TNPSC Current Affairs – English & Tamil – July 24, 2021

TNPSC Aspirants,

The Current Affairs Section is one of the most important topics for the upcoming TNPSC Group I, Group II/IIA, Group IV, and TNUSRB Exams.

Check today’s TNPSC Daily Current Affairs (July 24, 2021) in this post.

Aspirants can expect questions from the Daily Current Affairs section in the upcoming TNPSC Exams and learning the Current Affairs section will also aid them in successfully preparing for the descriptive paper. So this process is a 2 in 1 initiative.

To make the learning more convenient, we will be providing the TNPSC Daily Current Affairs in both ENGLISH & TAMIL. This has been made in such a way that reflects the TNPSC pattern as TNPSC uses both the languages in the Question Paper and this will also make the preparations of the aspirants meaningful and will 100% fulfill the needs of the aspirants.


Download PDF – TNPSC Daily Current Affairs – English & Tamil – July 24, 2021


NATIONAL


1. Tvasta develops India’s first 3D printed sanitisation stations for healthcare workers

  • Tvasta, a tech startup along with Saint-Gobain, has developed India’s first 3D-printed doffing unit for healthcare workers.
  • Doffing is the process for removal of Personal Protective Equipment (PPE) that requires proper sanitisation. The first unit was established at a government hospital in Kancheepuram, Tamil Nadu.

 

1. சுகாதாரப் பணியாளர்களுக்கான இந்தியாவின் முதல் முப்பரிமாண அச்சிடப்பட்ட தூய்மைப்படுத்தும் நிலையங்களை த்வஸ்டா (Tvasta) உருவாக்கியுள்ளது

  • செயிண்ட்-கோபைன் நிறுவனத்துடன் இணைந்து தொழில்நுட்ப தொடக்க நிறுவனமான ட்வஸ்டா (Tvasta) சுகாதார ஊழியர்களுக்கான இந்தியாவின் முதல் முப்பரிமாண அச்சிடப்பட்ட தூய்மைப்படுத்தும் நிலையங்களை (டாஃபிங் பிரிவை) உருவாக்கியது.
  • டாஃபிங் என்பது பாதுகாப்பு கவச உபகரணங்களை (PPE) அகற்றி சரியான முறையில் தூய்மைப்படுத்தும் செயல்முறை ஆகும். இந்த முதல் பிரிவு தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் நிறுவப்பட்டது.

2. Union Minister Virendra Kumar inaugurates the 5th North-East India Traditional Fashion Week (NEIFW) 2021

  • Union Minister for Social Justice and Empowerment, Virendra Kumar, inaugurated the 5th North-East India Traditional Fashion Week (NEIFW) 2021.
  • The event was targeted to enrich the ‘Make in India’ movement by mainstreaming divyangjan along with promoting the indigenous culture and art-forms of North-East India.

 

2. மத்திய அமைச்சர் வீரேந்திர குமார் 5வது வடகிழக்கு இந்திய பாரம்பரிய ஃபேஷன் வாரம் (NEIFW) 2021ஐ தொடங்கி வைத்தார்

  • மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் வீரேந்திர குமார் 5வது வடகிழக்கு இந்திய பாரம்பரிய ஃபேஷன் வாரம் (NEIFW) 2021ஐ தொடங்கி வைத்தார்
  • வடகிழக்கு இந்தியாவின் உள்நாட்டு கலாச்சாரம் மற்றும் கலை வடிவங்களை ஊக்குவிப்பதன் மூலம் மாற்றுத்திறனாளிகளை பெருமக்களுடன் இணைத்து, ‘இந்தியாவில் தயாரிப்போம்’ இயக்கத்தை வளப்படுத்துவதை இந்த நிகழ்வு இலக்காகக் கொண்டுள்ளது.

3. Union Ministry of Social Justice and Empowerment formulates the SMILE scheme

  • Union Ministry of Social Justice and Empowerment has formulated a scheme known as “SMILE – Support for Marginalised Individuals for Livelihood and Enterprise”. It includes a sub-scheme, which is a central sector scheme for the comprehensive rehabilitation of persons engaged in begging.
  • West Bengal has the highest number of beggars, followed by Uttar Pradeshand Bihar, respectively.
  • Among the Union Territories,New Delhi has the largest number of beggars, followed by Chandigarh.

