TNPSC Current Affairs – English & Tamil – July 15, 2021

TNPSC Aspirants,

The Current Affairs Section is one of the most important topics for the upcoming TNPSC Group I, Group II/IIA, Group IV, and TNUSRB Exams.

Check today’s TNPSC Daily Current Affairs(July 15, 2021) in this post.

Aspirants can expect questions from the Daily Current Affairs section in the upcoming TNPSC Exams and learning the Current Affairs section will also aid them in successfully preparing for the descriptive paper. So this process is a 2 in 1 initiative.

To make the learning more convenient, we will be providing the TNPSC Daily Current Affairs in both ENGLISH & TAMIL. This has been made in such a way that reflects the TNPSC pattern as TNPSC uses both the languages in the Question Paper and this will also make the preparations of the aspirants meaningful and will 100% fulfill the needs of the aspirants.


Download PDF – TNPSC Daily Current Affairs – English & Tamil – July 15, 2021


TAMIL NADU


1. Justice A. K. Rajan submits report to Tamil Nadu Chief Minister M. K. Stalin

  • Former Justice A. K. Rajan submitted a report on NEET (National Eligibility cum Entrance Test) to Tamil Nadu Chief Minister M. K. Stalin.
  • NEET is the qualifying exam for admission to undergraduate and postgraduate medical programmes in India, which became mandatory since 2018.
  • A committee headed by retired Justice A. K. Rajan was appointed to study whether NEET has affected students on the fringes of society and to suggest corrective measures.
  • Tamil Nadu has introduced a special reservation of 7.5% of the total seats available in the state for government school students.

 

1. நீதிபதி . கே. ராஜன் தமிழ்நாடு முதல்வர் மு. . ஸ்டாலினிடம் அறிக்கை சமர்ப்பித்தார்

  • முன்னாள் நீதிபதி . கே. ராஜன் நீட் (தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு) குறித்த அறிக்கையை தமிழ்நாடு முதல்வர் மு. க. ஸ்டாலினிடம் சமர்ப்பித்தார்.
  • நீட் (NEET) இந்தியாவில் இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான தகுதி தேர்வு ஆகும். இது 2018 முதல் கட்டாயமாக்கப்பட்டது.
  • நீட் தேர்வு சமூகத்தின் விளிம்புகளில் உள்ள மாணவர்களை பாதித்துள்ளதா என்பதை ஆய்வு செய்யவும், அதற்கான சரியான நடவடிக்கைகளை பரிந்துரைக்கவும் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ. கே. ராஜன் தலைமையிலான குழு நியமிக்கப்பட்டது.
  • தமிழ்நாட்டில் உள்ள மொத்த இடங்களில் 5% அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு இட ஒதுக்கீடு ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

2. Tamil scholars urge to conduct Trinity of Tamil music festival

  • Tamil scholars have urged the Tamil Nadu Government to hold the Trinity of Tamil music festival. Muthuthandava, Arunachala Kaviraya and Marimuthapillai are known as the Trinity of Tamil music (தமிழிசை மூவர் – Tamilisai Moovar).
  • They were born in the 17th century and lived in They made the world realise the speciality of tamil language through their music.
  • To showcase their excellence, a manimandapam was constructed on behalf of the Government of Tamil Nadu at Sirkali with a full-sized bronze statue of the Trinity of Tamil music.
  • It was inaugurated by the then Chief Minister Jayalalithaa through video conferencing in 2013.
  • Sirkali Trinity of Tamil music was earlier than the Trinity of MusicThiruvarur Thyagaraja, Syama Shastri and Muthusamy Dikshitar.

