TNPSC Current Affairs – English & Tamil – January 27, 2021

TNPSC Aspirants,

The current Affairs Section is one of the most important topics for the upcoming TNPSC Group I, Group II/IIA, Group IV, and TNUSRB Exams.

Check today’s TNPSC Daily Current Affairs(25th January 2020) in this post.

Aspirants can expect questions from the Daily Current Affairs section in the upcoming TNPSC Exams and learning the Current Affairs section will also aid them in successfully preparing for the descriptive paper. So this process is a 2 in 1 initiative.

To make the learning more convenient, we will be providing the TNPSC Daily Current Affairs in both ENGLISH & TAMIL. This has been made in such a way that reflects the TNPSC pattern as TNPSC uses both the languages in the Question Paper and this will also make the preparations of the aspirants meaningful and will 100% fulfill the needs of the aspirants.


Download PDF – TNPSC Daily Current Affairs – English & Tamil – January 25, 2021


Download_TNPSC_Daily_CUrrent_Affairs_PDF_7th_January_2021


Dhannipur Mosque Project

  • It is located in Uttar Pradesh.
  • The project is being carried on the plot allotted by the Uttar Pradesh government on the directions of the Supreme Court in the Babri Masjid-Ram Janmabhoomi case.
  • Indo-Islamic Cultural Foundation (IICF) overseed the construction of the mosque.
  • The project is divided into three parts
  1. A Mosque based on a modern design.
  2. A Multispeciality 200-bed hospital and community kitchen.
  3. An IndoIslamic Cultural Research Centre.

தானிபூர் பள்ளிவாசல் திட்டம்

  • இது உத்தரப் பிரதேசத்தில் அமைந்துள்ளது.
  • பாபர் மசூதி இடிப்பு ராம ஜென்ம பூமி வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி உத்தரப்பிரதேச அரசு ஒதுக்கிய இடத்தில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
  • இந்திய-இஸ்லாமிய கலாச்சார அறக்கட்டளை (IICF) இப்பள்ளிவாசல் கட்டுமானத்தை மேற்பார்வையிடுகிறது.
  • இத்திட்டம் மூன்று பகுதிகளாகபிரிக்கப்பட்டுள்ளது.
  1. நவீன வடிவமைப்பை அடிப்படையாகக் கொண்ட பள்ளிவாசல்.
  2. 200 படுக்கை கொண்ட ஒரு பன்முகத்தன்மை மருத்துவமனை மற்றும் சமுதாய சமையலறை.
  3. ஒரு இந்திய-இஸ்லாமிய கலாச்சார ஆராய்ச்சி மையம்.

Anna Gallantry Awards

  • ‘Anna Medal for Gallantry’ is awarded by the Government of Tamil Nadu for Civilians/Government Servants for their conspicuous acts of gallantry in saving life, property, etc.
  • The applicants belonging to Tamil Nadu alone are eligible for this award.
  • Six medals on average, with three (3) medals for the general public and three (3) for Government servants will be awarded in a year.
  • There is no age limit for receipt of the medal.
  • This award consists cheque for Rs.1,00,000 (one lakh), a medal worth Rs.9000, and a citation.
  • Recipients of 2020
Recipient Profession
P.Mullai Schoolteacher
A. Prakash Forest veterinary assistant surgeon
J. Suresh Loco pilot of Vaigai Express
R. Pugazendiran Cab driver

 

