TNPSC Current Affairs – English & Tamil – August 12, 2021
TNPSC Current Affairs – English & Tamil – August 12, 2021
TNPSC Aspirants,
The Current Affairs Section is one of the most important topics for the upcoming TNPSC Group I, Group II/IIA, Group IV, and TNUSRB Exams.
Check today’s TNPSC Daily Current Affairs (August 12, 2021) in this post.
Aspirants can expect questions from the Daily Current Affairs section in the upcoming TNPSC Exams and learning the Current Affairs section will also aid them in successfully preparing for the descriptive paper. So this process is a 2 in 1 initiative.
To make the learning more convenient, we will be providing the TNPSC Daily Current Affairs in both ENGLISH & TAMIL. This has been made in such a way that reflects the TNPSC pattern as TNPSC uses both the languages in the Question Paper and this will also make the preparations of the aspirants meaningful and will 100% fulfill the needs of the aspirants.
Download PDF – TNPSC Daily Current Affairs – English & Tamil – August 12, 2021
IMPORTANT DAYS
1. World Elephant Day – 12 August
- Every year 12 August is celebrated as World Elephant Day, This day is focused on spreading awareness about the preservation and protection of elephants.
- On 12 August 2012, the first World Elephant Day was observed.
- This theme for this year’s (2021) World Elephant Day has not been announced. The theme for the last year (2020) was ‘Haathi Hamara Saathi.’
1. உலக யானைகள் தினம் – 12 ஆகஸ்ட்
- ஒவ்வொரு ஆண்டும் 12 ஆகஸ்ட் உலக யானை தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாள் யானைகளைப் பாதுகாக்கவும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் கவனம் செலுத்துகிறது.
- 12 ஆகஸ்ட் 2012 அன்று முதன் முதலில் உலக யானை தினம் அனுசரிக்கப்பட்டது.
- இந்த ஆண்டு (2021) உலக யானை தினத்திற்கான கருப்பொருள் அறிவிக்கப்படவில்லை. கடந்த ஆண்டுக்கான (2020) கருப்பொருள் ‘ஹாதி ஹமாரா சதி’ (‘Haathi Hamara Saathi’).
2. International Youth Day – 12 August
- International Youth Day is observed on 12 August every year.
- This day is celebrated to bring to notice the socio-economic and socio-political issues that the youth in every nation face.
- The first International Youth Day was celebrated in 1999.
- The theme of 2021 is “Transforming Food Systems: Youth Innovation for Human and Planetary Health”.
2. சர்வதேச இளைஞர் தினம் – 12 ஆகஸ்ட்
- ஒவ்வொரு ஆண்டும் 12 ஆகஸ்ட் அன்று சர்வதேச இளைஞர் தினம் அனுசரிக்கப்படுகிறது.
- ஒவ்வொரு தேசத்திலும் உள்ள இளைஞர்கள் எதிர்கொள்ளும் சமூக-பொருளாதார மற்றும் சமூக-அரசியல் பிரச்சினைகளை கவனத்தில் கொண்டு வரும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
- முதன் முதலில் சர்வதேச இளைஞர் தினம் 1999இல் கொண்டாடப்பட்டது.
- 2021இன் கருப்பொருள் “உணவு அமைப்புகளை உறுமாற்றுதல்: மனித மற்றும் உலக ஆரோக்கியத்திற்கான இளைஞர் புதுப்பித்தல்“.
3. National Library Day – 12 August
- 12 August marks the 128th birthday of Sirkazhi Ramamirtham Ranganathan. His birthday is celebrated as National Library Day all over India.
- He is revered as the ‘Father of Indian Librarians’ and is also a mathematician and librarian from Tamil Nadu.
- He introduced the Five Rules of Librarianship. He was admired in many parts of the world for his basic ideas in library science.
3. தேசிய நூலக தினம் – 12 ஆகஸ்டு
- சீர்காழி ராமாமிருதம் ரங்கநாதனின்128வது பிறந்த நாள் 12 ஆகஸ்டு குறிக்கிறது. இவரது பிறந்தநாளை இந்தியா முழுவதும் தேசிய நூலக தினமாகக் கொண்டாடுகின்றனர்.
