TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – JULY 9 & 10, 2018

இந்தியா தென் கொரியா இடையே பல்வேறு துறைகளில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து:

  • இந்தியா தென் கொரியா இடையே பல்வேறு துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.
  • இந்தியா தென்கொரியா விரிவான கூட்டு பொருளாதாரத்தை மேம்படுத்துவது, தொலைத்தொடர்பு, உயிரி தொழில்நுட்பம் மற்றும் உயிரி பொருளாதாரம் போன்ற துறைகளில் இருநாடுகளும் ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பாக 11 ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தானது.

கயத்தாறிலிருந்து வெளி மாநிலங்களுக்கு காற்றாலை மின்சாரம் செல்ல ரூ.2,600 கோடியில் வழித்தடம்:

  • தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் இருந்து கரூர் வழியாக வெளி மாநிலங்களுக்கு காற்றாலை மின்சாரம் கொண்டு செல்ல ரூ.2,600 கோடியில் வழித்தடம் அமைக்கப்பட உள்ளது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
  • தூத்துக்குடி மாவட்டம் கயத்தாரில் இருந்து கரூர் வழியாக வெளிமாநிலங்களுக்கு சுமார் ரூ.2,600 கோடி செலவில் காற்றாலை மின்சாரம் வழித்தடம் அமைக்கும் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
  • கப்பல் கட்டும் தொழிற்சாலை தூத்துக்குடியில் விரைவில் அமையவுள்ளது. கடல்நீரை குடிநீராக்கும் திட்டமும் விரைவில் தூத்துக்குடியில் செயல்படுத்தப்படும்.

50 வயது நிறைந்த அரசு ஊழியர்களுக்கு திறன் தேர்வு:

  • உத்தரப் பிரதேசதத்தில் அரசு அலுவலகங்களில் பணியாற்றும் 50 வயது நிறைந்த அரசு ஊழியர்களுக்கு திறன் தேர்வு நடத்தப்பட உள்ளது.
  • இதில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு கட்டாய ஓய்வு வழங்க அம்மாநில பாஜக அரசு முடிவு செய்துள்ளது.
  • இதில் திறன் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு கட்டாய ஓய்வளித்து வீட்டிற்கு அனுப்ப இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு வரும் ஜூலை 31-க்குள் அனைத்து துறைகளும் நடத்தி முடிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பெங்களூர் ஐஐஎஸ்சி உள்பட 6 கல்வி நிறுவனங்களுக்கு சிறப்பு அந்தஸ்து:

  • பெங்களூருவிலுள்ள இந்திய அறிவியல் இன்ஸ்டிடியூட் (ஐஐஎஸ்சி) உள்ளிட்ட 6 உயர்கல்வி நிறுவனங்களுக்கு தலைசிறந்த கல்வி நிறுவனங்கள் என்ற சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு வழங்கியுள்ளது. உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலில் சென்னை ஐஐடி நிறுவனத்துக்கு 2-வது இடம் கிடைத்துள்ளது.
  • நாட்டிலுள்ள மிகச் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதில் பெங்களூருவிலுள்ள இந்திய அறிவியல் இன்ஸ்டிடியூட் (ஐஐஎஸ்சி) முதலிடத்தைப் பெற்றுள்ளது.

உலகின் மிகப்பெரிய செல்போன் உற்பத்தி ஆலையை பிரதமர் மோடி திறந்து வைப்பு:

  • உலகின் மிகப் பெரிய செல்போன் உற்பத்தி ஆலையை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் உத்தர பிரதேச மாநிலத் தில் இந்த ஆலையை அமைத்துள்ளது. இந்தியாவுக்கு வருகை தந்துள்ள தென் கொரிய அதிபர் மூன் ஜேஇன் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இந்த ஆலையை திறந்து வைத்தனர்.
  • சாம்சங் எலெக்ட்ரானிஸ் நிறுவனம் இந்திய சந்தையை விரிவாக்கம் செய்யும் விதமாக இந்த ஆலையை திறந்துள்ளது. இந்த ஆலையின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் 6.7 கோடி செல்போன்களை சாம்சங் தயாரிக்கும்.

குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வால் பணவீக்கம் அதிகரிக்கும்:

  • 14 விவசாய பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு கடந்த வாரம் உயர்த்தியது. இதனால் பணவீக்கம் உயர்வதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் நாட்டின் ஜிடிபியில் 0.1 முதல் 0.2 சதவீதம் வரையில் பாதிப்பு ஏற்படலாம் என்றும் டிபிஎஸ் நிறுவனம் தன்னுடைய ஆய்வில் தெரிவித்திருக்கிறது.
  • பணவீக்கம் உயர்வது, நிதிப்பற்றாக்குறை அதிகரிப்பது உள்ளிட்ட காரணங்களால் ரிசர்வ் வங்கி, ரெபோ விகிதத்தை மேலும் உயர்த்துவதற்கான வாய்ப்பு அதிகம்.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டனிடம் இருந்து போலீஸ் டிஎஸ்பி பதவி பறிப்பு:

  • இந்திய மகளிர் டி20 கேப்டனும், அர்ஜுனா விருது பெற்றவருமான ஹர்மன்ப்ரீத் கவுர் அளித்த இளநிலைபட்டப்படிப்பு சான்றிதழ் போலியானது என தகவல் வெளியானதையடுத்து, அவருக்கு வழங்கப்பட்ட போலீஸ் டிஎஸ்பி பதவியை பஞ்சாப் அரசு அதிரடியாகப் பறித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
  • அவரை அவரின் படிப்புக்கு ஏற்றார்போல், டிஎஸ்பி அந்தஸ்தில் இருந்து கான்ஸ்டபிளாக பதவி இறக்கம் செய்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

டி20 தரவரிசையில் கே.எல்.ராகுல் 3ம் இடத்திற்கு முதல் முறையாக முன்னேறியுள்ளார்:

  • ஐசிசி வெளியிட்டுள்ள தற்போதைய டி20 தரவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி 4 இடங்கள் பின்னடைவு கண்டு 12-ம் இடம் சென்றுள்ளார், மாறாக கே.எல்.ராகுல் 3ம் இடத்திற்கு முதல் முறையாக முன்னேறியுள்ளார்.
  • பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தில் ஆஸ்திரேலியாவின் டி20 நாயகன் ஏரோன் பிஞ்ச் இருக்கிறார். பாகிஸ்தான் வீரர் ஃபகார் ஜமான் 2ம் இடத்தில் இருக்கிறார். அணிகள் தரவரிசையில் இந்தியா 2ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.

இரண்டு கால்பந்து உலக சாதனைகள் நிகழ்த்திய அதிசயிக்க வைத்த ஆஸி. கிராமப்புற வீரர் :

  • கால்பந்தில் நம்பமுடியாத, அதிசயிக்கவைக்கும் திறமைகளை வெளிப்படுத்திய ஜெட் ஹாக்கின் என்ற 18 வயது கிராமப்புற ஆஸி. இளைஞர் 2 கின்னஸ் உலகச்சாதனைகளை நிகழ்த்தி அசத்தியுள்ளார்.
  • முதலில் ‘ரபோனா’ ஸ்டைல் உதை என்ற ஒரு தனித்திறமையில் ஹாக்கின் 2 கின்னஸ் உலக சாதனைகளை நிகழ்த்தினார். இவர் அடித்த ரபோனா ஸ்டைல் உதை ஒருநிமிடத்தில் இவர் அடித்த 7 ஷாட்கள் கிராஸ்பாரை அடித்துத் திரும்பியது. பிறகு 60 அடி தூரத்திலிருந்து அடித்த ஷாட் கோல் வலையைத் தாக்கியது.

ஜிம்னாஸ்டிக்ஸ் உலகக்கோப்பை தங்கம் வென்றார் தீபா கர்மாகர்:

  • துருக்கியில் உள்ள மெர்சின் நகரில், எப்ஐஜி ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் உலகக்கோப்பைப் போட்டி நடந்தது (FIG Artistic Gymnastics World Challenge Cup).
  • இதில் உலகக்கோப்பையில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை தீபா கர்மாகர் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.
  • காயத்தில் இருந்து மீண்டும் 2 ஆண்டுகளுக்குப் பின் பங்கேற்ற கர்மாகர் பெறும் முதல் தங்கம் இதுவாகும்.

இந்தியாவின் டலபிஷேராவில் IWF ஜூனியர் உலக பளு தூக்குதல் சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கம் வென்றார்:

  • 2018 ம் ஆண்டு IWF ஜூனியர் உலக பளு தூக்குதல் சாம்பியன்ஷிப்பில் (IWF Junior World Weightlifting Championships) இந்திய வெல்ட்லிஃப்டர் ஜில்லி டலபெரீரா வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
  • 48 கிலோ பிரிவில் 167 கிலோ எடுத்த அவர் மேடையில் மூன்றாவது இடத்தைப் பிடித்தார் சாகோம் மீராபாய் சானுவுக்குப் பிறகு 2013 ஆம் ஆண்டு ஜூகிர் உலக சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற இரண்டாவது பெண் ஜில்லி தலாபெரீரா ஆவர்.

 


Other Important Links

TNPSC Forest Apprentice Recruitment 2018 Notification Relased

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – JULY 4, 2018