TNPSC Current Affairs – English & Tamil – May 6, 2021

TNPSC Aspirants,

The Current Affairs Section is one of the most important topics for the upcoming TNPSC Group I, Group II/IIA, Group IV, and TNUSRB Exams.

Check today’s TNPSC Daily Current Affairs(6th May, 2021) in this post.

Aspirants can expect questions from the Daily Current Affairs section in the upcoming TNPSC Exams and learning the Current Affairs section will also aid them in successfully preparing for the descriptive paper. So this process is a 2 in 1 initiative.

To make the learning more convenient, we will be providing the TNPSC Daily Current Affairs in both ENGLISH & TAMIL. This has been made in such a way that reflects the TNPSC pattern as TNPSC uses both the languages in the Question Paper and this will also make the preparations of the aspirants meaningful and will 100% fulfill the needs of the aspirants.


Download PDF – TNPSC Daily Current Affairs – English & Tamil – May 6, 2021


TAMILNADU


1. ‘Oxygen on Wheels’ launched in Chennai

  • The Jain International Trade Organisation (JITO) along with the Greater Chennai Corporation has launched “Oxygen on Wheels”.
  • It is an initiative where buses with oxygen concentrators will be deployed outside government hospitals. Each bus can handle six patients. The facility is free for patients.

 

1. சென்னையில்ஆக்ஸிஜன் ஆன் வீல்ஸ்அறிமுகப்படுத்தப்பட்டது

  • ஜெயின் சர்வதேச வர்த்தக அமைப்பு (JITO) பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைந்து “ஆக்ஸிஜன் ஆன் வீல்ஸ்” என்ற முன்முயற்சியை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இது அரசு மருத்துவமனைகளுக்கு வெளியே ஆக்ஸிஜன் செறிவூட்டப்பட்ட பேருந்துகள் நிறுத்தப்படும் ஒரு முன்முயற்சியாகும். ஒவ்வொரு பேருந்தும் ஆறு நோயாளிகளைக் கையாள முடியும். இந்த வசதி நோயாளிகளுக்கு இலவசமாக அளிக்கப்படுகிறது.

NATIONAL


2. CCEA gives in-principle approval for strategic disinvestment and transfer of management control of IDBI Bank

  • The Cabinet Committee on Economic Affairs (CCEA) gave in-principle approval for strategic disinvestment along with the transfer of management control in IDBI Bank. LIC is the promoter of IDBI Bank with Management Control, and Government of India is the co-promoter.
  • The Government of India owns 45.48 per cent and LIC 49.24 per cent.
  • Resources through strategic disinvestment of Government equity from the transaction will be used to finance developmental programmes of the Government benefiting the citizen.

 

2. ஐடிபிஐ வங்கியின் மூலோபாய பங்குகளை விற்கவும் நிர்வாகக் கட்டுப்பாட்டை மாற்றவும் பொருளாதார விவகார அமைச்சரவைக் குழு (CCEA) கொள்கையளவில் ஒப்புதல் அளித்துள்ளது

  • பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (CCEA), ஐடிபிஐ வங்கியில் நிர்வாகக் கட்டுப்பாட்டை மாற்றுவதுடன் மூலோபாய பங்கு விற்பனைக்கும் கொள்கையளவில் ஒப்புதல் அளித்துள்ளது. எல்..சி. ஐடிபிஐ வங்கியின் மேலாண்மை கட்டுப்பாட்டாளர் மற்றும் ஐடிபிஐ வங்கியின் இந்திய அரசு இணை ஊக்குவிப்பாளர் ஆகும்.
  • ஐடிபிஐ வங்கியில் மத்திய அரசுக்கு48 சதவீதமும், எல்ஐசி 49.24 சதவீதமும் பங்கு உள்ளன.
  • அரசின் மூலோபாய பங்குகளின் மூலம் கிடைக்கும் நிதி, குடிமக்களுக்கு பயனளிக்கும் அரசின் வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதியளிக்கப் பயன்படுத்தப்படும்.

3. Cabinet approves the allocation of additional foodgrains to NFSA beneficiaries for May and June

  • The Cabinet chaired by Prime Minister Narendra Modi gave approval for allocation of additional foodgrains to all beneficiaries of the National Food Security Act for two months of May and June 2021 under Pradhan Mantri Garib Kalyan Anna Yojana. Under this scheme, 5 kilograms of rice or wheat per person per month will be given to about 80 crore beneficiaries in the country.

