TNPSC CURRENT AFFAIRS – TAMIL – JULY 2, 2018
Want to Become a Bank, Central / State Govt Officer in 2020?
Join the Most awarded Coaching Institute & Get your Dream Job
Now Prepare for Bank, SSC Exams from Home. Join Online Coure @ lowest fee
Lifetime validity Bank Exam Coaching | Bank PO / Clerk Coaching | Bank SO Exam Coaching | All-in-One SSC Exam Coaching | RRB Railway Exam Coaching | TNPSC Exam Coaching | KPSC Exam Coaching
TNPSC CURRENT AFFAIRS – TAMIL – JULY 2, 2018
பொது அறிவு நிகழ்வுகள் – ஜூலை 2
ஜிஎஸ்டி ஓராண்டு நிறைவு:
சரக்கு மற்றும் சேவை வரி அமலுக்கு வந்து ஓராண்டு நிறைவுற்றதைத் தொடர்ந்து மத்திய அரசு நேற்று ஜிஎஸ்டி தினத்தை கொண்டாடியுள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் 30 நள்ளிரவில் ஒரே நாடு– ஒரே வரி– ஒரே சந்தை என்ற கொள்கையின் அடிப்படையில் மத்திய அரசால் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை கொண்டுவரப்பட்டது. ஓராண்டு முடிவில் ஜிஎஸ்டி குறித்து பல்வேறு தலைவர்களும் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
புதிய அதிபராக லோப்பஸ் ஒப்ராடர் தேர்வு
லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான மெக்சிகோவில் 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை அதிபர் தேர்தல் நடக்கிறது.
அங்கு நிறுவன புரட்சிகர கட்சி (பி.ஆர்.ஐ.) சார்பில் அதிபராக இருக்கும் என்ரிக் பினா நியட்டோவின் பதவிக்காலம் முடிவடைவதை தொடர்ந்து,மெக்சிகோ சிட்டியின் முன்னாள் மேயரான ஆண்ட்ரேஸ் மனுவல் லோப்பஸ் ஒப்ராடர் மெக்சிகோவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மெக்சிகோ சிட்டியின் முதல் பெண் மேயராக ஷான்பம் தேர்வு:
வரலாற்றில் முதன்முறையாக மெக்சிகோ சிட்டிக்கு பெண் ஒருவர் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வட அமெரிக்காவின் மிகப்பெரிய நகரமான மெக்சிகோ சிட்டிக்கு அண்மையில் மேயர் தேர்தல் நடைபெற்றது.
56 வயதான ஷான்பம் யூத மதத்தை சேர்ந்தவராவார். இந்த தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் முதல் பெண் மேயராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஐசிசி ஹால் ஆஃப் பேம் பட்டியலில் ராகுல் டிராவிட், ரிக்கி பாண்டிங்குக்கு இடம் :
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன், அணியின் ‘சுவர்’ என்று செல்லமாக அழைக்கப்படும் ராகுல் டிராவிட், ஆஸ்திரலேய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் ஆகியோர் ஐசிசி ஹால் ஆஃப் பேம் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர்.
‘ஹால் ஆஃப் பேம்’ என்பது கிரிக்கெட்டில் வீரர்கள் செய்த சாதனை, பங்களிப்பு ஆகியவற்றுக்காக ஐசிசி வழங்கும் பட்டமாகும்.
இவர்கள் இருவரையும் தவிர்த்து இங்கிலாந்து மகளிர் அணியின் விக்கெட் கீப்பரும், ஓய்வு பெற்ற வீராங்கனையுமான கிளையர் டெய்லரும் சேர்க்கப்பட்டுள்ளார்.
விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் இன்று தொடக்கம்
பாரம்பரியமிக்க வெள்ளை நிற உடையில் விளையாடப்படும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டி இன்று லண்டனில் தொடங்குகிறது. கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் இன்று தொடங்குகிறது.
வரும் 15-ம் தேதி வரை நடைபெறும் பாரம்பரியமிக்க இந்தத் தொடரின் முதல் நாளான இன்று ஆடவர் ஒற்றையர் பிரிவில் முக்கிய ஆட்டங்களில் முதல் நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், செர்பியாவின் டுசான் லஜோவிக்குடன் மோதுகிறார்.
இந்துத்துறவி ராமானுஜருக்கு 216 அடி உயர வெண்கல சிலை
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே இந்துமதத் துறவி ராமானுஜருக்கு, 216 அடி உயரத்தில் பிரமாண்டமான சிலை ரூ.1000 கோடியில் அமைக்கப்பட்டு வருகிறது.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இந்துத் துறவியான ராமானுஜர் என்கிற ராமானுஜ சாரியா, தமிழகத்தில் பிறந்தவர். கருணைக்கடல் என்று அழைக்கப்படும் இவர், உலகமெங்கும் சமத்துவம் பரவ பாடுபட்டவர்.
இவருக்கு, ஐதராபாத் அருகே ஷாம்ஷாபாத் விமான நிலையம் அருகே 216 அடி உயரத்தில் மிகவும் பிரமாண்டமான சிலை அமைக்கப்பட்டு வருகிறது. தன்னார்வலர்களின் நிதியுதவியுடன் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில், வெண்கலத்தில் சிலை நிறுவப்பட்டுள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கியில் ஆஸ்திரேலியாவுக்கு தங்கம்
பெனால்டி ஷூட்–அவுட் முடிவில் ஆஸ்திரேலியா 3-1 என்ற கோல் கணக்கில் இந்தியாவை தோற்கடித்து 15-வது முறையாக இந்த பட்டத்தை கைப்பற்றியது.
இதுவரை சாம்பியன்ஸ் கோப்பையை வெல்லாத இந்திய அணி தொடர்ந்து 2-வது ஆண்டாக இறுதி சுற்றில் தோற்று வெள்ளிப்பதக்கத்துடன் திருப்திப்பட வேண்டியதாயிற்று.
முன்னதாக நடந்த 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் நெதர்லாந்து அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஒலிம்பிக் சாம்பியன் அர்ஜென்டினாவை சாய்த்து வெண்கலப்பதக்கத்தை வென்றது.
Other Important Links
TNPSC Recruitment 2018 : Assistant Horticulture Officer Notification – 757 Vacancies
TNPSC GROUP 1 – AGE LIMIT INCREASED
6 comments
If you post current affairs in English for TNPSC.We will me more happy with that.
Thanks for the suggestions Manoj Kumar.
We are posting Daily Current Affairs regularly in English and if you read that, it will cover maximum all the news that were important in a day.
Thanks
Bankersdaily Team
மிக்க நன்றி……தினமும் எதிா்பாா்ப்போம்…..
தினமும் அதை பதிவேற்றுவோம். இதை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி.