TNPSC Current Affairs – English & Tamil – July 13, 2021

TNPSC Aspirants,

The Current Affairs Section is one of the most important topics for the upcoming TNPSC Group I, Group II/IIA, Group IV, and TNUSRB Exams.

Check today’s TNPSC Daily Current Affairs(July 13, 2021) in this post.

Aspirants can expect questions from the Daily Current Affairs section in the upcoming TNPSC Exams and learning the Current Affairs section will also aid them in successfully preparing for the descriptive paper. So this process is a 2 in 1 initiative.

To make the learning more convenient, we will be providing the TNPSC Daily Current Affairs in both ENGLISH & TAMIL. This has been made in such a way that reflects the TNPSC pattern as TNPSC uses both the languages in the Question Paper and this will also make the preparations of the aspirants meaningful and will 100% fulfill the needs of the aspirants.


Download PDF – TNPSC Daily Current Affairs – English & Tamil – July 13, 2021


TAMIL NADU


1. Megalithic full-length sword was unearthed at Mayiladumparai excavation site

  • A Megalithic full-length sword was unearthed at Mayiladumparai in Krishnagiri district.
  • This is the first time the Department of Archaeology has unearthed a full-length sword with a handle in Tamil Nadu. The length of the sword is 60 cm.
  • Tamil Nadu Minister for Archaeology: Thangam Thennarasu

 

1. மயிலாடும்பாறை அகழ்வாராய்ச்சி இடத்தில் பெருங்கற்கால முழு நீள வாள் கண்டெடுக்கப்பட்டது

  • கிருஷ்ணகிரி மாவட்டம், மயிலாடும்பாறையில் பெருங்கற்கால முழு நீள வாள் கண்டுபிடிக்கப்பட்டது.
  • தமிழ்நாட்டில் கைப்பிடியுடன் கூடிய முழு நீள வாளை தொல்லியல் துறை கண்டுபிடிப்பது இதுவே முதல் முறையாகும். இந்த வாளின் நீளம் 60 செ.மீ. ஆகும்.
  • தமிழ்நாடு தொல்லியல் துறை அமைச்சர்: தங்கம் தென்னரசு

ECONOMY


2. Reserve Bank of India introduces the RBI Retail Direct facility to facilitate investment in Government Securities by individual investors

  • Reserve Bank of India (RBI) introduced the RBI Retail Direct facility. This is a one-stop solution to facilitate investment in Government Securities (G-Sec) by individual investors. Under this facility, retail investors will have the facility to open and maintain the Retail Direct Gilt (RDG) Account with RBI.

 

2. தனிப்பட்ட முதலீட்டாளர்கள் அரசு பத்திரங்களில் முதலீடு செய்வதற்கு வசதியாக ரிசர்வ் வங்கி சில்லறை நேரடி வசதியை இந்திய ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது

  • இந்திய ரிசர்வ் வங்கி (RBI), ரிசர்வ் வங்கி சில்லறை நேரடி வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது தனிப்பட்ட முதலீட்டாளர்களால் அரசு பத்திரங்களில் (G-Sec) முதலீடு செய்ய உதவும் ஒரே இட தீர்வு ஆகும். இந்த வசதியின் கீழ், சில்லறை முதலீட்டாளர்கள் ரிசர்வ் வங்கியுடன் சில்லறை நேரடி கில்ட் (RDG) கணக்கைத் திறந்து பராமரிக்கும் வசதியைப் பெறுவார்கள்.

ECOLOGY AND ENVIRONMENT


3. Wild elephant dies of Anthrax in the Anaikatti reserve forest

  • A wild elephant had died of Anthrax in the Anaikatti reserve forest.

Anthrax:

  • The bacterium Bacillus anthracis causes Anthrax.
  • It is a zoonotic disease.
  • Anthrax spores can survive for almost 30 years.

 

3. ஆனைகட்டி காப்புக்காட்டில் ஆந்த்ராக்ஸ் நோயால் காட்டு யானை மரணமடைந்தது

  • ஆனைகட்டி காப்புக்காட்டில் ஒரு காட்டு யானை ஆந்த்ராக்ஸ் நோயால் இறந்ததுள்ளது.

