TNPSC Current Affairs – English & Tamil – June 13& 14, 2021

TNPSC Aspirants,

The Current Affairs Section is one of the most important topics for the upcoming TNPSC Group I, Group II/IIA, Group IV, and TNUSRB Exams.

Check today’s TNPSC Daily Current Affairs(13th & 14th June, 2021) in this post.

Aspirants can expect questions from the Daily Current Affairs section in the upcoming TNPSC Exams and learning the Current Affairs section will also aid them in successfully preparing for the descriptive paper. So this process is a 2 in 1 initiative.

To make the learning more convenient, we will be providing the TNPSC Daily Current Affairs in both ENGLISH & TAMIL. This has been made in such a way that reflects the TNPSC pattern as TNPSC uses both the languages in the Question Paper and this will also make the preparations of the aspirants meaningful and will 100% fulfill the needs of the aspirants.


Download PDF – TNPSC Daily Current Affairs – English & Tamil – June 13 & 14, 2021


TAMIL NADU


  1. Temples soon to have women preists in Tamil Nadu
  • Tamil Nadu soon to have women priests as the State Hindu religious and charitable endowments (HR and CE) department has planned to offer archakar (priest) course to all Hindus.
  • HR and CE minister P K Sekar Babu said that the state would offer training to women who are interested in becoming priests in temples managed by the department
  1. விரைவில் தமிழ்நாட்டு கோயில்களில் பெண் பூசாரிகள் நியமிக்கப்படவுள்ளனர்
  • அனைத்து இந்துக்களுக்கும் பூசாரி பாடநெறி வழங்க மாநில இந்து மத மற்றும் அறக்கட்டளைகள் (HR and CE) திட்டமிட்டுள்ளதால் தமிழ்நாடு விரைவில் பெண் பூசாரிகளைப் நியமிக்கத் திட்டமிட்டுள்ளது.
  • மாநில இந்து மத மற்றும் அறக்கட்டளைகள் அமைச்சர் பி. கே. சேகர் பாபு கூறுகையில், இத்துறையால் நிர்வகிக்கப்படும் கோவில்களில் பூசாரிகளாக ஆர்வமுள்ள பெண்களுக்கு அரசு பயிற்சி அளிக்கும் என்றார்.

ECOLOGY AND ENVIRONMENT


  1. Indian Coast Guard starts ‘Operation Olivia’ to rescue the Olive Ridley turtles
  • ‘Operation Olivia’ was initiated by the Indian Coast Guard in the early 1980s to protect Olive Ridley turtles. It is conducted every year to protect the turtles that congregate along the Odisha coast for breeding and nesting from November to December.
  • The Olive Ridley turtles are listed as vulnerable under the IUCN (International Union for Conservation of Nature) Red List.

Marine turtles

  • Five out of seven species of marine turtles of the world are found in All the five are included in Schedule I of the Indian Wildlife Protection Act, 1972 and in the Appendix I of the Convention of International Trade in Endangered Species of Wild Fauna and Flora (CITES), which prohibits trade of turtle products by signatory countries. All important sea turtle nesting habitats are termed as “Important Coastal and Biodiversity Areas” and placed under Coastal Regulatory Zone–I.
  • Odisha coast is the largest nesting site for marine turtles in the world, followed by Mexico and Costa Rica. Odisha coast has three beaches at Gahirmatha, Devi river mouth and in Recently, a new mass nesting site has been discovered in the Andaman and Nicobar Islands.
  1. ஆலிவ் ரிட்லி ஆமைகளை மீட்க இந்திய கடலோர காவல்படைஒலிவியா நடவடிக்கையை தொடங்கியது
  • ஆலிவ் ரிட்லி ஆமைகளைப் பாதுகாக்க 1980களின் தொடக்கத்தில் இந்திய கடலோரக் காவல்படையினரால் ஒலிவியா நடவடிக்கை தொடங்கப்பட்டது. ஒடிசா கடற்கரையில் நவம்பர் முதல் டிசம்பர் வரை இனப்பெருக்கம் மற்றும் கூடுகட்டும் ஆமைகளைப் பாதுகாக்க ஒவ்வொரு ஆண்டும் இது நடத்தப்படுகிறது.
  • ஆலிவ் ரிட்லி ஆமைகள் IUCN (இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம்) சிவப்பு பட்டியலின் கீழ் பாதிக்கப்படக் கூடியவை என்று பட்டியலிடப்பட்டுள்ளன.
  • உலகிலுள்ள ஏழு வகையான கடல் ஆமைகளில் ஐந்து இந்தியாவில் காணப்படுகின்றன. இந்த ஐந்தும் இந்திய வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம், 1972இன் அட்டவணை 1 மற்றும் ஆமை தயாரிப்புகளை வர்த்தகம் செய்ய தடை விதிக்கும் அருகிவரும் காட்டு விலங்கினங்கள் மற்றும் தாவரங்களின் சர்வதேச வர்த்தக உடன்படிக்கையின் (CITES) முதல் இணைப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. அனைத்து முக்கிய கடல் ஆமை இனப்பெருக்க மற்றும் வாழ்விடங்களும் முக்கியமான கடலோர மற்றும் பல்லுயிர் பகுதிகள்என்று அழைக்கப்படுகிறது மற்றும் கடலோர ஒழுங்குமுறை மண்டலம்-1இன் கீழ் வைக்கப்படுகின்றன.
  • ஒடிசா கடற்கரை கடல் ஆமைகளுக்கு உலகின் மிகப்பெரிய இனப்பெருக்க இடமாகும், அதைத் தொடர்ந்து மெக்சிகோ மற்றும் கோஸ்டா ரிகா உள்ளது. ஒடிசா கடற்கரையில் கஹிர்மாதா, தேவி நதி முகத்துவாரம்  மற்றும் ருஷிகுல்யாவில் மூன்று கடற்கரைகள் உள்ளன. சமீபத்தில், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் ஒரு புதிய இனப்பெருக்க தளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

