TNPSC Current Affairs – English & Tamil – July 31, 2021

TNPSC Aspirants,

The Current Affairs Section is one of the most important topics for the upcoming TNPSC Group I, Group II/IIA, Group IV, and TNUSRB Exams.

Check today’s TNPSC Daily Current Affairs (July 31, 2021) in this post.

Aspirants can expect questions from the Daily Current Affairs section in the upcoming TNPSC Exams and learning the Current Affairs section will also aid them in successfully preparing for the descriptive paper. So this process is a 2 in 1 initiative.

To make the learning more convenient, we will be providing the TNPSC Daily Current Affairs in both ENGLISH & TAMIL. This has been made in such a way that reflects the TNPSC pattern as TNPSC uses both the languages in the Question Paper and this will also make the preparations of the aspirants meaningful and will 100% fulfill the needs of the aspirants.


Download PDF – TNPSC Daily Current Affairs – English & Tamil – July 31, 2021


NATIONAL


1. Zika virus spreads rapidly in Kerala

  • Kerala had reported cases of mosquito-borne Zika virus for the first time in 2021 in India, last week. Zika cases has been spreading rapidly since then.
  • Zika virus spreads mostly by the infected Aedes mosquito, which also spreads chikungunya and yellow fever. This mosquito can cause microcephaly and other congenital malformations in infants. Most people with Zika virus infection do not develop symptoms, according to the World Health Organization (WHO).
  • There is no specific treatment or vaccine for the Zika virus.

 

1. கேரளாவில் ஜிகா வைரஸ் வேகமாக பரவுகிறது

  • இந்தியாவில் 2021இல் கொசுக்களால் பரவும் ஜிகா வைரஸ் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அப்போதிருந்து ஜிகா பாதிப்பு வேகமாக பரவி வருகிறது.
  • ஜிக்கா வைரஸ் பெரும்பாலும் பாதிக்கப்பட்ட ஏடெஸ் கொசுவால் பரவுகிறது. இந்த கொசு சிக்குன்குனியா மற்றும் மஞ்சள் காய்ச்சலையும் பரப்புகிறது. இது குழந்தைகளில் மைக்ரோசெஃபலி மற்றும் பிற பிறவி குறைபாடுகளை ஏற்படுத்தும். ஜிக்கா வைரஸ் தொற்று உள்ள பெரும்பாலான மக்களுக்கு அறிகுறிகள் ஏற்படுவதில்லை என்று உலக சுகாதார நிறுவனம் (WHO) தெரிவித்துள்ளது.
  • ஜிக்கா வைரஸுக்கு குறிப்பிட்ட சிகிச்சையோ அல்லது தடுப்பூசியோ இல்லை.

2. Uttar Pradesh becomes India’s largest ethanol-producing state

  • Uttar Pradesh had became India’s largest ethanol-producing state, with the production of 58 crore liters of ethanol per year. India has set a target of 20% ethanol-blended fuel by 2025.

 

2. இந்தியாவின் மிகப்பெரிய எத்தனால் உற்பத்தி செய்யும் மாநிலமாக உத்தர பிரதேசம் மாறியுள்ளது

  • இந்தியாவின் மிகப்பெரிய எத்தனால் உற்பத்தி செய்யும் மாநிலமாக உத்தரப்பிரதேசம் ஆகியுள்ளது. அது ஆண்டுக்கு 58 கோடி லிட்டர் எத்தனாலை உற்பத்தி செய்கிறது. 2025க்குள் 20% எத்தனால் கலந்த எரிபொருளை தயாரிக்க இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது.

3. CII and SII sign an agreement to speed up the vaccination program in partnership with industry

  • Confederation of Indian Industry (CII) has entered into an agreement with the Serum Institute of India (SII) to speed up the vaccination program in partnership with industry, including health care providers. This programme will target communities in country’s small towns and rural areas to increase the coverage.

 

3. சிஐஐ மற்றும் எஸ்ஐஐ ஆகியவை தொழில்துறையுடன் இணைந்து தடுப்பூசி திட்டத்தை விரைவுபடுத்த ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன

  • சுகாதார பணியாளர்கள் உட்பட தொழில்துறையுடன் இணைந்து தடுப்பூசி திட்டத்தை விரைவுபடுத்த, இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) இந்திய சீரம் நிறுவனத்துடன் (எஸ்ஐஐ) ஒரு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த திட்டம் நாட்டின் சிறிய நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள சமூகங்களை இலக்காகக் கொண்டு பாதுகாப்பை அதிகரிக்கும்.