  1. வீரதீரச் செயலுக்காக அண்ணா விருது
  • உயிர், உடைமைகள் போன்றவற்றைக் காப்பாற்றுவதில் வீரதீரச் செயல்களுக்காக பொதுமக்கள் / அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு ‘வீரதீரச் செயலுக்காக’ அண்ணா பதக்கம் வழங்கப்படுகிறது.
  • தமிழகத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் மட்டுமே இந்த விருதுக்கு தகுதியானவர்கள்.
  • சராசரியாக ஆறு பதக்கங்கள், பொது மக்களுக்கு மூன்று (3) பதக்கங்களும், அரசு ஊழியர்களுக்கு மூன்று (3) பதக்கங்களும் ஓராண்டில் வழங்கப்படும்.
  • பதக்கம் பெற வயது வரம்பு இல்லை.
  • இந்த விருதில் ரூ.1,00,000 (ஒரு லட்சம்) காசோலை, ரூ.9000 மதிப்புள்ள பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் ஆகியவை அடங்கும்.
  • 2020ம் ஆண்டு விருது பெறுபவர்கள்
பெறுநர் தொழில்
ப.முல்லை பள்ளி ஆசிரியர்
ஏ. பிரகாஷ் வன கால்நடை உதவி மருத்துவர்
ஜே.சுரேஷ் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் ஓட்டுனர்
ஆர். புகழேந்திரன் வண்டி ஓட்டுனர்

Gandhi Adigal Police Medal

  • The medal is given to the Tamil Nadu police, who have undertaken outstanding work in curtailing illicit liquor.
  • The award carries a sum of ₹40,000.
  • Receipients of 2020
Receipient Profession Place
T. Magudeeswari Inspector of Prohibition Enforcement Wing St. Thomas Mount
N. Selvaraju Subinspector of the Central Investigation Unit Salem
S. Shanmuganathan Head constable Srivilliputhur Taluk police station in Virudhunagar district
S. Rajasekaran Head constable Kilkodungalur police station in Tiruvannamalai district

காந்தி அடிகள் காவலர் பதக்கம்

  • கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்ட தமிழக போலீசாருக்கு இந்த பதக்கம் வழங்கப்படுகிறது.
  • இந்த விருதின் மதிப்பு 40,000 ரூபாய் ஆகும்.
  • 2020ம் ஆண்டு விருது பெறுபவர்கள்
பெறுநர்
பணி
இடம்
டி.மகுடீஸ்வரி
மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆய்வாளர்
பரங்கிமலை
என். செல்வராஜூ
மத்திய புலனாய்வு பிரிவு துணை ஆய்வாளர்
சேலம்
எஸ். சண்முகநாதன்
தலைமைக் காவலர்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர்
 தாலுகா காவல் நிலையம்
எஸ். ராஜசேகரன்
தலைமைக் காவலர்
திருவண்ணாமலை மாவட்டம், 
கீழ்கொடுங்கலூர் 
காவல் நிலையத்தில்

Top Police Stations in Tamil Nadu

  • The following police stations has been selected as the top police stations of Tamil Nadu in 2020.
  1. Salem town police station
  2. Tiruvannamalai town police station
  3. Kotturpuram in Chennai police station

தமிழ்நாட்டின் முதன்மை காவல் நிலையங்கள்

  • 2020ஆம் ஆண்டின் தமிழகத்தின் முதன்மை காவல் நிலையங்களாக கீழ்க்கண்ட காவல் நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
  1. சேலம் டவுன் காவல் நிலையம்
  2. திருவண்ணாமலை டவுன் காவல் நிலையம்
  3. சென்னை கோட்டூர்புரம் காவல் நிலையம்

Kottai Ameer Award

  • Kottai Ameer was a person who stood for the cause of Communal Harmony and was killed by terrorists.
  • This award is presented in the memory of Kottai Ameer by The Government of Tamil Nadu to a person who has done outstanding services to promote Communal harmony in Tamil Nadu.
  • This is awarded by the Hon’ble Chief Minister during the Republic Day Celebrations.
  • The award consists of a medal, a Demand Draft of Rs.25,000/- and a Certificate.
  • There is no age limit for the award.
  • Recipient of 2020
  1. K.A. Abdul Jabbar

