TNPSC Current Affairs – English & Tamil – June 8, 2021

TNPSC Aspirants,

The Current Affairs Section is one of the most important topics for the upcoming TNPSC Group I, Group II/IIA, Group IV, and TNUSRB Exams.

Check today’s TNPSC Daily Current Affairs(8th June, 2021) in this post.

Aspirants can expect questions from the Daily Current Affairs section in the upcoming TNPSC Exams and learning the Current Affairs section will also aid them in successfully preparing for the descriptive paper. So this process is a 2 in 1 initiative.

To make the learning more convenient, we will be providing the TNPSC Daily Current Affairs in both ENGLISH & TAMIL. This has been made in such a way that reflects the TNPSC pattern as TNPSC uses both the languages in the Question Paper and this will also make the preparations of the aspirants meaningful and will 100% fulfill the needs of the aspirants.


Download PDF – TNPSC Daily Current Affairs – English & Tamil – June 8, 2021


NATIONAL


  1. Kevadia to become India’s first electric vehicle city
  • Area surrounding the Statue of Unity of Gujarat’s Kevadia is to become the first electric-vehicles-only zone of India. India’s first electric vehicle tourism initiative was launched in Kevadia.
  • The Statue of Unity Area Development and Tourism Governance Authority (SOUADTGA) will develop Kevadia into a zone free from vehicular pollution.

Statue of Unity:

  • Statue of Unity located in Sadhu Bet island of Kevadia. It is a 182 m tall statue built on the banks of the Narmada river in honour of Sardar Vallabhbhai Patel. It recognises the contribution of Patel in uniting princely states of pre-independent India.
  • Statue of Unity is the tallest statue in the world. It was inaugurated on 31 October 2018 on the 143rd birth anniversary of Patel. It was added in the Eight wonders of the Shanghai Cooperation Organisation (SCO).

 

  1. நாட்டின் முதல் மின்சார வாகனங்கள் நகரமாக உருவகிறது கேவாடியா
  • குஜராத்தின் கேவாடியாவின் ‘ஒற்றுமைக்கான சிலையை’ சுற்றியுள்ள பகுதி முழுவதும் இந்தியாவின் முதல்மின்சார வாகனங்களுக்கான பிரத்யேக பகுதியாக மாற்றப்பட உள்ளது. இந்தியாவின் முதல் மின்சார வாகன சுற்றுலா முன்முயற்சி கேவாடியாவில் தொடங்கப்பட்டது.
  • ஒற்றுமைக்கான சிலைப்பகுதி மேம்பாடு மற்றும் சுற்றுலா ஆளுகை அதிகாரசபை (SOUADTGA) கேவாடியாவை வாகன மாசு இல்லாத மையமாக மேம்படுத்தும்.

ஒற்றுமைக்கான சிலை:

  • ஒற்றுமைக்கான சிலை கேவாடியாவின் சாது பெட் தீவில் அமைந்துள்ளது. இது சர்தார் வல்லபாய் படேலின் நினைவாக நர்மதா நதிக்கரையில் கட்டப்பட்ட 182 மீட்டர் உயர சிலை ஆகும். சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவின் சுதேச ராஜ்ஜியங்களை ஒருங்கிணைப்பதில் படேலின் பங்களிப்பை அங்கீகரிக்கிக்கும் விதமாக இச்சிலை கட்டப்பட்டுள்ளது.
  • ஒற்றுமைக்கான சிலை உலகின் மிக உயரமான சிலையாகும். இது 31 அக்டோபர் 2018, படேலின் 143வது பிறந்த நாளன்று திறக்கப்பட்டது. இது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) எட்டு அதிசயங்களில் ஒன்றாக சேர்க்கப்பட்டது.

