TNPSC Current Affairs – English & Tamil – July 3, 2021

TNPSC Aspirants,

The Current Affairs Section is one of the most important topics for the upcoming TNPSC Group I, Group II/IIA, Group IV, and TNUSRB Exams.

Check today’s TNPSC Daily Current Affairs(3rd July, 2021) in this post.

Aspirants can expect questions from the Daily Current Affairs section in the upcoming TNPSC Exams and learning the Current Affairs section will also aid them in successfully preparing for the descriptive paper. So this process is a 2 in 1 initiative.

To make the learning more convenient, we will be providing the TNPSC Daily Current Affairs in both ENGLISH & TAMIL. This has been made in such a way that reflects the TNPSC pattern as TNPSC uses both the languages in the Question Paper and this will also make the preparations of the aspirants meaningful and will 100% fulfill the needs of the aspirants.


Download PDF – TNPSC Daily Current Affairs – English & Tamil – July 3, 2021


TAMIL NADU


1. One more human skeleton was found in the Kondagai Excavation

  • One more human skeleton was found in the ongoing excavation at Kondagai in the Sivaganga
  • The excavation work is in progress at Keladi, Agaram, Manalur and Kondagai.
  • Based on the excavations so far, it has been revealed that Kondagai was a cremation site during ancient times.
  • Many urns and skeletons were found in the pits during the excavation.

 

1. கொந்தகை அகழாய்வில் மேலும் ஒரு எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளது

  • சிவகங்கை மாவட்டம் கொந்தகையில் நடைபெற்று வரும் அகழாய்வில் மேலும் ஒரு மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது.
  • கீழடி, அகரம், மணலூா் மற்றும் கொந்தகை ஆகிய பகுதிகளில் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
  • இதுவரை நடைபெற்ற அகழாய்வுகளின் அடிப்படையில் கொந்தகை பண்டைய காலத்தில் ஈமக் காடாக இருந்தது தெரியவந்துள்ளது.
  • இங்கு தோண்டப்பட்ட குழிகளில் ஏராளமான முதுமக்கள் தாழிகள் மற்றும் எலும்புக்கூடுகள் கிடைத்தன.

SCIENCE AND TECHNOLOGY


2. Indigenous Short Span Bridging systems of DRDO was inducted into Indian Army

  • The indigenous Short Span Bridging systems of DRDO was inducted into the Indian Army. The system has been designed by DRDO and manufactured by L&T.
  • These 10-metre bridges will meet the important requirements of providing mobility to forces by speedy bridging of gaps during operations.

 

2. டி.ஆர்.டி..வின் உள்நாட்டு குறுகிய கால இணைப்பு அமைப்புகள் இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளது

  • டி.ஆர்.டி.ஓ.வின் உள்நாட்டு குறுகிய கால இணைப்பு அமைப்புகள் இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட்டன. இந்த அமைப்புகள் டி.ஆர்.டி. வால் வடிவமைக்கப்பட்டு, எல் அண்ட் டி (L&T)ஆல் தயாரிக்கப்பட்டுள்ளன.
  • இந்த 10 மீட்டர் பாலங்கள் ராணுவ நடவடிக்கைகளின் போது இடைவெளிகளை விரைவாக நிரப்புவதன் மூலம் படைகளுக்கு இயக்கம் வழங்குவதற்கான முக்கிய தேவைகளை பூர்த்தி செய்யும்.

NATIONAL


3. Indian-origin Sirisha Bandla to be a part of Virgin Galactic’s space flight

  • Indian-origin Sirisha Bandla will be a part of Virgin Galactic’s space flight on 11 July, ahead of Jeff Bezos’ Blue origin space flight.
  • Virgin Galactic is a space company found by Richard Branson. The VSS Unity spacecraft will take off from New Mexico, carrying a full crew of Virgin Galactic’s employees.
  • Sirisha Bandla will be the third Indian-origin woman after Kalpana Chawla and Sunitha Williams to travel into space.

