TNPSC Current Affairs – English & Tamil – June 9, 2021
Want to Become a Bank, Central / State Govt Officer in 2020?
Join the Most awarded Coaching Institute & Get your Dream Job
Now Prepare for Bank, SSC Exams from Home. Join Online Coure @ lowest fee
Lifetime validity Bank Exam Coaching | Bank PO / Clerk Coaching | Bank SO Exam Coaching | All-in-One SSC Exam Coaching | RRB Railway Exam Coaching | TNPSC Exam Coaching | KPSC Exam Coaching
TNPSC Current Affairs – English & Tamil – June 9, 2021
TNPSC Aspirants,
The Current Affairs Section is one of the most important topics for the upcoming TNPSC Group I, Group II/IIA, Group IV, and TNUSRB Exams.
Check today’s TNPSC Daily Current Affairs(9th June, 2021) in this post.
Aspirants can expect questions from the Daily Current Affairs section in the upcoming TNPSC Exams and learning the Current Affairs section will also aid them in successfully preparing for the descriptive paper. So this process is a 2 in 1 initiative.
To make the learning more convenient, we will be providing the TNPSC Daily Current Affairs in both ENGLISH & TAMIL. This has been made in such a way that reflects the TNPSC pattern as TNPSC uses both the languages in the Question Paper and this will also make the preparations of the aspirants meaningful and will 100% fulfill the needs of the aspirants.
Download PDF – TNPSC Daily Current Affairs – English & Tamil – June 9, 2021
POLITY
- The Supreme Court has directed the States and the Union Territories to take stringent action against illegal adoption of children orphaned by the COVID-19 pandemic
- The Supreme Court has directed the States and the Union Territories to take stringent action against private individuals and NGOs who invite people to adopt children orphaned by the COVID-19 pandemic illegally.
- It was illegal to invite strangers to adopt children without the involvement of the Central Adoption Resource Authority (CARA). No adoption of affected children is permitted contrary to the provisions of the Juvenile Justice Act, 2015.
- National Commission for Protection of Child Rights (NCPCR) statistics show that 3,621 children were orphaned, 26,176 children lost either parent and 274 were abandoned between 1 April 2021 to 5 June 2021.
Central Adoption Resource Authority (CARA):
- Central Adoption Resource Authority (CARA) is a statutory body under the Union Ministry of Women and Child Development.
- It functions as the nodal body for adoption of Indian childrenand is mandated to monitor and regulate in-country and inter-country adoptions.
- It is also mandated to frame regulations on adoption-related matters from time to time as per Section 68 of the Juvenile Justice (Care and Protection of Children) Act, 2015.
- கோவிட்-19 தொற்றுநோயால் பெற்றோரை இழந்த குழந்தைகளை சட்டவிரோதமாக தத்தெடுப்பதற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது
- கோவிட்-19 தொற்றுநோயால் பெற்றோரை இழந்த குழந்தைகளை சட்டவிரோதமாக தத்தெடுக்க மக்களை அழைக்கும் தனியார் நபர்கள் மற்றும் அரசு சாரா அமைப்புகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
- மத்திய தத்தெடுப்பு ஆணையத்தின் (CARA) அனுமதியின்றி குழந்தைகளை தத்தெடுக்க அந்நியர்களை அழைப்பது சட்டவிரோதமானது. இளைஞர் நீதிச் சட்டம், 2015இன் விதிகளுக்கு முரணாக பாதிக்கப்பட்ட குழந்தைகளை தத்தெடுப்பதற்கு அனுமதி இல்லை.
- 1 ஏப்ரல் 2021 முதல் 5 ஜூன் 2021 வரை 3,621 குழந்தைகள் ஆதரவின்றியும், 26,176 குழந்தைகள் ஏதேனும் ஒரு பெற்றோரை இழந்ததாகவும், 274 குழந்தைகள் கைவிடப்பட்டதாகவும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் (NCPCR) புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
மத்திய தத்தெடுப்பு ஆணையம் (CARA):
- மத்திய தத்தெடுப்பு ஆணையம் (CARA) என்பது மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் சட்டப்பூர்வ அமைப்பாகும்.
- இது இந்திய குழந்தைகளை தத்தெடுப்பதற்கான ஒருங்கிணைப்பு அமைப்பாக செயல்படுகிறது மற்றும் நாட்டிற்குள் மற்றும் நாடுகளுக்கு இடையிலான தத்தெடுப்புகளை கண்காணிக்கவும் ஒழுங்குபடுத்தவும் அமைக்கப்பட்டுள்ளது.
- இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம், 2015இன் பிரிவு 68இன்படி தத்தெடுப்பு தொடர்பான விஷயங்களில் அவ்வப்போது விதிமுறைகளை வகுக்கவும் இவ்வமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
NATIONAL
- NITI Aayog and Piramal Foundation launches ‘Surakshit Hum Surakshit Tum Abhiyaan’ in 112 Aspirational Districts
- NITI Aayog and Piramal Foundation launched ‘Surakshit Hum Surakshit Tum Abhiyaan’ in 112 Aspirational Districts for providing home-care support to COVID-19 patients who are asymptomatic or have mild symptoms.
- It is a part of a special initiative in which local leaders, civil societies and volunteers work with district administrations to address emerging problems across key focus areas of the Aspirational Districts Programme.
- The campaign will be led by District Magistrates. Piramal Foundation will work with district magistrates to support the training of NGOs and volunteers.
- நிதி ஆயோக் மற்றும் பிரமல் அறக்கட்டளை 112 ஆர்வமுள்ள மாவட்டங்களில் ‘சுரக்ஷித் ஹம் சுரக்ஷித் தும் அபியான்‘ திட்டத்தை தொடங்குகியுள்ளன
- நிதி ஆயோக் மற்றும் பிரமல் அறக்கட்டளை ஆகியவை அறிகுறியற்ற அல்லது லேசான அறிகுறிகளைக் கொண்ட கோவிட்-19 நோயாளிகளுக்கு வீட்டு பராமரிப்பு ஆதரவை வழங்குவதற்காக 112 ஆர்வமுள்ள மாவட்டங்களில் ‘சுரக்ஷித் ஹம் சுரக்ஷித் தும் அபியான்‘ என்ற திட்டத்தைத் தொடங்கின.
- இத்திட்டம் உள்ளூர் தலைவர்கள், குடிமை சங்கங்கள் மற்றும் தன்னார்வலர்கள் மாவட்ட நிர்வாகங்களுடன் இணைந்து ஆர்வமுள்ள மாவட்டங்களின் முக்கிய பகுதிகளில் வளர்ந்து வரும் பிரச்சினைகளை தீர்க்கும் ஒரு சிறப்பு முயற்சியின் ஒரு பகுதியாகும்.
- இத்திட்டத்தை மாவட்ட தலைமை நீதிபதிகள் வழிநடத்துவார்கள். அரசு சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்களின் பயிற்சிக்கு ஆதரவளிப்பதற்கு பிரமல் அறக்கட்டளை மாவட்ட நீதிபதிகளுடன் இணைந்து செயல்படும்.
- India elected to the UN Economic and Social Council for term 2022-24
- India has been elected to the United Nations Economic and Social Council (ECOSOC) for the term 2022-24.
- Permanent Representative of India to the United Nations: S. Tirumurti
United Nations Economic and Social Council (ECOSOC)
- ECOSOC is the principal body for coordination, policy review, policy dialogue and recommendations on economic, social and environmental issues.
- It has 54 memberselected by the General Assembly for overlapping three-year
- 2022-24ஆம் ஆண்டுக்கான ஐ.நா. பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலுக்கு இந்தியா தேர்வுசெய்யப்பட்டுள்ளது
- 2022-24ஆம் ஆண்டுக்கான ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூகக் கவுன்சிலுக்கு (ECOSOC) இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
- ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்திய நிரந்தர பிரதிநிதி: டி. எஸ். திருமூர்த்தி.
ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக சபை (ECOSOC)
- ECOSOC பொருளாதார, சமூக மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்த ஒருங்கிணைப்பு, கொள்கை மறுஆய்வு, கொள்கை உரையாடல் மற்றும் பரிந்துரைகளுக்கான முக்கிய அமைப்பாக உள்ளது.
- இவ்வமைப்பு 54 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. அவர்கள் மூன்று ஆண்டு பதவிக்காலத்திற்கு பொதுச் சபையால் தேர்ந்தெடுக்கப்படுவர்.
- Weyan village of Kashmir becomes the first 100% Covid vaccinated village in India
- Weyan village of Kashmir became the first village to vaccinate 100% of adults against Covid in India. Weyan is a remote village in Jammu and Kashmir’s Bandipora district.
- Vaccination in Weyan village was covered under the J&K model, a 10-point strategy to vaccinate everyone who is eligible at a faster pace.
- காஷ்மீரின் வேயான் கிராமம் இந்தியாவின் முதல் 100% கோவிட் தடுப்பூசி போடப்பட்ட கிராமமாக மாறியுள்ளது
- கோவிட்-19க்கு எதிராக 100% வயதுவந்தோருக்கு தடுப்பூசி போட்ட இந்தியாவின் முதல் கிராமமாக காஷ்மீரின் வேயான் கிராமம் மாறியது. வேயான் கிராமம் ஜம்மு காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் உள்ள ஒரு குக்கிராமம் ஆகும்.