  1. Indian Navy inducts three Advanced Light Helicopters (ALH) at INS Dega
  • Three indigenously built Advanced Light Helicopters (ALH) MK III helicopters were inducted in the Eastern Naval Command (ENC) at INS Dega. These are state-of-the-art Maritime Reconnaissance and Coastal Security (MRCS) helicopters built by Hindustan Aeronautics Ltd.
  • ALH MK III helicopters feature an array of systems previously seen only on heavier, multi-role helicopters of the Indian Navy. A removable Medical Intensive Care Unit (MICU) is also fitted on ALH MK III helicopters to airlift critically ill patients.
  1. இந்திய கடற்படை ஐஎன்எஸ் டெகா மூன்று மேம்பட்ட இலகு ரக ஹெலிகாப்டர்களை (ALH) சேவையில் சேர்த்தது
  • உள்நாட்டில் கட்டப்பட்ட மூன்று மேம்பட்ட இலகு ரக ஹெலிகாப்டர்கள் (ALH) MK III ஹெலிகாப்டர்கள் .என்.எஸ் டெகாவில் உள்ள கிழக்கு கடற்படை கட்டளை மையத்தில் (ENC) சேவையில் சேர்க்கப்பட்டன. இவை இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனம் உருவாக்கிய அதிநவீன கடல்சார் உளவு மற்றும் கடலோர பாதுகாப்பு (MRCS) ஹெலிகாப்டர்கள் ஆகும்.
  • ALH MK III ஹெலிகாப்டர்கள் முன்பு இந்திய கடற்படையின் கனமான, பல பணி ஹெலிகாப்டர்களில் மட்டுமே காணப்பட்ட அமைப்புகளின் வரிசையைக் கொண்டுள்ளன. ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளை விமானம் மூலம் அழைத்துச் செல்ல ALH MK III ஹெலிகாப்டர்களில் அகற்றக்கூடிய தீவிர மருத்துவ சிகிச்சைப் பிரிவும் (MICU) பொருத்தப்பட்டுள்ளது.

  1. Ratle Hydroelectric Power Corporation Limited, a joint venture, implements the Ratle Hydroelectric Project of Jammu and Kashmir
  • NHPC with JKSPDC incorporated a joint venture company, “Ratle Hydroelectric Power Corporation Limited” for the implementation of 850 MW Ratle Hydroelectric Project. NHPC Limited (National Hydroelectric Power Corporation) is India’s premier hydropower company under the Union Ministry of Power.

Ratle Hydroelectric Project

  • Ratle Hydroelectric Project is a 850 MW run-off river scheme located on River Chenab in the Union Territory of Jammu and Kashmir.

 

  1. ராட்லே நீர்மின் கழகம் என்ற கூட்டு முயற்சி ஜம்மு காஷ்மீரின் ராட்லே நீர்மின் திட்டத்தை செயல்படுத்துகிறது
  • NHPC JKSPDCயுடன் இணைந்து 850 மெகாவாட் ராட்லே நீர்மின் திட்டத்தை செயல்படுத்துவதற்காக ராட்லே நீர்மின் கழகம் என்ற கூட்டு நிறுவனத்தை நிறுவியுள்ளது. NHPC (தேசிய நீர்மின் கழகம்) மத்திய மின் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்தியாவின் முதன்மையான நீர்மின் நிறுவனமாகும்.

ராட்லே நீர்மின் திட்டம்

  • ராட்லே நீர்மின் திட்டம் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள செனாப் நதியில் அமைந்துள்ள 850 மெகாவாட் நதித் திட்டமாகும்.

  1. World Bank approves $ 500 million for RAMP Program to boost India’s MSME sector
  • The World Bank has approved a $ 500 million for RAMP program to boost India’s MSME sector. Raising and Accelerating Micro, Small and Medium Enterprise (MSME) Performance (RAMP) Program will provide better access to finance and working capital for MSMEs by strengthening the receivable financing markets. It will also scale up online dispute resolution mechanisms to address the problem of delayed payments.
  • RAMP is the World Bank’s second intervention in the MSME sector. It had already provided $ 750 million for MSME Emergency Response Program last year.
  • The MSME sector is the backbone of the country’s economy, contributing 30 per cent of India’s GDP and 40 per cent of its exports.

 

  1. இந்தியாவின் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறையை மேம்படுத்துவதற்காக ரேம்ப் (RAMP) திட்டத்திற்கு 500 மில்லியன் டாலர் வழங்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது
  • இந்தியாவின் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறையை (MSME) மேம்படுத்த 500 மில்லியன் டாலர் ரேம்ப் (RAMP) திட்டத்திற்கு உலக வங்கி ஒப்புதல் அளித்தது. குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவன (MSME) செயல்திறனை (RAMP) உயர்த்துவது மற்றும் முடுக்கிவிடும் திட்டம் (RAMP) மூலம் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு நிதி மற்றும் வேலை மூலதனத்திற்கான சிறந்த அணுகல் கிடைக்கும் நிதி சந்தைகளை வலுப்படுத்தும். தாமதமாக பணம் செலுத்தப்படும் பிரச்சினையை தீர்க்க ஆன்லைன் சர்ச்சை தீர்வு வழிமுறைகளையும் இது அதிகரிக்கும்.
  • ரேம்ப் (RAMP) MSME துறையில் உலக வங்கியின் இரண்டாவது தலையீடு ஆகும். ஏற்கனவே கடந்த ஆண்டு குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவன (MSME) அவசர கால பதில் திட்டத்திற்கு உலக வங்கி 750 மில்லியன் டாலர் வழங்கியது.
  • இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30 சதவீதத்தையும், அதன் ஏற்றுமதியில் 40 சதவீதத்தையும் பங்களிக்கும் நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவன துறை உள்ளது.