கோட்டை அமீர் விருது

  • மத நல்லிணக்கத்திற்காகப் போராட்டம் நடத்தி, பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டவர் கோட்டை அமீர் ஆவார்.
  • கோட்டை அமீரின் நினைவாக தமிழகத்தில் மத நல்லிணக்கத்தை மேம்படுத்த அரும்பணியாற்றிய ஒருவருக்கு தமிழக அரசு இந்த விருதை வழங்கி வருகிறது.
  • குடியரசு தின விழாவில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் இந்த விருது வழங்கப்படுகிறது.
  • இவ்விருது பதக்கம், ரூ.25,000/- வரைவோலை மற்றும் சான்றிதழ் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.
  • இவ்விருதுக்கு வயது வரம்பு இல்லை.
  • 2020ம் ஆண்டு விருது பெறுபவர்
  1. கே.ஏ. அப்துல் ஜாப்பர்

Guiseppe Conte

  • Italian Prime Minister Guiseppe Conte Resigned from the post.
  • He became the Prime Minister in 2019.
  • President of Italy – Sergio Mattarella.
  • Italy was the first European country to face the full force of the Covid 19 pandemic.
  • The Prime Minister survived a vote of confidence in Parliament but failed to secure an overall majority in the Senate.

குசுப்பே கான்டே (Guiseppe Conte)

  • இத்தாலிய பிரதமர் குசுப்பே கான்டே தன்பதவியை ராஜினாமா செய்தார்.
  • 2019-ம் ஆண்டு அவர் பிரதமரானார்.
  • இத்தாலியின் ஜனாதிபதி – செர்ஜியோ மட்டாரெல்லா(Sergio Mattarella).
  • கோவிட் 19ன் முழுவீச்சையும் எதிர்கொண்ட முதல் ஐரோப்பிய நாடு இத்தாலி.
  • இவர் நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றும், மேலவையில் (செனட்) பெரும்பான்மை பெறத் தவறிவிட்டார்.

India’s growth projection by International Monetary Fund (IMF)

  • According to IMF, in 2020 China is the only major country which registered a positive growth rate of 2.3%.
  • India’s growth is projected to 11.5% in 2021.
  • This makes India, the only major economy to register double digit growth in the year 2021 amidst the COVID19.
  • This has reflected a rebound in the economy, which is estimated to have contracted by 8% in 2020 due to the pandemic.
  • Growth projection of 2021
  1. India – 11.5%
  2. China – 8.1%
  3. Spain – 5.9%
  4. France – 5.5%
  • Growth projection of 2022
  1. India – 6.8%
  2. China – 5.6%.
  • By 2022 end, India’s GDP is expected to be below 9% of projected pre-pandemic level.

IMF Facts

  • IMF was established in 1945.
  • Headquarters: Washington D.C
  • It consists of 189 members.
  • It was formed in 1944 at Bretton Woods Conference.
  • IMF Managing Director – Kristalina Georgieva
  • IMF Chief Economist – Gita Gopinath.

சர்வதேச நாணய நிதியம் (IMF)-ன் இந்தியாவின் வளர்ச்சி கணிப்பு

  • சர்வதேச நாணய நிதியத்தின் படி, 2020 இல் சீனா மட்டுமே 2.3% சாதகமான வளர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்த ஒரே பெரிய நாடு ஆகும்.
  • 2021-ல் இந்தியாவின் வளர்ச்சி 11.5% ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
  • இது COVID19 மத்தியில் 2021 ஆம் ஆண்டில் இரட்டை இலக்க வளர்ச்சிப்பதிவு செய்த ஒரே பெரிய பொருளாதாரமாக இந்தியாவை ஆக்குகிறது.
  • இது தொற்று நோயின் காரணமாக 2020 இல் 8% சுருங்கும் என மதிப்பிடப்பட்ட பொருளாதாரத்தின் மீட்சியை பிரதிபலித்தது.
  • 2021 ஆம் ஆண்டின் வளர்ச்சி கணிப்பு
  • 1. இந்தியா      – 11.5%
  • 2. சீனா         – 8.1%
  • 3. ஸ்பெயின்    – 5.9%
  • 4. பிரான்ஸ்      – 5.5%
  • 2022 ஆம் ஆண்டின் வளர்ச்சி கணிப்பு
  • 1.இந்தியா – 6.8%
  • 2.சீனா   – 5.6%.
  • 2022 ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது நோய்த்தொற்றுக்கு முந்தைய நிலையில் 9%க்கும் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச நாணய நிதியத்தின் குறிப்புகள்

