TNPSC Current Affairs – English & Tamil – April 23, 2021

TNPSC Aspirants,

The Current Affairs Section is one of the most important topics for the upcoming TNPSC Group I, Group II/IIA, Group IV, and TNUSRB Exams.

Check today’s TNPSC Daily Current Affairs(23rd April, 2021) in this post.

Aspirants can expect questions from the Daily Current Affairs section in the upcoming TNPSC Exams and learning the Current Affairs section will also aid them in successfully preparing for the descriptive paper. So this process is a 2 in 1 initiative.

To make the learning more convenient, we will be providing the TNPSC Daily Current Affairs in both ENGLISH & TAMIL. This has been made in such a way that reflects the TNPSC pattern as TNPSC uses both the languages in the Question Paper and this will also make the preparations of the aspirants meaningful and will 100% fulfill the needs of the aspirants.


Download PDF – TNPSC Daily Current Affairs – English & Tamil – April 23, 2021


ECONOMY


1. India’s export of Agricultural and allied commodities increases 18.49 per cent during 2020-21

  • India has witnessed an increase of almost 5 per cent in export of Agricultural and allied products during 2020-21 as compared to the previous year.
  • India had witnessed 727 per cent growth in Wheat export and 132 per cent in Non-Basmati Rice export.
  • The value of export of Agricultural and allied commodities during 2020-21 was over Rs 2 lakh 70 thousand crores.
  • The imports witnessed a slight increase of 93 per cent during this period. Despite COVID-19, the balance of trade in agriculture has favorably increased.

 

1. 2020-21ஆம் ஆண்டில் இந்தியாவின் வேளாண் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருட்களின் ஏற்றுமதி 18.49 சதவீதம் அதிகரித்துள்ளது

  • 2020-21ஆம் ஆண்டில் வேளாண் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருட்களின் ஏற்றுமதி இந்தியாவில் கிட்டத்தட்ட 5 சதவீதம் அதிகரித்துள்ளது.
  • கோதுமை ஏற்றுமதியில் 727 சதவீதமும், பாஸ்மதி அல்லாத அரிசி ஏற்றுமதியில் 132 சதவீதமும் இந்தியா வளர்ச்சியைக் கண்டது.
  • 2020-21ஆம் ஆண்டில் விவசாய மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருட்களின் ஏற்றுமதி ரூ.2 லட்சம் 70 ஆயிரம் கோடிக்கு மேல் இருந்தது.
  • இந்த காலகட்டத்தில் வேளாண் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருட்களின் இறக்குமதி93 சதவீதம் அதிகரித்துள்ளது. COVID-19 இருந்தபோதிலும், விவசாயத்தில் வர்த்தக சமநிலை சாதகமாக அதிகரித்துள்ளது.

SCIENCE AND TECHNOLOGY


2. Newly found super-Earth GJ 740 b has second shortest orbit around the red dwarf star

  • An exoplanet GJ 740 b has been discovered 36 light-years from Earth. It is three times the mass of Earth and orbits a red dwarf star called GJ 740.
  • Each orbit takes just 4 days, making it the second shortest orbit of any planet around a red dwarf star discovered so far. Compared to our Sun, GJ 740 is tiny and far cooler.

 

2. புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட சூப்பர் பூமி GJ 740 b சிவப்பு குள்ள நட்சத்திரத்தை சுற்றி இரண்டாவது குறுகிய சுற்றுப்பாதையைக் கொண்டுள்ளது.

  • பூமியிலிருந்து 36 ஒளி ஆண்டுகள் தொலைவில் புதிதாக GJ 740 b என்னும் வெளி கோள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பூமியை விட மூன்றுமடங்கு நிறை உள்ள இந்த வெளி கோள், GJ 740 என்னும் சிவப்பு குள்ள நட்சத்திரத்தை சுற்றிவருகிறது.
  • இந்த சூப்பர் பூமி ஒருமுறை சுற்றிவர வெறும் 4 நாட்கள் எடுக்கும். இதுவே இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட ஒரு சிவப்பு குள்ள நட்சத்திரத்தை சுற்றிவரும் கிரகத்தின் இரண்டாவது குறுகிய சுற்றுப்பாதையாகும். நமது சூரியனுடன் ஒப்பிடும்போது, ​​GJ 740 மிக சிறியது, மிகவும் குளிரானது.