- வேயான் கிராமத்தின் தடுப்பூசி முன்முயற்சி, தகுதியுள்ள அனைவருக்கும் வேகமாக தடுப்பூசி போடுவதற்கான ஜம்மு-காஷ்மீர் மாதிரியின் கீழ் உள்ள 10 அம்ச மூலோபாயத்தில் உள்ளடக்கப்பட்ட திட்டமாகும்.
APPOINTMENTS
- United Nations Security Council (UNSC) elects Antonio Guterres as UN Chief for the second term
- United Nations Security Council (UNSC) elected Antonio Guterres as UN Chief for the second term.
- Antonio Guterres is the former Prime Minister of Portugal, and he is in the office since 2017.
- ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை (UNSC) இரண்டாவது முறையாக அன்டோனியோ குட்டரெஸை ஐ.நா.வின் தலைவராக தேர்ந்தெடுத்துள்ளது
- ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை (UNSC) இரண்டாவது முறையாக அன்டோனியோ குட்டரெஸை ஐ.நா.வின் தலைவராக தேர்ந்தெடுத்தது.
- அன்டோனியோ குட்டரெஸ் போர்ச்சுகல் முன்னாள் பிரதமர் ஆவார். அவர் 2017 முதல் இப்பதவியில் உள்ளார்.
- Maldives Finance Minster Abdulla Shahid elected as the President of 76th Session of UN General Assembly
- Maldives Foreign Minister Abdulla Shahid was elected as the President of the 76th Session of the UN General Assembly. Shahid will preside over the 76th Session of the UN body that will commence in September.
President of UN General Assembly
- The President of the UN General Assembly is elected every year by a secret ballot and requires a simple majority vote of the 193-member General Assembly. According to the regional rotation, the President of the 76th Session of the General Assembly was to be elected from the Group of Asia-Pacific States. Shahid succeeded Turkish diplomat Volkan Bozkir.
- ஐ.நா. பொதுச் சபையின் 76வது கூட்டத்தொடரின் அதிபராக மாலத்தீவு நிதி அமைச்சர் அப்துல்லா ஷாஹித் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
- ஐ.நா. பொதுச் சபையின் 76வது கூட்டத்தொடரின் தலைவராக மாலத்தீவு நிதி அமைச்சர் அப்துல்லா ஷாஹித் தேர்ந்தெடுக்கப்பட்டார். செப்டம்பரில் தொடங்கும் ஐ.நா. அமைப்பின் 76வது கூட்டத்தொடருக்கு ஷாஹித் தலைமை தாங்குவார்.
ஐ.நா. பொதுச்சபையின் தலைவர்
- ஐ.நா. பொதுச் சபையின் தலைவர் ஒவ்வொரு ஆண்டும் இரகசிய வாக்கெடுப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார். மேலும் அவரை தேர்ந்தெடுக்க 193 உறுப்பினர்களைக் கொண்ட பொதுச் சபையின் சாதாரண பெரும்பான்மை வாக்கெடுப்பு தேவைப்படுகிறது. பிராந்திய சுழற்சியின்படி, பொதுச் சபையின் 76வது கூட்டத்தொடரின் தலைவர் ஆசிய-பசிபிக் நாடுகளின் குழுவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். துருக்கிய தூதர் வோல்கன் போஸ்கினுக்குப் பிறகு ஷாஹித் பதவியேற்றார்.
- President appoints Anup Chandra Pandey as the 25th Chief Election Commissioner of India
- President appointed Anup Chandra Pandey as the 25th Chief Election Commissioner of India. He succeeded Sunil Arora.
Election Commission of India:
- Article 324 of the Indian Constitution deals with the Election Commission of India. It is a quasi-judiciary body. It consists of one Chief Election Commissioner and other Election Commissioners, whose composition is determined by the President.
- They are appointed for 6 years or till 65 years of age. They are eligible for reappointment. Removal of Chief Election Commissioner and other Election Commissioners are the same as that of Supreme Court Judges.
- குடியரசுத் தலைவர் அனுப் சந்திர பாண்டேவை இந்தியாவின் 25வது தலைமைத் தேர்தல் ஆணையராக நியமித்துள்ளார்
- குடியரசுத் தலைவர் அனுப் சந்திர பாண்டேவை இந்தியாவின் 25வது தலைமைத் தேர்தல் ஆணையராக நியமித்தார். அவர் சுனில் அரோராவுக்குப் பிறகு பதவியேற்கிறார்.