SCIENCE AND TECHNOLOGY


  1. Indian Coast Guard inducts ALH Mk-III into its aviation arm
  • Defence Secretary Ajay Kumar inducted ALH Mk-III into in Indian Coast Guard (ICG). The state-of-the-art helicopters are indigenously designed and manufactured by Hindustan Aeronautics Limited (HAL), Bengaluru.
  • The 16 ALH Mk-III will be positioned at four Coast Guard squadrons at Bhubaneshwar, Porbandar, Kochi and Chennai. These squadrons will ensure seamless surveillance and provide assistance to fishermen in distress at sea.
  1. இந்திய கடலோர காவல்படை ALH Mk-III அதன் விமானப் பிரிவில் சேர்த்தது
  • பாதுகாப்பு செயலாளர் அஜய் குமார் ALH Mk-III இந்திய கடலோர காவல்படையில் (ICG) சேர்த்தார். இந்த அதிநவீன ஹெலிகாப்டர்கள் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு பெங்களூருவின் இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) மூலம் தயாரிக்கப்படுகின்றன.
  • புவனேஷ்வர், போர்பந்தர், கொச்சி மற்றும் சென்னை ஆகிய நான்கு கடலோரக் காவல்படை படைப்பிரிவுகளில் 16 ALH Mk-III ஹெலிகாப்டர்கள் நிலைப்படுத்தப்படுத்தப்படும். இந்த படைப்பிரிவுகள் தடையற்ற கண்காணிப்பை உறுதி செய்யும் மற்றும் கடலில் ஆபத்தில் உள்ள மீனவர்களுக்கு உதவி வழங்கும்.

NATIONAL


  1. Union Minister Rajnath Singh flags off first-ever solo woman motorcycle expedition organised by BRO
  • The Union Minister Rajnath Singh flagged off the first-ever solo woman motorcycle expedition, organised by Border Roads Organisation (BRO), from BRO Headquarters in New Delhi. Kanchan Ugursandi, a 29 year-old lady biker is undertaking the challenge to cover 3,187 km in 24 days.
  • She is expected to cross Umlingla Pass, the highest motorable pass at 19,301 feet in the world, which was built by BRO as a part of the expedition. The route being traversed is New Delhi-Manali-Leh-Umlingla Pass–New Delhi.

4. எல்லை சாலைகள் அமைப்பு (BRO) ஏற்பாடு செய்த முதல் தனி பெண் மோட்டார் சைக்கிள் பயணத்தை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கிவைக்கிறார்

  • புது தில்லியில் உள்ள எல்லை சாலைகள் அமைப்பு (BRO) தலைமையகத்தில் BRO ஏற்பாடு செய்திருந்த முதல் தனி பெண் மோட்டார் சைக்கிள் பயணத்தை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்  கொடியசைத்து தொடங்கிவைத்தார். திருமதி கஞ்சன் உகுர்சாண்டி என்ற 29 வயது பெண் பைக்கர் 24 நாட்களில் 3,187 கி.மீ. தூரத்தைக் கடப்பார்.
  • அவர் 19,301 அடி உயரத்தில் அமைந்துள்ள உலகின் மிக உயர்ந்த வாகணம் செல்லக்கூடிய கணவாயான எல்லை சாலைகள் அமைப்பால் கட்டப்பட்ட உம்லிங்லா கணவாயைக் கடப்பார். இந்த பயணம் புது தில்லி-மணாலி-லே-உம்லிங்லா கணவாய்-புது தில்லி வழியே செல்லும்.

