TNPSC Current Affairs – English & Tamil – February 20, 2021

TNPSC Aspirants,

The Current Affairs Section is one of the most important topics for the upcoming TNPSC Group I, Group II/IIA, Group IV, and TNUSRB Exams.

Check today’s TNPSC Daily Current Affairs(20th February 2020) in this post.

Aspirants can expect questions from the Daily Current Affairs section in the upcoming TNPSC Exams and learning the Current Affairs section will also aid them in successfully preparing for the descriptive paper. So this process is a 2 in 1 initiative.

To make the learning more convenient, we will be providing the TNPSC Daily Current Affairs in both ENGLISH & TAMIL. This has been made in such a way that reflects the TNPSC pattern as TNPSC uses both the languages in the Question Paper and this will also make the preparations of the aspirants meaningful and will 100% fulfill the needs of the aspirants.


Download PDF – TNPSC Daily Current Affairs – English & Tamil – February 20, 2021


Download_TNPSC_Daily_CUrrent_Affairs_PDF_7th_January_2021


  1. பெர்சிவரன்ஸ்
  • அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம், செவ்வாய் கிரகத்தில் உயிரிணங்கள் வாழ்ந்ததற்கான ஆய்வை  மேற்கொள்ள பெர்சிவரன்ஸ் ஆய்வுகலத்தை கடந்த வருடம் ஜீலை மாதம் விண்ணில் செலுத்தியது.
  • தற்போது, பெர்சிவரன்ஸ் ஆய்வுகலம் செவ்வாய் கிரகத்தில் ‘ஜெஸெரோ’ எனப்படும் பள்ளத்தாக்கு பகுதியில் பத்திரமாகத் தரையிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்த ஆய்வுகலத்தில் இன்ஜெனுயிட்டி எனப்படும் ஹெலிக்காப்டரும் உள்ளது. பூமி அல்லாத வேற்று கிரகத்தில் செயல்படும் முதல் ஹெலிகாப்டர் ஆகும்.
  • இந்த ஆய்வுக்கலத்தை கட்டுப்படுத்தி வழிநடத்தும் பிரிவுக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸ்வாதி மோகன் தலைமை பொறுப்பு வகிக்கிறார்.

  1. சி-453
  • சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட இந்திய கடலோரக் காவல்படையின் கிழக்கு பிராந்தியத்தில் உள்நாட்டிலேயே கட்டமைக்கப்பட்ட ஐசிஜிஎஸ் சி-453 என்னும் புதிய வகை ரோந்துப் படகு நாட்டுக்குக்கு அர்ப்பணிக்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்த ரோந்துப் படகு காட்டுப்பள்ளி எல் அன்ட் டி கப்பல் கட்டும் தளத்தில் உள்நாட்டில் கட்டமைக்கப்பட்டது ஆகும். தற்போது இந்தியக் கடலோரக் காவல் படையில் 157 ரோந்துக் கப்பல்கள், 62 விமானங்கள், ஹெலிகாப்டர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

  1. கலைமாமணி விருதுகள்
  • தமிழகத்தின் 2019 மற்றும் 2020-ற்கான கலைமாமணி விருதுகள் தமிழக அர்சால் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • 2019-ம் ஆண்டிற்கான விருது 59 பிரபலங்களுக்கும், 2020-ம் ஆண்டிற்கான விருது 65 பிரபலங்களுக்கும் வழங்கப்பட உள்ளது.
விருது 2019 2020
பாரதி விருது சீனி விஸ்வநாதன் சுகி சிவம்
எம்.எஸ். சூப்புலட்சுமி விருது எஸ். ராஜேஸ்வரி வாணி ஜெயராம்
பாலசரஸ்வதி விருது அலர்மேல் வள்ளி சந்திரா தண்டாயுதபாணி

 

  1. கண் பாதிப்பு
  • டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனைக் குழுமத் தலைவர் அமர் அகர்வால், கொரோனா காலத்தில் டிஜிட்டல் சாதனங்களின் பயன்பாடி அதிகரித்ததால், கண் புரை மற்றும் உலர் விழி பாதிப்புகள் ஐந்து மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.
  • உலக அளவில் 15 சதவீதமும் இந்தியாவைப் பொருத்த்வரை 32 சதவீதமும் உலர் விழி பாதிப்புள்ளாகியிருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