இந்திய தேர்தல் ஆணையம்:
- இந்திய அரசியலமைப்பின் 324வது விதி இந்திய தேர்தல் ஆணையத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறது. இது ஒரு அரை–நீதித்துறை அமைப்பாகும். இதில் ஒரு தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் மற்ற தேர்தல் ஆணையர்கள் ஆகியோர் அடங்குவர். இதன் அமைப்பு குடியரசுத் தலைவரால் தீர்மானிக்கப்படுகிறது.
- அவர்கள் 6 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை நியமிக்கப்படுகிறார்கள். அவர்கள் மீண்டும் நியமனம் செய்ய தகுதி பெறுகின்றனர். தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்களை நீக்குதலில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நீக்கும் நடைமுறைகளே பின்பற்றப்படும்.
TAMIL NADU
- Tamil Nadu Chief Minister Stalin launches financial assistance scheme of Rs. 3,000 per month for economically weaker artists
- Tamil Nadu Chief Minister Stalin launched a financial assistance scheme of 3,000 per month for economically weaker artists of Tamil Nadu.
- The assistance will be provided through the Tamil Nadu Eyal Isai Nataka Manram of the Tamil Nadu Department of Arts and Culture at the rate of 500 economically weaker artists each for the two years.
- The monthly assistance given to economically weaker artists is raised from Rs. 2000 to Rs. 3000. Under this scheme, 60 classical and rural artists in Tamil Nadu will be benefited.
- நலிந்த கலைஞர்களுக்கு மாதம் ரூ. 3,000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
- தமிழ்நாட்டில் உள்ள நலிந்த கலைஞர்களுக்கு மாதம் ரூ. 3,000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.
- இவ்வுதவித் திட்டம் தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத் துறையின் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் வாயிலாக பொருளாதாரத்தில் நலிந்த நிலையில் வாழும் சிறந்த கலைஞர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு தலா 500 நலிந்த கலைஞர்கள் வீதம் வழங்கப்படும்.
- நலிந்த கலைஞர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர நிதியுதவி ரூ. 2000த்திலிருந்து ரூ. 3000ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் உள்ள 60 அகவை முதிர்ந்த செவ்வியல் மற்றும் கிராமியக் கலைஞர்கள் பயன்பெறுவார்கள்.
- The Greater Chennai Corporation is all set to launch Singara Chennai 2.0. The main purpose of Singara Chennai 2.0 is to redesign and redevelop Chennai city as a global destination for livability and sustainability.
Highlights of Singara Chennai 2.0:
- ‘Project Blue,’ a comprehensive development of beaches
- An underwater aquarium and aqua zones for water sports
- Biorock technology will be used for the generation of coral reefs
- An art district in the Chennai city
- A science, engineering, technology and mathematics park for students to learn basic principles will be developed in the city
- A pet park, science park and multi-sports complex
- Launch of community radio for residents
- All Corporation schools will get smart facilities and higher education support
Singara Chennai 1.0
- Singara Chennai 1.0 was launched by Stalin in 1996, when he was the Chennai Mayor to develop the infrastructure of Chennai city. So, he was fondly called as ‘Managara Thanthai’ (Father of the city). However, the initiative was discontinued by the next governments.
- Note: MK Stalin is the city’s first directly elected Mayor in 1996.
- பெருநகர சென்னை மாநகராட்சி சிங்கார சென்னை 2.0 திட்டத்தை தொடங்கவிருக்கிறது
- பெருநகர சென்னை மாநகராட்சி சிங்கார சென்னை0 திட்டத்தை தொடங்கவிருக்கிறது. சென்னை, 2.0இன் முக்கிய நோக்கம், சென்னை நகரத்தை மறுவடிவமைப்பு செய்து, உலக அளவில் வாழக்கூடிய மற்றும் நிலைத்தன்மைக்கான இடமாக மாற்றியமைக்க வேண்டும் என்பதாகும்.