REPORTS AND INDICES


4. Union Ministry of Environment, Forest and Climate Change releases ‘Status of Leopards, Co-predators and Megaherbivores in India – 2018’ on the Global Tiger Day 2021

  • Union Ministry of Environment, Forest and Climate Change has released ‘Status of Leopards, Co-predators and Megaherbivores in India – 2018’ on the Global Tiger Day 2021.
  • According to the report:
  • The Srivilliputhur Grizzled Squirrel Wildlife Sanctuary in Tamil Nadu has the highest leopard density (per 100 sq. km.), in Tamil Nadu and in the entire Western Ghats landscape
  • The population of leopards in Tamil Nadu is in the range of 828-908.
  • The Squirrel Sanctuary combined with Meghamalai Wildlife Sanctuary was a tiger reserve.
  • Chief Wildlife Warden of Tamil Nadu: Shekhar Kumar Niraj

 

4. மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் 2021 சர்வதேச புலிகள் தினத்தன்று ‘இந்தியாவில் சிறுத்தை, இணை வேட்டையாடும் விலங்குகள் மற்றும் மெகாதாவர உண்ணிகளின் நிலை – 2018’ஐ வெளியிட்டுள்ளது

  • 2021 சர்வதேச புலிகள் தினத்தன்று, மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகம், ‘இந்தியாவில் சிறுத்தை, இணை வேட்டையாடும் விலங்குகள் மற்றும் மெகாதாவர உண்ணிகளின் நிலை- 2018’ஐ வெளியிட்டது.
  • இந்த அறிக்கையின்படி:
  • தமிழ்நாட்டில் உள்ள ஸ்ரீவில்லிப்புதூர் நரை அணில் வனவிலங்கு சரணாலயம் தமிழ்நாடு மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலை நிலப்பரப்பில் அதிக சிறுத்தை அடர்த்தியைக் கொண்டுள்ளது.
  • தமிழ்நாட்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 828-908 என்ற வரம்பில் உள்ளது.
  • மேகமலை வனவிலங்கு சரணாலயத்துடன் இணைந்த அணில் சரணாலயம் ஒரு புலிகள் காப்பகமாகும்.
  • தமிழ்நாடு தலைமை வனவிலங்கு காப்பாளர்: சேகர் குமார் நிராஜ்

5. PM Narendra Modi launches AI for All and SAFAL on the first anniversary of NEP 2020

  • Prime Minister Narendra Modi launched Artificial Intelligence for All (AI for All) and Structured Assessment for Analysing Learning (SAFAL) on 30 July 2021, the first anniversary of the National Education Policy, 2020.
  • AI for All is a four-hour microlearning course that intends to create a basic understanding of artificial intelligence amongst every citizen of India. The programme is driven by CBSE, Intel India and the Union Ministry of Education.
  • SAFAL is a competency-based assessment course for standards 3,5 and 8. It was introduced by CBSE.

 

5. பிரதமர் நரேந்திர மோடி அனைவருக்கும் செயற்கை நுண்ணறிவு மற்றும் சஃபல் (SAFAL) திட்டத்தை தொடங்கி வைத்தார்

  • தேசிய கல்விக் கொள்கை, 2020இன் முதலாம் ஆண்டு தினமான 30 ஜூலை 2021 அன்று, அனைவருக்கும் செயற்கை நுண்ணறிவு (அனைவருக்கும் ஏஐ) மற்றும் கட்டமைக்கப்பட்ட கற்றல் பகுப்பாய்வுக்கான மதிப்பீட்டை (SAFAL) பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
  • அனைவருக்கும் ஏஐ என்பது இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் செயற்கை நுண்ணறிவு பற்றிய அடிப்படை புரிதலை உருவாக்க விரும்பும் நான்கு மணி நேர நுண்கற்றல் பாடமாகும். இந்த திட்டத்தை சிபிஎஸ்இ, இன்டெல் இந்தியா மற்றும் மத்திய கல்வி அமைச்சகம் இயக்குகிறது.
  • சஃபல் என்பது 3, 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கான திறன் அடிப்படையிலான மதிப்பீட்டுப் பாடமாகும். இது சிபிஎஸ்இயால் அறிமுகப்படுத்தப்பட்டது.

INTERNATIONAL


6. Abdulla Shahid of the Maldives was elected as the President of the 76th UNGA

  • Abdulla Shahid of the Maldives was elected as the President of the 76th United Nations General Assembly (UNGA). He was the first person from the Maldives to become the President at the UNGA.

