TNPSC Current Affairs – English & Tamil – May 12, 2021

TNPSC Aspirants,

The Current Affairs Section is one of the most important topics for the upcoming TNPSC Group I, Group II/IIA, Group IV, and TNUSRB Exams.

Check today’s TNPSC Daily Current Affairs(12th May, 2021) in this post.

Aspirants can expect questions from the Daily Current Affairs section in the upcoming TNPSC Exams and learning the Current Affairs section will also aid them in successfully preparing for the descriptive paper. So this process is a 2 in 1 initiative.

To make the learning more convenient, we will be providing the TNPSC Daily Current Affairs in both ENGLISH & TAMIL. This has been made in such a way that reflects the TNPSC pattern as TNPSC uses both the languages in the Question Paper and this will also make the preparations of the aspirants meaningful and will 100% fulfill the needs of the aspirants.


Download PDF – TNPSC Daily Current Affairs – English & Tamil – May 12, 2021


NATIONAL


1. DRDO develops an anti-Covid drug known as 2-DG

  • The anti-Covid oral drug, 2-DG (2-deoxy-D-glucose) has been developed by the Defence Research and Development Organisation’s (DRDO‘s) laboratory- Institute of Nuclear Medicine and Allied Sciences (INMAS) in collaboration with Dr. Reddy’s Laboratories.
  • 2-DG (2-deoxy-D-glucose) was granted emergency use approval by the Drug Controller General of India (DCGI) as an adjunct therapy in moderate cases of COVID-19. 
  • The anti-COVID drug 2-DG has been developed in powder form and is ingested orally by dissolving it in water. The 2-DG drug is expected to help hospitalised COVID-19 patients and reduce their supplemental oxygen dependence.


1. 2-DG
என்று அழைக்கப்படும் கோவிட் எதிர்ப்பு மருந்தை DRDO உருவாக்கியுள்ளது

  • கோவிட் எதிர்ப்பு வாய்வழி மருந்து, 2-DG (2-டிஆக்ஸிடிகுளுக்கோஸ்) பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (DRDO) ஆய்வகத்தின் – அணுக்கரு மருத்துவம் மற்றும் அதனுடன் இணைந்த அறிவியல் நிறுவனம் (INMAS) மற்றும் டாக்டர் ரெட்டியின் ஆய்வகங்களுடன் இணைந்து உருவாக்கப்பட்டது.
  • கோவிட்-19 மிதமான பாதிப்புகளில் ஒரு கூடுதல் சிகிச்சையாக 2-DG (2-டிஆக்ஸி-டி-குளுக்கோஸ்) அவசர பயன்பாட்டு ஒப்புதலை இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரல் (DCGI) வழங்கினார்.
  • கோவிட் எதிர்ப்பு மருந்து 2-DG தூள் வடிவில் உருவாக்கப்பட்டு அதை நீரில் கரைத்து வாய்வழியாக உட்கொள்ளப்படுகிறது. 2-DG மருந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கோவிட்-19 நோயாளிகளுக்கு உதவும் மற்றும் அவர்களின் துணை ஆக்ஸிஜன் சார்புநிலையைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2. Kerala’s veteran politician KR Gouri Amma passed away at 102

  • Veteran politician KR Gouri Amma passed away at the age of 102 in Thiruvananthapuram. She was the second longest-serving MLAs of the state. She was the first Revenue Minister in the first communist ministry of the state in 1957.

 

2. கேரளாவின் மூத்த அரசியல்வாதி கே.ஆர்.கௌரி அம்மா தனது 102 வயதில் காலமானார்

  • மூத்த அரசியல்வாதி கே.ஆர். கௌரி அம்மா தனது 102வது வயதில் திருவனந்தபுரத்தில் காலமானார். அவர் மாநிலத்தின் இரண்டாவது நீண்ட கால எம்.எல்.ஏ. ஆவார். இவர் 1957ஆம் ஆண்டு மாநிலத்தின் முதல் கம்யூனிச அமைச்சகத்தில் முதல் வருவாய் அமைச்சராக இருந்தார்.