  1. Union Minister Rajnath Singh approves Rs. 498.8 crores budgetary support for Defence innovation through iDEX – DIO
  • Union Minister Rajnath Singh has approved the budgetary support of 498.8 crore to Innovations for Defence Excellence (iDEX) – Defence Innovation Organisation (DIO) for the next five years.
  • iDEX–DIO has the primary objective of self-reliance and indigenisation in the defence and aerospace sectorof the country. It is aimed at creating an ecosystem to foster innovation and technology development in defence and aerospace by engaging Industries including MSMEs, individual innovators which has good potential for future adoption for Indian defence and aerospace needs.

5. மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் iDEX – DIO மூலம் பாதுகாப்பு புத்தாக்கங்களுக்கு ரூ. 498.8 கோடி பட்ஜெட் ஆதரவு அளிக்க ஒப்புதல் அளிக்கிறார்

  • பாதுகாப்பு சிறப்புக்கான புத்தாக்கங்களுக்கு (iDEX) – பாதுகாப்பு புத்தாக்க அமைப்பு (DIO) அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ரூ. 498.8 கோடி பட்ஜெட் ஆதரவுக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.
  • நாட்டின் பாதுகாப்புத் துறையில் தற்சார்பு மற்றும் உள்நாட்டுமயமாக்கலின் முதன்மை நோக்கத்தை iDEX கொண்டுள்ளது. இந்திய பாதுகாப்பு மற்றும் விண்வெளித் தேவைகளுக்கு எதிர்காலத்தில் உபயோகப்படும் நல்ல திறன் கொண்ட குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், தனிப்பட்ட கண்டுபிடிப்பாளர்கள் ஆகியவற்றை ஈடுபடுத்துவதன் மூலம் பாதுகாப்பு மற்றும் விண்வெளியில் கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை ஊக்குவிக்கும் ஒரு சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

  1. Project O2 for India enables the supply of critical raw materials
  • ‘Project O2 for India’ is an initiative of the Office of Principal Scientific Adviser of the Union Government of India. It aims is to enable stakeholders working to augment the country’s ability to meet this rise in demand for medical oxygen.
  • National Consortium of Oxygen is enabling the national level supply of critical raw materials. The consortium also works to strengthen the manufacturing ecosystem for long-term preparedness.

6. இந்தியாவிற்கான ஆக்ஸிஜன் (O2) திட்டம் முக்கிய மூலப்பொருட்களை வழங்க உதவுகிறது

  • இந்தியாவுக்கான ஆக்ஸிஜன் (O2) திட்டம் என்பது மத்திய  அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகத்தின் முன்முயற்சியாகும்.   மருத்துவ ஆக்ஸிஜன் தேவை அதிகரிப்பை பூர்த்தி செய்ய நாட்டின் திறனை அதிகரிக்க பணியாற்றும் பங்குதாரர்களை செயல்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
  • தேசிய ஆக்சிஜன் கூட்டமைப்பு தேசிய அளவில் முக்கியமான மூலப்பொருட்களை வழங்க உதவுகிறது. நீண்டகால தயார்நிலைக்காக உற்பத்தி சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்தவும் இந்த கூட்டமைப்பு செயல்படுகிறது.

  1. PM Modi addresses UN dialogue on desertification, land degradation and drought
  • Prime Minister Narendra Modi addressed the United Nations during the High-Level Dialogue on Desertification, Land Degradation and Drought The high-level dialogue will assess the progress made in the fight against desertification, land degradation and drought. It will also map the way forward in view of the end of the UN Decade for Deserts and the Fight against Desertification and the beginning of the UN Decade on Ecosystem Restoration.
  • Modi is the President of the 14th session of the Conference of Parties of the United Nations Convention to Combat Desertification (UNCCD).

