TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – JULY 27, 2018
Want to Become a Bank, Central / State Govt Officer in 2020?
Join the Most awarded Coaching Institute & Get your Dream Job
Now Prepare for Bank, SSC Exams from Home. Join Online Coure @ lowest fee
Lifetime validity Bank Exam Coaching | Bank PO / Clerk Coaching | Bank SO Exam Coaching | All-in-One SSC Exam Coaching | RRB Railway Exam Coaching | TNPSC Exam Coaching | KPSC Exam Coaching
TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – JULY 27, 2018
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் பவார்டு அடித்த கோல் சிறந்த கோலாக தேர்வு :
- 21-வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் ரஷ்யாவில் சமீபத்தில் கோலாகலமாக நடந்து முடிந்தது. இந்த உலகக் கோப்பை தொடரில் மொத்தம் நடைபெற்ற 64 ஆட்டங்களில் 169 கோல்கள் அடிக்கப்பட்டிருந்தது.
- இதில் சிறந்த கோல் எது என்பதை தேர்வு செய்ய ரசிகர்களிடம் ஆன்லைன் வாயிலாக ஃபிபா அமைப்பு வாக்கெடுப்பு நடத்தியது. இதில் அர்ஜென்டினா அணிக்கு எதிரான நாக் அவுட் சுற்றில் பிரான்ஸ் வீரர் பெஞ்சமின் பவார்டு அடித்த அற்புதமான கோலை, சிறந்த கோலாக ரசிகர்கள் தேர்வு செய்துள்ளனர்.
- லீக் சுற்றில் ஜப்பான்அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொலம்பியா வீரர் ஜூவான் குயின்டி ரோஃப்ரீகிக்கில் தாழ்வாக அடித்த கோல் 2-வது இடத்தையும், அர்ஜென்டினா அணிக்கு எதிராக குரோஷியாவின் நடுகள வீரர் லுகா மோட்ரிச் தொலைவில் இருந்து அடித்த கோல் 3-வது இடத்தையும் ஆன்லைன் வாக்கெடுப்பில் பெற்றுள்ளது.
கேரள சுற்றுலா வளர்ச்சி கழகம் (KTDC) நாட்டின் முதல் State-Run All-Woman ஹோட்டலை தொடங்குகிறது:
- ஹோஸ்டஸ் என பெயரிடப்பட்ட ஹோட்டலை கேரளா சுற்றுலாத்துறை அமைச்சர் கடக்பள்ளி சுரேந்திரன் துவங்கிவைத்தார் . இது கேரளா சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்தின் (Kerala Tourism Development Corporation (KTDC)) ஒரு பிரதான திட்டம் ஆகும்.
- ஹோட்டல் KTDC வளாகத்தில் ஆறு மாதங்களுக்குள் வரும். இந்தியாவின் பொதுத்துறை ஹோட்டல் நாட்டில் பெண்களால் பெண்களுக்காக முழுமையாக இயங்கப்படும் முதல் ஹோட்டல் என்று கூறப்படுகிறது.
6 வது இந்தியா–இங்கிலாந்து அறிவியல் & கண்டுபிடிப்பு கவுன்சில் கூட்டம் புது தில்லியில் நடைபெற்றது:
- புது தில்லியில் நடைபெற்ற 6 வது இந்தியா–இங்கிலாந்து அறிவியல் & கண்டுபிடிப்பு கவுன்சில் (எஸ்சி) கூட்டம், இரு நாடுகளுக்கும் இடையே S&T ஒத்துழைப்பு பற்றிய பல்வேறு விஷயங்களைப் பற்றி விவாதிக்கிறது
- டாக்டர் ஹர்ஷ் வர்தன் மற்றும் திரு சாம் கியுமா இந்திய மற்றும் இங்கிலாந்து பிரதிநிதிகளாக தலைமை தாங்கினர்.
அடல் புதுமைப் படைப்பு இயக்கம், நிதி ஆயோக், ‘MyGov’ ஆகியவை இணைந்து ”புதுமைப் படைப்பு இந்தியா ” தளத்தை தொடங்கின:
- அடல் புதுமைப் படைப்பு இயக்கத்தின் இயக்குநர் திரு. ஆர். ரமணன், ‘MyGov’ அமைப்பின் முதன்மை நிர்வாக அலுவலர் திரு. அரவிந்த் குப்தா ஆகியோர் புதுமைப் படைப்பு இந்தியா(“#InnovateIndia Platform”) தளத்தை தொடங்கி வைத்தனர்.