  • 1945ஆம் ஆண்டு சர்வதேச நாணய நிதியம் நிறுவப்பட்டது.
  • தலைமையகம்: வாஷிங்டன் D.C
  • இதில் 189 உறுப்பினர்கள் உள்ளனர்.
  • இது 1944 இல் பிரெட்டன் வூட்ஸ் மாநாட்டில் உருவாக்கப்பட்டது.
  • சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக பணிப்பாளர்-கிறிஸ்டலினா ஜார்ஜியேவா
  • சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணர் – கீதா கோபிநாத்.

Economic Outlook Survey – FICCI ( Federation of Indian Chambers of Commerce and Industries)

  • It is the annual median growth forecast by the industry body is based on responses from leading economists representing industry, banking and financial services sectors.
  • India’s GDP is expected to contract by 8% in 2020 -21.
  • The median growth forecast for agriculture and allied activities has been pegged at 3.5% for 2020-21.
  • Higher rabi acreage, good monsoons, higher reservoir levels and strong growth in tractor sales indicate continued sustainability in the agri sector.
  • Some of the contact intensive service sectors like tourism, hospitality, entertainment, education, and health sector are yet to be normal.
  • The quarterly median forecasts indicate GDP growth to contract by 1.3% in the third quarter of 2020-21.
  • The growth is expected to be positive by the fourth quarter with a projection of 0.5% growth.

பொருளாதார அவுட்லுக் சர்வே – FICCI ( இந்திய வர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்பு)

  • இது தொழில்துறை, வங்கி மற்றும் நிதிசேவைகள் துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னணி பொருளாதார நிபுணர்களின் பதில்களை அடிப்படையாகக் கொண்ட தொழில்துறை அமைப்பின் ஆண்டு சராசரி வளர்ச்சி கணிப்பு ஆகும்.
  • 2020 -21-ல் இந்தியாவின் வளர்ச்சி 8% சுருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • வேளாண்மை மற்றும் அது சார்ந்த செயல்பாடுகளுக்கான 2020-21ஆம் ஆண்டிற்கான சராசரி வளர்ச்சி கணிப்பு 3.5% ஆக உயர்ந்துள்ளது.
  • ராபி பயிரிடல் உயர்வு, நல்ல பருவமழை, அதிக நீர்த்தேக்க அளவு மற்றும் டிராக்டர் விற்பனையில் வலுவான வளர்ச்சி ஆகியவை வேளாண் துறையில் தொடர்ந்து நிலைத்தன்மையைக் காட்டுகின்றன.
  • சுற்றுலா, விருந்தோம்பல், பொழுதுபோக்கு, கல்வி மற்றும் சுகாதாரத் துறை போன்ற தொடர்பு சேவைத் துறைகள் இன்னும் இயல்புநிலைக்கு வரவில்லை.
  • காலாண்டு சராசரி கணிப்புகள் 2020-21 இன் மூன்றாவது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 1.3% சுருங்குவதைக் குறிக்கின்றன.
  • இந்த வளர்ச்சி 4-வது காலாண்டில் 0.5% வளர்ச்சியுடன் சாதகமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Prasanta Dora

  • He was a former Indian football goalkeeper.
  • Prasanta made his national debut in 1999 against Thailand in the Olympic qualifiers.
  • He also played for the big three clubs of Kolkata football.
  • He passed away on 26/1/2021.
  • He battled with ‘Hemophagocytic lymphohistiocytosis’, a rare blood disease.
  • He had earned five international caps.
  • Prasanta also represented Bengal in Santosh Trophy.

Hemophagocytic lymphohistiocytosis (HLH)

  • It is a severe systemic inflammatory syndrome that can be fatal.
  • It is a rare blood disease.
  • It is of two types – Primary and Secondary.