7. பாலைவனமாக்கல், நில சீரழிவு மற்றும் வறட்சி குறித்த .நா. பேச்சுவார்த்தையில் பிரதமர் மோடி உரையாற்றினார்

  • பாலைவனமாதல், நிலச் சீரழிவு மற்றும் வறட்சி குறித்த உயர்மட்ட பேச்சுவார்த்தையின் போது பிரதமர் நரேந்திர மோடி ஐ.நா.வில் உரையாற்றினார். பாலைவனமாதல், நில சீரழிவு மற்றும் வறட்சிக்கு எதிரான போராட்டத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை இந்த உயர்மட்ட பேச்சுவார்த்தை மதிப்பிடும். பாலைவனங்களுக்கான ஐ.நா. தசாப்தத்தின் முடிவு மற்றும் பாலைவனமாக்கல் மீதான போராட்டம் மற்றும் சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு மீதான ஐ.நா. தசாப்தத்தின் தொடக்கம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இது முன்னோக்கிய பாதையை வகுக்கும்.
  • ஐக்கிய நாடுகள் சபையின் பாலைவனமாதலை எதிர்த்துப் போராடுவதற்கான மாநாட்டின் (UNCCD) 14வது கூட்டத்தொடரின் தலைவராக மோடி உள்ளார்.

  1. ‘Namaste Yoga’ mobile App launched in curtain raiser event for 7th International Day of Yoga
  • ‘Namaste Yoga’ mobile application was launched in the curtain raiser event for the 7th International Day of Yoga (21 June). The event was organised by the Union Ministry of Ayush in association with the Morarji Desai National Institute of Yoga.
  • ‘Namaste Yoga’mobile application has been designed as an information platform for the public.

8. 7வது சர்வதேச யோகா தினத்திற்கான தொடக்க நிகழ்ச்சியில்நமஸ்தே யோகாமொபைல் செயலி அறிமுகம் செய்யப்பட்டது

  • 7வது சர்வதேச யோகா தினத்திற்கான (21 ஜூன்) தொடக்க நிகழ்ச்சியில் நமஸ்தே யோகா மொபைல் செயலி அறிமுகம் செய்யப்பட்டது. மொரார்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனத்துடன் இணைந்து மத்திய ஆயுஷ் அமைச்சகம் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.
  • ‘நமஸ்தே யோகா’ மொபைல் செயலி பொதுமக்களின் தகவல் தளமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

  1. Darbar move deferred due to COVID-19 circumstances
  • The traditional biannual ‘Darbar Move’ from Jammu to Srinagar was deferred this year because of the prevailing COVID-19 circumstances. To ensure smooth functioning of both the Secretariats at Jammu and Srinagar, the authorities implemented the e-office project of digitising the official records in the Secretariats.
  • The practice of the Secretariat to function in Jammu during the winter and in Srinagar during summers was started in 1872. However, for the first time in the history of the Darbar Move, the files and other office records were moved electronically between both the Secretariats in e-office mode. This initiative saved the expenditure while transporting the office records physically between Jammu and Srinagar which is around 300 kilometres apart.

9. கோவிட்-19ஆல் தர்பார் நகர்வு ஒத்திவைக்கப்பட்டது

  • கோவிட்-19 சூழ்நிலைகள் காரணமாக ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு மாற்றப்படும் பாரம்பரிய இருவருடாந்திரதர்பார் நகர்வு இந்த ஆண்டு ஒத்திவைக்கப்பட்டது. ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் உள்ள இரு தலைமைச் செயலகங்களும் சுமூகமாக செயல்படுவதை உறுதி செய்யும் வகையில், தலைமைச் செயலகங்களில் உள்ள அதிகாரப்பூர்வ பதிவுகளை டிஜிட்டல் மயமாக்கும் அலுவலக திட்டத்தை அதிகாரிகள் செயல்படுத்தினர்.
  • குளிர்கால மாதங்களில் ஜம்முவிலும், கோடைக்காலத்தில் ஸ்ரீநகரிலும் தலைமைச் செயலகம் செயல்படும் நடைமுறை 1872ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இருப்பினும், தர்பார் நகர்வின் வரலாற்றில் முதல் முறையாக, கோப்புகள் மற்றும் பிற அலுவலக பதிவுகள் இரு தலைமைச் செயலகங்களுக்கும் இடையே மின்னணு முறையில் இ-அலுவலக முறையில் நகர்த்தப்பட்டன. இந்த முயற்சி, சுமார் 300 கிலோமீட்டர் இடைவெளியில் ஜம்மு மற்றும் ஸ்ரீநகருக்கு இடையே அலுவலக பதிவுகளை கொண்டு செல்லும் செலவை குறைத்தது.

INTERNATIONAL


  1. Naftali Bennett becomes the new Prime Minister of Israel
  • Naftali Bennett was sworn in as the Israel’s new Prime Minister, ending Benjamin Netanyahu’s rule.
  • Israeli Parliament known as Knesset voted for the alliance led by Naftali Bennett to end Benjamin Netanyahu’s record of 12-year reign.