- ‘இந்திய நூலகவியலின் தந்தை’ எனப் போற்றப்படும்இவர், தமிழ்நாட்டைச் சேர்ந்த கணிதவியலாளர் மற்றும் நூலகவியலாளர்.
- இவர் நூலகவியலின் ஐந்து விதிகளை அறிமுகம் செய்தவர். நூலகவியலில் இவரது அடிப்படையான சிந்தனைகளுக்காக உலகின் பல பகுதிகளிலும் போற்றப்படுகிறார்.
TAMILNADU
4. Rajendra Chola I’s birth anniversary is to be celebrated as Tamil Nadu Government event
- The Tamil Nadu Chief Minister M. K. Stalin and Tamil Nadu Tourism, Culture and Religious Endowments Department announced that the birth anniversary of Rajendra CholaI, one of the greatest emperors of the Chola Dynasty, will be celebrated as a Tamil Nadu government event.
- Rajendra Chola I’s birth anniversary is celebrated on the Thiruvathiraistar in the Tamil month of Aadi, and this would be celebrated by the Tamil Nadu government from the next year (2022).
4. முதலாம் ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் தமிழ்நாடு அரசு விழாவாக கொண்டாட உள்ளது
- சோழ வம்சத்தின் தலைசிறந்த பேரரசர்களில் ஒருவரான முதலாம் ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் தமிழ்நாடு அரசு நிகழ்வாகக் கொண்டாடப்படும் என்று தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் சமய அறக்கட்டளைகள் துறை அறிவித்தது.
- முதலாம் ராஜேந்திர சோழனின் பிறந்த நாள், தமிழ் மாதமான ஆடியில், திருவாதிரை நட்சித்திரத்தில் கொண்டாடப்படுகிறது. அடுத்த ஆண்டு (2022) முதல் இது தமிழ்நாடு அரசால் கொண்டாடப்படும்.
5. Thanjavur is selected as the best corporation in the Chief Minister’s Special Awards
- Chief Minister’s Special Awards for Best Corporation and Municipality are given annually in Tamil Nadu. Corporations and municipalities are selected for this award based on a number of factors, including the environment, lifestyle, economic environment, and management.
- Of which Thanjavur has been selected as the best corporation.
- Ooty, Tiruchengode and Chinnamanur have also been ranked as the top three Municipalities.
- In the order of Town Panchayat, Kallakudy (Trichy), Melpattanampakkam (Kadalur) and Kottaiyoor (Sivagangai) will receive the first three prizes respectively.
5. முதல்வரின் சிறப்பு விருதுகளில் சிறந்த மாநகராட்சியாக தஞ்சாவூர் தோ்வு
- தமிழகத்தில் ஆண்டுதோறும் சிறந்த மாநகராட்சி, நகராட்சிக்கான முதல்வரின் சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. சுற்றுசூழல், வாழ்க்கை முறை, பொருளாதார சூழல், நிர்வாகம் உள்ளிட்ட பல காரணிகளை கொண்டு இந்த விருதுக்கு மாநகராட்சி, நகராட்சிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.
- இதில் சிறந்த மாநகராட்சியாக தஞ்சாவூர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
- சிறந்த நகராட்சிகளாக முதல் மூன்று இடங்களுக்கு உதகமண்டலம், திருச்செங்கோடு, சின்னமனூா் ஆகியனவும் தோ்வு செய்யப்பட்டுள்ளன.
- பேரூராட்சிகள் வரிசையில், கல்லக்குடி (திருச்சி), மேல்பட்டணம்பாக்கம் (கடலூா்), கோட்டையூா் (சிவகங்கை) ஆகியன முறையே முதல் மூன்று பரிசுகளைப் பெறுகின்றன.
REPORT AND INDEX
6. Quality of Life for Elderly Index assesses the well-being of India’s ageing population
- Quality of Life for Elderly Index was released by the Institute for Competitiveness (IFC).
- Rajasthan, Himachal Pradesh, Mizoram and Chandigarh lead the rankings in the category of Aged States, Relatively-Aged States, North Eastern States and Union Territories categories, respectively.
- Tamil Nadu was ranked 4th in the Aged States category.