 

3. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிரிஷா பாண்ட்லா விர்ஜின் கேலக்டிக்கின் விண்வெளி பயணத்தில் பங்கேற்கிறார்

  • ஜெஃப் பெஸோஸின் ப்ளூ ஆரிஜின் விண்வெளி விமானத்திற்கு முன்னதாக 11 ஜூலை அன்று செல்லவிருக்கும் விர்ஜின் கேலக்டிக்கின் விண்வெளி விமானத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிரிஷா பாண்ட்லா ஒருவராக இருப்பார்.
  • விர்ஜின் கேலக்டிக் என்பது ரிச்சர்ட் பிரான்சனால் தொடங்கப்பட்ட ஒரு விண்வெளி நிறுவனம் ஆகும். வி.எஸ்.எஸ் யூனிட்டி விண்கலம் நியூ மெக்ஸிகோவில் இருந்து விர்ஜின் கேலக்டிக் ஊழியர்களின் முழு குழுவினரையும் சுமந்து செல்லும்.
  • கல்பனா சாவ்லா மற்றும் சுனிதா வில்லியம்ஸுக்கு பிறகு விண்வெளிக்கு பயணம் மேற்கொள்ளும் மூன்றாவது இந்திய வம்சாவளி பெண் சிரிஷாஆவார்.

4. Prahlad Singh Patel chairs the 6th meeting of the BRICS Culture Ministers through video conferencing

  • The Union Minister of State for Culture and Tourism Prahlad Singh Patel hosted the 6th BRICS Culture Ministers’ Meeting through video conferencing.
  • BRICS members participated in the meeting.

BRICS:

  • BRICS is a group of world’s emerging economies – Brazil, Russia, India, China and South Africa. India has assumed the BRICS Presidency from January 2021.

 

4. பிரிக்ஸ் கலாச்சார அமைச்சர்களின் 6வது கூட்டத்திற்கு காணொலிக் காட்சி மூலம் பிரகலாத் சிங் படேல் தலைமை தாங்குகிறார்

  • 6வது பிரிக்ஸ் கலாச்சார அமைச்சர்கள் கூட்டத்தை கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை இணையமைச்சர் பிரகலாத் சிங் படேல் காணொலிக் காட்சி மூலம் நடத்தினார்.
  • பிரிக்ஸ் உறுப்பினர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

பிரிக்ஸ்:

  • பிரிக்ஸ் என்பது பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய உலகின் வளர்ந்து வரும் பொருளாதாரங்களின் ஒரு குழுவாகும். பிரிக்ஸ் தலைமையை இந்தியா ஜனவரி 2021 முதல் ஏற்றுள்ளது.

5. Bengaluru-Karwar express to be named Panchaganga express

  • The Union Ministry of Railways has approved the proposal to name the Bengaluru-Karwar Express as the Panchaganga Express.
  • It is named after the five rivers in Udupi that come together to join the Arabian Sea near Kundapura, thus getting the name Panchagangavali
  • The five rivers are:
  1. Souparnika
  2. Chakra
  3. Kheta
  4. Kubja
  5. Varahi

 

5. பெங்களூருகார்வார் எக்ஸ்பிரஸுக்கு பஞ்சகங்கா எக்ஸ்பிரஸ் என்று பெயரிடப்படுகிறது

  • பெங்களூருகார்வார் எக்ஸ்பிரஸை பஞ்சகங்கா எக்ஸ்பிரஸ் என்று பெயரிடும் திட்டத்திற்கு மத்திய ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
  • இது உடுப்பியில் உள்ள ஐந்து ஆறுகளின் பெயரால் அழைக்கப்படுகிறது. அவை ஒன்று சேர்ந்து குண்டபுரா அருகே அரபிக் கடலில் ஒன்றாக சேருகின்றன. இதனால் பஞ்சகங்காவலி ஆறு என்ற பெயர் பெறுகிறது.
  • ஐந்து ஆறுகள்:
  1. சுபர்னிகா
  2. சக்ரா
  3. கேதா
  4. குப்ஜா
  5. வாராஹி

INTERNATIONAL


6. Wally Funk aged 82 is set to fly into space with Jeff Bezos

  • Wally Funk of age 82 will be a part of the New Shepard launch vehicle journey along with Jeff Bezos on 20 July. She will become the oldest person ever to go to space.
  • The trip will last 10 minutes above the Karman line that marks the boundary between Earth’s atmosphere and space. The reusable suborbital rocket system was named after Alan Shepard, the first American in space.
  • Wally Funk was one of the Mercury 13, the first women group trained to fly to space during 1960 but excluded because of their gender. Mercury 13 is NASA’s unofficial, privately funded program to train women as male astronauts.