Primary HLH

  • HLH that occurs due to specific genetic defects is called Primary HLH.
  • Primary HLH is also sometimes called Familial HLH.
  • If not detected and treated, primary HLH is usually fatal, typically within a few months.
  • Even with treatment, the prognosis is sometimes only a few years, unless a bone marrow transplant can be successfully performed.

Secondary HLH

  • This causes a strong activation of the immune system, such as infection or cancer.
  • This is called Secondary HLH.
  • If secondary HLH is detected promptly and treated aggressively, the prognosis may be better.

பிரசாந்த டோரா

  • அவர் முன்னாள் இந்திய கால்பந்து கோல்கீப்பர் ஆவார்.
  • 1999-ல் ஒலிம்பிக் தகுதிச் சுற்றில் தாய்லாந்திற்கு எதிராக பிரசாந்த் அறிமுகமானார்.
  • கொல்கத்தா கால்பந்து அணியின் பெரிய மூன்று கிளப்களிலும் அவர் விளையாடியுள்ளார்.
  • அவர் 26-1-2021 அன்று காலமானார்.
  • அவர் ‘ஹீமோபாகோசைடிக் லிம்போஹிஸ்டியோசைடோசிஸ்’ என்ற அரிய இரத்த நோயுடன் போராடினார்.
  • அவர் ஐந்து சர்வதேச தொப்பிகளை வென்றுள்ளார்.
  • சந்தோஷ் டிராபியில் வங்காளத்திற்காக பிரசாந்த் விளையாடினார்.

ஹீமோபாகோசைடிக் லிம்போஹிஸ்டியோசைடோசிஸ் (HLH)

  • இது ஒரு கடுமையான அமைப்பு அழற்சி நோய்க்குறியாகும், இது அபாயகரமானதாக இருக்கலாம்.
  • இது ஒரு அரிதான இரத்த நோய்.
  • இது இரண்டு வகைப்படும் – முதன்மை மற்றும் இரண்டாம் நிலை.

முதன்மை HLH

  • குறிப்பிட்ட மரபணு குறைபாடுகளால் ஏற்படும் HLH, முதன்மை HLH எனப்படும்.
  • முதன்மை HLH, சில நேரங்களில் ஃபேமிலியல் HLH என்றும் அழைக்கப்படுகிறது.
  • கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சை அளிக்காவிட்டால், முதன்மை HLH பொதுவாக ஒரு சில மாதங்களில், பொதுவாக மரணம் ஏற்படுத்தும் அளவிற்கு அபாயகரமானது.
  • சிகிச்சை பலனும் ஒரு சில ஆண்டுகள் மட்டுமே. எலும்பு மஜ்ஜை மாற்று வெற்றிகரமாக செய்யப்பட்டால் காப்பாற்ற முடியும்.

இரண்டாம் நிலை HLH

  • இது நோய் எதிர்ப்பு அமைப்பின் வலுவான செயல்படுதல் ஆகும், அதாவது தொற்று அல்லது புற்றுநோய்.
  • இது இரண்டாம் நிலை HLH எனப்படுகிறது.
  • இரண்டாம் நிலை HLH உடனடியாக கண்டறியப்பட்டு, சிகிச்சை அளித்தால், மீட்சி சிறப்பாக இருக்கலாம்.

The Rashtriya Kamdhenu Aayog (RKA)

  • It is a permanent apex advisory body.
  • It was constituted in 2019.
  • It advices the Central Government in the programmes for conservation, sustainable development and genetic upgradation of indigenous breeds of cows.
  • It works under the Ministry of Fisheries, Animal Husbandry and Dairying.
  • It is a part of Rashtriya Gokuk Mission.

ராஷ்ட்ரிய கம்தேனு ஆயோக் (RKA)

  • இது ஒரு நிரந்தர தலைமை ஆலோசனை அமைப்பாகும்.
  • இது 2019 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது.
  • இது, உள்நாட்டு பசுக்களின் பாதுகாப்பு, நீடித்த வளர்ச்சி மற்றும் மரபியல் மேம்பாடு ஆகிய திட்டங்களில் மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்குகிறது.
  • இது மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.
  • இது ராஷ்ட்ரிய கோகுல் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

Opening of Jayalalithaa Memorial

  • The inauguration of former Chief Minister Jayalalithaa’s memorial at Marina Beach in Chennai will be held on January 27.
  1. ஜெயலலிதா நினைவிடம் திறப்பு
  • சென்னை மெரீனா கடற்கரையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழா ஜனவரி 27 அன்று நடைபெறவுள்ளது.