3. ‘Miyon ka Bara’ railway station in Jodhpur renamed as Mahesh Nagar

  • The Miyon ka Bara railway station was renamed as Mahesh Nagar in Jodhpur, Rajasthan. Before this, the Ministry of Home Affairs (MHA) had approved and changed the name of the village from Miyon ka Bara to Mahesh Nagar and conveyed the decision to the Rajasthan government in 2018.

 

3. ஜோத்பூரில் உள்ளமியுன் கா பராரயில்நிலையம் மகேஷ் நகர் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது

  • ராஜஸ்தானின் ஜோத்பூரில் உள்ள மியான் கா பரா ரயில் நிலையம் மகேஷ் நகர் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதற்கு முன்னர், உள்துறை அமைச்சகம் (MHA) மியன் கா பரா என்னும் பெயரை மகேஷ் நகர் என்று அங்கீகரித்து மாற்றியது மற்றும் இந்த முடிவை ராஜஸ்தான் அரசுக்கு 2018இல் தெரிவித்தது.

SCIENCE AND TECHNOLOGY


4. OSIRIS-REx starts its trip back to Earth after collecting samples from the Bennu asteroid

  • OSIRIS-REx started its journey back to Earth after collecting samples from the Bennu asteroid.

 

OSIRIS-REx:

  • The OSIRIS-REx(Origins, Spectral Interpretation, Resource Identification, Security, Regolith Explorer) is the United States’ first asteroid sample return mission. OSIRIS-REx spacecraft was launched in 2016 to collect and return with the first U.S. sample of pristine asteroid materials and it arrived at Bennu in 2018.
  • The spacecraft found traces of hydrogen and oxygen molecules in the asteroid and thus the potential for life in Bennu.
  • Japan is the only other country to have collected and returned the sample to Earth.

 

4. ஓசிரிஸ்ரெக்ஸ் (OSIRIS-Rex) பென்னு சிறுகோளிலிருந்து மாதிரிகள் சேகரித்து பூமிக்கு தனது பயணத்தை தொடங்குகிறது

  • ஓசிரிஸ்ரெக்ஸ் பென்னு சிறுகோளிலிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்ட பிறகு பூமிக்கு தனது பயணத்தை தொடங்கியது.

 

ஓசிரிஸ்ரெக்ஸ்:

  • ஓசிரிஸ்ரெக்ஸ் (OSIRIS-Rex – Origins, Spectral Interpretation, Resource Identification, Security, Regolith Explorer)அமெரிக்காவின் முதல் சிறுகோள் மாதிரி எடுத்துவரும் திட்டமாகும். ஓசிரிஸ்ரெக்ஸ் விண்கலம் 2016ஆம் ஆண்டில் விண்கற்களின் மாதிரியை சேகரித்து எடுத்துவருவதற்காக முதன்முதலில் அமெரிக்காவால் செலுத்தப்பட்டது, மேலும் அது 2018இல் பென்னுவுக்கு சென்றது.
  • இந்த விண்கலம் சிறுகோளில் ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் மூலக்கூறுகளின் இருப்பதற்கான தடயங்களைக் கண்டறிந்தது, இதனால் பென்னுவில் உயிர்வாழ்வதற்கான சாத்தியம் இருந்தது.
  • இதுவரை பூமிக்கு மாதிரியை சேகரித்து திருப்பி அனுப்பிய ஒரே நாடு ஜப்பான் மட்டுமே.

INTERNATIONAL


5. Fourth India-Swiss Financial Dialogue held virtually in New Delhi

  • The 4th India-Swiss Financial Dialogue was held virtually in New Delhi.
  • Secretary of Economic Affairs, Ajay Seth led the Indian delegation and Daniela Stoffel, State Secretary of Switzerland held the Swiss delegation.
  • India’s policy of non-alignment and Switzerland’s traditional policy of neutrality has led to a close understanding between the two countries.