 

2. தமிழிசை மூவர் விழா நடத்த தமிழ் ஆர்வலர்கள் வலியுறுத்தல்

  • தமிழ்நாடு அரசிடம் தமிழிசை மூவர் விழா நடத்த தமிழ் ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். முத்துதாண்டவர், அருணாசலக் கவிராயர் மற்றும் மாரிமுத்தாபிள்ளை ஆகியோர் தமிழிசை மூவர் என அழைக்கப்படுகின்றனர்.
  • 17ஆம் நூற்றாண்டில் பிறந்த இம்மூவரும், சீர்காழியில் வாழ்ந்து தமது இசை மூலம் தமிழ் மொழியின் சிறப்பை உலகறியச் செய்துள்ளனர்.
  • இவர்களின் சிறப்பை பறைசாற்றும் வகையில், சீர்காழியில் தமிழக அரசு சார்பில், தமிழிசை மூவரின் முழு உருவ வெண்கலச் சிலையுடன் மணிமண்டபம் கட்டப்பட்டது.
  • இதை கடந்த 2013இல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார்.
  • சங்கீத மும்மூர்த்திகள் என போற்றப்படும் திருவாரூர் தியாகராஜர், சியாமா சாஸ்திரி, முத்துசாமி தீட்சிதர் ஆகியோருக்கும் முற்பட்டவர்கள் சீர்காழி தமிழிசை மூவர்.

ECONOMY


3. The International Financial Services Centres Authority was established as a unified regulator

  • The International Financial Services Centres Authority (IFSCA) was established as a unified regulator to develop and regulate financial products, financial services and financial institutions in the International Financial Services Centres in India.
  • IFSCA set up an expert group to recommend the road map for the development of Longevity Finance Hub. The Expert Committee is co-chaired by Kaku Nakhate, President and Country Head (India) of the Bank of America and Gopalan Srinivasan, Ex-CMD of the New India Assurance Company Limited.

 

3. சர்வதேச நிதிச் சேவை மையங்கள் ஆணையம் (IFSCA) ஒருங்கிணைந்த ஒழுங்குமுறை அமைப்பாக நிறுவப்பட்டுள்ளது

  • இந்தியாவில் உள்ள சர்வதேச நிதிச் சேவை மையங்களில் நிதிப் பொருட்கள், நிதிச் சேவைகள் மற்றும் நிதி நிறுவனங்களை உருவாக்கவும் ஒழுங்குபடுத்தவும் ஒருங்கிணைந்த ஒழுங்குமுறை அமைப்பாக சர்வதேச நிதிச் சேவை மையங்கள் ஆணையம் (IFSCA) நிறுவப்பட்டுள்ளது.
  • நீண்டநாள் நிதி மையத்தின் வளர்ச்சிக்கான வரைபடத்தை பரிந்துரைக்க IFSCA நிபுணர் குழுவை அமைத்தது. அந்த நிபுணர் குழுவிற்கு பாங்க் ஆஃப் அமெரிக்காவின் தலைவர் (இந்தியா) மற்றும் நாட்டின் தலைவர் ககு நகாதே மற்றும் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் சி.எம்.டி கோபாலன் ஸ்ரீநிவாசன் ஆகியோர் இணைத் தலைவர்களாக உள்ளார்.

4. India sets up NARCL to tackle Non Performing Assets

  • Public sector lenders led by Canara Bank have officially formed the National Asset Reconstruction Company Limited (NARCL) or the Bad Bank.
  • It will be headed by Padmakumar Madhavan Nair, a stressed assets expert at State Bank of India (SBI), as Managing Director.

The other directors of NARCL are:

  • Sunil Mehta – Chief Executive of Indian Banks’ Association (IBA)
  • Salee Sukumaran Nair – Deputy Managing Director of SBI
  • Ajit Krishnan Nair – Representative of Canara Bank

Bad Bank:

  • A bad bank is a bank set up to buy bad loans and other illiquid holdings of another financial institution. An entity holding significant non-performing assets will sell these holdings at market value to a bad bank and clean up its balance sheet.

National Asset Reconstruction Company Limited (NARCL):

  • NARCL was incorporated on 7 July 2021 with an authorised capital of Rs. 100 crores and it is classified as a Central Government Company.

 

4. வாராக் கடனைச் எதிர்கொள்ள இந்தியா NARCLஐ அமைத்துள்ளது

  • கனரா வங்கி தலைமையிலான பொதுத்துறை கடன் வழங்குநர்கள் அதிகாரப்பூர்வமாக தேசிய சொத்து புனரமைப்பு நிறுவனம் (NARCL) அல்லது வாராக்கடன் வங்கியை உருவாக்கியுள்ளனர்.
  • இதற்கு நிர்வாக இயக்குநராக, பாரத ஸ்டேட் வங்கியின் (SBI), நெருக்கடி சொத்து நிபுணர் (stressed assets expert) பத்மகுமார் மாதவன் நாயர் தலைமை தாங்குகிறார்.

