TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 6, 2018
Want to Become a Bank, Central / State Govt Officer in 2020?
Join the Most awarded Coaching Institute & Get your Dream Job
Now Prepare for Bank, SSC Exams from Home. Join Online Coure @ lowest fee
Lifetime validity Bank Exam Coaching | Bank PO / Clerk Coaching | Bank SO Exam Coaching | All-in-One SSC Exam Coaching | RRB Railway Exam Coaching | TNPSC Exam Coaching | KPSC Exam Coaching
TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 6, 2018
IMPRINT-2 திட்டத்தின் கீழ் 122 புதிய ஆராய்ச்சி திட்டங்களுக்கு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது:
- உயர் கல்வி நிறுவனங்களின் ஆராய்ச்சியை மேம்படுத்தும் நோக்கத்தோடு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான அரசு இம்பிரிண்ட்-2 திட்டத்தின் கீழ் எரிசக்தி பாதுகாப்பு, சுகாதாரம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்புத் துறைகளில் 112 கோடி ரூபாய் செலவில் 122 புதிய ஆராய்ச்சித் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
- இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. பிரகாஷ் ஜவ்டேகர், 2155 முன்மொழிவுகளில் 122 சிறந்த முன்மொழிவுகள் இம்பிரிண்ட்-2-ன் கீழ் வெட்டு முனை தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கான நிதியுதவிக்கு தெரிவு செய்யப்பட்டதாக கூறியுள்ளார்.
சேமிப்பு கணக்கில் ‘மினிமம் பேலன்ஸ்‘ இல்லாதவர்களிடமிருந்து வங்கிகள் வசூலிப்பு: எஸ்பிஐ முதலிடம்
- கடந்த 2017-18-ம் நிதி ஆண்டில், வங்கிசேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்பு பராமரிக்காத வாடிக்கையாளர்களிடம் இருந்து ரூ.5 ஆயிரம் கோடியை அபராதமாக வங்கிகள் வசூலித்துள்ள விவரம் தெரியவந்துள்ளது.
- இதில் அதிகபட்சமாகப் பாரத ஸ்டேட் வங்கி(எஸ்பிஐ) வாடிக்கையாளர்களிடம் இருந்து ரூ.2 ஆயிரத்து 433 கோடி அபராதமாக வசூலித்துள்ளது. எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களிடம் இருந்து, ரூ.1,700 கோடி வசூலித்தது குறிப்பிடத்தக்கது.
- மேலும், எச்டிஎப்சி வங்கி ரூ.590 கோடி, ஆக்சிஸ் வங்கி ரூ.530 கோடி, ஐசிஐசிஐ வங்கி ரூ.317 கோடி, பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ.211 கோடி என வாடிக்கையாளர்களிடம் இருந்து அபராதமாக வசூலித்துள்ளன.
ஆசிய மோட்டார் பந்தயயத்தில் ஆஸ்திரேலிய வீரர் அபாரம் :
- எப்ஐஎம் ஆசிய ரோட் ரேஸிங் மோட்டார் சாம்பியன்ஷிப் போட்டி யில் 4-வது சுற்றில் ஆஸ்திரேலிய வீரர் அந்தோணி வெஸ்ட் வெற்றி கண்டார்.
- சென்னையை அடுத்த இருங் காட்டுக்கோட்டையில் அமைந் துள்ள எம்எம்ஆர்டி மோட்டார் பந்தய மைதானத்தில் 4-வது சுற்றுப் போட்டிகள் நேற்று நடைபெற்றன.
- இதில் 600 சிசி பிரிவில் 37 வயதான அந்தோணி வெஸ்ட் முதலிடம் பிடித்து அசத்தினார். இந்த சீசனில் அவர் பெற்ற 4-வது வெற்றியாகும் இது. இந்த பந்தயத்தில் ஜப்பானின் தோமோயோஷி கோயாமா 2-வது இடத்தையும், தைகா ஹடா 3-வது இடத்தையும் பிடித்தனர்.
- 250 சிசி பிரிவில் இந்தோனேசிய வீரர் ரபித் தோபான் சுசிப்டோ முதலிடத்தையும், முகமது பட்லி 2-வது இடத்தையும் பிடித்தனர். தாய்லாந்து வீரர் அனுபப் சர்மூன் 3-வது இடம் பிடித்தார். இந்தப் போட்டியில் இந்திய வீரர் ராஜீவ் சேத்து, அனிஷ் தாமோதர ஷெட்டி ஆகியோர் முறையே 16, 19-வது இடங்களைப் பெற்றனர்.