  1. Prime Minister extends the Pradhan Mantri Garib Kalyan Anna Yojana till November
  • The Pradhan Mantri Garib Kalyan Anna Yojana has been extended till November. Free food grains will be available in fixed quantity every month to more than 80 crore people till November.

Pradhan Mantri Garib Kalyan Anna Yojana

  • Pradhan Mantri Garib Kalyan Anna Yojana was launched in 2020 as a relief for COVID-19.
  • It is aimed at providing each person who is covered under the National Food Security Act, 2013 with an additional 5 kg grains (wheat or rice) in addition to the 5 kg of subsidised foodgrain already provided through the Public Distribution System (PDS) for free of cost.
  • The Union Ministry of Finance acts as the nodal Ministry for this scheme.

 

 

  1. பிரதமர் கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தை நவம்பர் மாதம் வரை நீட்டித்துள்ளார்
  • பிரதம மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா நவம்பர் வரை நீட்டிக்கப்பட்டது. நவம்பர் மாதம் வரை 80 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு ஒவ்வொரு மாதமும் இலவச உணவு தானியங்கள் நிலையான அளவில் கிடைக்கும்.

பிரதம மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா

  • கோவிட்-19க்கு நிவாரணமாக பிரதம மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா 2020இல் தொடங்கப்பட்டது.
  • தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013இன் கீழ் வரும் ஒவ்வொருவருக்கும், பொது விநியோகத் திட்டத்தின் மூலம் ஏற்கனவே வழங்கப்பட்ட 5 கிலோ மானிய உணவு தானியத்துடன் கூடுதலாக 5 கிலோ தானியங்களும் (கோதுமை அல்லது அரிசி) இலவசமாக வழங்குவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • மத்திய நிதி அமைச்சகம் இந்த திட்டத்தின் ஒருங்கிணைப்பு அமைச்சகமாக செயல்படுகிறது.

SCIENCE AND TECHNOLOGY


  1. Tata Hospital of Mumbai conducts the first CAR-T cell therapy
  • Tata Hospital of Mumbai conducted the first CAR-T cell therapy. DBT/BIRAC-NBM supported the Chimeric Antigen Receptor T-cell (CAR-T) therapy which has emerged as a breakthrough in cancer treatment, especially in patients suffering from Acute Lymphocytic Leukemia. This is a “first in India” gene therapy which can reduce the cost of treatment by crores.
  • The CAR-T cells were designed and manufactured at the Bioscience and Bioengineering (BSBE) department of IIT Bombay.

Department of Biotechnology (DBT) 

  • The Department of Biotechnology (DBT) works under the Union Ministry of Science & Technology. It promotes and accelerates the development of biotechnology in India.

Biotechnology Industry Research Assistance Council (BIRAC)  

  • Biotechnology Industry Research Assistance Council (BIRAC) is a not-for-profit Public Sector Enterprise set up by the Department of Biotechnology (DBT) as an Interface Agency to strengthen and empower the emerging Biotech enterprise to undertake strategic research and innovation, addressing nationally relevant product development needs.

 

  1. மும்பை டாடா மருத்துவமனை முதல் சிஏஆர்டி (CAR-T) செல் சிகிச்சையை நடத்தியுள்ளது
  • மும்பை டாடா மருத்துவமனை முதல் சிஏஆர்டி (CAR-T) செல் சிகிச்சையை நடத்தியது. DBT/BIRAC-NBM சிமெரிக் ஆன்டிஜென் ரிசெப்டார் டிசெல் (CAR-T) சிகிச்சையை ஆதரித்தது. குறிப்பாக கடுமையான லிம்போசைடிக் லுகேமியாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு புற்றுநோய் சிகிச்சையில் ஒரு திருப்புமுனையாக இந்த சிகிச்சை உருவாக்கப்பட்டுள்ளது. இது சிகிச்சை செலவை குறைக்கும் “இந்தியாவில் முதல்” மரபணு சிகிச்சையாகும்.
  • (CAR-T) செல்கள் ஐஐடி பம்பாயின் உயிரி அறிவியல் மற்றும் உயிரி இன்ஜினியரிங் (BSBE) துறையில் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டன.