NARCLஇன் மற்ற இயக்குனர்கள்:

  • சுனில் மேத்தா, இந்திய வங்கிகள் சங்க (IBA) தலைமை நிர்வாகி
  • சலீ சுகுமாரன் நாயர், SBI துணை நிர்வாக இயக்குநர்
  • அஜித் கிருஷ்ணன் நாயர், கனரா வங்கி பிரதிநிதி

வாராக்கடன் வங்கி:

  • வாராக்கடன் வங்கி என்பது மற்றொரு நிதி நிறுவனத்தின் மோசமான கடன்கள் மற்றும் பிற நீர்மையில்லா சொத்துக்களை வாங்குவதற்காக அமைக்கப்பட்ட வங்கியாகும். குறிப்பிடத்தக்க வாராக் கடன்களை வைத்திருக்கும் ஒரு நிறுவனம் இந்த உடைமைகளை சந்தை மதிப்பில் வாராக்கடன் வங்கிக்கு விற்று அதன் இருப்புநிலைக் குறிப்பை கழிக்கும்.

தேசிய சொத்து புனரமைப்பு நிறுவனம் (NARCL):

  • 7 ஜூலை 2021 அன்று ரூ. 100 கோடி அங்கீகரிக்கப்பட்ட மூலதனத்துடன் NARCL மத்திய அரசு நிறுவனமாக வகைப்படுத்தப்பட்டது.

POLITY


5. Piyush Goyal was appointed as the Leader of the House in the Rajya Sabha

  • Union Minister of Commerce and Industries Piyush Goyal was appointed as the Leader of the House in the Rajya Sabha. He replaced Thaawarchand Gehlot, now Governor of Karnataka.

Leader of House:

  • The term Leader of the House has been defined in Rules of Procedure of the Houses of Parliament.
  • The Prime Minister is the Leader of the Lok Sabha.
  • If Prime Minister is a member of the Raja Sabha, he will be the Leader of Rajya Sabha too.
  • If he is a member of Lok Sabha, the Leader of the Rajya Sabha is appointed by the party in power at the centre.
  • The arrangement of Government business is the responsibility of the Leader of the House.

 

5. மாநிலங்களவை அவைத் தலைவராக பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார்

  • மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் மாநிலங்களவையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது கர்நாடக ஆளுநராக இருக்கும் தாவர்சந்த் கெலாட்டுக்குப் பதிலாக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவைத் தலைவர்:

  • அவைத் தலைவர் என்ற சொல் பாராளுமன்ற அவைகளின் நடைமுறை விதிகளில் வரையறுக்கப்பட்டுள்ளது.
  • பிரதமர் மக்களவையின் தலைவர் ஆவார்.
  • பிரதமர் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தால், அவர் மாநிலங்களவைத் தலைவராகவும் இருப்பார்.
  • அவர் மக்களவை உறுப்பினராக இருந்தால், மாநிலங்களவைத் தலைவர் மத்தியில் அதிகாரத்தில் உள்ள கட்சியால் தேர்ந்தெடுக்கப்பட்டு நியமிக்கப்படுவார்.
  • அரசாங்க அலுவல்களை ஏற்பாடு செய்வது அவைத் தலைவரின் பொறுப்பாகும்.

NATIONAL


6. Jitendra Singh addresses the first-ever joint meeting of all Science Ministries and Departments

  • Union Science and Technology Minister Jitendra Singh addressed the first-ever joint meeting of all Science Ministries and Departments.
  • The meeting aims to enhance collaboration in the field of research and development to reduce dependence on imports.

 

6. அனைத்து அறிவியல் அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் முதல் கூட்டுக் கூட்டத்தில் ஜிதேந்திர சிங் உரையாற்றினார்

  • அனைத்து அறிவியல் அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் முதல் கூட்டுக் கூட்டத்தில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ஜிதேந்திர சிங் உரையாற்றினார்.
  • இந்த கூட்டம் இறக்குமதியை சார்பைக் குறைப்பதற்காக ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தித் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

7. Gandhinagar railway station accommodates India’s first 5-star hotel above a railway track

  • Gandhinagar railway station has accommodated India’s first 5-star hotel above a railway track.
  • It became India’s first redeveloped railway station to provide a world-class experience to passengers.