சிங்கார சென்னை 2.0இன் சிறப்பம்சங்கள்:
- ‘புராஜெக்ட் ப்ளூ‘(Project Blue), கடற்கரைகளின் விரிவான வளர்ச்சித்திட்டம்
- நீருக்கடியில் ஒரு நீர்காட்சிசாலை நீர் விளையாட்டுகளுக்காக நீர் மண்டலங்கள்
- பவளப்பாறைகளை உருவாக்க உயிரி–பாறை (பயோராக்) தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்
- சென்னை நகரில் ஒரு கலை மாவட்டம்
- மாணவர்கள் அடிப்படைக் கொள்கைகளைக் கற்றுக்கொள்ள அறிவியல், பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் கணிதப் பூங்கா நகரத்தில் உருவாக்கப்படும்
- ஒரு செல்லப்பிராணி பூங்கா, அறிவியல் பூங்கா மற்றும் பல விளையாட்டு வளாகங்கள்
- குடியிருப்பாளர்களுக்கான சமூக வானொலி
- அனைத்து மாநகராட்சி பள்ளிகளுக்கும் ஸ்மார்ட் வசதிகள் மற்றும் உயர் கல்வி ஆதரவு கிடைக்கும்
சிங்கார சென்னை 1.0
- சென்னை மாநகரின் உள்கட்டமைப்பை மேம்படுத்த 1996இல் சென்னை மேயராக இருந்தபோது, சிங்கார சென்னை0 என்ற திட்டத்தை ஸ்டாலின் தொடங்கி வைத்தார். எனவே, அவர் ‘மாநகர தந்தை‘ (Father of the city) என்று அழைக்கப்பட்டார். எனினும், இந்த முன்முயற்சி அடுத்த அரசாங்கங்களால் நிறுத்தப்பட்டது.
- குறிப்பு: மு.க.ஸ்டாலின் 1996 இல் சென்னை நகரத்தில் நேரடி தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர் ஆனார்.
DAY IN HISTORY
- Birsa Munda’s death anniversary – 9 June
- Birsa Munda’s death anniversary is observed on 9 June every year. Birsa Munda was born in in 1874. He declared himself a divine messenger to drive away from the British and establish Munda rule in his region.
Munda Rebellion
- Munda Rebellion (ulgulan) led by Birsa Munda, occurred during 1899-1900. Mundas were a prominent tribe in the Bihar region. During the British rule, their system of common land holdings was destroyed. Jagirdars, thikadars (revenue farmers), and moneylenders grabbed the land owned by them.
- Under the influence of Birsa Munda, the Mundas strongly opposed non-tribals occupying tribal lands. He urged the Munda cultivators not to pay rent to the zamindars. Birsa Munda led a revolt in the Chotta Nagpur region. Birsa became a martyr in Ranchi jail on 9 June 1900.
- பிர்சா முண்டாவின் நினைவு நாள் – 9 ஜூன்
- பிர்சா முண்டாவின் நினைவு நாள் ஒவ்வொரு ஆண்டும் 9 ஜூன் அன்று அனுசரிக்கப்படுகிறது. பிர்சா முண்டா 1874இல் பிறந்தார். பிரிட்டிஷாரை விரட்டிவிட்டு, தனது பகுதியில் முண்டா ஆட்சியை நிறுவ அவர் தன்னை ஒரு தெய்வீக தூதராக அறிவித்தார்.
முண்டா கிளர்ச்சி
- பிர்சா முண்டா வழிநடத்திய முண்டாக்களின் கிளர்ச்சி (உல்குலன்) 1899-1900 காலகட்டத்தில் நடைபெற்றது. முண்டாக்கள் பீகார் பகுதியில் முக்கியத்துவம் வாய்ந்த பழங்குடிகள் ஆவர். ஆங்கிலேயரின் ஆட்சியில் அவர்களின் பொதுநில உரிமை முறை அழிக்கப்பட்டது. முண்டாக்களுக்குச் சொந்தமான நிலங்களை ஜாகீர்தார்களும் திக்காடர்களும் (பெரும்விவசாயி) வட்டிக்கடைக்காரர்களும் பறித்துக்கொண்டனர்.
- பழங்குடிகளின் நிலங்களைப் பழங்குடி அல்லாதோர் ஆக்கிரமிப்பதை பிர்சா முண்டா தலைமையில் முண்டாக்கள் எதிர்த்தார்கள். முண்டா இனத்தைச் சேர்ந்த விவசாயிகள் ஜமீன்தார்களுக்கு வாடகை செலுத்த வேண்டாம் என பிர்சா முண்டா வலியுறுத்தினார். பிர்சாமுண்டா சோட்டாநாக்பூர் பகுதியில் கிளர்ச்சியைத் துவக்கினார். ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்ட பிர்சா 9 ஜூன் 1900 அன்று உயிர்தியாகம் செய்தார்.
Students can download the Daily TNPSC Current Affairs in English & Tamil as PDF from the links given below – TNPSC daily Current Affairs – English & Tamil – June 9, 2021.
Download TNPSC Daily Current Affairs – PDF | |
9th May, 2021 | Will be Available soon |
Check TNPSC – Daily Current Affairs – May Month in TAMIL & English from bankersdaily from the links below.
Read – TNPSC Daily Current Affairs – May 2021