அந்த்ராக்ஸ்:

  • பேசில்லஸ் ஆந்த்ராசிஸ் என்ற பாக்டீரியா ஆந்த்ராக்ஸ் நோயை ஏற்படுத்துகிறது.
  • இது விலங்கிலிருந்து மனிதனுக்குப் பரவும் நோய் ஆகும்.
  • ஆந்த்ராக்ஸ் வித்துக்கள் கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் வரை உயிரோடு இருக்கும்.

NATIONAL


4. India’s largest floating solar plant installation to date was commissioned in Simhadri Super Thermal Power Plant

  • National Thermal Power Corporation’s (NTPC) Simhadri Super Thermal Power Plant, Visakhapatnam, has commissioned a 10 MW floating solar plant, which is part of the 25 MW plant. It is India’s largest floating solar installation to date.

 

4. சிம்ஹாத்ரி சூப்பர் அனல் மின் நிலையத்தில் இன்று வரை இந்தியாவின் மிகப்பெரிய மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் நிறுவப்பட்டுள்ளது

  • விசாகப்பட்டினத்தில் உள்ள தேசிய அனல் மின் கழகத்தின் (NTPC) சிம்ஹாத்ரி சூப்பர் அனல் மின் நிலையம், அதன் 25 மெகாவாட் ஆலையின் ஒரு பகுதியாக 10 மெகாவாட் மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையத்தை நிறுவியுள்ளது. இது இன்று வரை இந்தியாவின் மிகப்பெரிய மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் ஆகும்.

5. Karnataka becomes the first in India to have a scene of crime officers

  • Karnataka police will be the first in India to have a scene of crime (SoC) They will be deployed to gather crucial and minute evidence from crime scenes.
  • The system exists in many advanced countries and is expected to detect and prevent crimes better.

 

5. இந்தியாவில் குற்றச் சம்பவ அதிகாரிகளை பெற்ற முதல் மாநிலமாகிறது கர்நாடகா

  • இந்தியாவில் குற்றச் சம்பவ (SoC) அதிகாரிகளைக் கொண்ட முதல் காவல்துறையாக கர்நாடக காவல்துறை இருக்கும். குற்றம் நடைபெட்ற இடங்களில் இருந்து முக்கியமான மற்றும் துல்லியமான ஆதாரங்களை சேகரிக்க அவர்கள் நியமிக்கப்படுவார்கள்.
  • இந்த அமைப்பு பல முன்னேறிய நாடுகளில் உள்ளது மற்றும் குற்றங்களை சிறப்பாக கண்டறிந்து தடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

INTERNATIONAL


6. 254 Indian millionaires have used ‘golden visa’ to settle in the United Kingdom

  • 254 Indian millionaires have used ‘golden visa’ to settle in the United Kingdom during 2008–2015.
  • Golden visa is given to individuals who invest a minimum 2 million pounds in the UK registered companies to live in the UK for 3 years with a 2 year extension.
  • According to the report released by a UK-based anti-corruption charity,
    • India ranks 7th in the list of people in the UK with a Golden Visa.

Top 5 countries:

  1. China
  2. Russia
  3. Hong Kong
  4. The United States
  5. Pakistan

 

6. 254 இந்திய மில்லியனர்கள் லண்டனில் குடியேறதங்க விசாவை’ பயன்படுத்தியுள்ளனர்

  • 2008-2015ஆம் ஆண்டில் லண்டனில் குடியேற 254 இந்திய மில்லியனர்கள் ‘தங்க விசாவை’ பயன்படுத்தினர்.
  • தங்க விசா இங்கிலாந்தில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில் குறைந்தபட்சம் 2 மில்லியன் பவுண்டுகள் முதலீடு செய்யும் தனிநபர்களுக்கு 2 ஆண்டு நீட்டிப்புடன் இங்கிலாந்தில் 3 ஆண்டுகள் தங்க வழங்கப்படுகிறது.
  • இங்கிலாந்தில் உள்ள ஒரு ஊழல் எதிர்ப்பு தொண்டு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,
    • தங்க விசாவுடன் இங்கிலாந்தில் உள்ள மக்கள் பட்டியலில் இந்தியா 7வது இடத்தில் உள்ளது.