INTERNATIONAL


3. Indian Navy dispatches Deep Submergence Rescue Vessel from Vishakapatnam to support, search and rescue of missing Indonesian Submarine KRI Nanggala

  • Union Defence Minister Rajnath Singh has directed the Indian Navy to move its Deep Submergence Rescue Vessel DSRV from Vishakapatnam to Indonesia to support search and rescue of missing Indonesian Submarine KRI Nanggala.

KRI Nanggala

  • The German-built submarine KRI Nanggala was in service with the Indonesian Navy since 1981.

Indian Navy’s DSRV system

  • India is amongst the few countries in the world capable of undertaking the search and rescue of a disabled submarine through a DSRV. Indian Navy’s DSRV system can locate a submarine up to 1,000 m depth utilising its state-of-the-art technology. It can also be used to provide emergency supplies to the submarine.

 

3. காணாமல் போன இந்தோனேசிய நீர்மூழ்கிக் கப்பலைத் தேடுவதற்கும் மீட்பதற்கும் இந்திய கடற்படை விசாகபட்டினத்திலுள்ள தனது ஆழமான நீரில் மூழ்கும் மீட்பு கப்பலை (DSRV) அனுப்பியுள்ளது

  • மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் காணாமல் போன இந்தோனேசிய நீர்மூழ்கிக் கப்பலைத் தேடுவதற்கும் மீட்பதற்கும் விசாகபட்டினத்திலுள்ள இந்திய கடற்படையின் ஆழமான நீரில் மூழ்கும் மீட்பு கப்பல் DSRVஐ இந்தோனேசியாவிற்கு அனுப்புமாறு அறிவுறுத்தியுள்ளார்.

KRI நங்கலா

  • ஜெர்மனியில் கட்டப்பட்ட நீர்மூழ்கிக் கப்பலான KRI நங்கலா 1981 முதல் இந்தோனேசிய கடற்படையில் சேவையில் இருந்து வருகிறது.

இந்திய கடற்படையின் DSRV அமைப்பு

  • DSRV மூலம் காணாமல் போன நீர்மூழ்கிக் கப்பலைத் தேடி மீட்பதற்கான திறன் கொண்ட உலகின் சில நாடுகளில் இந்தியாவும் உள்ளது. இந்திய கடற்படையின் DSRV அமைப்பின் மிகச் சிறந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 1,000 மீட்டர் ஆழம் வரை உள்ள ஒரு நீர்மூழ்கிக் கப்பலைக் கண்டுபிடிக்க முடியும். நீர்மூழ்கிக் கப்பலுக்கு அவசரகால பொருட்களை வழங்கவும் இது உதவுகிறது.

4. Indian-American Vanita Gupta is appointed as the Associate Attorney-General of US

  • The United States appointed Indian-American Vanita Gupta as Associate Attorney-General of the US, making her the first Indian-American to occupy the third highest position at the Department of Justice.

 

4. இந்தியஅமெரிக்கரான வனிதா குப்தா அமெரிக்காவின் உதவி தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார்

  • இந்தியஅமெரிக்கரான வனிதா குப்தா அமெரிக்காவின் உதவி தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்படுத்தப்பட்டார் நீதித்துறையில் மூன்றாவது மிக உயர்ந்த இடத்தைப் பிடித்த முதல் இந்தியஅமெரிக்கர் என்ற பெருமையைப் பெற்றார்.

SPORTS


5. Indian women boxers creates history with seven gold medals in the World Youth Boxing Championships held at Kielce, Poland

  • In the World Youth Boxing Championships, Indian women boxers created history with seven gold medals in Kielce, Poland.
  • All the women finalists – Gitika(48 kg), Naorem Babyrojisana Chanu (51 kg), Poonam (57kg), Vinka (60kg), Arundhati Choudhary (69kg), T Sanamacha Chanu (75kg) and Alfiya Pathan (+81kg) won gold medals.

