TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 26 & 27,2018

கோவை ஆசிரியைக்கு தேசிய நல்லாசிரியர் விருது:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 25 & 26,2018

  • கோவையைச் சேர்ந்த அரசுப் பள்ளி தலைமை ஆசிரியைக்கு தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
  • சிறப்பாகச் செயல்படும் ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசு நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவிக்கிறது.
  • இந்த ஆண்டில் தமிழக அரசு சார்பில் பரிந்துரைக்கப்பட்ட 6 பேரில், கோவையைச் சேர்ந்த ஆசிரியை ஆர்.ஸதி(46), தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வு செய்யப் பட்டுள்ளார்.
  • தமிழகத்தில் இந்த விருதுக்கு இவர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நாட்டிலேயே முதல்முறையாக ‘பயோ எரிபொருளில்’ பறந்த விமானம்: ஸ்பைஸ்ஜெட் விமானம் இயக்கி சாதனை

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 25 & 26,2018

  • நாட்டிலேயே முதல்முறையாக பயோஎரிபொருளை 25 சதவீதம் கலந்து விமானத்தைச் சோதனை முயற்சியாக இயக்கி ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் சாதனை படைத்துள்ளது.
  • இந்த விமானத்தில் 75 சதவீதம் விமானத்துக்கான வழக்கமான எடிஎப் எரிபொருளும், 25 சதவீதம் பயோஎரிபொருளும் கலந்து பயன்படுத்தப்பட்டன.
  • டெராடூனில் இருந்து புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் கியூ400 என்ற விமானம் மிகுந்த பாதுகாப்பாக டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.
  • ஆனால், விமானத்துக்குத் தனியாக பயோஎரிபொருள் இல்லை. இந்நிலையில், விமானத்துக்காக பயோஎரிபொருள் தயாரிக்கப்பட்டு ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் நிரப்பி இயக்கப்பட்ட சோதனை ஓட்டம் வெற்றிகரமாக அமைந்தது.

மேகாலயா இடைத் தேர்தலில் முதல்வர் கான்ட்ராட் சங்மா வெற்றி

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL - AUGUST 26 & 27,2018

  • மேகாலயாவில் நடந்த இடைத் தேர்தலில் முதல்வர் கான்ராட் சங்மா வெற்றி பெற்றார்.
  • மேகாலயா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 60 இடங்களில், காங்கிரஸ் 21 தொகுதிகள் வென்றது.
  • பெரும்பான்மை கிடைக்காததால் பாஜக மற்றும் மாநில கட்சிகளின் ஆதரவுடன் தேசிய மக்கள் கட்சி ஆட்சியமைத்தது. மக்களவை முன்னாள் சபாநாயகர் பிஏ சங்மாவின் மகனும் தேசிய மக்கள் கட்சியின் தலைவருமான கான்ராட் சங்மா, முதல்வராக பதவியேற்றார்.

ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமர் ஸ்காட் மோரிசன்

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL - AUGUST 26 & 27,2018

  • ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராக ஸ்காட் மோரிசன் நேற்று பதவியேற்று கொண்டார்.
  • ஆஸ்திரேலியாவில் லிபரல் கட்சி ஆட்சியில் உள்ளது. பிரதமராக மால்கம் டர்ன்புல் பதவி வகித்தார்.
  • அவருக்கு எதிராக மூத்த அமைச்சர் பீட்டர் டட்டன் உள்ளிட்டோர் போர்க்கொடி உயர்த்தியதால் கடந்த செவ்வாய்க்கிழமை ஆளும் கட்சி எம்.பி.க்களின் வாக்கெடுப்பு நடைபெற்றது.
  • இதில் மால்கம் டர்ன்புல் வெற்றி பெற்று பிரதமர் பதவியை தக்க வைத்துக் கொண்டார்.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஒரே நாளில் இந்தியாவுக்கு 5 வெள்ளிப் பதக்கம்

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL - AUGUST 26 & 27,2018

  • ஆசிய விளையாட்டுப் போட்டி கள் இந்தோனேஷியாவின் ஜகார்த்தா, பாலேம்பங் நகரங்களில் நடைபெற்று வருகின்றன. நேற்று நடைபெற்ற ஆடவர் 400 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீரர் முகமது அனாஸ் 45.69 விநாடிகளில் பந்தய தூரத்தை எட்டி 2-வது இடம் பிடித்தார். இதையடுத்து அவருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.
  • கத்தார் நாட்டைச் சேர்ந்த வீரர் ஹசன் அப்தலேலா 44.89 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடத்து தங்கம் வென்றார்.
  • களிர் 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் இந்திய வீராங்கனை ஹிமா தாஸ் 2-வது இடம்பிடித்து வெள்ளிப் பதக்கத்தைத் தட்டிச் சென்றார். அவர் 50.59 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்தார். பஹ்ரைன் வீராங்கனை சல்வா நாசர் 50.09 விநாடிகளில் ஓடிவந்து தங்கம் வென்றார்.
  • ஹிமா தாஸ் 50.59 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்தது, இந்திய அளவில் புதிய தேசியச் சாதனையாகும். இதே போட்டியின் மகளிர் 100 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை டூட்டி சந்த் 11.32 விநாடிகளில் ஓடி 2-ம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.

36 ஆண்டுகளுக்குப் பின் வரலாற்று சாதனை: வெண்கலம் வென்றார் சாய்னா:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL - AUGUST 26 & 27,2018

  • ஜகார்த்தாவில் நடந்து வரும் 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளி்ல் பாட்மிண்டன் பிரிவில் இந்திய வீராங்கனைகள் சாதித்து வருகின்றனர்.
  • 36 ஆண்டுகளுக்குப் பின் ஆசிய விளையாட்டுப்போட்டியில் பாட்மிண்டன் போட்டியில் தனிநபர் பிரிவில் இந்தியா பதக்கம் வென்றது.
  • இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் வெண்கலப் பதக்கம் வென்று 36 ஆண்டு பதக்க தாகத்தைத் தீர்த்தார்.
  • அதுமட்டுமல்லாமல் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் வீராங்கனை எனும் பெருமையையும் பெற்றார் சாய்னா.

குண்டு எறிதலில் தங்கப் பதக்கம் வென்றார் இந்திய வீரர் தஜிந்தர்

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL - AUGUST 26 & 27,2018

  • ஜகார்த்தா ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவருக்கான குண்டு எறிதலில் இந்தியாவின் தஜிந்தர் டூர் தங்கப் பதக்கம் வென்றார். ஸ்குவாஷில் இந்தியாவின் தீபிகா பல்லிகல், ஜோஷ்னா சின்னப்பா, சவுரவ் கோஷல் ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றனர்.
  • போட்டியின் 7-வது நாளான நேற்று ஆடவருக்கான குண்டு எறிதலில் இந்தியாவின் தஜிந்தர் டூர் 20.75 மீட்டர் தூரம் எறிந்து சாதனை படைத்து தங்கப் பதக்கம் வென்றார்.
  • சீனாவின் லியு யங் 19.52 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கமும், கஜகஸ்தானின் இவான் இவானோவ் 19.40 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினர்.

அமெரிக்க செனட்டர் ஜான் மெக்கெயின் காலமானார்:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL - AUGUST 26 & 27,2018

  • வியட்நாம் போரில் சிறை சென்றவரும், அமெரிக்க அதிபர் பதவிக்கு இருமுறை போட்டியிட்டவரும், அரிசோனா மாநில செனட் உறுப்பினருமான ஜான் மெக்கெயின் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 81

TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – AUGUST 27, 2018


TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 23, 2018

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 23, 2018

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 22, 2018