  1. வேளாண் – டிரோன்கள்
  • மத்திய வேளாண், விவசாயிகள் துறை பயிர் காப்பீட்டு தரவுகள் சேகரிப்பு உள்ளிட்ட வேளாண் பணிகளில் ரிமோட் மூலம் இயக்கப்படும் ‘டிரோன்’களைப் பயன்படுத்த அனுமது கோரியிருந்தது.
  • இதனைத் தொடர்ந்து, கிராமப் பஞ்சாயத்து அளவில் வேளாண் பாதிப்புகள், உற்பத்தி அளவு, மதிப்பீடு போன்ற தரவுகள் தொலை உணர்வுத் திறன் மூலம் சேகரிக்க டிரோன்களை பயன்படுத்த விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம் சில நிபந்தனைகளுகடன் 100 மாவட்டங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

  1. கொரோனா தடுப்பூசி
  • மத்திய சுகாரத்துறை அமைச்சகம், 1 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி என்னும் இலக்கை 34 நாட்களில் அடைந்துள்ளதால், இலக்கை வேகமாக அடைந்த 2-வது நாடாக இந்தியா உள்ளது’ என தெரிவித்துள்ளது.
  • இதுவரை அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் 10.5 % பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
  • அமெரிக்காவில் 31 நாட்களிலும், பிரட்டனில் 56 நாட்களிலும் ஒரு கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  1. வாட்ஸ்அப் நிறுவனம்
  • கடந்த ஜனவரி மாதம் பயன்பாட்டாளர்களின் தகவல்களை முகநூலுடன் பகிரும் சேவையை வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்தது.
  • இந்த சேவைக்கு கடு எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து மத்திய அரசும் கண்டனம் தெரிவித்ததைத் தொடர்ந்து, புதிய கொள்கையை அமல்படுத்த மே-15 –ம் தேதி வரை வாட்ஸ்அப் நிறுவனம் ஒத்தி வைத்தது.
  • தற்போது, புதிய கொள்கை அமல்படுத்தப்படும் என்பதை திட்டவட்டமாக அறிவித்துள்ள வாட்ஸ்அப், இந்தியர்களின் தனிமனித அந்தரங்க தகவல்கள் பாதுகாப்ப வைக்கப்படும் என உறுத் அளித்துள்ளது.

  1. சூரிய மின்னனு உற்பத்தி
  • கேரளத்தில் மின் மற்றும் நகர்புற திட்டங்களை காணொலிக் காட்சியின் மூலம் திறந்து வைத்த பிரதமர் மோடி, கடந்த 6 ஆண்டுகளில் இந்தியாவின் மின் உற்பத்தித் திறன் 13 மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.
  • புகளூர்-திருச்சூர் மின்பகிர்வு திட்டம், காசர்கோடில் 50 மெகாவாட் சூரிய மின்னுற்பத்தி திட்டம், அருவிக்கரையில் நீர் சுத்தகரிப்பு திட்டம் ஆகியவற்றை தொடங்கி வைத்தார். மேலும், திருவனந்தபுரத்தில் ஸ்மார்ட் சாலைகள் திட்டம், ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டினார்.

  1. லாக்கர் பாதுகாப்பு
  • உச்சநீதிமன்றம், ரிசர்வ் வங்கியை 6 மாதங்களில், வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் பாதுகாப்புப் பெட்டக வசதி தொடர்பான விதிகளை மேம்படுத்த உத்தரவிட்டுள்ளது.
  • மேலும், லாக்கரைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் நலங்களைக் காக்கும் பொறுப்பில் இருந்து வங்கிகள் விலகக்கூடாது என அறிவுறுத்தியுள்ளது.

  1. டென்னிஸ்
  • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில், மகளிர் இரட்டையர் பிரிவில் பெல்ஜியத்தைச் சேர்ந்த எலிஸ் பெர்டென்ஸ், பெலாரஸை சேர்ந்த அரினா சபலென்கா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
  • இது அவர்களின் 2-வது கிராண்ட் ஸ்லாம்  பட்டமாகும். 2019-ம் ஆண்டின் அமெரிக்க ஓபன் டென்னிஸிலும் இந்த ஜோடி பட்டம் வென்றது.

Students can download the Daily TNPSC Current Affairs in English & Tamil as PDF from the links given below – TNPSC daily Current Affairs – English & Tamil – February 20, 2021. 


Download TNPSC Daily Current Affairs – PDF
20th February 2020 Download Link

Check TNPSC – Daily Current Affairs – January Month in TAMIL & English from bankersdaily from the links below. 


Read – TNPSC Daily Current Affairs – February 2021