10. இஸ்ரேலின் புதிய பிரதமரானார் நாஃப்தாலி பென்னெட்

  • இஸ்ரேலின் புதிய பிரதமராக நாஃப்தாலி பென்னெட் பதவியேற்றார்,  இது பெஞ்சமின் நெத்தனியாகுவின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
  • பெஞ்சமின் நெத்தனியாகுவின் சாதனையான 12 ஆண்டு கால ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர நாஃப்தாலி பென்னெட் தலைமையிலான கூட்டணிக்கு நெஸ்ஸெட் என்று அழைக்கப்படும் இஸ்ரேலிய பாராளுமன்றம் வாக்களித்தது.

  1. G7 leaders launch Build Back Better World (B3W) to counter China’s Belt and Road Initiative
  • G7 leaders have launched a new global infrastructure initiative, Build Back Better World (B3W) to help developing nations counter China’s Belt and Road Initiative (BRI).
  • The initiative was a values-driven, high-standard, and transparent infrastructure partnership led by major democracies to help narrow the over 40 trillion Dollar infrastructure need in the developing world, which has been exacerbated by the COVID-19 pandemic.

Belt and Road Initiative

  • Belt and Road Initiative is an infrastructure scheme launched by China in 2013. It involves the development and investment initiatives from Asia to Europe and beyond.

11. சீனாவின் பெல்ட் அண்ட் ரோட் முன்முயற்சியை எதிர்க்க ஜி7 தலைவர்கள் பில்ட் பேக் பெட்டர் வேர்ல்ட் (B3W) தொடங்கினர்

  • சீனாவின் பெல்ட் அண்ட் ரோட் முன்முயற்சியை (BRI) எதிர்க்க வளரும் நாடுகளுக்கு உதவும் வகையில் ஜி7 தலைவர்கள் ஒரு புதிய உலகளாவிய உள்கட்டமைப்பு முன்முயற்சியை பில்ட் பேக் பெட்டர் வேர்ல்ட் (B3W) தொடங்கியுள்ளனர்.
  • கோவிட்-19 தொற்றுநோயால் தீவிரமடைந்துள்ள வளரும் உலகில் 40 டிரில்லியன் டாலருக்கும் அதிகமான உள்கட்டமைப்பு தேவையை குறைக்க உதவும் வகையில் முக்கிய ஜனநாயகங்களால் வழிநடத்தப்பட்ட மதிப்புகள் சார்ந்த, உயர்தர மற்றும் வெளிப்படையான உள்கட்டமைப்பு கூட்டாண்மையாக இந்த முன்முயற்சி இருக்கிறது.

பெல்ட் அண்ட் ரோட் முன்முயற்சி

  • பெல்ட் அண்ட் ரோட் முன்முயற்சி என்பது 2013ஆம் ஆண்டில் சீனாவால் தொடங்கப்பட்ட ஒரு உள்கட்டமைப்பு திட்டமாகும்.  இது   ஆசியாவில் இருந்து ஐரோப்பாவிற்கும் அதற்கு அப்பாலும் வளர்ச்சி மற்றும் முதலீட்டு முன்முயற்சிகளை உள்ளடக்கியது.

AWARDS AND RECOGNITIONS


  1. Indian origin journalists Megha Rajagopalan and Neil Bedi wins Pulitzer Prize
  • Megha Rajagopalan along with two contributors from BuzzFeed News, won the prize in the international reporting category for exposing China’s detention camps that were built for Muslims.
  • Neil Bedi along with Kathleen McGrory from Tampa Bay Times, won the award for local reporting of the series exposing a Sheriff’s office initiative that used computer modelling to identify people who were believed to be future crime suspects.
  • New York Times won the gold medal in the public service category.

Pulitzer Prize

  • Pulitzer Prize is awarded annually in memory of Joseph Pulitzer in the fields of Journalism, Drama and Music by the Columbia University. Pulitzer Prize is the highest award for journalism in USA. Pulitzer Prize is awarded annually in 21 categories. Each winner receives a certificate and a 15,000 dollar cash award. The winner in the public service category is awarded a gold medal.