சர்வதேச கோல்ப் தொடரில் ககன்ஜீத் புல்லார் சாம்பியன் பட்டம் வென்றார்:
- பிஜி சர்வதேச கோல்ப் தொடரில் ஆஸ்திரேலியாவின் அந்தோனி குவாயிலை வீழ்த்தி இந்திய வீரர் ககன்ஜீத் புல்லார் சாம்பியன் பட்டம் வென்றார்.
- ஐரோப்பிய டூர் கோல்ப் தொடர்களில் அவர் வென்ற முதல் சாம்பியன் பட்டம் இது.
உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றார் கரோலினா மரின்:
- சீனாவில் நடைபெற்ற உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், ஸ்பெயின் வீராங்கனை கரோலிமான் மரின் இந்தியாவின் பி.வி.சிந்துவை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார். தொடர்ந்து 2வது ஆண்டாக சிந்து வெள்ளிப் பதக்கம் பெற்றார்.
- 46 நிமிடத்தில் முடிவுக்கு வந்த இப்போட்டியில் மரின் 21-19, 21-10 என்ற நேர் செட்களில் வென்று 3வது முறையாக தங்கப் பதக்கத்தை முத்தமிட்டு சாதனை படைத்தார்.உலக சாம்பியன் பட்டத்தை மூன்று முறை (2014, 2015, 2018) வென்ற முதல் வீராங்கனை என்ற பெருமை கரோலினா மரினுக்கு கிடைத்துள்ளது.
- முன்னதாக 2013, 2014 உலக சாம்பியன்ஷிப் தொடரில் சிந்து வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார்.
மகளிர் ஹாக்கி உலகக் கோப்பை போட்டி-2018 : நெதர்லாந் வெற்றி
- 2018 ம் ஆண்டு மகளிர் ஹாக்கி உலகக் கோப்பை போட்டியில், உலக சாம்பியன் பட்டத்தை எட்டாவது தடவையாக நெதர்லாந் வென்றுள்ளது.
- அயர்லாந்துக்கு எதிரான இந்த ஆட்டத்தில் நெதர்லாந் அணி 6-0 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சி தரும் வெற்றியை பதிவு செய்தது. ஸ்பெயின் அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் பெற்றது.இந்தியா 8வது இடம் பிடித்தது.
கேள்விகள்
Q.1) எந்த திட்டத்தின் கீழ் எரிசக்தி பாதுகாப்பு, சுகாதாரம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்புத் துறைகளில் 112 கோடி ரூபாய் செலவில் 122 புதிய ஆராய்ச்சித் திட்டங்களுக்கு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது?
a) INPMINT-2
b) IMPRINT-2
c) INPRINT-2
d) IMPRNT-2
e) IMRPINT-2
Q.2) எந்த வங்கி ‘மினிமம் பேலன்ஸ்‘ இல்லாத வாடிக்கையாளர்களிடடமிருந்து இருந்து ரூ.2 ஆயிரத்து 433 கோடி அபராதமாக வசூலித்து முதல் நிலையில் உள்ளது?
a) பஞ்சாப் நேஷனல் வங்கி
b) ஆக்சிஸ் வங்கி
c) ஐசிஐசிஐ வங்கி
d) எச்டிஎப்சி வங்கி
e) எஸ்பிஐ வங்கி
Q.3) பிஜி சர்வதேச கோல்ப் தொடரில் ஆஸ்திரேலியாவின் அந்தோனி குவாயிலை வீழ்த்தி ககன்ஜீத் புல்லார் சாம்பியன் பட்டம் வென்றார்.ககன்ஜீத் புல்லார் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
a) இந்திய வீரர்
b) இங்கிலாந்து
c) ஸ்ரீலங்கா
d) ஐரோப்பா
e) இத்தாலி
Q.4) சீனாவில் நடைபெற்ற உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் ரோலிமான் மரின் தங்கம் வென்றார்.இவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
a) பெல்ஜியம்
b) ஜெர்மனி
c) ஸ்பெயின்
d) பிரான்ஸ்
e) இத்தாலி
Q.5) உலக சாம்பியன் பட்டத்தை ______ முறை வென்ற முதல் வீராங்கனை என்ற பெருமை கரோலினா மரினுக்கு கிடைத்துள்ளது.
a) இரண்டு
b) நான்கு
c) எட்டு
d) மூன்று
e) ஐந்து
Q.6) எந்த அணி 2018 ம் ஆண்டிற்கான மகளிர் ஹாக்கி உலகக் கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றது?
a) ஆஸ்திரேலியா
b) நெதர்லாந்
c) அயர்லாந்
d) ஸ்பெயின்
e) ஜெர்மனி