 

5. இந்திய குத்துச்சண்டை வீராங்கனைகள் ஏழு தங்கப் பதக்கங்களுடன் போலந்தின் கியேல்ஸில் நடைபெற்ற உலக இளைஞர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் வரலாற்றை உருவாக்குகினர்

  • உலக இளைஞர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில், இந்திய குத்துச்சண்டை வீராங்கனைகள் போலந்தின் கியேல்ஸில் ஏழு தங்கப் பதக்கங்களுடன் வரலாற்றை உருவாக்கினர்.
  • அனைத்து பெண்கள் இறுதிப் போட்டியாளர்களான கீதிகா (48 கிலோ), நோரம் பாபிரோஜிசானா சானு(51கிலோ), பூனம் (57 கிலோ), விங்கா(60கிலோ), அருந்ததி சவுத்ரி (69 கிலோ), டி சனாமாச்சா சானு (75 கிலோ) மற்றும் அல்ஃபியா பதான் (81+ கிலோ) ஆகியோர் தங்கப் பதக்கங்களை வென்றனர்.

6. Virat Kohli became the first batsman to complete 6,000 runs in the IPL

  • Virat Kohli became the first batsman to complete 6,000 runs in the IPL. He achieved this when he played for Royal Challengers of Bangalore against Rajasthan Royals.

 

6. IPLஇல் 6,000 ரன்களை நிறைவு செய்த முதல் பேட்ஸ்மேன் என்ற பெருமையை விராட் கோலி பெற்றார்

  • IPLஇல் 6,000 ரன்களை நிறைவு செய்த முதல் பேட்ஸ்மேன் என்ற பெருமையை விராட் கோலி பெற்றார். ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் ஆஃப் பெங்கலூர் அணிக்காக விளையாடியபோது அவர் இதை சாதித்தார்.

REPORTS AND INDICES


7. Amrita Vishwa Vidyapeetham ranks amongst the top 100 in THE Impact Ranking 2021

  • The Amrita Vishwa Vidyapeetham is the only Indian university to secure a rank amongst the top 100 in the third edition of Times Higher Education (THE) Impact Ranking. The varsity bagged the 81st position in the university rank list, which consists of 1240 universities from 98 countries and regions.
  • Amrita Vishwa Vidyapeetham has also scored the fifth rank for ‘quality education’ and eighth for ‘gender equality’ globally. In ‘good health and well-being’ Vidyapeetham stands at 37th position and for ‘clean water and sanitation’ at 52nd.

THE Impact Ranking 2021

  • Times Higher Education (THE) Impact Ranking is evaluated on the universities’ performances of the United Nation’s 17 Sustainable Development Goals.

 

7. தி இம்பாக்ட் தரவரிசை 2021இல் அமிர்தா விஸ்வ வித்யாபீதம் முதல் 100 இடங்களுக்குள் இடம் பிடித்துள்ளது

  • டைம்ஸ் உயர் கல்வி (THE) இம்பாக்ட் தரவரிசையின் (THE Impact Ranking 2021) மூன்றாம் பதிப்பில் முதல் 100 இடங்களுக்குள் இடம் பிடித்த ஒரே இந்திய பல்கலைக்கழகம் அமிர்தா விஸ்வ வித்யபீதம் ஆகும். 98 நாடுகள் மற்றும் பிராந்தியங்களைச் சேர்ந்த 1240 பல்கலைக்கழகங்களைக் கொண்ட பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் இந்த கழகம் 81வது இடத்தைப் பிடித்தது.
  • அமிர்தா விஸ்வ வித்யாபீதம் உலகளவில் ‘தரமான கல்வி’க்கு ஐந்தாவது இடத்தையும்,’ பாலின சமத்துவத்திற்கு ‘எட்டாவது இடத்தையும் பெற்றுள்ளது. ‘நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வில்’ வித்யாபீதம் 37வது இடத்திலும், ‘சுத்தமான நீர் மற்றும் சுகாதாரத்திற்காக’ 52வது இடத்திலும் உள்ளது.