12. இந்திய வம்சாவளி பத்திரிகையாளர்கள் மேகா ராஜகோபாலன் மற்றும் நீல் பேடி ஆகியோர் புலிட்சர் பரிசை வென்றனர்

  • அமெரிக்காவின் ஆன்லைன் செய்தி ஊடகமான பஸ்ஃபீட் நியூஸின் மேகா ராஜகோபாலன் இரண்டு பங்களிப்பாளர்களுடன் முஸ்லிம்கள் மீதான சீன அரசு தடுப்பு முகாம்களில் முஸ்லிம்களை அடைத்து சித்ரவதை செய்வது குறித்து அம்பலப்படுத்தியதற்காக சர்வதேச செய்தி சேகரிப்புப் பிரிவில் புலிட்சர் பரிசை வென்றார்.
  • தம்பா பே டைம்ஸில் பணிபுரியும்  நீல் பேடி, கேத்லீன் மெக்ரோரியுடன் இணைந்து எதிர்கால குற்றங்களில் சந்தேகிக்கப்படும் நபர்களை அடையாளம் காண கணினி வடிவத்தை பயன்படுத்திய ஷெரிப்பின் அலுவலக முன்முயற்சியை அம்பலப்படுத்தும் தொடருக்கான உள்ளூர் செய்தி சேகரிப்பு பிரிவில் இவ்விருதை வென்றார்.

புலிட்சர் பரிசு

  • அமெரிக்க பத்திரிகையாளர் ஜோசப் புலிட்சர் நினைவாக பத்திரிகை, நாடகம், இசை உள்ளிட்ட துறையில் சிறந்து விளங்குவோருக்கு ஆண்டுதோறும் கொலம்பியா பல்கலைக்கழகத்தால் புலிட்சர் பரிசு வழங்கப்படுகிறது. புலிட்சர் பரிசு இதழியலுக்காக அமெரிக்காவில் வழங்கப்படும் மிக உயரிய விருதாகும். புலிட்சர் பரிசு ஆண்டுதோறும் 21  பிரிவுகளில் வழங்கப்படுகிறது.   ஒவ்வொரு வெற்றியாளரும் சான்றிதழ் மற்றும் 15,000  டாலர்  ரொக்க பரிசைப் பெறுகிறார். பொது சேவை பிரிவில் வெற்றி பெருபவருக்கு தங்கப் பதக்கம் வழங்கப்படுகிறது.

SPORTS


  1. Barbora Krejcikova becomes the first player to win both the Women’s singles and doubles title in the French Open title after Mary Pierce
  • Czech Barbora Krejcikova has won her Maiden Grand Slam Women’s Singles Title, beating Russia’s Anastasia Pavlyuchenkova in the French Open 2021. She lifted the Women’s Doubles Trophy with Katerina Siniakova, beating Iga Swiatek and Bethanie Mattek-Sands.
  • Krejcikova became the first player to win both the women’s singles and doubles title in Paris since Mary Pierce completed the feat in 2000. The 25 year-old Krejcikova is the world number one doubles player and ranks 15th in singles.

13. மேரி பியர்ஸுக்கு பிறகு பிரெஞ்சு ஓபன் பட்டத்தில் பெண்கள் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பட்டத்தை வென்ற முதல் வீராங்கனையானார் பார்போரா க்ரெஜ்சிகோவா

  • செக் குடியரசைச் சேர்ந்த பார்போரா க்ரெஜ்சிகோவா தனது முதல் கிராண்ட் ஸ்லாம் பெண்கள் ஒற்றையர் பட்டத்தை வென்றுள்ளார். அவர் பிரெஞ்சு ஓபன் 2021 போட்டியில் ரஷ்யாவின் அனஸ்டாசியா பாவ்லியு செங்கோவாவை தோற்கடித்தார். அவர் பெண்கள் இரட்டையர் பிரிவில் கத்தரீனா சினியகோவாவுடன் இணைந்து இகா ஸ்வியாடெக் மற்றும் பெத்தானி மட்டெக்சாண்ட்ஸை தோற்கடித்தார்.
  • 2000ஆம் ஆண்டில் மேரி பியர்ஸ்ஸின் சாதனைக்குப் பிறகு பாரிஸில் பெண்கள் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பட்டத்தை வென்ற முதல் வீராங்கனை என்ற பெருமையை க்ரெஜ்சிகோவா பெற்றார். 25 வயதான க்ரெஜ்சிகோவா உலக நம்பர் ஒன் இரட்டையர் வீராங்கனை மற்றும் ஒற்றையர் போட்டியில் 15வது இடத்தில் உள்ளார்.

  1. Novak Djokovic wins the French Open 2021 Men’s Singles Title
  • Novak Djokovic beat Stefanos Tsitsipas to win his 19th Grand Slam Title. He also beat the defending champion Rafael Nadal in the semi-finals. Djokovic also became the first men’s player to win all four Grand Slam titles twice in 52 years.
  • In Men’s Doubles, Pierre-Hugues Herbert and Nicolas Mahut won the title by defeating Alexander Bublik and Andrey Golubev of Kazakhstan in the final.