Railway Stations Redevelopment Program

  • The Railway Stations Redevelopment Program was launched by the Government of India to redevelop 400 railway stations across the country at 1 lakh crores through the Public-Private Partnership (PPP) mode.

Indian Railway Stations Development Corporation (IRSDC)

  • Indian Railway Stations Development Corporation Limited (IRSDC) is a joint venture company of Rail Land Development Authority (RLDA), under the Ministry of Railways and Ircon International Limited (IRCON). The company takes up Indian railways’ projects to develop or redevelop the existing or new railway station or projects related to real estate development on the railway.

 

7. இருப்புப் பாதை மீது அமைந்த இந்தியாவின் முதல் 5 நட்சத்திர ஹோட்டல் காந்திநகர் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளது

  • இருப்புப் பாதை மீது அமைந்த இந்தியாவின் முதல் 5 நட்சத்திர ஹோட்டல் காந்திநகர் ரயில் நிலையத்தில், அமைக்கப்பட்டுள்ளது.
  • இது பயணிகளுக்கு உலகத்தரம் வாய்ந்த அனுபவத்தை வழங்கும் இந்தியாவின் முதல் மறுவடிவமைப்பு பெற்ற ரயில் நிலையமாகும்.

ரயில் நிலையங்கள் மறுவடிவமைப்பு திட்டம்

  • பொது தனியார் கூட்டு (PPP) முறையில் நாடு முழுவதும் உள்ள 400 ரயில் நிலையங்களை ரூ.1 லட்சம் கோடி செலவில் மறுவடிவமைப்பு செய்ய ரயில் நிலையங்கள் மறுவடிவமைப்பு திட்டம் மத்திய அரசால் தொடங்கப்பட்டது.

இந்திய ரயில் நிலையங்கள் மேம்பாட்டுக் கழகம் (IRSDC)

  • இந்திய ரயில் நிலையங்கள் மேம்பாட்டுக் கழகம் (IRSDC) என்பது மத்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் உள்ள ரயில் நில மேம்பாட்டு ஆணையம் (RLDA) மற்றும் இர்கான் சர்வதேச நிறுவனம் (IRCON) ஆகியவற்றின் கூட்டு நிறுவனமாகும். ரயில்வேயில் தற்போதுள்ள அல்லது புதிய ரயில் நிலையம் அல்லது ரியல் எஸ்டேட் மேம்பாடு தொடர்பான திட்டங்களை உருவாக்க அல்லது மறுஉருவாக்கம் செய்யும் இந்திய ரயில்வேயின் திட்டங்களை இந்த நிறுவனம் எடுத்துக்கொள்கிறது.

8. Prime Minister Narendra Modi inaugurates the International Convention Centre ‘Rudraksh’ in Varanasi

  • Prime Minister Narendra Modi inaugurated an International Cooperation and Convention Centre’s ‘Rudraksh’, in Varanasi.
  • It aims to offer a glimpse of the cultural richness of the ancient city of Kashi.
  • The Japan International Cooperation Agency-assisted the Varanasi International Cooperation and Convention Centre (VCC).

 

8. வாரணாசியில் சர்வதேச மாநாட்டு மையமானருத்ராக்ஷ் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்

  • வாரணாசியில் சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் மாநாட்டு மையத்தின் ருத்ராக்ஷ்என்ற அமைப்பை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
  • பண்டைய நகரமான காசியின் கலாச்சார செழுமையின் கண்ணோட்டத்தை வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமை, வாரணாசி சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் மாநாட்டு மையத்திற்கு (VCC) உதவியது.

IMPORTANT DAYS


9. Educational Development Day – 15 July

  • The Government of Tamil Nadu has been celebrating 15 July, the birthday of Kamaraj, who opened more schools in rural areas to educate poor students from 2006 as the Educational Development Day.
  • He introduced the uniform scheme in schools.
  • He introduced the “Mid-day Meal scheme” in primary schools. In 1956, he extended the free meals scheme to poor children in all primary schools across the state.

