TNPSC Current Affairs – English & Tamil – January 25, 2021

TNPSC Aspirants,

The current Affairs Section is one of the most important topics for the upcoming TNPSC Group I, Group II/IIA, Group IV, and TNUSRB Exams.

Check today’s TNPSC Daily Current Affairs(25th January 2020) in this post.

Aspirants can expect questions from the Daily Current Affairs section in the upcoming TNPSC Exams and learning the Current Affairs section will also aid them in successfully preparing for the descriptive paper. So this process is a 2 in 1 initiative.

To make the learning more convenient, we will be providing the TNPSC Daily Current Affairs in both ENGLISH & TAMIL. This has been made in such a way that reflects the TNPSC pattern as TNPSC uses both the languages in the Question Paper and this will also make the preparations of the aspirants meaningful and will 100% fulfill the needs of the aspirants.


Download PDF – TNPSC Daily Current Affairs – English & Tamil – January 25, 2021


Download_TNPSC_Daily_CUrrent_Affairs_PDF_7th_January_2021


Tamilnadu’s mentoring concept is the best practice

  • National Health Mission selects Tamilnadu’s mentoring concept in the management of antenatal mothers as the best practice.
  • Obstetricians and gynaecologists (OGs) were included in this concept.
  • “Management of highrisk antenatal (AN) mothers during COVID19 pandemic”, was introduced by National Health Mission (NHM) Tamil Nadu.
  • It was presented at the 7th National Summit on Good Replicable Practices and Innovations in Public Health Care Systems in India.

சிறந்த நடைமுறையான தமிழ் நாட்டின் வழிகாட்டிக் கருத்தாக்கம்

  • தேசிய சுகாதார இயக்கம், கருவுற்ற தாய்மார்களை நிர்வகிப்பதில் தமிழ்நாட்டின்  வழிகாட்டிக் கருத்தாக்கத்தை சிறந்த முறையாக தேர்வு செய்துள்ளது.
  • மகப்பேறியல் நிபுணர்கள் மற்றும் மகளிர் மருத்துவர்கள் (OGs) ஆகியோர் இந்த கருத்தாக்கத்தில் சேர்க்கப்பட்டிருந்தனர்.
  • “COVID19 தொற்றின் போது அதிக ஆபத்து கொண்ட தாய்மார்கள் (AN) மேலாண்மை”, தமிழ்நாடு தேசிய சுகாதார இயக்கத்தால் (NHM) அறிமுகப்படுத்தப்பட்டது.
  • இந்தியாவில் பொது சுகாதார அமைப்புகளில் நல்ல பிரதியெடுப்பு நடைமுறைகள் மற்றும் கண்டுபிடிப்புகள் பற்றிய 7 வது தேசிய உச்சி மாநாட்டில் இது அறிமுகப்படுத்தப்பட்டது.

Washington Sundar

  • The Greater Chennai Corporation has nominated cricketer Washington Sundar as the Chennai District Election Icon for the upcoming Assembly election.
  • He will promote participatory voting and ethical voting among young voters.
  • Sundar will participate in events to be conducted in colleges as part of the OPEN (online participation of electoral network) campaign by the Corporation.

வாஷிங்டன் சுந்தர்

  • சென்னை மாநகராட்சி, கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தரை, வரும் சட்டசபை தேர்தலில் சென்னை மாவட்ட தேர்தல் தூதராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • இளம் வாக்காளர்களிடையே பங்கேற்பு வாக்களிப்பு மற்றும் நன்னெறி வாக்களிப்பை அவர் ஊக்குவிப்பார்.
  • மாநகராட்சி நடத்தும் OPEN (ஆன்லைன் மூலம் பங்கு பெறும்) பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக கல்லூரிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் சுந்தர் கலந்து  கொள்வார்.

Ranganathaswamy temple granary

  • It is located at Adhi Thiruvarangam.
  • The granary is one of the few granaries in temples in Tamil Nadu.
  • The granary was built during the reign of the Vijayanagara kings to store the paddy from the fields of the temple.
  • Inscriptions in the temple testify to the grants given by the Vijayanagara kings for the renovation of the temple tank and lands for temple employees.