 

5. நான்காவது இந்தியாசுவிஸ் நிதி பேச்சுவார்த்தை புது தில்லியில் மெய்நிகராக நடைபெற்றது

  • 4வது இந்தியாசுவிஸ் நிதி உரையாடல் மெய்நிகராக புது தில்லியில் நடைபெற்றது.
  • பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் அஜய் சேத் இந்திய தூதுக்குழுவிற்கு தலைமை தாங்கினார், சுவிட்சர்லாந்து செயலாளர் டேனியலா ஸ்டாஃபெல் தூதுக்குழுவிற்கு தலைமை தாங்கினார்.
  • இந்தியாவின் அணிசேராக் கொள்கை மற்றும் சுவிட்சர்லாந்தின் பாரம்பரிய நடுநிலைக் கொள்கை இரு நாடுகளுக்கும் இடையே நெருக்கமான புரிதலுக்கு வழிவகுத்துள்ளது.

6. World’s First Artificial Intelligent Ship “Mayflower 400” to navigate across Atlantic

  • A team of researchers from the marine research organisation, ProMare with IBM acting as technology partner, built the world’s first intelligent ship known as the Mayflower 400.
  • The Artificial Intelligent Ship is completely autonomous. It is a 15 m long trimaran that weighs 9 tons.

 

6. உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு கப்பல்மேஃப்ளவர் 400″ அட்லாண்டிக் முழுவதும் செல்லவிருக்கிறது

  • கடல் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழுவான ப்ரோமேர், தொழில்நுட்ப பங்குதாரராக IBM உடன் இணைந்து மேஃப்ளவர் 400 என்று அழைக்கப்படும் உலகின் முதல் அறிவார்ந்த கப்பலை உருவாக்கியது.
  • செயற்கை நுண்ணறிவு கொண்ட இந்த கப்பல் முற்றிலும் தன்னாட்சி பெற்றது. இது 9 டன் எடையுள்ள 15 மீ நீள டிரிமாரன் ஆகும்.

APPOINTMENTS


7. PESB appoints Arun Kumar Singh as next CMD of BPCL

  • The Public Enterprises Selection Board (PESB), has picked Arun Kumar Singh as the chairman and managing director of state-run oil refining and marketing firm Bharat Petroleum Corporation Ltd (BPCL).
  • He is currently director, marketing at BPCL and holding additional charge of Director, Refineries.

 

7. பி.பி.சி.எல்.லின் அடுத்த சி.எம்.டி.யாக அருண் குமார் சிங்கை PESB நியமித்தது

  • அரசின் எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் சந்தைப்படுத்தல் நிறுவனமான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்) தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக அருண் குமார் சிங்கை பொது நிறுவன தேர்வு வாரியம் (பி..எஸ்.பி) தேர்ந்தெடுத்துள்ளது.
  • அவர் தற்போது பிபிசிஎல் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் இயக்குநராகவும், சுத்திகரிப்பு நிலையங்களின் இயக்குநராகவும் கூடுதல் பொறுப்பில் உள்ளார்.

REPORTS AND INDICES


8. World Economic Situation and Prospects (WESP)

  • World Economic Situation and Prospects (WESP) is released by United Nations.
  • The mid-year update of the World Economic Situation and Prospects (WESP), United Nations projected that India would be world’s fastest growing major economy in 2022.

 

Highlights:

  • India will be world’s fastest growing major economy in 2022.
  • The Indian economy would grow at 5 per cent in 2021 and 10.1 per cent in 2022.
  • China has been projected to grow at 8 per cent, a slowdown from 8.2 per cent in 2021.

 

8. உலகப் பொருளாதார நிலைமை மற்றும் வாய்ப்புகள் (WESP)

  • உலகப் பொருளாதார நிலைமை மற்றும் வாய்ப்புகள் (WESP) .நா.வால் வெளியிடப்படுகிறது.
  • உலகப் பொருளாதார நிலைமை மற்றும் வாய்ப்புகள் (WESP) இந்த ஆண்டின் நடுப்பகுதியில் புதுப்பிக்கப்பட்ட போது, 2022ஆம் ஆண்டில் இந்தியா உலகின் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாக இருக்கும் என்று கணித்துள்ளது.