உயிரி தொழில்நுட்பத் துறை (DBT)

  • உயிரி தொழில்நுட்பத் துறை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. இது இந்தியாவில் உயிரி தொழில்நுட்ப வளர்ச்சியை ஊக்குவித்து துரிதப்படுத்துகிறது.

உயிரி தொழில்நுட்ப தொழிற்சாலை ஆய்வு உதவி கவுன்சில் (BIRAC)

  • உயிரி தொழில்நுட்ப தொழிற்சாலை ஆய்வு உதவி கவுன்சில் (BIRAC) என்பது உயிரி தொழில்நுட்ப துறையால் (DBT) ஒரு இடைமுக முகமையாக அமைக்கப்பட்ட ஒரு இலாப நோக்கற்ற பொதுத்துறை நிறுவனமாகும். இது வளர்ந்து வரும் உயிரி தொழில்நுட்ப நிறுவனத்தை வலுப்படுத்தவும், மூலோபாய ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை மேற்கொள்ளவும், தேசிய தொடர்புடைய தயாரிப்பு வளர்ச்சித் தேவைகளை நிவர்த்தி செய்யவும் உதவுகிறது.

POLITY


  1. 110 complaints received by Lokpal this year
  • 110 complaints were received by Lokpal this year.

Lokpal:

  • Lokpal is an anti-corruption ombudsman formed by Lokpal Act,2013. It consists of a Chairman and a maximum of eight members. The members will be selected by a select committee.
  • It will investigate corruption charges against all the public servants, including the Prime Minister.
  • Chairman: Pinaki Chandra Ghose is the first and current Chairman of Lokpal.

 

7. இந்த ஆண்டு லோக்பால் மூலம் 110 புகார்கள் வந்துள்ளது

  • இந்த ஆண்டு லோக்பால் 110 புகார்களைப் பெற்றது.

லோக்பால்:

  • லோக்பால் என்பது லோக்பால் சட்டம், 2013இன் மூலம் உருவாக்கப்பட்ட ஊழல் தடுப்பு குறைதீர்ப்பாளர் அமைப்பு ஆகும். இது ஒரு தலைவர் மற்றும் அதிகபட்சம் எட்டு உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. உறுப்பினர்கள் ஒரு தேர்வுக் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
  • பிரதமர் உள்ளிட்ட அனைத்து அரசு ஊழியர்களுக்கும் எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை இது விசாரிக்கும்.
  • தலைவர்: பினாகி சந்திர கோஸ் லோக்பாலின் முதல் மற்றும் தற்போதைய தலைவர் ஆவார்.  

INTERNATIONAL


  1. Russia withdraws from Open Skies Treaty of 1992
  • Russian President Putin passed a bill regarding the withdrawl of Russia from Open Skies Treaty of 1992. Last year Trump unilaterally withdrew USA from the treaty.

Open Skies Treaty:

  • Open Skies Treaty was signed in 1992 and came into effect in 2002. It was signed after the cold war to conduct unarmed surveillance of arms development over each other countries. 34 countries, including USA and Russia signed the treaty. India is not a member of the treaty.

 

8. 1992ஆம் ஆண்டு ஓபன் ஸ்கைஸ் ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா விலகியுள்ளது

  • ரஷ்ய அதிபர் புதின் 1992ஆம் ஆண்டு ஓபன் ஸ்கைஸ் ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யாவை விலக்குதலுக்கான மசோதாவை நிறைவேற்றுயுள்ளார். கடந்த ஆண்டு ட்ரம்ப் ஒருதலைப்பட்சமாக இந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்காவை விலக்கிக் கொண்டார்.

ஓபன் ஸ்கைஸ் ஒப்பந்தம்:

  • ஓபன் ஸ்கைஸ் ஒப்பந்தம் 1992இல் கையெழுத்திடப்பட்டு 2002இல் நடைமுறைக்கு வந்தது. பனிப்போருக்குப் பின்னர் ஒருவர் மற்றொரு நாட்டின் ஆயுத மேம்பாட்டை ஆயுதமின்றி கண்காணிக்க இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. அமெரிக்கா மற்றும் ரஷ்யா உட்பட 34 நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தத்தில் இந்தியா உறுப்பினராக இல்லை.

