TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – JULY 11, 2018
Want to Become a Bank, Central / State Govt Officer in 2020?
Join the Most awarded Coaching Institute & Get your Dream Job
Now Prepare for Bank, SSC Exams from Home. Join Online Coure @ lowest fee
Lifetime validity Bank Exam Coaching | Bank PO / Clerk Coaching | Bank SO Exam Coaching | All-in-One SSC Exam Coaching | RRB Railway Exam Coaching | TNPSC Exam Coaching | KPSC Exam Coaching
TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – JULY 11, 2018
உலக மக்கள் தினம் ஜூலை 11 ம் தேதி கொண்டாடப்பபடுகிறது:
- உலகளாவிய மக்கள் தொடர்பான விவகாரங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும், ஜூலை 11, உலக மக்கள் தினம்(World Population Day) கொண்டாடப்படுகிறது.
- 2018 உலக மக்கள் தினத்திற்கான கருப்பொருள் ‘குடும்ப திட்டமிடல் ஒரு மனித உரிமை‘(‘Family Planning is a Human Right).
ஒற்றை விரலில் ஹாக்கி மட்டையை ஒரு மணிநேரம் 11 நிமிடங்கள் கீழே விழாமல் நிறுத்தி கின்னஸ் சாதனை:
- ஒரே இடத்தில் நகராமல் ஒற்றை விரலில் ஹாக்கி மட்டையை ஒரு மணி நேரம் 11 நிமிடங்கள் கீழே விழாமல் நிறுத்தி மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் கவுதம் நாராயணன் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
- இது இவருடைய மூன்றாவது கின்னஸ் சாதனை என்பது குறிப்பிடத்தக்கது.
புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திடும் மாநிலங்களவையின் முதல் தலைவர் ஆகிறார் திரு. எம் வெங்கையா நாயுடு:
- 76 ஆண்டு காலத்தில் முதன்முறையாக மாநிலங்களவை அயல்நாட்டு அவையோடு, நாடாளுமன்றங்களுக்கு இடையேயான உரையாடலை முன்னெடுத்துச் செல்ல வகை செய்யும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
- இன்று திரு வெங்கைய நாயுடு இதுபோன்றதொரு ஒப்பந்தத்தில் ருவாண்டா குடியரசின் பிரதிநிதிகள் சபை தலைவர் திரு. பர்னார்ட் மக்குஸாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, இதுபோன்றதொரு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் மாநிலங்களவையின் முதல் தலைவரானார்.
இந்தியா உலகின் 6-வது மிகப் பெரிய பொருளாதார நாடாகி உள்ளது:
- 2017 ஆம் ஆண்டுக்கான புதுப்பிக்கப்பட்ட உலக வங்கியின் புள்ளி விவரங்களின்படி இந்தியா உலகின் ஆறாவது மிகப் பெரிய பொருளாதார நாடாகி உள்ளது. பிரான்சை அது ஏழாவது இடத்திற்கு தள்ளி உள்ளது.
- 2017 ஆம் ஆண்டின் இறுதியில் பிரித்தானியா உலகின் ஐந்தாவது மிகப்பெரிய பொருளாதார நாடாகும். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அது $ 2.622 டிரில்லியனாக இருந்தது.
- அமெரிக்கா உலகின் முதல் சிறந்த பொருளாதார நாடாக உள்ளது, தொடர்ந்து சீனா, ஜப்பான் மற்றும் ஜெர்மனி ஆகியவை உள்ளன.
அதிபர் பதவியை மீண்டும் பெற்ற எர்டோகன் பேரட் அல்பேராக்கை நாட்டின் நிதி மந்திரியாக நியமனம் செய்து உள்ளார் :
- துருக்கியில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் எர்டோகன் அமோக வெற்றி பெற்ற பிறகு, நாட்டின் நிர்வாகத்தில் அதிபருக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டன
- இந்த நிலையில், நேற்று முன்தினம் அதிபர் பதவியை மீண்டும் ஏற்றுக் கொண்ட எர்டோகனுக்கு மந்திரிகளை நியமிக்கும் அதிகாரம் வந்துவிட்டது.
- உடனே அவர் தனது மருமகன் பேரட் அல்பேராக்கை நாட்டின் நிதி மந்திரியாக நியமனம் செய்து உள்ளார். இதே போன்று ராணுவ தளபதியாக இருந்து வந்த ஜெனரல் ஹூலுசி அகாரை ராணுவ மந்திரியாக நியமித்தார். மெவ்லுட் கவுசொக்லு வெளியுறவு மந்திரியாக தொடர்கிறார்.
யுவென்டஸ் கிளப்புக்கு ரொனால்டோ ஒப்பந்தம்:
- போர்ச்சுகல் கால்பந்து அணியின் கேப்டனும், உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருதை 5 முறை பெற்றவருமான கிறிஸ்டியானா ரொனால்டோ கடந்த 9 ஆண்டுகளாக ஸ்பெயினின் ரியல்மாட்ரிட் கிளப்புக்காக விளையாடி வந்தார்.
- இந்த நிலையில் 33 வயதான ரொனால்டோ, ரியல்மாட்ரிட் அணியை விட்டு விலகி இத்தாலியின் யுவென்டஸ் கிளப்புக்கு மாறியுள்ளார். இதற்கான ஒப்பந்தத்தில் அவர் கையெழுத்திட்டு யுவென்டஸ் அணிக்காக 4 ஆண்டு காலத்திற்கு ரூ.806 கோடிக்கு அவர் ஒப்பந்தமாகியுள்ளார்
இந்தியாவை கண்காணிக்க, சீனா 2 ஸ்பை செயற்கைக்கோள்களை பாக்கிஸ்தானுக்கு அறிமுகப்படுத்தியது:
- வடமேற்கு சீனாவின் (Jiuquan Satellite Launch Center) ஜியுவான் சானல்ட் லான்ட்ச் சென்டரிலிருந்து சீன ராக்கெட் லாங் மார்ச் –2C (Chinese rocket Long March-2C) இரண்டு ஸ்பை செயற்கைக்கோள்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
- PRSS-1 – சீனாவால் கட்டப்பட்ட தொலைநோக்கி சென்சிட்டி செயற்கைக்கோள்களில் ஒன்று ஆகும்.
- மற்றொன்று – பாக்தெஸ் –1 ஏ(PakTES-1A) – பாக்கிஸ்தானின் உள்நாட்டு ரீதியாக வளர்ந்த அறிவியல் பரிசோதனை செயற்கைக்கோளாகும்.
Other Important Links
TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – JULY 9 & 10, 2018
TNPSC Forest Apprentice Recruitment 2018 Notification Relased