TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 26 & 27,2018
Want to Become a Bank, Central / State Govt Officer in 2020?
Join the Most awarded Coaching Institute & Get your Dream Job
Now Prepare for Bank, SSC Exams from Home. Join Online Coure @ lowest fee
Lifetime validity Bank Exam Coaching | Bank PO / Clerk Coaching | Bank SO Exam Coaching | All-in-One SSC Exam Coaching | RRB Railway Exam Coaching | TNPSC Exam Coaching | KPSC Exam Coaching
TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 26 & 27,2018
கோவை ஆசிரியைக்கு தேசிய நல்லாசிரியர் விருது:
- கோவையைச் சேர்ந்த அரசுப் பள்ளி தலைமை ஆசிரியைக்கு தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
- சிறப்பாகச் செயல்படும் ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசு நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவிக்கிறது.
- இந்த ஆண்டில் தமிழக அரசு சார்பில் பரிந்துரைக்கப்பட்ட 6 பேரில், கோவையைச் சேர்ந்த ஆசிரியை ஆர்.ஸதி(46), தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வு செய்யப் பட்டுள்ளார்.
- தமிழகத்தில் இந்த விருதுக்கு இவர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நாட்டிலேயே முதல்முறையாக ‘பயோ எரிபொருளில்’ பறந்த விமானம்: ஸ்பைஸ்ஜெட் விமானம் இயக்கி சாதனை
- நாட்டிலேயே முதல்முறையாக பயோ–எரிபொருளை 25 சதவீதம் கலந்து விமானத்தைச் சோதனை முயற்சியாக இயக்கி ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் சாதனை படைத்துள்ளது.
- இந்த விமானத்தில் 75 சதவீதம் விமானத்துக்கான வழக்கமான எடிஎப் எரிபொருளும், 25 சதவீதம் பயோ–எரிபொருளும் கலந்து பயன்படுத்தப்பட்டன.
- டெராடூனில் இருந்து புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் கியூ400 என்ற விமானம் மிகுந்த பாதுகாப்பாக டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.
- ஆனால், விமானத்துக்குத் தனியாக பயோ–எரிபொருள் இல்லை. இந்நிலையில், விமானத்துக்காக பயோ–எரிபொருள் தயாரிக்கப்பட்டு ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் நிரப்பி இயக்கப்பட்ட சோதனை ஓட்டம் வெற்றிகரமாக அமைந்தது.
மேகாலயா இடைத் தேர்தலில் முதல்வர் கான்ட்ராட் சங்மா வெற்றி
- மேகாலயாவில் நடந்த இடைத் தேர்தலில் முதல்வர் கான்ராட் சங்மா வெற்றி பெற்றார்.
- மேகாலயா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 60 இடங்களில், காங்கிரஸ் 21 தொகுதிகள் வென்றது.
- பெரும்பான்மை கிடைக்காததால் பாஜக மற்றும் மாநில கட்சிகளின் ஆதரவுடன் தேசிய மக்கள் கட்சி ஆட்சியமைத்தது. மக்களவை முன்னாள் சபாநாயகர் பிஏ சங்மாவின் மகனும் தேசிய மக்கள் கட்சியின் தலைவருமான கான்ராட் சங்மா, முதல்வராக பதவியேற்றார்.
ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமர் ஸ்காட் மோரிசன்
- ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராக ஸ்காட் மோரிசன் நேற்று பதவியேற்று கொண்டார்.
- ஆஸ்திரேலியாவில் லிபரல் கட்சி ஆட்சியில் உள்ளது. பிரதமராக மால்கம் டர்ன்புல் பதவி வகித்தார்.
- அவருக்கு எதிராக மூத்த அமைச்சர் பீட்டர் டட்டன் உள்ளிட்டோர் போர்க்கொடி உயர்த்தியதால் கடந்த செவ்வாய்க்கிழமை ஆளும் கட்சி எம்.பி.க்களின் வாக்கெடுப்பு நடைபெற்றது.