முதல் 5 நாடுகள்:

  1. சீனநாடு
  2. ரஷ்யா
  3. ஹாங்காங்
  4. அமெரிக்கா
  5. பாகிஸ்தான்

7. World Health Organization issues new recommendations on human genome editing

  • The World Health Organization has issued new recommendations on human genome editing. It has called for a global registry to track any form of genetic manipulation and proposed a mechanism to raise concerns about unethical or unsafe research.
  • An expert group was formed in 2018 following the announcement of Chinese scientist He Jiankui that he had created the world’s first gene-edited babies to prevent them from HIV.

 

7. மனித மரபணுத் திருத்தம் குறித்த உலக சுகாதார நிறுவனம் புதிய பரிந்துரைகளை வெளியிட்டுள்ளது

  • மனித மரபணுத் திருத்தம் குறித்து உலக சுகாதார நிறுவனம் புதிய பரிந்துரைகளை வெளியிட்டுள்ளது. அது மரபணு திருத்தங்களுக்கான ஒரு உலகளாவிய பதிவேட்டை பராமரிக்க அழைப்பு விடுத்துள்ளது மற்றும் நெறிமுறையற்ற அல்லது பாதுகாப்பற்ற ஆராய்ச்சி பற்றிய நிறை குறைகளை எழுப்ப ஒரு நடைமுறையை முன்மொழிந்துள்ளது.
  • எச்.ஐ.வி.யில் இருந்து காக்க உலகின் முதல் மரபணு மாற்றப்பட்ட குழந்தைகளை உருவாக்கியதாக சீன விஞ்ஞானி ஹெ ஜியான்குய் அறிவித்ததைத் தொடர்ந்து 2018இல் இதற்கென ஒரு நிபுணர் குழு உருவாக்கப்பட்டது.

PERSONS IN NEWS


8. Maneesha S Inamdar joins the WHO Advisory Committee on Human Genome Editing

  • Indian stem cell and developmental biologist Prof. Maneesha S Inamdar has joined as a part of the WHO Expert Advisory Committee on Developing Global Standards for Governance and Oversight of Human Genome Editing.
  • She is conducting research at the Jawaharlal Nehru Centre for Advanced Scientific Research, Bengaluru, an autonomous Institute of the Department of Science and Technology (DST).

 

8. மனீஷா எஸ் இனம்தார் மனித மரபணுத் திருத்தத்திற்கான உலக சுகாதார நிறுவனத்தின் ஆலோசனைக் குழுவில் இணைந்துள்ளார்

  • இந்திய குருத்தணு மற்றும் வளர்ச்சி உயிரியலாளர் பேராசிரியர் மனீஷா எஸ் இனம்தார், மனித மரபணுத் திருத்தத்திற்கான உலகளாவிய தரநிலைகளை மேம்படுத்துதல் மற்றும் மேற்பார்வைக்கான உலக சுகாதார நிறுவனத்தின் நிபுணர் ஆலோசனைக் குழுவில் ஒரு பகுதியாக இணைந்துள்ளார்.
  • அவர் பெங்களூருவில் உள்ள ஜவஹர்லால் நேரு மேம்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் ஆராய்ச்சி நடத்தி கொண்டிருக்கிறார். இது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தன்னாட்சி நிறுவனம் (டிஎஸ்டி).