 

9. கல்வி வளர்ச்சி நாள் – 15 ஜூலை

  • ஏழை மாணவர்களும் கல்வி கற்க, கிராமப்புறம்களில் அதிக அளவில் பள்ளிகளைத் திறந்த காமராஜரின் பிறந்தநாளான 15 ஜூலையை, 2006ஆம் ஆண்டு முதல் கல்வி வளர்ச்சி நாளாக தமிழ்நாடு அரசால் கொண்டாடப்பட்டு வருகிறது.
  • அவர் பள்ளிகளில் சீருடைத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
  • அவர் தொடக்கப் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். 1956ஆம் ஆண்டு மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் ஏழைக் குழந்தைகளுக்கு இலவச உணவுத் திட்டத்தை விரிவுபடுத்தினார்.

10. World Plastic Surgery Day – 15 July

  • World Plastic Surgery Day is to be celebrated annually on 15 July from this year.
  • 15 July is celebrated as the National Plastic Surgery Day in India by the Association of Plastic Surgeons of India (APSI). Raja Sabapathy, a plastic surgeon of Coimbatore, introduced the concept of National Plastic Surgery Day when he was the APSI President in 2011 to create awareness of plastic surgery.
  • World Council of Leaders, a body, consisting of the Presidents of all national associations, agreed to celebrate 15 July as World Plastic Surgery day.
  • Sushruta of India is known as the ‘Father of plastic surgery’.

 

10. உலக பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை தினம் – 15 ஜூலை

  • உலக பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை தினம் இந்த ஆண்டு முதல் ஆண்டுதோறும் 15 ஜூலை அன்று கொண்டாடப்பட உள்ளது.
  • இந்திய பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை சங்கம் (APSI), 15 ஜூலை அன்று, இந்தியாவில் தேசிய பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை தினமாக கொண்டாடுகிறது. பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, 2011ஆம் ஆண்டு APSI தலைவராக இருந்த போது, தேசிய பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை தினத்தை கோயம்புத்தூரின் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் எஸ். ராஜா சபாதி அறிமுகப்படுத்தினார்.
  • அனைத்து தேசிய சங்கங்களின் தலைவர்களையும் கொண்ட உலக தலைவர்கள் குழு, ஜூலை 15ஐ உலக பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை தினமாக கொண்டாட ஒப்புக் கொண்டது.
  • இந்தியாவின் சுஷ்ருதாபிளாஸ்டிக் அறுவை சிகிச்சையின் தந்தைஎன்று அறியப்படுகிறார்.

11. World Youth Skills Day – 15 July

  • World Youth Skills Day is observed on 15 July annually to equip young people around the world with essential skills for employment and entrepreneurship.
  • This day was recognised in 2014 by the United Nations General Assembly to achieve the Incheon Declaration: Education 2030, which is a part of SDG-4 (Sustainable Development Goal-4).
  • 2021 Theme: “Reimagining Youth Skills Post-Pandemic”
  • SDG-4: “Ensure inclusive and equitable quality education and promote lifelong learning opportunities for all”

 

11. உலக இளைஞர் திறன் தினம் – 15 ஜூலை

  • உலக இளைஞர் திறன் தினம் ஆண்டுதோறும் 15 ஜூலை அன்று உலகம் முழுவதும் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் தொழில் முனைவோர் ஆகியோருக்கான அத்தியாவசிய திறன்களை ஏற்படுத்துவதற்காக அனுசரிக்கப்படுகிறது.
  • இந்த நாள் 2014இல் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் SDG-4இன் (நிலையான வளர்ச்சி இலக்கு-4) ஒரு பகுதியான இன்ச்சியான் பிரகடனம்: கல்வி 2030ஐ அடைய அங்கீகரிக்கப்பட்டது.
  • 2021 கருப்பொருள்: பெருந்தொற்றுக்குப் பிந்தைய இளைஞர் திறன்களை மறுகற்பனை செய்தல்
  • SDG-4: “உள்ளடக்கிய மற்றும் சமமான தரமான கல்வியை உறுதி செய்து, அனைவருக்கும் வாழ்நாள் முழுவதும் கற்றல் வாய்ப்புகளை மேம்படுத்துதல்”