Guru Pushyam Festival

  • Guru Pushyam Festival at Sriperumbudur Adikesava Perumal Temple was held on January 26 at Ramanujar Veedhi ula at Golden Palanquin.
  • Gurupushyam is celebrated in this temple on the day of Thaipusam (Thai Pushyam), the day on which the idol of Ramanujar is consecrated, and the two days preceding it.

குரு புஷ்யம் விழா

  • ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் குரு புஷ்யம் விழா ஜனவரி 26 அன்று தங்கப் பல்லக்கில் ராமானுஜர் வீதிஉலா நடைபெற்றது.
  • இக்கோயிலில் ராமானுஜரின் விக்ரகத்தை பிரதிஷ்டை செய்த தினமான தைப்பூசம் (தை புஷ்யம்) தினத்தன்றும், அதற்கு முந்தைய இரண்டு நாள்களும் குருபுஷ்யம் விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

  • Republic Day was celebrated on January 26 at Ripon Palace on behalf of The Corporation of Chennai. Commissioner G. Prakash hoisted the national flag and paid his respects.
  • பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் ரிப்பன் மாளிகையில் குடியரசு தினவிழா ஜனவரி 26 கொண்டாடப்பட்டது. இதில் ஆணையர் கோ.பிரகாஷ் தேசிய கோடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

 Padma Shri Award for innovation in Puppetry

  • Kesavasamy, a puppet artist from Karaikal, has received the Padma Shri award for puppetry.

பொம்மலாட்டத்திற்கான பத்மஸ்ரீ விருது

  • காரைக்காலை சேர்ந்த பொம்மலாட்டக் கலைஞர் கே.கேசவசாமிக்கு – பொம்மலாட்டத்திற்கான பத்மஸ்ரீ விருது கிடைத்துள்ளது.

Padma Awards

  • Late film playback singer and actor SP Balasubramaniam has received the Padma Vibhushan award.

Padma Shri Awards

Indian women’s basketball team president Anita Baldurai
Villisai vendhar from Nellai Subbu Arumugam
Debate Solomon Papaiya
Agri farmer in the age of 103 Pappammal
Musician Bombay Jayashree
Late Painter K.C. Sivasankar
Social Worker Marachi Subburaman
Medical service at low cost Late Dr. Thiruvenkatam Veeraraghavan
Businessman Sridhar vembu
Founder of Shanti Trust Subramanian
  • Similarly, Havildar Palani of Ramanathapuram district who died in an enemy attack while engaged in the country’s security mission has been awarded the Vir Chakra Award.

பத்ம விருதுகள்

  • மறைந்த திரைப்பட பின்னணிப் பாடகரும் நடிகருமான ஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு – பத்ம விபூஷண் விருது கிடைத்துள்ளது.

பத்மஸ்ரீ விருதுகள்

இந்திய மகளிர் கூடைப் பந்தாட்ட அணியின் தலைவர் அனிதா பால்துரை
நெல்லையை சேர்ந்த வில்லிசை வேந்தர் சுப்பு ஆறுமுகம்
பட்டிமன்றம் சாலமன் பாப்பையா
103 வயது முதிர்விலும் விவசாயம் செய்ததற்காக பாப்பம்மாள்
இசைக் கலைஞர் பாம்பே ஜெயஸ்ரீ,
மறைந்த ஓவியர் கே சி சிவசங்கர்
சமூக சேவகர் மாராச்சி சுப்புராமன்
குறைந்த விலையில் மருத்துவ சேவை மறைந்த டாக்டர் திருவேங்கடம் வீரராகவன்
தொழிலதிபர் ஸ்ரீதர் வேம்பு
சாந்தி அறக்கட்டளை நிறுவனர் சுப்பிரமணியன்
  • இதேபோன்று நாட்டின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் போது எதிரிகளின் தாக்குதலில் மரணம் அடைந்த ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஹவில்தார் பழனிக்கு வீர் சக்ரா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

