TNPSC Current Affairs – English & Tamil – July 6th, 2021

TNPSC Aspirants,

The Current Affairs Section is one of the most important topics for the upcoming TNPSC Group I, Group II/IIA, Group IV, and TNUSRB Exams.

Check today’s TNPSC Daily Current Affairs(6th July, 2021) in this post.

Aspirants can expect questions from the Daily Current Affairs section in the upcoming TNPSC Exams and learning the Current Affairs section will also aid them in successfully preparing for the descriptive paper. So this process is a 2 in 1 initiative.

To make the learning more convenient, we will be providing the TNPSC Daily Current Affairs in both ENGLISH & TAMIL. This has been made in such a way that reflects the TNPSC pattern as TNPSC uses both the languages in the Question Paper and this will also make the preparations of the aspirants meaningful and will 100% fulfill the needs of the aspirants.


Download PDF – TNPSC Daily Current Affairs – English & Tamil – July 6th, 2021


TAMIL NADU


1. Ashok Upreti was appointed as the Head of the Forest Department of Tamil Nadu

  • IFS Officer Ashok Upreti was posted as the Principal Chief Conservator of Forest (PCCF) and the Head of the Forest Department of Tamil Nadu. He replaced Yuvaraj.
  • Shekhar Kumar Niraj, APCCF and Special Secretary, Forests, was promoted as PCCF and Chief Wildlife Warden of Tamil Nadu. He replaced Syed Muzamil Abbas.
  • Syed Muzamil Abbas was posted as the Chairman of Arasu Rubber Corporation.

 

1. தமிழ்நாடு வனத்துறையின் தலைவராக அசோக் உப்ரேத்தி நியமிக்கப்பட்டுள்ளார்

  • ஐ.எஃப்.எஸ். அதிகாரி அசோக் உப்ரேட்டி முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் (பி.சி.சி.எஃப்) மற்றும் தமிழ்நாடு வனத்துறை தலைவராக நியமிக்கப்பட்டார். எஸ். யுவராஜுக்குப் பதிலாக அவர் நியமிக்கப்பட்டார்.
  • ஏ.பி.சி.சி.எஃப் மற்றும் வனத்துறை சிறப்பு செயலாளர் சேகர் குமார் நிராஜ் பி.சி.சி.எஃப் மற்றும் தமிழ்நாடு தலைமை வனவிலங்கு காப்பாளராக பதவி உயர்வு பெற்றார். அவர் சையத் முஸாமில் அப்பாஸுக்குப் பதிலாக நியமிக்கப்பட்டார்.
  • அரசு ரப்பர் கார்ப்பரேஷனின் தலைவராக சையத் முஸாமில் அப்பாஸ் நியமிக்கப்பட்டார்.

2. Green Committees have been formed at the state and district levels in Tamil Nadu to prevent the felling of trees

  • As per the orders of the Madras High Court, Green Committees have been constituted at the state and district levels to prevent the felling of trees in government lands, public spaces and government offices and to make recommendations on the removal of fallen trees.
  • The State Green Committee is headed by the Secretary of the Environment, Climate Change and Forests in the Government of Tamil Nadu. This committee consists of Secretaries to Industries, Rural Development, Municipal Administration, Revenue, Tourism, Public Works and Highways and DGP of Tamil Nadu. The Principal Chief Conservator of Forests will be the Member Secretary.
  • District Level Green Committees are formed in all districts under the Chairmanship of the District Collector. The District Revenue Officer, District Superintendent of Police, Rural Development, Municipal Administration, Agriculture, Revenue, Highways, Public Works, Charitable Endowments, Top Industrial Officers or Representatives will be members of two experts on behalf of social organisations. The District Forest Officer will be the Member Secretary.
  • The State Level Committee will provide policy-based assistance to the District Level Committee. The committee will meet every 3 months and formulate plans.

 

2. மரங்கள் வெட்டப்படுவதை தடுக்க தமிழ்நாட்டில் மாநில மற்றும் மாவட்ட அளவில் பசுமைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன

  • சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் படி, அரசு நிலங்கள், பொது வெளிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் மரங்களை வெட்டுவதைத் தடுக்கவும், கீழே விழுந்தமரங்களை அகற்றுவது தொடர்பான பரிந்துரைகளை வழங்கவும் மாநில மற்றும் மாவட்ட அளவில் பசுமைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
  • மாநில பசுமைக் குழுவானது, தமிழக அரசின் சுற்றுச்சூழல், பருவகால மாறுபாடு மற்றும் வனத்துறை செயலர் தலைமையில் அமைக்கப்படுகிறது. இக்குழுவில், தொழில், ஊரக வளர்ச்சி, நகராட்சி நிர்வாகம், வருவாய், சுற்றுலா, பொதுப்பணி, நெடுஞ்சாலைத் துறைகளின் செயலர்கள், தமிழக டிஜிபி ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள். முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் உறுப்பினர் செயலராக இருப்பார்.
  • மாவட்ட அளவிலான பசுமை குழுக்கள் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் உருவாக்கப்படுகின்றன. இதில் மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், ஊரக வளர்ச்சி, நகராட்சி நிர்வாகம், வேளாண்மை, வருவாய், நெடுஞ்சாலை, பொதுப்பணி, அறநிலையம், தொழில்துறை உயர் அதிகாரிகள் அல்லது பிரதிநிதிகள், சமூக அமைப்புகளின் சார்பில் இரு வல்லுநர்கள் உறுப்பினர்களாக இருப்பார்கள். மாவட்ட வன அதிகாரி உறுப்பினர் செயலராக இருப்பார்.
  • மாநில அளவிலான குழுவானது, மாவட்ட அளவிலான குழுவிற்கு கொள்கை அடிப்படையிலான உதவிகளை வழங்கும். 3 மாதங்களுக்கு ஒருமுறை இந்த குழு கூடி திட்டங்களை வகுக்கும்.

NATIONAL


3. Mary Kom and Manpreet Singh to be India’s flag-bearers at the Tokyo Olympics 2020 opening ceremony

  • Indian Olympic Association has announced that six-time world champion boxer Mary Kom and men’s hockey team skipper Manpreet Singh will be India’s flag-bearers at Tokyo Olympics 2020 opening ceremony.
  • Indian Wrestler Bajrang Punia will be the flag-bearer at the closing ceremony of the Tokyo Olympics 2020.
  • Abhinav Bindra, the only Olympic gold medalist of India, was the flag-bearer at the 2016 Rio de Janeiro Olympic Games.

 

3. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் 2020இன் தொடக்க விழாவில் இந்தியாவின் மேரி கோம் மற்றும் மன்பிரீத் சிங் கொடி ஏந்தவுள்ளனர்

  • டோக்கியோ ஒலிம்பிக் 2020இன் தொடக்க விழாவில் ஆறு முறை உலக சாம்பியன் குத்துச்சண்டை வீராங்கனையான மேரி கோம் மற்றும் ஆண்கள் ஹாக்கி அணித் தலைவர் மன்பிரீத் சிங் ஆகியோர் இந்திய கொடியேந்த உள்ளனர் என்று இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவித்துள்ளது.
  • டோக்கியோ ஒலிம்பிக் 2020இன் நிறைவு விழாவில் இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா கொடியேந்துவார்.
  • 2016 ரியோ டி ஜெனிரோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் ஒரே ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற வீரரான அபினவ் பிந்த்ரா கொடியேந்தினார்.

4. Union Health Ministry launches ‘COVID GuruKool’ informational video series

  • Union Health and Family Welfare Ministry has launched ‘COVID GuruKool’, an informational video series on its social media platforms. These informational videos are aimed at disseminating authentic information on the COVID-19 pandemic and vaccination program.

 

4. ‘கோவிட் குருகூல்’ தகவல் வீடியோ தொடரை மத்திய சுகாதார அமைச்சகம் தொடங்கியது

  • மத்திய சுகாதார அமைச்சகம் தனது சமூக ஊடக தளங்களில் தகவல் வீடியோ தொடரான கோவிட் குருகூல்’ ஐ தொடங்கியுள்ளது. கோவிட்-19 பெருந்தொற்று மற்றும் தடுப்பூசி திட்டங்கள் பற்றிய உண்மையான தகவல்களை வெளியிடுவதை இத்தகவல் வீடியோ தொடர் நோக்கமாகக் கொண்டுள்ளது.

INTERNATIONAL


5. China launches the Fengyun-3E meteorological satellite

  • China has launched the Fengyun-3E (FY-3E) meteorological satellite from the Jiuquan Satellite Launch Centre. This is the fifth of the Fengyun-3 series of meteorological satellites.
  • The satellite was launched by the Long March-4C rocket.