தி இம்பாக்ட் தரவரிசை 2021 (THE Impact Ranking 2021)

  • இந்த தரவரிசையில் ஐக்கிய நாடுகளின் 17 நிலையான அபிவிருத்தி இலக்குகளின் பல்கலைக்கழகங்களின் செயல்திறன் குறித்து மதிப்பீடு செய்யப்படுகிறது.

8. Care Ratings lowers FY22 GDP forecast to 10.2%

  • Care Ratings has lowered its India GDP growth forecast to 2% for FY22 following fresh lockdowns imposed in parts of the country to control the pandemic.
  • As tax collections too would be affected, there would be an impact on GDP growth which is now placed at 10.2%. Therefore, the loss in GDP this year due to the lockdowns would be to the extent of 0.8-1% from our earlier estimate of 11-11.2%.

 

8. கேர் (Care) மதிப்பீடுகள் FY22இன் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் கணிப்பை 10.2%ஆக குறைக்கிறது

  • தொற்றுநோயைக் கட்டுப்படுத்த நாட்டின் சில பகுதிகளில் போடப்பட்ட புதிய பொதுமுடக்கங்களைத் தொடர்ந்து கேர் (Care) மதிப்பீடுகள், அதன் இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சிக் கணிப்பை 22ஆம் நிதியாண்டிற்கு2 சதவீதமாகக் குறைத்துள்ளது.
  • “வரி வசூல் பாதிக்கப்படும் என்பதால், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் அதன் தாக்கம் இருக்கும், மொத்த உள்நாட்டு உற்பத்தி இப்போது2%ஆக உள்ளது. ஆகையால், பொதுமுடக்கங்களால் இந்த ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏற்படும் இழப்பு முந்தைய மதிப்பீடான 11-11.2% இலிருந்து 0.8-1% வரை குறைந்து இருக்கும்.

IMPORTANT DAYS


9. World Book and Copyright Day – 23 April

  • World Book and Copyright Day is celebrated by UNESCO on 23 April every year since 1995. April 23 is a symbolic date for world literature because on this date in 1616 Cervantes, Shakespeare, and Inca Garcilaso de la Vega died. Hence, the day was selected to pay tribute to the great literary figures.
  • Each year, UNESCO selects the World Book Capital for a one-year period. As per UNESCO, the city of Tbilisi in Georgia was chosen as the World Book Capital for 2021.
  • Theme of World Book and Copyright Day: “To share a story

 

9. உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினம்ஏப்ரல் 23

  • உலக புத்தகம் மற்றும் பதிப்புரிமை தினம் யுனெஸ்கோவால் (UNESCO) 1995 முதல் ஒவ்வொரு ஆண்டும் 23 ஏப்ரல் அன்று கொண்டாடப்படுகிறது. ஏப்ரல் 23 உலக இலக்கியத்திற்கான ஒரு அடையாள தேதியாகும், ஏனென்றால் இந்த தேதியில் செர்வான்டெஸ், ஷேக்ஸ்பியர் மற்றும் இன்கா கார்சிலாசோ டி லா வேகா ஆகியோர் இறந்தனர். எனவே, இந்த சிறந்த இலக்கிய நபர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான நாளாக தேர்ந்தெடுக்கப்பட்டது.
  • ஒவ்வொரு ஆண்டும், யுனெஸ்கோ ஒரு வருட காலத்திற்கு உலக புத்தக நகரத்தைத் தேர்ந்தெடுக்கிறது. யுனெஸ்கோ, ஜார்ஜியாவில் உள்ள டிபிலிசி நகரத்தை 2021ஆம் ஆண்டுக்கான உலக புத்தக தலைநகராக தேர்ந்தெடுத்துள்ளது.
  • 2021 உலக புத்தகம் மற்றும் பதிப்புரிமை தினத்தின் கருப்பொருள்: ஒரு கதையைப் பகிர்ந்து கொள்ள”

Students can download the Daily TNPSC Current Affairs in English & Tamil as PDF from the links given below – TNPSC daily Current Affairs – English & Tamil – April 23, 2021. 


Download TNPSC Daily Current Affairs – PDF
23rd April, 2021 Will be Available soon

Check TNPSC – Daily Current Affairs – April Month in TAMIL & English from bankersdaily from the links below. 


Read – TNPSC Daily Current Affairs – April 2021