ரங்கநாதசுவாமி கோயில் தானியக்கிடங்கு

  • இது ஆதித் திருவரங்கம் என்ற இடத்தில் அமைந்துள்ளது.
  • தமிழக கோவில்களில் உள்ள ஒரு சில தானியக்கிடங்குகளில் இதுவும் ஒன்று.
  • விஜயநகர மன்னர்கள் காலத்தில், கோயில் வயல்களிலிருந்து நெல் சேமித்து வைக்க, இந்த களஞ்சியம் கட்டப்பட்டது.
  • கோயில் குளம் புதுப்பிக்க மற்றும் கோயில் பணியாளர்களுக்கு வழங்கிய நிலங்கள் ஆகியவற்றிற்கு விஜயநகர மன்னர்கள் வழங்கிய நிதிகள், இக்கோவிலில் உள்ள கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.

National Girl Child Day – January 24

தேசிய பெண் குழந்தை தினம் – ஜனவரி 24


Dropping out of girl child

  • Himachal Pradesh and Delhi had the lowest dropout rate.
  • North-East and Bihar, Jharkhand, Uttar Pradesh had the highest dropout.
  • Outside Northeast, Bihar has highest dropout.
  • Among the girl children, children from SC ans ST category has shown the most dropouts.
  • Dropout was more in upper primary than the primary education.

பெண் குழந்தைகள் இடைநிற்றல்

  • இமாச்சலப் பிரதேசம் மற்றும் டெல்லியில் தான் குறைந்த இடைநிற்றல் விகிதம் இருந்தது.
  • வடகிழக்கு மற்றும் பீகார், ஜார்க்கண்ட், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் தான் அதிக அளவில் இடைநிற்றல் இருந்தது.
  • வடகிழக்கு மாநிலங்களுக்கு வெளியே, பீகாரில் அதிக இடைநிற்றல் உள்ளது.
  • பெண் குழந்தைகள் மத்தியில், பட்டியலினத்தோர் மற்றும் பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்த குழந்தைகள் மிக அதிக அளவில் இடைநிற்றல் விகித்த்தை கொண்டுள்ளன.
  • தொடக்கக் கல்வியைவிட, உயர் கல்வியில்தான் இடைநிற்றல் அதிக அளவில் இருந்தது.

Bhima Koregaon activists release

  • OCHCR (Office of the High Commissioner for Human Rights), Michelle Bachelet calls for the release of Bhima Koregaon activists atleast on bail.
  • The Bhima Koregaon case dates back to January 1, 2018, the 200th anniversary of the Bhima Koregaon battle.
  • The event was organised to celebrate the victory of the British army, which included a large number of Mahars, against Peshwa Baji Rao II’s army.
  • One person was killed and several others were injured during the 2018 event.
  • Several human rights activists were arrested during the event.
  • Responding to Ms. Bachelet, the Ministry of External Affairs in October 2020,said, “The framing of laws is obviously a sovereign prerogative.Violations of law, however, cannot be condoned under the pretext of human rights.”

பீமா கொரிகான் செயல்வீரர்கள் விடுதலை

  • OCHCR (மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் அலுவலகம்), மைக்கேல் பச்லெட், பீமா கொரிகான் செயல்பாட்டாளர்களை குறைந்தபட்சம் பிணையில் விடுதலை செய்ய அழைப்பு விடுத்துள்ளார் .
  • பீமா கோரேகான் வழக்கு, 2018 ஜனவரி 1  ஆம்  தேதி, பீமா கொரிகான் போரின் 200வது ஆண்டில் தொடங்கியது.
  • பேஷ்வா பாஜிராவின்    இரண்டாம் படைக்கு   எதிராக,  ஏராளமான  மகர்கள்அடங்கிய பிரிட்டிஷ் ராணுவத்தின் வெற்றியைக் கொண்டாடுவதற்காக இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
  • இதில் ஒருவர் பலியானார்.
  • இந்த நிகழ்வின் போது மனித உரிமை ஆர்வலர்கள் பலர் கைது செய்யப்பட்டனர்.
  • 2020 அக்டோபரில் வெளியுறவு அமைச்சகம் திருமதி பச்லெட்க்கு பதிலளிக்கையில், “சட்டங்களை இயற்றுவது என்பது ஒரு நாட்டின் இறையாண்மை யாகும். எவ்வாறெனினும், மனித உரிமைகள் என்ற சாக்குப்போக்குடன் சட்ட மீறல்களை ஏற்க முடியாது” எனக் குறிப்பிட்டது.