 

6. 82 வயதான வாலி ஃபங்க் ஜெஃப் பெஸோஸுடன் விண்வெளியில் பறக்கவிருக்கிறார்

  • 82 வயதான வாலி ஃபங்க் 20 ஜூலை அன்று ஜெஃப் பெஸோஸுடன் நியூ ஷெப்பர்ட் விண்வெளி வாகன பயணத்தின் ஒரு பகுதியாக இருப்பார். அவர் விண்வெளிக்கு செல்லும் மிக வயதான நபராக இருப்பார்.
  • பூமியின் வளிமண்டலத்திற்கும் விண்வெளிக்கும் இடையிலான எல்லையைக் குறிக்கும் கார்மன் கோட்டிற்கு மேலே இந்த பயணம் 10 நிமிடங்கள் நீடிக்கும். மீண்டும் பயன்படுத்தக்கூடிய இந்த துணை ஆர்பிட்டால் ராக்கெட் அமைப்பு விண்வெளிக்கு சென்ற முதல் அமெரிக்கரான ஆலன் ஷெப்பர்டின் பெயரால் பெயரிடப்பட்டுள்ளது.
  • வாலி ஃபங்க் 1960ஆம் ஆண்டில் விண்வெளிக்கு பறக்க பயிற்சி பெற்ற முதல் பெண்ணாக மெர்குரி 13இல் ஒருவராக இருந்தார். ஆனால் அவர்களின் பாலினம் காரணமாக விலக்கப்பட்டனர். மெர்குரி 13 என்பது ஆண் விண்வெளி வீரர்களுக்கு இணையாக பெண்களுக்கு பயிற்சியளிக்கும் நாசாவின் அதிகாரப்பூர்வமற்ற, தனியார் நிதி பெற்ற திட்டமாகும்.

SPORTS


7. Dutee Chand qualifies for the Tokyo Olympics 2020

  • Dutee Chand qualified for Tokyo Olympics 2020 in both 100 m and 200 m athletics.
  • She is the national champion in the women’s 100 metres event.
  • She is the first Indian to win a gold medal in 100 m race in a global competition.

 

7. டோக்கியோ ஒலிம்பிக் 2020க்கு டூட்டி சந்த் தகுதி பெற்றுள்ளார்

  • டூட்டி சந்த் டோக்கியோ ஒலிம்பிக் 2020க்கு 100 மீ மற்றும் 200 மீ ஓட்டம் இரண்டிலும் தகுதிபெற்றார்.
  • அவர் பெண்கள் 100 மீட்டர் போட்டியில் தேசிய சாம்பியன் ஆவார்.
  • இவர் உலகளாவிய போட்டியில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் ஆவார்

8. Sania Mirza and Ankita Raina are set to represent India in the Women’s Doubles at the Tokyo Olympics 2020

  • Sania Mirza and Ankita Raina will represent India at Tokyo Olympics 2020 in the Women’s doubles tennis
  • Sania Mirza will be the first female athlete to represent India at four Olympics.

 

8. மகளிர் இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா மற்றும் அங்கிதா ரெய்னா டோக்கியோ ஒலும்பிக் 2020இல் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்த உள்ளனர்

  • மகளிர் இரட்டையர் டென்னிஸ் போட்டியில் சானியா மிர்சா மற்றும் அங்கிதா ரெய்னா டோக்கியோ ஒலிம்பிக் 2020இல் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்துவார்கள்.
  • நான்கு ஒலிம்பிக்கில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் முதல் பெண் தடகள வீரர் சானியா மிர்சா ஆவார்.

9. Maana Patel becomes the first Indian female swimmer to qualify for the Tokyo Olympic Games 2020

  • The 100 m backstroke national record holder Maana Patel has become the 1st female and 3rd Indian swimmer to qualify for Tokyo Olympic Games 2020. She qualified through the Universality Quota.

 

9. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் 2020க்கு தகுதி பெற்ற முதல் இந்திய பெண் நீச்சல் வீரரானார் மானா படேல்

  • 100 மீ பேக்ஸ்ட்ரோக் தேசிய சாதனையாளர் மானா படேல் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் 2020க்கு தகுதி பெற்ற முதல் பெண் மற்றும் 3வது இந்திய நீச்சல் வீரராவார். அவர் யுனிவர்சலிட்டி கோட்டா மூலம் தகுதி பெற்றார்.

DAY IN HISTORY


10. Sir Ludwig Guttmann’s Birth Anniversary – 3 July

  • Sir Ludwig Guttmann, known as the ‘Father of the Paralympic Games’ has his birth anniversary on 3 July.
  • The Paralympic Games are a driving force for promoting the rights and independence of people with disabilities and their equal treatment and opportunity.

Paralympic Games:

  • Sir Ludwig Guttmann organised the first competition for wheelchair athletes named the Stoke Mandeville Games in 1948. It later became the Paralympic Games which first took place in Rome, Italy, in 1960. The Paralympic Games takes place every four years. In 1976, the first Winter Games in Paralympics was held in Sweden.

 

10. சர் லுட்விக் குட்மன் பிறந்த நாள் 3 ஜூலை

  • பாராலிம்பிக் விளையாட்டுகளின் தந்தை என்று அழைக்கப்படும் சர் லுட்விக் குட்மனின் பிறந்த நாள் 3 ஜூலை அன்று கொண்டாடப்படுகிறது.
  • பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் மாற்றுத் திறனாளிகளின் உரிமைகள் மற்றும் சுதந்திரத்தை மேம்படுத்துவதற்கும், அவர்களின் சமமான நடத்தை மற்றும் வாய்ப்பை மேம்படுத்துவதற்கும் ஒரு உந்து சக்தியாக உள்ளன.

பாராலிம்பிக் விளையாட்டுகள்:

  • சர் லுட்விக் குட்மன் 1948இல் ஸ்டோக் மண்டேவில் விளையாட்டுகள் என்று பெயரிடப்பட்ட சக்கர நாற்காலி விளையாட்டு வீரர்களுக்கான முதல் போட்டியை ஏற்பாடு செய்தார். இது பின்னர் 1960இல் இத்தாலியின் ரோமில் முதன்முதலில் நடந்த பாராலிம்பிக் விளையாட்டாக மாறியது. பாராலிம்பிக் போட்டிகள் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது. 1976ஆம் ஆண்டில், முதல் குளிர்கால பாராலிம்பிக்ஸ் விளையாட்டு ஸ்வீடனில் நடைபெற்றது.

KNOW AN INSTITUTION


11. National Human Rights Commission (NHRC):

  • NHRC is a statutory body established on 12 October 1993 under the Protection of Human Rights Act, 1993.

Composition:

  • Chairperson: Retired Chief Justice of India or a Judge of the Supreme Court
  • The Chairperson and the members of the NHRC are appointed by the President on the recommendations of a six-member committee.
  • The select committee consists of
  1. Prime Minister (Head)
  2. Speaker of the Lok Sabha
  3. Deputy Chairman of the Rajya Sabha
  4. Leaders of the Opposition in both the Houses of Parliament
  5. Union Home Minister

 

11. தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு:

  • தேசிய மனித உரிமைகள் ஆணையம், மனித உரிமைகள் பாதுகாப்பு சட்டம், 1993இன் கீழ் 12 அக்டோபர் 1993 அன்று நிறுவப்பட்ட ஒரு சட்டரீதியான அமைப்பாகும்.

அமைப்பு:

  • தலைவர்: ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி அல்லது உச்ச நீதிமன்ற நீதிபதி
  • ஆறு பேர் கொண்ட குழுவின் பரிந்துரைகளின் பேரில் தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள்.
  • தேர்வுக் குழு:
  1. பிரதமர் (தலைமை)
  2. மக்களவை சபாநாயகர்
  3. மாநிலங்களவை துணைத் தலைவர்
  4. பாராளுமன்றத்தின் இரு அவைகளின் எதிர்க்கட்சித் தலைவர்கள்
  5. மத்திய உள்துறை அமைச்சர்