 

சிறப்பம்சங்கள்:

  • 2022இல் உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாக இந்தியா இருக்கும்.
  • இந்தியப் பொருளாதாரம் 2021இல்5 சதவீதமாகவும், 2022இல் 10.1 சதவீதமாகவும் வளர்ச்சி அடையும்.
  • சீனா8 சதவீதமாக வளரும் என்று கணிக்கப்பட்டுள்ளது, இது 2021இல் 8.2 சதவீதமாக இருந்தது.

AWARDS AND RECOGNITIONS


9. IREDA bags ‘Green Urja Award 2021’

  • Indian Renewable Energy Development Agency Ltd. (IREDA) has been conferred with “Green Urja Award 2021” by the Indian Chamber of Commerce (ICC).
  • IREDA received the award for its developmental role in Green Energy Financing.

 

Indian Renewable Energy Development Agency Ltd. (IREDA)

  • IREDA was established in 1987 as a Non-Banking Financial Institution. It is a Mini Ratna (Category – I) Government Enterprise. It works under the control of the Ministry of New and Renewable Energy (MNRE).

 

9. IREDAகிரீன் உர்ஜா விருது 2021 பெற்றுள்ளது

  • இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமை நிறுவனத்திற்கு (IREDA) இந்திய வர்த்தக சம்மேளனம் (ICC) கிரீன் உர்ஜா விருது 2021″ வழங்கியுள்ளது.
  • பசுமை எரிசக்தி நிதியளிப்பில் அதன் வளர்ச்சிப் பங்கிற்காக IREDA இந்த விருதைப் பெற்றது.

 

இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமை நிறுவனம் (IREDA)

  • IREDA 1987இல் வங்கிசாரா நிதி நிறுவனமாக நிறுவப்பட்டது. இது ஒரு மினி ரத்னா (வகை – 1) அரசு நிறுவனம் ஆகும். இது புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகிறது.

IMPORTANT DAYS


10. International Nurses Day – 12 May

  • International Nurses Day is observed every year on 12 May to honour nurses. The International Council of Nurses (ICN) celebrated the day for the first time in 1965.
  • 12 May was chosen to celebrate the day as it is the birth anniversary of Florence Nightingale, who is the founder of modern nursing. Florence Nightingale Medal is the highest international recognition for nurses.
  • Theme 2021: A Voice to Lead – A vision for future healthcare.

 

10. சர்வதேச செவிலியர் தினம் – 12 மே

  • செவிலியர்களை கௌரவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் 12 மே அன்று சர்வதேச செவிலியர் தினம் அனுசரிக்கப்படுகிறது. சர்வதேச செவிலியர் கவுன்சில் (ICN) 1965இல் முதல் முறையாக இந்த நாளைக் கொண்டாடியது.
  • நவீன செவிலியத்தை நிறுவிய புளோரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்த நாள் 12 மே என்பதால், இந்த நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது. புளோரன்ஸ் நைட்டிங்கேல் பதக்கம் செவிலியர்களுக்கான மிக உயர்ந்த சர்வதேச அங்கீகாரம் ஆகும்.
  • கருப்பொருள் 2021: முன்னடத்த ஒரு குரல்எதிர்கால சுகாதாரத்திற்கான ஒரு தொலைநோக்குப் பார்வை.

Students can download the Daily TNPSC Current Affairs in English & Tamil as PDF from the links given below – TNPSC daily Current Affairs – English & Tamil – May 12, 2021. 


Download TNPSC Daily Current Affairs – PDF
12th May, 2021 Will be Available soon

Check TNPSC – Daily Current Affairs – May Month in TAMIL & English from bankersdaily from the links below. 


Read – TNPSC Daily Current Affairs – May 2021