Sunderbans

  • The Indian Sunderbans, which covers 4,200 sq. km.
  • It also includes the Sunderban Tiger Reserve of 2,585 sq. km which is home to about 96 royal Bengal tigers (as per the last census in 2020).
  • It is a world heritage site and a Ramsar site.
  • One in three species of birds in India is found here.
  • It has 428 species of birds, says Zoological Survey of India (ZSI).
  • The year 2020 is the 125th birth anniversary year of Salim Ali, the Birdman of India.

சுந்தரவனக் காடுகள்

  • இந்திய சுந்தரவனக் காடுகள் 4,200 சதுர கி.மீ. அளவு விரிந்துள்ளன.
  • 2,585 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட சுந்தரவன புலிகள் காப்பகமும் இதில் அடங்கும். இது  சுமார் 96 ராயல் வங்காள புலிகளை க்கொண்டுள்ளது (2020 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி).
  • இது ஒரு உலக பாரம்பரியக் களமாகவும் ராம்சார் தளமாகவும் உள்ளது.
  • இந்தியாவில் உள்ள மூன்று பறவைகளில் ஒன்று இங்கு காணப்படுகிறது.
  • இதில் 428 வகையான பறவை இனங்கள் உள்ளன என்று இந்திய விலங்கியல் ஆய்வு மையம் (ZSI) கூறுகிறது.
  • 2020 ஆம் ஆண்டு இந்தியாவின் பறவை மனிதரான சலீம் அலியின் 125வது பிறந்த ஆண்டு ஆகும்.

eEPIC

  • It is the electronic versions of the elector photo identity card.
  • Electors will be able to download it.
  • The eEPIC would be a non-editable PDF version of the EPIC that can be downloaded on the phone and stored on the DigiLocker app or printed from a computer.

இ-எபிக் (eEPIC)

  • இது வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையின் மின்னணு பதிப்பு ஆகும்.
  • வாக்காளர்கள் அதை பதிவிறக்கம் செய்ய முடியும்.
  • eEPIC என்பது EPIC இன் திருத்தமுடியாத PDF பதிப்பாகும், இதை அலைபேசியில் பதிவிறக்கம் செய்து, DigiLocker ல் சேமிக்கலாம் அல்லது கணினியில் இருந்து அச்சிடப்படலாம்.

Remote voting

  • Mock trials of remote voting project will be implemented soon, said CEC, Sunil Arora.
  • The system is being developed by IIT Madras.
  • It uses blockchain for two way remote voting at designated centres.

தொலைவாக்களிப்பு

  • தொலைநிலை வாக்குப்பதிவு திட்டத்தின் பயிற்சி சோதனைகள் விரைவில் செயல்படுத்தப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா கூறியுள்ளார்.
  • இந்த முறையை ஐ.ஐ.டி.மெட்ராஸ் (IIT Madrs) உருவாக்கியுள்ளது.
  • இது குறிப்பிட்ட மையங்களில் பயன்படுத்தப்படும், கட்டச்சங்கிலி முறையை பயன்படுத்தும் இரண்டு வழி தொலை வாக்களிப்பு திட்டமாகும்.

Thailand Open Badminton

Men:

Singles                 -Vikas Axelsen                                             – Denmark

Doubles               – Lee Yang & Wang ChiLin                            – Spain

Women:

Singles                 – Carolina Marin                                              -Spain

Doubles               – Kim Soyeong and Kong Heeyong             -Korea

Mixed Doubles:

Sapsiree Taerattanachai & Dechapol Puavaranukroh         -Thailand

  1. தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்

ஆண்கள்:

ஒற்றையர் பிரிவு  -விகாஸ்  ஆக்செல்சன்              – டென்மார்க்

இரட்டையர் பிரிவு – லீ யாங் & வாங் சிலின் – ஸ்பெயின்

பெண்கள்:

ஒற்றையர் பிரிவு – கரோலினா மரின்-ஸ்பெயின்

இரட்டையர் பிரிவு –  கிம்  சோயோங்  மற்றும் காங்  ஹீயோங்        -கொரியா

கலப்பு இரட்டையர்:

சாப்சிரீ டெரட்டனாச்சி மற்றும் டெகாபோல் புவாவரானுக்ரோ -தாய்லாந்து


National Voters’ Day – January 25

  • Election Commission of India was constituted on 25th January 1950.
  • It has been approved to celebrate National Voter’s Day since 2011 and the day is celebrated in every state.
  • Accordingly, the state level function of India’s 11th National Voters Day will be held in Chennai under the chairmanship of Governor Banwarilal Purohit.