6. முதியோருக்கான வாழ்க்கைத் தரம் இந்தியாவின் வயதான மக்களின் நல்வாழ்வை மதிப்பிடுகிறது
- முதியோர்களுக்கான வாழ்க்கைத் தர குறியீடு வெளியிடப்பட்டது, இது போட்டியியல் மையத்தால் வெளியிடப்பட்டது.
- முதியோர்கள் அதிகம் உள்ள மாநிலங்கள், ஒப்பீட்டளவில் முதியோர்கள் அதிகம் உள்ள மாநிலங்கள், வடகிழக்கு மாநிலங்கள்மற்றும் யூனியன் பிரதேசங்கள் போன்ற பிரிவுகளில் முறையே ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசம்,மிசோரம் மற்றும் சண்டிகர் ஆகியவை முன்னணியில் உள்ளன.
- முதியோர்கள்அதிகம் உள்ள மாநிலங்களின் பிரிவில் தமிழ்நாடு 4வது இடத்தில் உள்ளது.
7. India ranks 122nd in the new Global Youth Development Index
- India ranked 122nd in the new Global Youth Development Index released by the Commonwealth Secretariat Youth Division in London.
- Singapore ranked topmost, followed by Slovenia, Norway, Malta and Denmark. Chad, the Central African Republic, South Sudan, Afghanistan and Niger came last, respectively.
7. புதிய உலகளாவிய இளைஞர் மேம்பாட்டு குறியீட்டில் இந்தியா 122வது இடத்தில் உள்ளது
- லண்டனில் உள்ள காமன்வெல்த் செயலகத்தின் படி இளைஞர் பிரிவு வெளியிட்டுள்ள, உலகளாவிய இளைஞர் மேம்பாட்டு குறியீட்டில் இந்தியா 122வது இடத்தைப் பிடித்துள்ளது.
- ஸ்லோவேனியா, நார்வே, மால்டா மற்றும் டென்மார்க் ஆகியவற்றைத் முந்தி சிங்கப்பூர் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சாட், மத்திய ஆப்பிரிக்க குடியரசு, தெற்கு சூடான், ஆப்கானிஸ்தான் மற்றும் நைஜர் முறையே கடைசியாக வந்தன.
NATIONAL
8. Maharashtra Government announces a new award for IT named after former PM Rajiv Gandhi
- Maharashtra Government announced a new award named after the former Indian Prime Minister Rajiv Gandhi.
- This award will be given to institutions and companies for outstanding performance in the information technology sector.
8. மகாராஷ்டிரா அரசு தகவல் தொழில்நுட்பத்துக்கான புதிய விருதை முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பெயரில் அறிவித்துள்ளது
- முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் பெயரில் புதிய விருதை ஒன்றை மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது.
- தகவல் தொழில்நுட்பத் துறையில் சிறந்த செயல்திறன் கொண்ட நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு இந்த விருது வழங்கப்படும்.
9. SIDBI launches ‘Digital Prayaas’ platform
- In order to facilitate loans to aspiring entrepreneurs who are new to bank (NTB), the Small Industries Development Bank of India (SIDBI) launched the ‘Digital Prayaas’
- It is an app-based digital lending tool platform resulting in loan sanctions accorded by the end of the day.
9. SIDBI ‘டிஜிட்டல் பிரயாஸ்‘ தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது
- வங்கிக்கு புதிதாக வரும் ஆர்வமுள்ள தொழில்முனைவோருக்கு கடன் வழங்க வசதியாக, இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி (SIDBI) ‘டிஜிட்டல் பிரயாஸ்‘ திட்டத்தை தொடங்கியது.
- இது ஒரு செயலியை அடிப்படையாகக் கொண்ட டிஜிட்டல் கடன் கருவி தளமாகும். இதன் விளைவாக நாள் இறுதிக்குள் கடன் ஒப்புதல் வழங்கப்படுகிறது.
10. Union Home Minister’s Medal for Excellence in Investigation 2021 awarded to 152 Police personnel
- The ‘Union Home Minister’s Medal for Excellence in Investigation’ for the year 2021 was awarded to 152 police personnel.
- This medal was constituted in 2018 with the objective to promote high professional standards of investigation of crime and to recognise such excellence in Investigation by investigating officers.
- Among the personnel receiving these awards, 8 are from Tamil Nadu Police.