14. நோவக் ஜோகோவிச் பிரெஞ்சு ஓபன் 2021 ஆண்கள் ஒற்றையர் பட்டத்தை வென்றார்

  • நோவக் ஜோகோவிச், ஸ்டெபனோஸ் சிட்சிபாஸை தோற்கடித்து தனது 19வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றார்.  அரையிறுதியில்  நடப்பு சாம்பியனான ரஃபேல்   நடாலையும் அவர் தோற்கடித்தார். 52 ஆண்டுகளில் இரண்டு முறை நான்கு கிராண்ட் ஸ்லாம் பட்டங்களையும் வென்ற முதல் ஆண்கள் வீரர் என்ற பெருமையையும் ஜோகோவிச் பெற்றார்.
  • ஆண்கள் இரட்டையர் பிரிவில், பியர்ஹுகஸ் ஹெர்பர்ட் மற்றும் நிக்கோலா மஹுத் ஆகியோர் இறுதிப் போட்டியில் கஜகஸ்தானின் அலெக்சாண்டர் புப்லிக் மற்றும் ஆண்ட்ரே கோலுபேவை தோற்கடித்து பட்டத்தை வென்றனர்.

  1. Weightlifter Mirabai Chanu qualifies for Tokyo Olympics in Women’s 49 kg category
  • The 2017 world champion in weightlifting, Mirabai Chanu has qualified for the Tokyo Olympics in the Women’s 49 kg category.
  • The International Weightlifting Federation (IWF) announced that Mirabai has qualified on the basis of her world ranking points. As per rules of the IWF, the top eight lifters in each of the 14 weight categories, including seven in the women’s group, are eligible to compete in Tokyo Games. This 26 year-old weightlifter from Manipur is ranked second in the Women’s 49 kg category.

15. டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு பெண்களுக்கான 49 கிலோ எடைப்பிரிவில் பளுதூக்கும் வீரர் மீராபாய் சானு தகுதிபெற்றுள்ளார்

  • 2017 பளுதூக்குதல் உலக சாம்பியன், மீராபாய் சானு, பெண்கள் 49 கிலோ எடைப்பிரிவில் டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதிபெற்றார்.
  • சர்வதேச பளுதூக்குதல் சம்மேளனம் (IWF) மீராபாய் அவரது உலக தரவரிசை புள்ளிகளின் அடிப்படையில் தகுதி பெற்றுள்ளார் என்று அறிவித்தது. IWFஇன் விதிகளின்படி, பெண்கள் குழுவில் ஏழு பேர் உட்பட 14 எடை பிரிவுகளில் ஒவ்வொன்றிலும் முதல் எட்டு பளுதூக்கும் வீரர்கள் டோக்கியோ விளையாட்டுப் போட்டிகளில் போட்டியிட தகுதி பெற்றுள்ளனர். மணிப்பூரைச் சேர்ந்த இந்த 26 வயதான பளுதூக்கும் வீரர் பெண்கள் 49 கிலோ பிரிவில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

  1. Wrestler Vinesh Phogat wins gold at Poland Ranking Series
  • Indian wrestler Vinesh Phogat won the women’s 53 kg freestyle gold by beating Khrystyna Bereza of Ukraine at the Poland Ranking Series in Warsaw.
  1. 16. போலந்து தரவரிசை தொடரில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாத் தங்கம் வென்றார்
  • வார்சாவில் நடந்த போலந்து தரவரிசைத் தொடரில் உக்ரைனின் க்ரிஸ்டினா பெரேசாவை தோற்கடித்து இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் பெண்களுக்கான 53 கிலோ ஃப்ரீஸ்டைலில் தங்கம் வென்றார்