தேசிய வாக்காளர் தினம் – ஜனவரி 25

  • இந்தியாவில் தேர்தல் ஆணையம் 1950-ஆம் ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதியன்று அமைக்கப்பட்டது.
  • கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் தேசிய வாக்காளர் தினம் கொண்டாட ஒப்புதல் அளிக்கப்பட்டு அந்த தினம் ஒவ்வொரு மாநிலத்திலும் விழா கொண்டாடப்படுகிறது.
  • அதன்படி, இந்தியாவின் 11-வது தேசிய வாக்காளர் தினத்தின் மாநில அளவிலான விழா ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தலைமையில் சென்னையில் நடைபெற உள்ளது.

  • The Head of World Tamil confederation Trust Pazha Nedumaran has said that Tamil music has a unique feature that no other music in the world has.
  • On behalf of Mullivaikal Ilakkiya Muttram the Tamil Thirunal – Pongal festival was held on January
  • Pazha Nedumaran introduced the book ‘Lexicon on Tamil Music Scales’, an English translation of the book Tamil Music Grand Dictionary written by Music scholar Na. Mammathu.
  • உலக அளவில் வேறெந்த இசைக்கும் இல்லாத தனிச் சிறப்பு தமிழிசைக்கு உள்ளது என உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.
  • முள்ளிவாய்க்கால் இலக்கிய முற்றம் சார்பில் தமிழர் திருநாள் – பொங்கல் விழா ஜனவரி 24 ஆம் தேதி நடைபெற்றது.
  • இசை ஆய்வறிஞர் நா.மம்மது எழுதிய தமிழிசைப் பேரகராதி என்ற நூலின் ஆங்கில மொழியாக்கமான லெக்சிகன் ஆன் தமிழ் மியூசிக் ஸ்கேல்ஸ் என்ற நூலை பழ.நெடுமாறன் அறிமுகம் செய்து வைத்தார்.

  • The Centre has allocated additional funds of Rs.660 to Madhya Pradesh after the four reforms conditions imposed by the Centre to get special financial assistance for the states capital expenditure.
  • மாநிலங்கள் மூலதன செலவுக்கான சிறப்பு நிதியுதவியை பெற மத்திய அரசு விதித்த நான்கு சீர்திருத்த நிபந்தனைகளையும் நிறைவேற்றி முடித்த மத்திய பிரதேசத்துக்கு ரூ.660 கூடுதல் நிதியை மத்திய அரசு ஒதுக்கியது.

  • Madhavan, head of Hindustan Aircraft Manufacturing Company, said the handover of the Tejas light fighter jets, which are being manufactured under the Indian Air Force’s Rs 48,000 crore purchase agreement, will begin in March 2024.
  • The agreement between Hindustan Aeronautics Limited (HSAL) and the Indian Air Force will be formally signed in the presence of President Ram Nath Kovind at the ‘Aero India’ International Air Show on February 5.
  • இந்திய விமானப் படையின் ரூ.48,000 கோடி கொள்முதல் ஒப்பந்தத்தின் படி, தேஜஸ் இளகுரக போர் விமானங்கள் தயாரிக்கப்பட்டு வரும் 2024-ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் ஒப்படைக்கும் பணி தொடங்கும் என்று ஹிந்துஸ்தான் விமான தயாரிப்பு நிறுவன தலைவர் மாதவன் கூறினார்.
  • வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெற இருக்கும் “ஏரோ இந்தியா” சர்வதேச விமான கண்காட்சியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் முன்னிலையில் முறைப்படி ஹெஸ்ஏஎல் நிறுவனத்துக்கும் இந்திய விமான படைக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகும்.