National Food Security Act (NFSA)

  • National Food Security Act, 2013 (NFSA) provides food and nutritional security to people.
  • This act provides subsidised food under the Targeted Public Distribution System.

 

3. தேசிய உணவுத் பயனாளிகளுக்கு மே மற்றும் ஜூன் ஆகிய இரண்டு மாதங்களுக்கு கூடுதல் உணவு தானியங்களை ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்

  • பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை, பிரதம மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் மே மற்றும் ஜூன் 2021 இரண்டு மாதங்களுக்கு தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அனைத்து பயனாளிகளுக்கும் கூடுதல் உணவு தானியங்களை ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் நாட்டில் சுமார் 80 கோடி பயனாளிகளுக்கு மாதம் ஒன்றுக்கு 5 கிலோ அரிசி அல்லது கோதுமை வழங்கப்படும்.

தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் (NFSA)

  • தேசிய உணவு பாதுகாப்பு சட்டம், 2013 (NFSA) மக்களுக்கு உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை வழங்குகிறது.
  • இச்சட்டம் இலக்கு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மானிய விலையில் உணவு வழங்குகிறது.

4. Reservation for Maratha community in education and jobs invalid, says Supreme Court

  • The Supreme Court revoked reservation for the Maratha community in education and jobs exceeding 50%. The Supreme Court said that the people from the Maratha community could not be declared as an educationally and socially backward community to bring them within the reserved category.

Indra Sawney case or Mandal Commission case:

  • In the Indra Sawney case or Mandal Commission case of 1992 verdict capped the quota for reservation at 50 per cent.

 

4. கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் மராத்திய சமூகத்தினருக்கான இட ஒதுக்கீடு செல்லாது என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது

  • கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் மராத்திய சமூகத்தினருக்கான 50%க்கும் அதிகமான இடஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. மராத்திய சமூகத்தைச் சேர்ந்த மக்களை இட ஒதுக்கீடுக்குள் கொண்டு வர, கல்வி மற்றும் சமூகத்தில் பின்தங்கிய சமூகமாக அறிவிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
  • இட ஒதுக்கீட்டின் உச்சவரம்பை 50சதவீதமாக உயர்த்திய, 1992 தீர்ப்பு மறு ஆய்வு செய்யப்பட வேண்டிய அவசியமில்லை எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
  • இந்திர சானே வழக்கு அல்லது மண்டல் கமிஷன் வழக்கு:
  • 1992ஆம் ஆண்டின் இந்திரா சானே வழக்கு அல்லது மண்டல் கமிஷன் வழக்கில் தீர்ப்பு இடஒதுக்கீட்டிற்கான உச்சவரம்பு 50 சதவீதமாக அறிவிக்கப்பட்டது.

INTERNATIONAL


5. External Affairs Minister S. Jaishankar virtually participates in G7 Foreign Ministers’ meeting

  • External Affairs Minister Dr Jaishankar participated in the G-7 Foreign Ministers’ meeting through video conference. India has been invited as a guest to the G7 Foreign Ministers’ Meeting.
  • During the meeting, it was discussed that vaccination is the only lasting solution to the COVID-19 challenge.

G7

  • G7 is an intergovernmental organisation of industrialised democracies that was formed in 1975. It includes USA, Canada, France, Germany, Japan, Italy and UK. The group meets annually to discuss the areas of common interest.
  • It became G8 after Russia joined the team in 1997. However, Russia was removed after it captured Crimea in 2014.

 

5. வெளியுறவு அமைச்சர் எஸ் G7 வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் மெய்நிகராக பங்கேற்றார்

  • G7 வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் காணொலிகாட்சி மூலம் பங்கேற்றார். G7 வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்திற்கு இந்தியா விருந்தினராக அழைக்கப்பட்டது.
  • கோவிட்-19இன் சவாலுக்கு தடுப்பூசி மட்டுமே நீடித்த தீர்வு என்று இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

G7

  • G7 என்பது 1975இல் உருவாக்கப்பட்ட தொழில்மயமாக்கப்பட்ட ஜனநாயகங்களின் அரசாங்கங்களுக்கிடையிலான அமைப்பாகும். இதில் அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், இத்தாலி மற்றும் இங்கிலாந்து அடங்கும். பொதுவான பிரச்சனைகளைப் பற்றி விவாதிக்க இக்குழு ஆண்டுதோறும் கூடுகிறது.
  • 1997இல் ரஷ்யா அணியில் சேர்ந்த பிறகு இது G8 ஆனது. இருப்பினும், 2014இல் கிரிமியாவைக் ரஷ்யா கைப்பற்றிய பின்னர், ரஷ்யா அகற்றப்பட்டது.