 

3. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் ஸ்மைல் (SMILE) திட்டத்தை உருவாக்கியுள்ளது

  • மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் “ஸ்மைல் (SMILE) – விளிம்புநிலை தனிநபர்களுக்கான வாழ்வாதாரம் மற்றும் நிறுவனத்திற்கான ஆதரவு” என்று அழைக்கப்படும் ஒரு திட்டத்தை உருவாக்கியுள்ளது. இதில் பிச்சையெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள நபர்களுக்கான விரிவான மறுவாழ்விற்கான மத்தியத் திட்டமான துணைத் திட்டமும் அடங்கும்.
  • மேற்கு வங்கத்தில் அதிக எண்ணிக்கையிலான பிச்சைக்காரர்கள் உள்ளனர். அதனை தொடர்ந்து முறையே உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்கள் உள்ளன.
  • யூனியன் பிரதேசங்களில், புது தில்லியில் அதிக எண்ணிக்கையிலான பிச்சைக்காரர்கள் இருந்தனர், அதைத் தொடர்ந்து சண்டிகரில் உள்ளனர்.

AWARDS AND RECOGNITIONS


4. Vice Admiral Vinay Badhwar receives Alexander Dalrymple Award 2019

  • Vice Admiral Vinay Badhwar, Chief Hydrographer to the Government of India, received the Alexander Dalrymple Award 2019 from the British High Commissioner, Alex Ellis. The Alexander Dalrymple Award has been named after the first hydrographer of the Admiralty and was instituted in 2006.

 

4. அலெக்சாண்டர் டால்ரிம்பிள் விருது 2019ஐப் துணை அட்மிரல் வினய் பத்வார் பெற்றார்

  • இந்திய அரசின் தலைமை நீரியல் வரைவாளர் (ஹைட்ரோகிராஃபர்) துணை அட்மிரல் வினய் பத்வார், அலெக்சாண்டர் டால்ரிம்பிள் விருது 2019ஐ பிரிட்டிஷ் உயர் ஆணையர் அலெக்ஸ் எல்லிஸிடமிருந்து பெற்றார். அலெக்சாண்டர் டால்ரிம்பிள் விருது கடற்படை தலைமையகத்தினால் 2006இல் நிறுவப்பட்டது. அவ்விருது முதல் நீரியல் வரைவாளரின் பெயரால் பெயரிடப்பட்டுள்ளது.

MILITARY EXERCISES


5. Union Defence Minister Rajnath Singh flags in skiing expedition ARMEX-21 in New Delhi

  • Union Defence Minister Rajnath Singh flagged in the Indian Army Skiing Expedition, ARMEX-21 in New Delhi. The ARMEX-21 is a four-month-long tough terrain expedition conducted in the mountain ranges of the Himalayan region to promote the adventure activity in the country and the Indian Army.

 

5. புது டெல்லியில் பனிச்சறுக்கு பயணமான ஆர்மெக்ஸ்-21ஐ மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

  • புது தில்லியில் இந்திய ராணுவ பனிச்சறுக்கு பயணம், ஆர்மெக்ஸ்-21ஐ மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஆர்மெக்ஸ்-21 என்பது இமாலயப் பகுதியின் மலைத்தொடர்களில் நடத்தப்படும் நான்கு மாத கால கடினமான நிலப்பரப்பு பயணமாகும். இது இந்தியா மற்றும் இந்திய இராணுவத்தின் சாகச நடவடிக்கைகளை பிரபலப்படுத்த நடத்தப்பட்டது.

REPORTS AND INDICES


6. India scores 90.32% in UNESCAP’s Global Survey on Digital and Sustainable Trade Facilitation 2021

  • India has scored 90.32% in United Nation’s Economic and Social Commission for Asia Pacific’s (UNESCAP) latest Global Survey on Digital and Sustainable Trade Facilitation 2021. This is a significant increase from 78.49% in 2019. 
  • The survey noted that India is the best-performing country when compared to countries from the South and Southwest Asia region (63.12%) and the Asia Pacific region (65.85%).