REPORTS AND INDICES


  1. Union Government report shows that 9.27 lakh children were affected by severe acute malnutrition till November 2020
  • Union Ministry of Women and Child Development released a report in response to an RTI (Right to Information) petition that showed that 9,27,606 children were affected by severe malnutrition till November 2020.
  • This report included children from 6 months to 6 years. Tamil Nadu hosts 12,489 malnourished children.
  • Ladakh, Lakshadweep, Nagaland, Manipur and Madhya Pradesh reported no severely malnourished children.
  • Top malnourished states:
S. No State No. of Malnourished Children
1. Uttar Pradesh 3,98,359
2. Bihar 2,79,427

Malnutrition:

  • Children suffering from Severe Acute malnutrition (SAM) have very low weight for their height and are nine times more likely to die in case of diseases due to their weak immune system.

 

  1. 2020 நவம்பர் வரை 9.27 லட்சம் குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய அரசின் அறிக்கை குறிப்பிடுகிறது
  • 2020 நவம்பர் வரை 9,27,606 குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தகவல் அறியும் உரிமைச் சட்ட (RTI) மனுவுக்கு பதிலளிக்கும் வகையில் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ஒரு அறிக்கையை வெளியிட்டது.
  • இந்த அறிக்கையில் 6 மாதங்கள் முதல் 6 ஆண்டுகள் வரை உள்ள குழந்தைகளும் அடங்குவர். தமிழ்நாட்டில் 12,489  ஊட்டச்சத்து குறைபாடுள்ள  குழந்தைகள் உள்ளனர்.
  • லடாக், லட்சத்தீவுகள், நாகாலாந்து, மணிப்பூர் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள் யாரும் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
  • முதல் ஊட்டச்சத்துக் குறைபாடு மாநிலங்கள்:
. எண் மாநிலம் ஊட்டச்சத்து குறைபாடுள்ள  குழந்தைகள் எண்ணிக்கை
1. உத்தரப் பிரதேசம் 3,98,359
2. பீகார் 2,79,427

ஊட்டச்சத்து குறைபாடு:

  • கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் (SAM) தங்கள் உயரத்திற்கு மிகவும் குறைந்த எடையைக் கொண்டுள்ளனர். மேலும் அவர்களின் பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு காரணமாக நோய்கள் ஏற்பட்டால் அவர்கள் இறக்க ஒன்பது மடங்கு அதிகமாக வாய்ப்புள்ளது.

  1. Tamil Nadu Public Health Department survey shows 23% of people developed immunity against COVID-19
  • Tamil Nadu Public Health Department survey showed that 23% people developed immunity against COVID-19. Blood samples from 22,904 COVID-19 affected people were taken and among them 5,316 people had developed immunity against COVID-19. This 23% does not include the samples collected from Chennai. The people who developed immunity were highest being 49% in Tiruvallur and the lowest being 9% from Nagapattinam.
  • Last year’s survey has shown that 31% of people developed immunity against COVID-19.

 

  1. கோவிட்-19க்கு எதிராக 23% மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியிருப்பதாக தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை ஆய்வு காட்டியுள்ளது
  • கோவிட்-19க்கு எதிராக 23% மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியிருப்பதாக தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை கணக்கெடுப்பு காட்டியது. கோவிட்-19ஆல் பாதிக்கப்பட்ட 22,904 மக்களிடமிருந்து ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டன. அவர்களில் 5,316 பேருக்கு கோவிட்-19க்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை உருவாகியிருந்தது. இந்த 23%இல் சென்னையில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் சேர்க்கப்படவில்லை. அதிகபட்சமாக திருவள்ளூரில் 49% மற்றும் நாகப்பட்டினத்திலிருந்து 9% குறைந்தபட்சமாக நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட மக்கள் உள்ளனர்.
  • கடந்த ஆண்டு கணக்கெடுப்பு கோவிட்-19க்கு எதிராக 31% மக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பெற்றிருந்ததாக காட்டியது.

 Students can download the Daily TNPSC Current Affairs in English & Tamil as PDF from the links given below – TNPSC daily Current Affairs – English & Tamil – June 8, 2021. 


Download TNPSC Daily Current Affairs – PDF
8th May, 2021 Will be Available soon

Check TNPSC – Daily Current Affairs – May Month in TAMIL & English from bankersdaily from the links below. 


Read – TNPSC Daily Current Affairs – May 2021