SCIENCE AND TECHNOLOGY


6. SpaceX’s Falcon 9 Launches 60 Starlink Satellites into orbit for high-speed internet

  • SpaceX’s Falcon 9 Launches 60 Starlink Satellites into orbit. It aims to provide high-speed internet through its Starlink mission.

Starlink mission

  • Starlink mission aims at placing a constellation of satellites in the Lower Earth orbit for high-speed internet.

 

6. ஸ்பேஸ்எக்ஸ் இன் ஃபால்கன் 9 அதிவேக இணையத்திற்காக 60 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை சுற்றுப்பாதையில் ஏவியுள்ளது

  • ஸ்பேஸ்எக்ஸ்இன் ஃபால்கன் 9, 60 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை சுற்றுப்பாதையில் செலுத்தியுள்ளது. இது ஸ்டார்லிங்க் திட்டத்தின் மூலம் அதிவேக இணையத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஸ்டார்லிங்க் திட்டம்

  • ஸ்டார்லிங்க் திட்டம் அதிவேக இணையத்திற்காக கீழ் பூமி சுற்றுப்பாதையில் செயற்கைக்கோள்களின் விண்மீன் கூட்டத்தை வைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

REPORTS AND INDICES


7. ADR report shows that the new legislative assembly of Tamil Nadu will have more MLAs facing criminal cases

  • Association for Democratic Reforms (ADR) analysis shows the age-group, wealth, education and background of criminal cases among the new MLAs of Tamil Nadu.

Background of criminal cases among the new MLAs:

  • According to the analysis, 34% of the elected MLAs were facing criminal cases in 2016 and it increased to 60% in 2021. 134 MLAs elected in 2021 faced criminal cases, of whom 57 had criminal cases for offences of a serious nature. ADR’s analysis included only 224 of the 234 MLAs due to lack of availability of proper data.

Wealth:

  • More than 85% of the new MLAs are crorepathis compared to the 76% in 2016. The analysis showed that the average worth of assets of MLAs increased by nearly 50% from Rs. 8.21 crores in 2016 to Rs. 12.27 crores in 2021.

Education:

  • More than 60% of the newly elected MLAs had atleast completed diploma or degree. This election also saw a marginally higher number of graduates entering the Assembly, compared to 2016.

Age-group:

Around 65% of the elected candidates were aged 60 or above and only 6% were below 40.

 

7. தமிழ்நாடு புதிய சட்டமன்றத்தில் குற்ற வழக்குகளை எதிர்கொள்ளும் எம்.எல்..க்கள் அதிகமாக இருப்பார்கள் என்று ADR அறிக்கை தெரிவிக்கிறது

  • ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR) வெளியிட்டுள்ள அறிக்கை, தமிழ்நாட்டின் புதிய எம்.எல்.ஏ.க்களின் வயது, சொத்து மதிப்பு, கல்வி மற்றும் குற்ற வழக்குகளின் பின்னணியைக் காட்டுகிறது.

புதிய எம்.எல்..க்கள் மத்தியில் குற்ற வழக்குகளின் பின்னணி:

  • இந்த அறிக்கையின்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் 34% பேர் 2016இல் குற்ற வழக்குகளை எதிர்கொண்டனர், இது 2021இல் 60%ஆக அதிகரித்துள்ளது. 2021இல் தேர்ந்தெடுக்கப்பட்ட 134 எம்.எல்..க்கள் குற்ற வழக்குகளை எதிர்கொண்டனர், அவர்களில் 57 பேர் கடுமையான குற்றங்களுக்காக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். ADR அறிக்கையி சரியான தரவுகள் கிடைக்காததால் 234 எம்.எல்.ஏ.க்களில் 224 பேர் மட்டுமே ஆய்வு செய்யப்பட்டனர்.