SPORTS


9. Compound Archer Jyoti of Uttar Pradesh qualifies for the Tokyo Paralympics 2020

  • The International Paralympic Committee (IPC) has given a quota place to Jyoti of Uttar Pradesh for the Tokyo Paralympics 2020. Since some players could not attend the qualifying event in the Czech Republic due to COVID-19 restrictions, the AAI (Archery Association of India) requested IPC to grant a bipartite quota place to Uttar Pradesh girl Jyoti.
  • Indian Players qualified for Paralympics Archery event:
  • Compound men’s open:
    • Rakesh Kumar
    • Shyam Sundar
  • Recurve men’s open:
    • Vivek Chikara
    • Harbinder Singh

 

9. 2020 டோக்கியோ பாராலிம்பிக்கிற்கு உத்தரப்பிரதேசத்தின் காம்பவுண்ட் வில்வித்தை வீராங்கனை ஜோதி தகுதிபெற்றுள்ளார்

  • 2020 டோக்கியோ பாராலிம்பிக் விளையாட்டுக்காக உத்தரப் பிரதேசத்தின் ஜோதிக்கு சர்வதேச பாராலிம்பிக் கமிட்டி (ஐபிசி) இட ஒதுக்கீடு வழங்கியுள்ளது. கோவிட்-19 கட்டுப்பாடுகள் காரணமாக செக் குடியரசில் நடந்த தகுதிப் போட்டியில் சில வீரர்கள் கலந்து கொள்ள முடியாததால், உத்தரப் பிரதேச வீராங்கனை ஜோதிக்கு இருபிரிவு ஒதுக்கீடு இடம் வழங்குமாறு ஏஏஐ (ஆர்ச்சர் அசோசியேஷன்) ஐபிசியிடம் கோரியது.
  • பாராலிம்பிக் வில்வித்தைக்கு தகுதி பெற்ற இந்திய வீரர்கள்:
  • காம்பவுண்ட் ஆண்கள் ஓபன் பிரிவு:
  • ராகேஷ் குமார்
  • ஷியாம் சுந்தர்
  • ஆண்கள் ஓபன் ரீகர்வ்:
  • விவேக் சிகாரா
  • ஹர்பிந்தர் சிங்

10. Former Indian Cricketer Yashpal Sharma passed away

  • Former Indian Cricketer Yashpal Sharma passed away at the age of 66. He was a member of the 1983 World Cup-winning Indian cricket team.

 

10. இந்திய கிரிக்கெட் வீரர் யாஷ்பால் சர்மா காலமானார்

  • முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யாஷ்பால் சர்மா தனது 66வது வயதில் காலமானார். இவர் 1983 உலகக் கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் அணியில் உறுப்பினராக இருந்தார்.

KNOW AN INSTITUTION


11. World Health Organization (WHO)

  • World Health Organization (WHO) is a specialised agency of the United Nations.
  • It was found on 7 April 1948, which is now observed as the World Health Day.
  • Headquarters: Geneva
  • It consists of 194 members and 6 regional offices.
  • WHO plays an essential role in improving local health systems and coordinating the global response to health threats.

Indians in WHO

  • Soumya Swaminathan was the first-ever Indian Deputy Director-General of the WHO.

 

11. உலக சுகாதார நிறுவனம் (WHO):

  • உலக சுகாதார நிறுவனம் (WHO) ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு சிறப்பு நிறுவனம் ஆகும்.
  • இது 7 ஏப்ரல் 1948 அன்று உருவாக்கப்பட்டது. இந்த தினம் இப்போது உலக சுகாதார தினமாக அனுசரிக்கப்படுகிறது.
  • தலைமையகம்: ஜெனீவா
  • இதில் 194 உறுப்பினர்களும், 6 பிராந்திய அலுவலகங்களும் உள்ளன.
  • உலக சுகாதார நிறுவனம் உள்ளூர் சுகாதார அமைப்புகளை மேம்படுத்துவதற்கும் சுகாதார அச்சுறுத்தல்களுக்கான உலகளாவிய பதிலை ஒருங்கிணைப்பதற்கும் இன்றியமையாத பங்கை வகிக்கிறது.

உலக சுகாதார நிறுவனத்தில் இந்தியர்கள்:

  • சௌமியா சுவாமிநாதன் உலக சுகாதார நிறுவனத்தின் முதல் இந்திய துணை இயக்குநர் ஜெனரல் ஆவார்.