- அடல் புதுமைப் படைப்பு இயக்கம் மற்றும் ‘MyGov’ அமைப்பு ஆகியவற்றின் ஒத்துழைப்பிலான இந்த தளம் நாடெங்கும் நடைபெறும் அனைத்து புதுமைப் படைப்புகளின் பொது மையமாக செயல்படும். நாடு முழுவதும் நடக்கும் அனைத்து புதுமைகளுக்கும் # இன்நோவேட் இன்டியா போர்டு பொதுவான புள்ளியாக செயல்படும்.
சமக்ர சிக்ஷா : அனைவருக்குமான ஒருங்கிணைந்த கல்வித் திட்டம்:
- மத்திய அரசு பள்ளிக் கல்வியில் சமக்ர சிக்ஷா என்ற ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. 2018-19ம் ஆண்டில் செயல்படுத்தப்படும் இத்திட்டம் மழலையர் பள்ளி முதல் மேல்நிலைப் படிப்பு வரையில் செயல்படுத்தப்படும். அனைத்து நிலைகளிலும் சமமான தரமான கல்வி கிடைக்க இத்திட்டம் மூலம் உறுதி செய்யப்படும்.
- சமக்ர சிக்ஷா திட்டம் கல்வியின் தரத்திலும் கவனம் செலுத்தும். ஆசிரியர்கள், பள்ளிகளின் தலைவர்களுக்கான பயிற்சிகள், மாநில அளவிலும், தேசிய அளவிலும் சாதனைகள் குறித்த ஆய்வு மேற்கொள்ளவும், ஒவ்வொரு பள்ளிக்கும் நிதியுதவி அளிக்கவும் இத்திட்டம் வகை செய்யும். மேலும், கற்றலுக்கு ஏற்ற சூழல், நூலகங்கள், விளைாட்டு உபகரணங்களுக்கான மானியங்கள் ஆகியவற்றுக்கும் துணை புரியும்.
ஒடிசா முதல்வர் ரூ 300 கோடி பாசன அணை திட்டத்தை துவக்கி வைத்தார்:
- ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் சுந்தர்கர்ஹ் மாவட்டத்தில் ரூபாய் 300 கோடி ருக்குரா நடுத்தர நீர்ப்பாசன திட்டத்தை(Rukura Medium Irrigation Dam project ) திறந்து வைத்தார்.
- வேளாண் துறையில் 5,800 ஹெக்டேர் நிலத்தை இந்தத் திட்டம் பாசனம் செய்யும்.2019 ம் ஆண்டுக்குள் 10 லட்சம் ஹெக்டேர் நிலத்தை பாசனத்திற்கு வழங்கி தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக திரு பட்நாயக் தெரிவித்தார்.
கேள்விகள்
Q.1) 21-வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் பெஞ்சமின் பவார்டு அடித்த அற்புதமான கோலை, சிறந்த கோலாக ரசிகர்கள் தேர்வு செய்துள்ளனர்.இவர் எந்த நாட்டை சேர்ந்தவர்?
a) ஈராக்
b) ஈரான்
c) பிஜி
d) பின்லாந்து
e) பிரான்ஸ்
b) லுவால்ஸ்
c) ஹோஸ்டஸ்
d) ஹேவல்ஸ்
e) ஹால்ஸ்
Q.3) ____ வது இந்தியா–இங்கிலாந்து அறிவியல் & கண்டுபிடிப்பு கவுன்சில் கூட்டம் புது தில்லியில் நடைபெற்றது.
a) 3
b) 1
c) 4
d) 5
e) 6
Q.4) ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் சுந்தர்கர்ஹ் மாவட்டத்தில் ரூபாய்____ கோடி ருக்குரா நடுத்தர நீர்ப்பாசன திட்டத்தை (Rukura Medium Irrigation Dam project ) திறந்து வைத்தார்.
a) 150
b) 250
c) 300
d) 200
e) 100
a) “#InnovateIndia Platform”
b) “#InnoIndia Platform”
c) “#InvariableIndia Platform”
d) “#InnovateIndo Platform”
e) “#In-Indo Platform”
5 comments
I want in English
We are uploading Current Affairs in English. Please check that.
We are uploading this Current Affairs in Tamil as there are only meager sites which upload Tamil Current Affairs.