நாள் உலக உயர் இரத்த அழுத்த லீக்கால் தொடங்கப்பட்டது. இந்த நாள் முதன்முதலில் மே 2005இல் தொடங்கப்பட்டது.
  • 2021 கருப்பொருள்: “உங்கள் இரத்த அழுத்தத்தை துல்லியமாக அளவிடுங்கள், அதை கட்டுப்படுத்துங்கள், நீண்ட காலம் வாழுங்கள்”

14. Rafael Nadal beats Novak Djokovic to win his 10th Italian Open title

  • Rafael Nadal beat world number one Novak Djokovic to win his 10th Italian Open title. Nadal has now won 10 or more titles at a single event for the fourth time, after Roland Garros (13), Barcelona (12) and Monte Carlo (11). He also equalled Djokovic’s record of 36 ATP Masters 1000 titles in his 12th Italian open final.
  • Polish Iga Swiatek won the Women’s Singles title of Italian Open 2021 by defeating Karolina Pliskova of Czech Republic.

 

14. ரஃபேல் நடால் நோவக் ஜோகோவிக்கை தோற்கடித்து தனது 10வது இத்தாலிய ஓபன் பட்டத்தை வென்றார்

  • ரஃபேல் நடால் உலக நம்பர் ஒன் வீரரான நோவக் ஜோகோவிக்கை தோற்கடித்து தனது 10வது இத்தாலிய ஓபன் பட்டத்தை வென்றார். ரோலண்ட் கேரோஸ் (13), பார்சிலோனா (12) மற்றும் மான்டே கார்லோ (11) ஆகிய மூன்று பட்டங்களுக்குப் பிறகு, நடால் இப்போது நான்காவது முறையாக ஒரே போட்டியில் 10 அல்லது அதற்கு மேற்பட்ட பட்டங்களை வென்றுள்ளார். அவர் தனது 12வது இட்டாலி ஓபன் இறுதிப் போட்டியில் 36 ஏடிபி மாஸ்டர்ஸ் 1000 பட்டங்கள் வென்று ஜோகோவிக்கின் சாதனையை சமன் செய்தார்.
  • போலந்தைச் சேர்ந்த இகா ஸ்வியாடெக் செக் குடியரசின் கரோலினா ப்ளிஸ்கோவாவை தோற்கடித்து இத்தாலிய ஓபன் 2021 மகளிர் ஒற்றையர் பட்டத்தை வென்றார்.

Students can download the Daily TNPSC Current Affairs in English & Tamil as PDF from the links given below – TNPSC daily Current Affairs – English & Tamil – May 16 & 17, 2021. 


Download TNPSC Daily Current Affairs – PDF
16 & 17th May, 2021 Will be Available soon

Check TNPSC – Daily Current Affairs – May Month in TAMIL & English from bankersdaily from the links below. 


Read – TNPSC Daily Current Affairs – May 2021