  • The sandal paste ceremony was held on January 24, the main function of the 464th Kandoori festival of Lord Nagore Dargah.
  • The Kandoori festival of Lord Nagore, one of the world’s most famous places of worship, began with the flag hoisting ceremony on January 14.
  • The Kandoori festival is held to commemorate the death anniversary of 16th century saint Hazrath Syed Shahul Hameed Quadir Wali, who migrated from his native Manickapur near Allahabad in Uttar Pradesh and lived in Nagore till his death.
  • நாகூர் ஆண்டவர் தர்காவின் 464-ஆம் ஆண்டு கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனம் பூசும் விழா ஜனவரி 24-ஆம் தேதி நடைபெற்றது.
  • உலக புகழ்பெற்ற வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாக விளங்கும் நாகூர் ஆண்டவர் தர்காவின் கந்தூரி விழா கடந்த ஜனவரி 14-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
  • 16 ஆம் நூற்றாண்டின் துறவி ஹஸ்ரத் சையத் ஷாஹுல் ஹமீத் குவாதிர் வாலியின் மரண ஆண்டை நினைவுகூறும் விதமாக கந்தூரி திருவிழா நடைபெறுகிறது, அவர் உத்தரப்பிரதேசத்தின் அலகாபாத் அருகே தனது சொந்த ஊரான மணிக்காப்பூரிலிருந்து குடிபெயர்ந்து இறக்கும் வரை நாகூரில் வாழ்ந்தார்.

  • 32 children have been awarded the Prime Minister’s Rashtriya Bal Puraskar Award for the current year.
  •  The Ministry of Women and Child Development (MOD) has said that the award was given to 7 persons in arts and culture, 9 in the innovative category, 5 in education, 7   in sports and one in social service category.
  • Union Minister for Women and Child Development – Smriti Irani.
  • நிகழாண்டுக்கான பிரதமரின் ராஷ்ட்ரீய பால புரஸ்கார் விருது 32 சிறார்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • இதுகுறித்து மத்திய மகளிர் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘கலை-கலாசார பிரிவில் 7 பேருக்கும், புத்தாக்கப் பிரிவில் 9 பேருக்கும், கல்வி பிரிவில் 5 பேருக்கும், விளையாட்டு பிரிவில் 7 பேருக்கும், சமூக சேவை பிரிவில் ஒருவருக்கும் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • மத்திய மகளிர் குழந்தைகள் நல மேம்பாட்டு துறை அமைச்சர் – ஸ்மிருதி இரானி.

  • January 24, 1950 – The year the state of Uttar Pradesh was established.
  • January 24 is observed annually as the founding day of the state of Uttar Pradesh.
  • ஜனவரி 24, 1950 – உத்திர பிரதேச மாநிலம் நிறுவப்பட்ட ஆண்டு
  • ஆண்டுதோறும் ஜனவரி 24-ஆம் தேதி உத்தர பிரதேச மாநிலம் நிறுவப்பட்ட தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

  • Chennai’s Sandeep Kumar became the 23rd JK Tyre – FMSCI National Racing Championship in ‘LGP 4’ and Division’s Amir Syed Novis Cup.
  • 23-ஆவது ஜேகே டயர் – எஃப்எம்எஸ்சிஐ தேசிய ரேசிங் சாம்பியன்ஷிப்பில் சென்னையின் சந்தீப் குமார் ‘எல்ஜிபி 4’ பிரிவிலும், கோட்டத்தின் அமீர் சையது நோவிஸ் கோப்பை பிரிவிலும் சாம்பியன் ஆகினார்.

  • Former Sri Lanka cricketer Kumar Sangakkara has been appointed as cricket director of the IPL team Rajasthan Royal.
  • ஐபிஎல் அணியான ராஜஸ்தான் ராயஸ்ஸின் கிரிக்கெட் இயக்குனர் பதவிக்கு இலங்கை முன்னாள் வீரர் குமார் சங்ககாரா நியமிக்கப்பட்டுள்ளார்.

  • In the 65 kg category, Haryana player Rohit won the gold medal in men’s national freestyle wrestling.
  • Praveen Chahar of Delhi won the 86 kg category in the same competition.
  • ஆடவருக்கான தேசிய ஃப்ரீஸ்டைல் மல்யுத்தத்தில் 65 கிலோ பிரிவில் ஹரியானா வீரர் ரோஹித் சாம்பியன் ஆகி தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
  • அதே போட்டியில் 86 கிலோ பிரிவில் தில்லியின் பிரவீண் சாஹர் வெற்றி பெற்றார்.

Students can download the Daily TNPSC Current Affairs in English & Tamil as PDF from the links given below – TNPSC daily Current Affairs – English & Tamil – January 21, 2021. 


Download TNPSC Daily Current Affairs – PDF
25th January 2020 Download Link

Check TNPSC – Daily Current Affairs – January Month in TAMIL & English from bankersdaily from the links below. 


Read – TNPSC Daily Current Affairs – January 2021