India’s significant improvement in the scores on all 5 key indicators:

  1. Transparency: 100% in 2021 (from 93.33% in 2019)
  2. Formalities: 95.83% in 2021 (from 87.5% in 2019)
  3. Institutional Arrangement and Cooperation: 88.89% in 2021 (from 66.67% in 2019)
  4. Paperless Trade: 96.3% in 2021 (from 81.48% in 2019)
  5. Cross-Border Paperless Trade: 66.67% in 2021 (from 55.56% in 2019)

Global Survey on Digital and Sustainable Trade Facilitation

  • The Global Survey on Digital and Sustainable Trade Facilitation is conducted every two years by UNESCAP. It includes an assessment of 58 trade facilitation measures covered by the World Trade Organisation’s (WTO) Trade Facilitation Agreement.

 

6. இந்தியா UNESCAPஇன் சர்வதேச டிஜிட்டல் மற்றும் நிலையான வர்த்தக வசதி 2021 குறித்த .நா. ஆய்வில் 90.32% மதிப்பெண் பெற்றுள்ளது

  • 2021 டிஜிட்டல் மற்றும் நிலையானவர்த்தக வசதி குறித்த ஆசிய பசிபிக் பகுதிக்கான ஐ.நா. பொருளாதார மற்றும் சமூக ஆணையம் நடத்திய உலகளாவிய ஆய்வில் இந்தியா 32 சதவீத மதிப்பெண் பெற்றுள்ளது. 2019ஆம் ஆண்டில் 78.49 சதவீதமாக இருந்த நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
  • தெற்கு மற்றும் தென்மேற்கு ஆகிய நாடுகள் (63.12 சதவீதம்) மற்றும் ஆசிய பசிபிக் நாடுகள் (63.12 சதவீதம்) ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் செயல்பாடு மிகச்சிறப்பாக இருப்பதை கணக்கெடுப்பு காட்டுகிறது.

கீழ்கண்ட 5 முக்கிய விஷயங்களில் இந்தியாவின் முன்னேற்றம் குறிப்பிடத்தக்க வகையில் உள்ளது:

  1. வெளிப்படைத்தன்மை: 2021ஆம் ஆண்டில் 100 சதவீதம் (2019ஆம் ஆண்டில்33 சதவீதம்)
  2. முறைகள்: 2021ஆம் ஆண்டில்83 சதவீதம் (2019ஆம் ஆண்டில் 87.5 சதவீதம்)
  3. நிறுவன ஏற்பாடு மற்றும் ஒத்துழைப்பு: 2021ஆம் ஆண்டில்89 சதவீதம் (2019இல் 66.67 சதவீதம்)
  4. காகிதமில்லா வர்த்தகம்: 2021ஆம் ஆண்டில்3 சதவீதம் (2019ஆம் ஆண்டில் 81.48 சதவீதம்)
  5. நாடுகள் தாண்டிய வர்த்தகம்: 2021இல்67 சதவீதம் (2019இல் 55.56 சதவீதம்).

சர்வதேச டிஜிட்டல் மற்றும் நிலையான வர்த்தக வசதி ஆய்வு

  • சர்வதேச டிஜிட்டல் மற்றும் நிலையான வர்த்தக வசதி குறித்த ஐ.நா. ஆய்வு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை UNESCAPஆல் நடத்தப்படுகிறது. உலக வர்த்தக அமைப்பின் (WTO) வர்த்தக வசதி ஒப்பந்தத்தின் கீழ் வரும் 58 வர்த்தக வசதி நடவடிக்கைகளின் மதிப்பீடு இதில் அடங்கும்.

TOKYO OLYMPICS 2020


7. Naomi Osaka lights the Olympics cauldron in the Tokyo Olympics 2020

  • Manpreet Singh and Mary Kom led India’s Olympic contingent during the opening ceremony of the Tokyo Olympics 2020.
  • The Olympic flag was hoisted and the Olympic torch relay was used to light up the Olympic cauldron by Naomi Osaka.