DAY IN HISTORY


12. Centenary year of freedom fighter Sankaraiah – 15 July 2021

  • Sankaraiah was born in Kovilpatti on 15 July 1922. He was a politician, activist and freedom fighter.
  • He studied in American College, Madurai. He was one of the 32 communist leaders who laid the foundation of the Communist Party of India-Marxist (CPI(M)), when the Communist Party of India (CPI) broke into two factions.
  • He was elected to the Tamil Nadu Assembly in 1967, 1977 and 1980

 

12. சுதந்திரப் போராட்ட வீரர் சங்கரய்யாவின் நூற்றாண்டு விழா 15 ஜூலை 2021

  • சங்கரய்யா, 15 ஜூலை 1922 அன்று கோவில்பட்டியில் பிறந்தார். அவர் ஒரு அரசியல்வாதி, ஆர்வலர் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர் ஆவார்.
  • அவர் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரண்டு பிரிவுகளாக உடைந்த போது, இந்திய மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு CPI(M), அடித்தளம் அமைத்த 32 கம்யூனிஸ்ட் தலைவர்களில் இவரும் ஒருவர்.
  • இவர் 1967, 1977 மற்றும் 1980ஆம் ஆண்டுகளில் தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

13. Kamarajar birth anniversary – 15 July

  • Kamarajar was born on 15 July 1903. He was born at Virudupatti, now known as
  • In 1937, he contested the election from Sattur for the Madras Legistative Assembly and was elected unopposed.
  • In 1940, Kamaraj was elected as the President of the Tamil Nadu Congress Committee (TNCC) and he continued to be the President of TNCC till 1954.
  • He was instrumental in bringing two Prime Ministers – Lal Bahadur Sastri in 1964 and Indira Gandhi in 1966 to power. So, he was known as the King maker.
  • He formulated the K plan that paved the way for youngsters in politics and he resigned from his Chief Minister post in this regard.
  • He introduced the “Mid-day Meal scheme” in primary schools. In 1956, he extended the free meals scheme to poor children in all primary schools across the state.
  • Kamaraj was awarded India’s highest civilian honour, the Bharat Ratna, posthumously in 1976.
  • His birthday is celebrated as the Educational Development Day in Tamil Nadu.

 

13. காமராஜர் பிறந்தநாள் 15 ஜூலை

  • காமராஜர், 15 ஜூலை 1903 அன்று பிறந்தார். அவர் இப்போது விருதுநகர் என்று அழைக்கப்படும் விருதுபட்டியில் பிறந்தார்.
  • 1937 தேர்தலில், சாத்தூரில் இருந்து சென்னை சட்டமன்றத்திற்கு போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 1940ஆம் ஆண்டு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட காமராஜர், 1954 வரை தொடர்ந்து தலைவராக இருந்தார்.
  • 1964இல் லால் பகதூர் சாஸ்திரி, 1966இல் இந்திரா காந்தி ஆகிய இரண்டு பிரதமர்களை ஆட்சிக்கு கொண்டு வருவதில் அவர் முக்கிய பங்கு வகித்தார். எனவே அவர் கிங் மேக்கர் (ஆட்சியாளர்களை உருவாக்குபவர்) என அழைக்கப்பட்டார்.
  • அவர் அரசியலில் இளைஞர்களுக்கு வழிவகுத்த கே திட்டத்தை அவர் வடிவமைத்து, அதன்படி 2 அக்டோபர் 1963இல் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
  • தொடக்கப் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தை அவர் அறிமுகப்படுத்தினார். 1956ஆம் ஆண்டு மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் ஏழைக் குழந்தைகளுக்கு இலவச உணவுத் திட்டத்தை விரிவுபடுத்தினார்.
  • 1976ஆம் ஆண்டு இந்தியாவின் மிக உயர்ந்த கௌரவமான பாரத ரத்னா விருது காமராஜருக்கு அவர் இறந்த பின்னர் வழங்கப்பட்டது.
  • அவரது பிறந்தநாள், தமிழ்நாட்டில் கல்வி வளர்ச்சி நாளாக அனுசரிக்கப்படுகிறது.