 

6. மாலத்தீவின் அப்துல்லா ஷாஹித் 76வது யு.என்.ஜி.ஏ. தலைவராகியுள்ளார்

  • மாலத்தீவின் அப்துல்லா ஷாஹித், ஐக்கிய நாடுகள் சபையின் 76வது தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் மாலத்தீவில் இருந்து யு.என்.ஜி.ஏ.வில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நபர் ஆவார்.

MILITARY EXERCISES


7. INS Saryu participates in the 36th edition of CORPAT between India and Indonesia

  • Indian Naval Ship (INS) Saryu, an indigenous Offshore Patrol Vessel, participated in the 36th Coordinated Patrol (CORPAT) with Indonesian Naval Ship KRI Bung Tomo.
  • India and Indonesia have been carrying out Coordinated Patrols along the International Maritime Boundary Line (IMBL) twice a year since 2002.

 

7. இந்தியா மற்றும் இந்தோனேஷியா இடையேயான கார்ப்பேட் பயிற்சியின் 36வது பதிப்பில் ஐஎன்எஸ் சரியாயு பங்கேற்றது

  • இந்தோனேசிய கடற்படை கப்பல் கேஆர்ஐ பங் டோமோவுடன் 36வது ஒருங்கிணைந்த ரோந்து (கார்ப்பேட்) பயிற்சியில் உள்நாட்டு கடல் ரோந்து கப்பலான இந்திய கடற்படை கப்பல் (ஐஎன்எஸ்) சரயு பங்கேற்றது.
  • இந்தியாவும் இந்தோனேசியாவும் 2002ஆம் ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை சர்வதேச கடல் எல்லைக் கோட்டில் ஒருங்கிணைந்த ரோந்துப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

TOKYO OLYMPICS 2020


8. Kamalpret Kaur enters the Tokyo Olympics 2020 discus throw finals

  • 25-year-old Kamalpret Kaur of India entered the Tokyo Olympics 2020 discus throw finishing at second place.

 

8. கமல்ப்ரீத் கவுர் டோக்கியோ ஒலிம்பிக் 2020இல் வட்டெறிதல் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றார்

  • இந்தியாவின் 25 வயதான கமல்ப்ரீத் கவுர், டோக்கியோ ஒலிம்பிக் 2020இல் வட்டெறிதலில் இரண்டாம் இடம் பிடித்து இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றார்.

9. Caeleb Dressel makes world record in 100-metre swimming in butterfly category

  • American swimmer Caeleb Dressel finished in 49.45 seconds in 100m-etre swimming in butterfly category, breaking the record of Hungary’s Kristof Milak.
  • This is his third gold medal in the Tokyo Olympics 2020.

 

9. 100 மீட்டர் நீச்சல் பட்டர்ஃபிளை பிரிவில் கேலப் டிரஸ்ஸல் உலக சாதனை படைத்துள்ளார்

  • அமெரிக்க நீச்சல் வீரர் கேலப் டிரஸ்ஸல் 100 மீட்டர் நீச்சலில் பட்டர்ஃபிளை பிரிவில் 45 விநாடிகளில் முடித்தார். இது ஹங்கேரியின் கிறிஸ்டோப் மிலாக்கின் சாதனையை முறியடித்தது.
  • டோக்கியோ ஒலிம்பிக் 2020இல் அவர் பெறும் மூன்றாவது தங்கப் பதக்கம் இதுவாகும்.

IMPORTANT DAYS


10. World Ranger Day 31 July

  • World Ranger Dayis observed annually by the International Ranger Federation on 31 July in memory of the rangers killed or injured while on duty and to celebrate the work that rangers do to protect the world’s natural and cultural heritage.
  • 31 July marks the day onwhich the International Ranger Federation (IRF) was founded in 1992. This day was first held in 

 

10. சர்வதேச ரேஞ்சர் தினம் 31 ஜூலை

  • சர்வதேச ரேஞ்சர் தினம், ஆண்டுதோறும் 31 ஜூலை அன்று கடமையின் போது காயம்பட்ட அல்லது கொல்லப்பட்ட ரேஞ்சர்கள் மற்றும் உலகின் இயற்கை மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாக்கும் ரேஞ்சர்களின் நினைவாக சர்வதேச ரேஞ்சர் கூட்டமைப்பு மூலம் அனுசரிக்கப்படுகிறது.
  • 31 ஜூலை 1992இல் சர்வதேச ரேஞ்சர் கூட்டமைப்பு (ஐஆர்எஃப்) நிறுவப்பட்ட நாளைக் குறிக்கிறது. இந்த நாள் முதலில் 2007இல் அனுசரிக்கப்பட்டது.