  • The film ‘Soorarai Portu’ has entered into the OSCAR Race.
  • The film was directed by Surya starrer Sudha Konkara.
  • ஆஸ்கார் விருதுக்கான பொதுப் பிரிவு போட்டியில் ‘சூரரைப் போற்று’ திரைப்படம் இடம்பெற்றுள்ளது.
  • சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் இத்திரைப்படம் வெளியானது.

Tableaux

In the line of decorative vehicles that marched explaining the functions of government departments,

Police and  Health Department First Prize
Department of Rural Development and Panchayats Second Prize
Tourism and  Information Technology Third Prize
  • The government departments used to carry out the programs during the Republic Day parade.
  • During the current year, 17 departmental vehicles were marched.

அலங்கார ஊர்திகள்

அரசுத் துறைகளின் செயல்பாடுகளை விளக்கி அணிவகுத்து வந்த அலங்கார ஊர்திகளின் வரிசையில்,

காவல், சுகாதாரத் துறை
முதல் பரிசு
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
இரண்டாவது பரிசு
சுற்றுலா, தகவல் தொழில்நுட்பவியல் ஆகிய இரு துறை
மூன்றாவது பரிசு
  • குடியரசு தின விழா அணிவகுப்பின்போது அரசுத் துறைகளில் அறிவிக்கப்படும் திட்டங்களை தாங்கி அலங்கார ஊர்திகள் அணி வகுப்பது வழக்கம்.
  • நிகழாண்டில் 17 துறைகளை சேர்ந்த ஊர்திகள் அணிவகுத்தன.

  • The Tri-colour flag was hoisted at a 131-foot pole on behalf of the BSF on the occasion of Republic Day in the Indo-Pak border in Jammu and Kashmir.
  • The flag, which was 30 feet long and 20 feet wide, was hoisted by Jamwal of the BSF.
  • ஜம்மு-காஷ்மீரில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் குடியரசு தினத்தையொட்டி எல்லை பாதுகாப்புப் படை சார்பில் 131 அடி உயரக் கம்பத்தில் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டது.
  • 30 அடி நீளம், 20 அடி அகலம் கொண்ட அந்த பிரம்மாண்ட கொடியை பிஎஸ்எஃப் படையை சேர்ந்த ஜாம்வால் ஏற்றினார்.

  • Colonel Santosh Babu, who died in a clash with chinese army in the Kalwan Valley, was awarded the Army’s second highest award, ‘Mahavir Chakra Award’.
  • கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்தினருடனான மோதலில் வீர மரணம் அடைந்த கர்னல் சந்தோஷ் பாபுவுக்கு ராணுவத்தின் இரண்டாவது உயரிய விருதான ‘மஹாவீர் சக்ரா விருது’ அளிக்கப்பட்டுள்ளது.

  • On January 26, Kaza Kalas became the Prime Minister of Estonia, a Northeastern European country.
  • She is the first woman prime minister of Estonia.
  • வடகிழக்கு ஐரோப்பிய நாடான எஸ்டோனியா பிரதமராக கஜா கலாஸ் ஜனவரி 26 அன்று பொறுப்பேற்றார்.
  • அவர் எஸ்டோனியா நாட்டின் முதல் பெண் பிரதமர் ஆவார்.

Students can download the Daily TNPSC Current Affairs in English & Tamil as PDF from the links given below – TNPSC daily Current Affairs – English & Tamil – January 21, 2021. 


Download TNPSC Daily Current Affairs – PDF
27th January 2020 Download Link

Check TNPSC – Daily Current Affairs – January Month in TAMIL & English from bankersdaily from the links below. 


Read – TNPSC Daily Current Affairs – January 2021