சொத்து மதிப்பு:

  • 2016ஆம் ஆண்டின் 76% உடன் ஒப்பிடுகையில் புதிய எம்.எல்.ஏ.க்களில் 85%க்கும் அதிகமானவர்கள் கோடீஸ்வரர்கள் ஆவார்கள். 2016ஆம் ஆண்டு21 கோடி ரூபாயாக இருந்த எம்.எல்..க்களின் சராசரி சொத்து மதிப்பு 2021இல் ரூ.12.27 கோடியாக, கிட்டத்தட்ட 50% அதிகரித்துள்ளது என்று அறிக்கை காட்டியது.

கல்வி:

  • புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் 60%க்கும் அதிகமானவர்கள் குறைந்தபட்சம் பட்டயப்படிப்பு அல்லது பட்டப்படிப்பு முடித்திருந்தனர். இந்த தேர்தலில் 2016 உடன் ஒப்பிடுகையில், ஓரளவிற்கு அதிக எண்ணிக்கையிலான பட்டதாரிகள் சட்டமன்றத்தில் நுழைந்தனர்.

வயது:

  • தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களில் சுமார் 65% பேர் 60 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் மற்றும் 6% பேர் மட்டுமே 40 வயதுக்கும் குறைவாக இருந்தனர்.

8. S&P reduced India’s GDP growth forecast to 9.8% for FY22

  • S&P Global Ratings reduced India’s GDP growth forecast for the current financial year to 8 per cent due to second wave of COVID-19.
  • The rating was earlier pegged at 11% on account of a fast economic reopening and fiscal stimulus. Lower consumption will mean less hiring, lower wages, and a second hit to consumption.

S&P Global Ratings

  • S&P Global Ratings is a US-based rating agency.

 

8. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக் கணிப்பை 22 நிதியாண்டில் 9.8% ஆக S&P குறைத்துள்ளது

  • கோவிட்-19இன் இரண்டாவது அலை காரணமாக நடப்பு நிதியாண்டிற்கான இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக் கணிப்பை S&P குளோபல் மதிப்பீடு 8 சதவீதமாக குறைத்துள்ளது.
  • ஒரு விரைவான பொருளாதார எழுச்சி மற்றும் நிதி ஊக்கம் காரணமாக இந்த மதிப்பீடு முன்னதாக 11% ஆக இருந்தது. குறைந்த நுகர்வு என்பது குறைந்த பணியமர்த்தல், குறைந்த ஊதியங்கள் மற்றும் மீண்டும் குறைந்த நுகர்வுக்கு வழி வகுக்கும்.

S&P குளோபல் மதிப்பீடு

  • S&P குளோபல் மதிப்பீடு என்பது அமெரிக்காவை தளமாகக் கொண்ட மதிப்பீட்டு நிறுவனம் ஆகும்.

AWARDS AND RECOGNITIONS


9. ‘Jungle Cry’ Wins Best Film Award at Dadasaheb Phalke International Film Festival 2021

  • ‘Jungle Cry’ won the Best Film Award at the 11th Dadasaheb Phalke International Film Festival 2021. It was directed by Sagar Ballary.

‘Jungle Cry’

  • ‘Jungle Cry’ filmed the struggle of twelve underprivileged tribal children of Kalinga Institute of social science (KISS) who won the World Rugby Championship in 2007.

Dadasaheb Phalke International Film Festival

  • Dadasaheb Phalke International Film Festival is an annual event to appreciate the talents in the film industry. It is India’s only independent film festival.

 

9. தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழா 2021இல்ஜங்கிள் க்ரைசிறந்த திரைப்பட விருதை வென்றது

  • ஜங்கிள் க்ரை 11 வது தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழா 2021இல் சிறந்த திரைப்பட விருதை வென்றது. இதை சாகர் பல்லரி இயக்கியுள்ளார்.

ஜங்கிள் க்ரை

  • 2007ஆம் ஆண்டில் உலக ரக்பி சாம்பியன்ஷிப்பை வென்ற கலிங்கா சமூக அறிவியல் நிறுவனத்தின் (KISS) பன்னிரண்டு பின்தங்கிய பழங்குடி குழந்தைகளின் போராட்டத்தை ‘ஜங்கிள் க்ரை’ படம்பிடித்தது.

தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழா

  • தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழா என்பது திரைப்படத் துறையில் உள்ள திறமைகளைப் பாராட்டும் வருடாந்திர நிகழ்வாகும். இது இந்தியாவின் ஒரே சுயாதீன திரைப்பட விழா ஆகும்.

PERSONS IN NEWS


10. The first Vice Chancellor of the Law University Prof. P. Nagabhushanam passes away

  • Professor P. Nagabhushanam, the first Vice-Chancellor of Tamil Nadu Law University, died in Chennai at the age of 78 due to COVID-19. The Tamil Nadu Dr. Ambedkar Law University was established in 1997. Professor P. Nagabhushanam was appointed as the first Vice Chancellor and held the post till 2000

 

10. சட்டப் பல்கலைகழகத்தின் முதல் துணைவேந்தர் பேராசிரியை பி.நாகபூஷணம் காலமானார்

  • தமிழ்நாடு சட்டப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தரான பேராசிரியை பி. நாகபூஷணம் கோவிட்-19 பாதிப்பால் தனது 78 வயதில் சென்னையில் காலமானார்.
  • தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் 1997இல் தொடங்கப்பட்டது. முதல் துணைவேந்தராக பேராசிரியை பி. நாகபூஷணம் நியமிக்கப்பட்டு 2000-ம் ஆண்டு வரை அப்பதவியில் இருந்தார்

11. Former Union Minister Chaudhary Ajit Singh dies at the age of 82 

  • Former Union Minister Chaudhary Ajit Singh dies at the age of 82 due to COVID-19. He was the Chief of Rashtriya Lok Dal. Chaudhary Ajit Singh is the son of former Prime Minister Chaudhary Charan Singh.

 

11. முன்னாள் மத்திய அமைச்சர் சவுத்ரி அஜித் சிங் தனது 82வது வயதில் மரணமடைந்தார்

  • முன்னாள் மத்திய அமைச்சர் சவுத்ரி அஜித் சிங் கோவிட்-19 காரணமாக தனது 82 வது வயதில் காலமானார். அவர் ராஷ்ட்ரிய லோக் தளத்தின் தலைவராக இருந்தார். சவுத்ரி அஜித் சிங் முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங்கின் மகன் ஆவார்.

IMPORTANT DAYS


12. International No Diet Day – 6 May

  • International No Diet Day is celebrated annually on 6 May to commemorate the importance of body acceptance and diversity, irrespective of types and size.
  • It is also a day to raise awareness about various dieting disorders such as anorexia and bulimia.
  • International No Diet Day was initiated by Mary Evans Young, who is the director of the British anti-diet movement ‘Diet Breakers’ in 1992.

 

12. சர்வதேச நோ டயட் தினம் – 6 மே

  • சர்வதேச நோ டயட் தினம் ஆண்டுதோறும் 6 மே அன்று உடல்வகை மற்றும் அளவு எதுவாக இருந்தாலும் அதனை ஏற்றுக் மற்றும் அதன் பன்முகத்தன்மையின் முக்கியத்துவத்தை நினைவுகூரும் வகையில் கொண்டாடப்படுகிறது.
  • பசியற்ற தன்மை (அனோரெக்சியா) மற்றும் புலிமியா போன்ற பல்வேறு உணவுக் கோளாறுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான ஒரு நாளாக இந்த தினம் கொண்டாடப்படுகிறது.
  • சர்வதேச நோ டயட் தினம் பிரிட்டிஷ் டயட் எதிர்ப்பு இயக்கமான டயட் பிரேக்கர்ஸ்‘ இன் இயக்குனரான மேரி ஈவான்ஸ் யங் என்பவரால் 1992இல் தொடங்கப்பட்டது.

Students can download the Daily TNPSC Current Affairs in English & Tamil as PDF from the links given below – TNPSC daily Current Affairs – English & Tamil – May 6, 2021. 


Download TNPSC Daily Current Affairs – PDF
6th May, 2021 Will be Available soon

Check TNPSC – Daily Current Affairs – May Month in TAMIL & English from bankersdaily from the links below. 


Read – TNPSC Daily Current Affairs – May 2021