 

5. சீனா ஃபெங்யுன்-3 வானிலை செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது

  • ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து ஃபெங்யுன்-3 (FY-3E) வானிலை செயற்கைக்கோளை சீனா விண்ணில் செலுத்தியது. இது ஃபெங்யுன்-3 வானிலை செயற்கைக்கோள் தொடரில் ஐந்தாவது ஆகும்.
  • இந்த செயற்கைக்கோள் லாங் மார்ச்-4சி ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.

PERSONS IN NEWS


6. Father Stan Swamy passed away

  • Father Stanislaus Lourduswamy passed away. He was popularly known as Father Stan Swamy. He was born at Trichy on 26 April 1937. He was a priest for 51 years and fought for jal (water), jungle (forest) and zameen (land) for tribal people.

 

6. அருட்தந்தை ஸ்டான் சுவாமி காலமானார்

  • அருட்தந்தை ஸ்டானிஸ்லாஸ் லூர்துசுவாமி காலமானார். அவர் அருட்தந்தை ஸ்டான் சுவாமி என்று பிரபலமாக அறியப்பட்டார். அவர் 26 ஏப்ரல் 1937 அன்று திருச்சியில் பிறந்தார். அவர் 51 ஆண்டுகள் பாதிரியாராக இருந்தார். பழங்குடி மக்களுக்காக ஜல் (தண்ணீர்), காடு (காடு) மற்றும் ஜமீன் (நிலம்) ஆகியவற்றிற்காக போராடினார்.

APPOINTMENTS


7. President Ram Nath Kovind appoints new Governors in 8 states

S.No GOVERNORS STATES
1. Thaawarchand Gehlot Karnataka
2. Bandaru Dattatraya Haryana
3. P. S. Sreedharan Pillai Goa
4. Satyadeo Narain Arya  Tripura
5. Ramesh Bais Jharkhand 
6. Hari Babu Kambhampati Mizoram
7. Mangubhai Chhaganbhai Patel Madhya Pradesh
8. Rajendra Vishwanath Arlekar Himachal Pradesh

 

Appointment of Governor:

  • Article 155 of the Indian Constitution states “Governor to be appointed by the President”.
  • Governor holds the office during the pleasure of the President. He is not an agent of the Central Government.
  • A Governor can be appointed as the Governor of two or more s
  • The person should not be a Member of Parliament or State Legislature during the appointment.

 

7. குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் 8 மாநிலங்களில் புதிய ஆளுநர்களை நியமித்தார்

. எண் ஆளுநர் மாநிலம்
1. தாவர்சந்த் கெலாட் கர்நாடகம்
2. பண்டாரு தத்தாத்ரேயா ஹரியானா
3. பிஎஸ் ஸ்ரீதரன் பிள்ளை கோவா
4. சத்யதேவ் நரைண் ஆர்யா திரிபுரா
5. ரமேஷ் பைஸ் ஜார்க்கண்ட்
6. ஹரி பாபு கம்பம்பட்டி மிசோரம்
7. மாங்குபாய் சாகன்பாய் படேல் மத்திய பிரதேசம்
8. ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் ஹிமாச்சல பிரதேசம்

 

ஆளுநர் நியமனம்:

  • இந்திய அரசியலமைப்பின் 155வது விதி, குடியரசுத் தலைவரால் ஆளுநர் நியமிக்கப்பட வேண்டும் என்று கூறுகிறது.
  • குடியரசுத் தலைவரின் நினைக்கும் வரை ஆளுநர் பதவி வகிக்கிறார். அவர் மத்திய அரசின் முகவர் அல்ல.
  • ஒரு ஆளுநரை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு ஆளுநராக நியமிக்கலாம்.
  • அந்நபர் நியமனத்தின் போது, நாடாளுமன்ற உறுப்பினராகவோ அல்லது மாநில சட்டமன்ற உறுப்பினராகவோ இருக்கக்கூடாது.

SPORTS


8. Three athletes from Tamil Nadu has made into the India’s 4×400 m mixed relay teams for the Tokyo Olympics 2020

  • Sarthak Bhambri, Alex Antony, Revathi Veeramani, Subha Venkatesan and Dhanalakshmi Sekar have been named in the 4×400 m mixed relay team at the Tokyo Olympic 2020 Games by the Athletics Federation of India. Three athletes from Tamil Nadu have made it to the list.
  • Muhammad Anas, Amoj Jacob, Arokia Rajiv, Noah Nirmal Tom and Naganathan Pandi have been named for the men’s 4×400 m relay

 

8. டோக்கியோ ஒலிம்பிக் 2020க்கான இந்தியாவின் 4×400 மீ கலப்பு தொடர் ஓட்ட அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தடகள வீரர்கள் மூன்று பேர் தேர்வு பெற்றுள்ளனர்

  • டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் 2020இல் நடைபெறவுள்ள 4×400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்ட அணியில் சர்தக் பாம்ப்ரி, அலெக்ஸ் ஆண்டனி, ரேவதி வீரமணி, சுபா வெங்கடேஷ் மற்றும் தனலட்சுமி சேகர் ஆகியோர் இந்திய தடகள சம்மேளனத்தால் பெயரிடப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டிலிருந்து மூன்று தடகள வீராங்கனைகள் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
  • ஆண்கள் 4×400 மீ தொடர் ஓட்ட அணிக்காக முஹம்மது அனஸ், அமோஜ் ஜேக்கப், அரோகியா ராஜீவ், நோவா நிர்மல் டாம் மற்றும் நாகநாதன் பாண்டி ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

IMPORTANT DAYS


9. World Zoonoses Day – 6 July

  • World Zoonoses Day is observed on 6 July annually to raise awareness about the risk of zoonotic diseases and their prevention. This day marks the first vaccination against a zoonotic disease, Rabies, by Louis Pasteur on 6 July 1885.
  • Zoonosis is an infectious disease that spread from animals to humans.
  • Theme 2021: “Let’s Break the Chain of Zoonotic Transmission”

 

9. உலக விலங்குவழி நோய்கள் தினம் – 6 ஜூலை

  • விலங்குவழி நோய்களின் ஆபத்து மற்றும் அவற்றை தடுப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக உலக விலங்குவழி நோய்கள் தினம் ஆண்டுதோறும் 6 ஜூலை அன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள் 6 ஜூலை 1885 அன்று லூயிஸ் பாஸ்டரால் விலங்குவழி நோயான வெறி நாய் கடிக்கு எதிராக செலுத்தப்பட்ட முதல் தடுப்பூசியைக் குறிக்கிறது.
  • விலங்குவழி நோய் (ஜூனோசிஸ்) என்பது விலங்குகளிலிருந்து மனிதர்களுக்குப் பரவும் ஒரு தொற்று நோயாகும்.
  • கருப்பொருள் 2021: விலங்குவழி நோய் தொற்று சங்கிலியை உடைப்போம்

DAY IN HISTORY


10. Shyama Prasad Mukherji Birth Anniversary – 6 July

  • Shyama Prasad Mukherji was born on 6 July 1901. He served as the Union Minister of Industry and Supply in Nehru’s Cabinet. He resigned in protest of the Nehru-Liaquat pact. He was the founder of Bharatiya Jana Sangh, the precursor of Bharatiya Janata Party, in

 

10. சியாமா பிரசாத் முகர்ஜி பிறந்த நாள் – 6 ஜூலை

  • சியாமா பிரசாத் முகர்ஜி 6 ஜூலை 1901 அன்று பிறந்தார். நேருவின் அமைச்சரவையில் மத்திய தொழில் மற்றும் வழங்கல் அமைச்சராக பணியாற்றினார். நேருலியாகத் ஒப்பந்தத்தை எதிர்த்து அவர் தனது அமைச்சர் ராஜினாமா செய்தார். 1951ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியின் முன்னோடியான பாரதிய ஜன சங்கத்தை அவர் நிறுவினார்.

KNOW AN INSTITUTION


11. GST Council

  • GST Council is a constitutional body set up under Article 279A of the Indian Constitution.
  • The Council recommends the Union and state governments on issues related to the Goods and Services Tax.
  • The GST Council is chaired by the Union Finance Minister.
  • The members of the GST Council are the Union Minister of State of Revenue or Finance and Ministers in charge of Finance or Taxation of all the states.

 

11. ஜிஎஸ்டி கவுன்சில்

  • ஜிஎஸ்டி கவுன்சில் என்பது இந்திய அரசியலமைப்பின் 279 விதியின் கீழ் நிறுவப்பட்ட அமைப்பு ஆகும்.
  • இது சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பான பிரச்சினைகளில் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு பரிந்துரை செய்கிறது.
  • ஜிஎஸ்டி கவுன்சில் மத்திய நிதியமைச்சர் தலைமையில் இயங்கும்.
  • மத்திய வருவாய் அல்லது நிதி அமைச்சர் மற்றும் அனைத்து மாநிலங்களின் நிதி அல்லது வரிவிதிப்புக்கு பொறுப்பான அமைச்சர்கள் ஜிஎஸ்டி கவுன்சிலின் உறுப்பினர்கள் ஆவர்.