Awardees from Tamil Nadu
- Saravanan
- Anbarasi
- Kavitha
- Jayavel
- Kalaiselvi
- Manivannan
- R. Chidambaramurugesan
- Kanmani
10. 2021ஆம் ஆண்டுக்கான சிறந்த புலனாய்வுக்கான மத்திய உள்துறை அமைச்சரின் பதக்கங்கள் அறிவிப்பு
- 2021ஆம் ஆண்டுக்கான ‘சிறந்த புலனாய்வுக்கான மத்திய உள்துறை அமைச்சரின் பதக்கங்கள்’ 152 காவலர்களுக்கு வழங்கப்பட்டது.
- இந்த பதக்கம் 2018ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது, குற்றங்களை விசாரிப்பதில் உயர் தொழில்முறை தரங்களை ஊக்குவிப்பதற்கும், விசாரணை அதிகாரிகளின் விசாரணையில் அத்தகைய சிறப்புகளை அங்கீகரிக்கவும் இந்த பதக்கம் நோக்கம் கொண்டிருந்தது.
- இந்த விருதுகளைப் பெறும் பணியாளர்களில் 8 பேர் தமிழ்நாடு காவல்துறையைப் சேர்ந்தவர்கள்.
விருதைப் பெறுபம் தமிழ்நாடு காவலர்கள்
- சரவணன்
- அன்பரசி
- கவிதா
- ஜெயவேல்
- கலைசெல்வி
- மணிவண்ணன்
- R. சிதம்பரமுருகேசன்
- கண்மணி
SCIENCE AND TECHNOLOGY
11. Indian GSLV launch by ISRO fails
- An Indian rocket carrying a new Earth-observation satellite for the Indian Space Research Organisation (ISRO) suffered a catastrophic failure shortly after its launch.
- The launch was the 14th flight of the GSLV, India’s largest launch vehicle and the eighth of the Mark 2 version, which has an upper stage with a domestically developed cryogenic engine that uses liquid hydrogen and liquid oxygen.
- This rocket, the Mark-II version of GSLV, was last used to successfully launch GSAT-7A, a communication satellite, in December 2018.
11. இஸ்ரோவின் இந்திய ஜி.எஸ்.எல்.வி ஏவுதல் தோல்வி
- இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திற்காக (ISRO) புதிய பூமியை கண்காணிக்கும் செயற்கைக்கோளை சுமந்து சென்ற இந்திய ராக்கெட் ஏவப்பட்ட சிறிது நேரத்தில் தோல்வியை சந்தித்தது.
- இந்தியாவின் மிகப்பெரிய ஏவுகலமான ஜி.எஸ்.எல்.வி.யின் 14வது விமானமும், திரவ ஹைட்ரஜன் மற்றும் திரவ ஆக்ஸிஜன் பயன்படுத்தும் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட கிரையோஜெனிக் எஞ்சினுடன் மேல் கட்டத்தைக் கொண்ட மார்க் 2 பதிப்பில் எட்டாவது விமானமும் இந்த ஏவுதலாகும்.
- ஜி.எஸ்.எல்.வி.யின் மார்க்-2 பதிப்பை கொண்ட இந்த ராக்கெட், கடைசியாக 2018 டிசம்பரில் ஜிசாட்-7ஏ என்ற தகவல் தொடர்பு செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்த பயன்படுத்தப்பட்டது.
KNOW AN INSTITUTION
12. Small Industries Development Bank of India(SIDBI)
- Small Industries Development Bank of India(SIDBI) is the apex institution for financing, promotion and development of micro, small and medium enterprises in India.
- It was established on 2 April 1990.
- It is headquartered in Lucknow.
- Sivasubramanian Ramann is the Chairman and Managing Director of the Small Industries Development Bank of India (SIDBI).
12. இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி (SIDBI)
- இந்தியாவில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு நிதி, முன்னேற்றம் மற்றும் மேம்பாட்டிற்கான தலைமை நிறுவனமாக இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி (SIDBI) உள்ளது.
- இது 2 ஏப்ரல் 1990 அன்று நிறுவப்பட்டது.
- இதன் தலைமையகம் லக்னோவில் உள்ளது.
- சிவசுப்ரமணியன் ராமன், இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியின் (SIDBI) தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக உள்ளார்.