 

7. நவோமி ஒசாகா டோக்கியோ ஒலிம்பிக் 2020இல் ஒலிம்பிக் தீபம் ஏற்றினார்

  • டோக்கியோ ஒலிம்பிக் 2020 தொடக்க விழாவில் மன்பிரீத் சிங் மற்றும் மேரி கோம் ஆகியோர் இந்தியாவின் ஒலிம்பிக் குழுவிற்கு தலைமை தாங்கினர்.
  • ஒலிம்பிக் கொடி ஏற்றப்பட்டது மற்றும் ஒலிம்பிக் தீப தொடர் ஒட்டத்தில் நவோமி ஒசாகாவால் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது.

8. Indian weightlifter Saikhom Mirabai Chanu bags silver medal at the Tokyo Olympics 2020

  • Indian weightlifter Saikhom Mirabai Chanu of Manipur won the silver medal in women’s 49 kg weightlifting in the Tokyo Olympics 2020. She won India’s first medal in the Tokyo Olympics 2020. She had total lifts of 202 kg, including 87 kg in Snatch and 115 kg in Clean and Jerk.
  • Karnam Malleshwari was the first Indian woman to win a medal in the Olympics. She won the bronze medal in the Sydney Olympics 2000.

 

8. இந்திய பளுதூக்கும் வீரர் சாய்கோம் மீராபாய் சானு டோக்கியோ ஒலிம்பிக் 2020இல் வெள்ளிப் பதக்கம் வென்றார்

  • டோக்கியோ ஒலிம்பிக் 2020இல் பெண்களுக்கான 49 கிலோ பளுதூக்குதல் பிரிவில் மணிப்பூரின் பளுதூக்கும் வீரர் சாய்கோம் மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்றார். அவர் டோக்கியோ ஒலிம்பிக் 2020இல் இந்தியாவின் முதல் பதக்கத்தை வென்றார். அவர் ஸ்னாட்ச்சில் 87 கிலோ மற்றும் கிளீன் அண்ட் ஜெர்க்கில் 115 கிலோ உட்பட மொத்தம் 202 கிலோ பளுதூக்கினார்.
  • ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் கர்ணம் மல்லேஸ்வரி ஆவார். அவர் 2000ஆம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றார்.

IMPORTANT DAYS


9. Aaykar Day (Income Tax Day) – 24 July

  • Income Tax Day is observed annually by the Central Board of Direct Taxes (CBDT) on 24 July since 2010. This day marks the introduction of income tax for the first time in India by Sir James Wilson in 1980. This year (2021) marks the 161st anniversary of Income Tax Day.

 

9. வருமான வரி தினம் (ஆயகர் தினம்) – 24 ஜூலை

  • வருமான வரி தினம் ஆண்டுதோறும் மத்திய நேரடி வரிகள் வாரியத்தால் (CBDT) 2010 ஆண்டு முதல் 24 ஜூலை அன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள் 1980இல் சர் ஜேம்ஸ் வில்சன் இந்தியாவில் முதல் முறையாக வருமானவரி அறிமுகப்படுத்தியதைக் குறிக்கிறது. இந்த ஆண்டு (2021) வருமான வரி தினத்தின் 161வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.

10. 30 years of liberalisation – 23 July 2021

  • The Former Indian Prime Minister Manmohan Singh was the prime architect of the historic 1991 liberalisation. 23 July 2021 marked the 30th anniversary of economic liberalisation in India.
  • LPG stands for Liberalisation, Privatisation and Globalisation, which was introduced in India to overcome the economic crisis of the 1990s.

 

10. தாராளமயமாக்கலின் 30 ஆண்டுகள் – 23 ஜூலை 2021

  • முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் 1991ஆம் ஆண்டு வரலாற்று சிறப்புமிக்க தாராளமயமாக்கலின் முக்கிய சிற்பி ஆவார். 23 ஜூலை 2021 இந்திய பொருளாதார தாராளமயமாக்கலின் 30வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.
  • எல்பிஜி (LPG) என்பது தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல் ஆகியவற்றைக் குறிக்கிறது. இது 1990களின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.