- இதில் மால்கம் டர்ன்புல் வெற்றி பெற்று பிரதமர் பதவியை தக்க வைத்துக் கொண்டார்.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஒரே நாளில் இந்தியாவுக்கு 5 வெள்ளிப் பதக்கம்
- ஆசிய விளையாட்டுப் போட்டி கள் இந்தோனேஷியாவின் ஜகார்த்தா, பாலேம்பங் நகரங்களில் நடைபெற்று வருகின்றன. நேற்று நடைபெற்ற ஆடவர் 400 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீரர் முகமது அனாஸ் 45.69 விநாடிகளில் பந்தய தூரத்தை எட்டி 2-வது இடம் பிடித்தார். இதையடுத்து அவருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.
- கத்தார் நாட்டைச் சேர்ந்த வீரர் ஹசன் அப்தலேலா 44.89 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடத்து தங்கம் வென்றார்.
- மகளிர் 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் இந்திய வீராங்கனை ஹிமா தாஸ் 2-வது இடம்பிடித்து வெள்ளிப் பதக்கத்தைத் தட்டிச் சென்றார். அவர் 50.59 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்தார். பஹ்ரைன் வீராங்கனை சல்வா நாசர் 50.09 விநாடிகளில் ஓடிவந்து தங்கம் வென்றார்.
- ஹிமா தாஸ் 50.59 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்தது, இந்திய அளவில் புதிய தேசியச் சாதனையாகும். இதே போட்டியின் மகளிர் 100 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை டூட்டி சந்த் 11.32 விநாடிகளில் ஓடி 2-ம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
36 ஆண்டுகளுக்குப் பின் வரலாற்று சாதனை: வெண்கலம் வென்றார் சாய்னா:
- ஜகார்த்தாவில் நடந்து வரும் 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளி்ல் பாட்மிண்டன் பிரிவில் இந்திய வீராங்கனைகள் சாதித்து வருகின்றனர்.
- 36 ஆண்டுகளுக்குப் பின் ஆசிய விளையாட்டுப்போட்டியில் பாட்மிண்டன் போட்டியில் தனிநபர் பிரிவில் இந்தியா பதக்கம் வென்றது.
- இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் வெண்கலப் பதக்கம் வென்று 36 ஆண்டு பதக்க தாகத்தைத் தீர்த்தார்.
- அதுமட்டுமல்லாமல் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் வீராங்கனை எனும் பெருமையையும் பெற்றார் சாய்னா.
குண்டு எறிதலில் தங்கப் பதக்கம் வென்றார் இந்திய வீரர் தஜிந்தர்
- ஜகார்த்தா ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவருக்கான குண்டு எறிதலில் இந்தியாவின் தஜிந்தர் டூர் தங்கப் பதக்கம் வென்றார். ஸ்குவாஷில் இந்தியாவின் தீபிகா பல்லிகல், ஜோஷ்னா சின்னப்பா, சவுரவ் கோஷல் ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றனர்.
- போட்டியின் 7-வது நாளான நேற்று ஆடவருக்கான குண்டு எறிதலில் இந்தியாவின் தஜிந்தர் டூர் 20.75 மீட்டர் தூரம் எறிந்து சாதனை படைத்து தங்கப் பதக்கம் வென்றார்.
- சீனாவின் லியு யங் 19.52 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கமும், கஜகஸ்தானின் இவான் இவானோவ் 19.40 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினர்.
அமெரிக்க செனட்டர் ஜான் மெக்கெயின் காலமானார்:
- வியட்நாம் போரில் சிறை சென்றவரும், அமெரிக்க அதிபர் பதவிக்கு இருமுறை போட்டியிட்டவரும், அரிசோனா மாநில செனட் உறுப்பினருமான ஜான் மெக்கெயின் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 81
TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – AUGUST 27, 2018
TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 23, 2018
TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 23, 2018
TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 22, 2018