IMPORTANT DAYS


  1. World Albinism Awareness Day – 13 June
  • International Albinism Awareness Day is observed on 13 June every year to raise and create awareness among people about albinism and the human rights of people with albinism. Albinism is a congenital disorder which is seen in humans due to absolute or partial absence of melanin pigment in the skin, eyes and hair.
  • On 13 June 2013, the United Nations Human Rights Council adopted the resolution to mark 13 June as the International Albinism Awareness Day. The day however became official after the United Nations General Assembly adopted the resolution on 18 December 2014 and declared that 13 June will be observed as International Albinism Awareness Day with effect from 2015.
  • Theme 2021: #StrengthBeyondAllOdds
  1. உலக அல்பினிசம் விழிப்புணர்வு தினம் – 13 ஜூன்
  • அல்பினிசம் மற்றும் அல்பினிசம் கொண்ட மக்களின் மனித உரிமைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் 13 ஜூன் அன்று சர்வதேச அல்பினிசம் விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்படுகிறது. அல்பினிசம் என்பது தோல், கண்கள் மற்றும் முடியில் மெலனின் நிறமி முழுமையான அல்லது பகுதியளவு இல்லாததால் மனிதர்களில் காணப்படும் ஒரு பிறவிக் கோளாறு ஆகும்.
  • 13 ஜூனை சர்வதேச அல்பினிசம் விழிப்புணர்வு தினமாகக் குறிக்கும் தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை 13 ஜூன் 2013 அன்று நிறைவேற்றியது. இருப்பினும், ஐக்கிய நாடுகள் பொதுச் சபை 18 டிசம்பர் 2014 அன்று இத்தீர்மானத்தை ஏற்றுக்கொண்டு, 13 ஜூனை 2015 முதல் சர்வதேச அல்பினிசம் விழிப்புணர்வு தினமாக அனுசரிக்கப்படும் என்று அறிவித்த பின்னர் அந்த நாள் அதிகாரப்பூர்வமானது.
  • கருப்பொருள் 2021: #StrengthBeyondAllOdds

  1. World Blood Donor Day – 14 June
  • World Blood Donor Day is observed every year on 14 June. This day was first organised by the World Health Organization (WHO) on 14 June 2005. The aim of the day is to raise global awareness of the need for safe blood and blood products for transfusion.
  • Italy will host World Blood Donor Day 2021 through its National Blood Centre. The global event will be held in Rome on 14 June 2021.
  • Slogan for 2021: “Give blood and keep the world beating.
  1. உலகக்குருதிக்கொடையாளர் தினம் – 14 ஜூன் 14
  • உலகக்குருதிக் கொடையாளர் தினம் ஒவ்வொரு ஆண்டும் 14 ஜூன் அன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள் 14  ஜூன் 2005 அன்று உலக சுகாதார நிறுவனத்தால் (WHO)  முதல்முதலாக அனுசரிக்கப்பட்டது. பாதுகாப்பான இரத்தம் மற்றும் இரத்தம்சார் பொருட்கள் தேவைகுறித்து உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்நாளின் நோக்கமாகும்.
  • இத்தாலி அதன் தேசிய இரத்த மையம் மூலம் உலகக்குருதிக் கொடையாளர் தினம் 2021ஐ நடத்துகிறது. இந்த உலகளாவிய நிகழ்வு 14 ஜூன் 2021 அன்று ரோமில் நடைபெறும்.
  • 2021க்கான முழக்கம்: உலகத்தை உயிர்ப்பிக்க இரத்தம் கொடுங்கள்

DAY IN HISTORY


  1. Socialist Revolutionary Che Guevara’s Birth anniversary – 14 June
  • Ernesto Guevara de la Serna, commonly known as Che Guevara or El Che, was born on 14 June 1928. He is a socialist revolutionary born in Argentina. He is a socialist revolutionary, doctor, Marxist, politician, and fighter who participated in revolutions in Cuba and many other countries (including Congo). “Che” is an Argentinian word meaning friend or companssion. He died on 9 October 1967.
  1. சோசலிசப் புரட்சியாளர் சே குவேரா பிறந்த தினம் – 14 ஜூன்
  • சே குவேரா அல்லது எல் சே என பொதுவாக அறியப்பட்ட எர்னெஸ்டோ குவேரா டி லா செர்னா 14 ஜூன் 1928 அன்று பிறந்தார்.
  • இவர் அர்ஜென்டீனாவை பிறப்பிடமாகக் கொண்ட ஒரு சோசலிசப் புரட்சியாளர் ஆவார். இவர் சோசலிசப் புரட்சியாளர், மருத்துவர், மார்க்சியவாதி, அரசியல்வாதி, கியூபா மற்றும் பல நாடுகளின் (காங்கோ உட்பட) புரட்சிகளில் பங்கேற்ற போராளி எனப் பல முகங்களைக் கொண்டவர். சே என்பது நண்பர் அல்லது தோழர் என்னும் பொருள் கொண்ட ஆர்ஜென்டீனச் சொல்லாகும். அவர் 9 அக்டோபர் 1967 அன்று இறந்தார்.

Students can download the Daily TNPSC Current Affairs in English & Tamil as PDF from the links given below – TNPSC daily Current Affairs – English & Tamil – June 13 & 14, 2021. 


Download TNPSC Daily Current Affairs – PDF
13th & 14th May, 2021 Will be Available soon

Check TNPSC – Daily Current Affairs – May Month in TAMIL & English from bankersdaily from the links below. 


Read – TNPSC Daily Current Affairs – May 2021